Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

குவியமுடன் ஒரு காதல் 19 1

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம் - 19


மாயா தன்னை மறந்து கத்தவும் தான் கார்த்திக் அவசரமாக ஜன்னலின் பக்கம் பார்த்தான். சிலையாக மாறுவது இப்போது அவனுடைய முறையாயிற்று!! மாயாவும் கார்த்திக்கும் திகைப்பில் பார்வை பரிமாற்றம் செய்தனர். கார்த்திக் தான் முதலில் தன்னை மீட்டுக் கொண்டு வந்தான். அவசர அவசரமாக வெளியே சென்று, மாயாவிடம் வினவினான்.



“நீ எப்படி இங்க வந்த?? முதல்ல கிளம்பு இங்கயிருந்து….”



மாயாவுக்கு அந்த திகைப்பிலும் கோபம் எழுந்தது எரிமலையாக.



“நீ அவங்ககிட்ட என்ன சொன்ன?? முதல்ல அதை சொல்லு!”



இதை கேட்டதும் பலமாக தன் தலையில் அடித்துக் கொண்டான் கார்த்திக். “என்னடா என்ன தான் நடந்துச்சு?? என்ன நடக்குது இப்போ?? எதுக்கு இப்படி அருவாளை தூக்கிட்டு இருக்க??”



மாயாவின் சரமாரியான கேள்விகளை கேட்டு கார்த்திக்கிற்கு மேலும் பதற்றம் கூடியது. ஒரு நிமிடம் கண் மூடி யோசித்தவன், பின் ஒரு தெளிவற்ற குரலில், “நான் இப்போ எதுவும் சொல்ற நிலைமையில இல்ல… நான் கிளம்பறேன். நீயும் கிளம்பு.” என கூறி வெளி கேட்டை திறந்துக் கொண்டு அவளையும் இழுத்துக் கொண்டு செல்லத் துவங்கினான்.



“நில்லு டேய் நில்லுடா…” மாயா தன் கையை வேகமாக இழுத்துக் கொண்டு அடுத்து கார்த்திக் சற்றும் எதிர்பார்க்காத செயலை செய்தாள். அவனின் கையை தன் தலை மேல் வைத்து, “என் மேல சத்தியமா உண்மையா என்ன நடந்துச்சு, ஏன் அவங்கள வெட்டப் போனேன்னு எனக்கு சொல்லு! என் மேல சத்தியம்!!” என கண்களில் பளபளப்புடனும் உறுதியுடனும் சொல்லவும், கார்த்திக் அங்கேயே மடிந்து அமர்ந்தான்.



மண் தரையில் தன் கைகளை ஓங்கி ஓங்கி குத்திவிட்டு, தன் கோபத்தை காட்டியவன், பின் எழுந்து தன் கண்களில் வலியுடன் தன் மனைவியிடன் மன்றாடினான்.



“என்னை இப்போ எதுவும் கேக்காத மாயு. நான் சொல்ற நிலைமையில இல்ல. நீ சென்னை வந்ததும் சொல்றேன். இப்போ கிளம்பலாம் வா…. இங்க சேப் இல்ல!”
கார்த்திக்கை அதன்பின் எவ்வளவு வற்புறுத்தியும் அவன் வாயை திறக்கவில்லை….



அவளை ஸ்கூட்டியில் முன் செல்ல விட்டு, தன் காரில் அவளை பின் தொடர்ந்தான். கார்த்திக்கிற்கு காரணம் தெரிந்தும், மாயாவுக்கு தெரியாமலும் அவர்கள் கண்களிலிருந்து கண்ணீர் இறங்கியது. கோயம்பத்தூர் வந்தவுடன் கார்த்திக் காரை அவன் நண்பனின் வீட்டு பக்கம் திருப்பி சென்றுவிட்டான். செல்லும் அவன் காரையே பார்த்துவிட்டு, கண்களை துடைத்துக் கொண்டு வீட்டை அடைந்தாள் மாயா.



உள்ளே அவசர அவசரமாக சென்று, அவளின் அன்னையிடம் தான் சென்னை திரும்புவதாக கூறினாள். “அம்மா நான் ஊருக்கு கிளம்பறேன்மா. ஒரு இன்டேர்ன்ஷிப் பிரோகிராம் வந்திருக்கு. எங்க கிளாஸ்ல எல்லாரும் போறாங்க. நானும் போறேன்…”



இவளின் அவசரத்தை பார்த்து அபிராமிக்கு ஒன்றும் விளங்கவில்லை. “என்னடி வந்ததும் வராததுமா போனோம்னு சொல்ற?? அங்க யாரும் இல்லாம என்ன பண்ணுவ??”



“இது ரேர் சான்ஸ்மா… பக்கத்து வீட்டுல தான் சாவி குடுத்துட்டு வந்திருக்கோம். நான் அக்கா கிட்ட பேசிக்கறேன். இப்போ ஈவ்னிங் ஏழு மணி பஸ்லயே கிளம்பறேன்…. வார நாள் தான் சீட் இருக்கும்.”



அவள் திட்டமிட்ட படியே மைதிலியிடம் போன் செய்து தான் சென்னை செல்வதாக கூறினாள். முதலில் யோசித்த மைதிலியும், “சரிடா நான் சீக்கிரம் கிளம்பி வரப் பார்க்கிரேன். நீ பார்த்து இருடா…” என்று சம்மதித்தாள். ரித்தியாவும் அபிராமியை சகோதரிக்காக சமாளிக்க, சில மணி நேரங்களில் சென்னை செல்லும் பேருந்தில் அமர்ந்திருந்தாள் மாயசித்ரா.



அவன் மனைவி சென்னை செல்ல பேருந்து ஏறிவிட்டாள் என்பதை அறியாத கார்த்திக் தன் நண்பனிடம் வாங்கிய காரை அவன் வீட்டில் விட்டுவிட்டு, அவனும் வேறு ஒரு பேருந்தில் ஏறினான் சென்னை செல்வதற்கு.



இருவரின் மனதும் மேரத்தான் ஓடியது போல படபடவென அடித்துக் கொண்டது! இடையில் ஒருவருக்கு கால் செய்து அந்த வீட்டில் கட்டி இருந்தவர்களை பற்றி பேசவும் மறக்கவில்லை கார்த்திக். சொல்லி வைத்தது போல் இருவரும் ஒரு நிமிடம் கூட கண் மூடவில்லை, அன்று இரவு முழுவதும்! விடிகாலை ஐந்து மணி அளவில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் கார்த்திக்கும் மாயாவும் இறங்கினர். மாநகரப் பேருந்து ஏறும் இடத்தில் கண்களில் அலைப்புரதலுடன் மாயா திருவான்மையூர் செல்லும் பேருந்திற்காக நிற்க, அவளின் தோள் மேல் கை போட்டபடி கார்த்திக் வந்து நின்றான்.



யாரோ என நினைத்து தூக்கிவாரி போட்ட மாயாவுக்கு, கார்த்திக்கை பார்த்ததும் கோபமும் நிம்மதியும் சம அளவில் வந்து சேர்ந்தது. ஆனால், எந்தவித பேச்சும் இன்றி இருவரும் எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் அவர்களின் அப்பார்ட்மென்ட்டின் வாசலில் காலடி எடுத்து வைத்தனர். அதுவரை பிடித்திருந்த மாயாவின் கைகளை விட்டு, தனியாக நடக்கத் துவங்கினான் கார்த்திக்.



மாயாவே அவனை பின் தொடர்ந்து, “எனக்கு இப்போவே எல்லாத்தையும் சொல்லிடு. என்னால தாங்க முடியலை!” என்று அழுகையுடன் கெஞ்சவும், கார்த்திக் வேறு வழியில்லாமல் அவளை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். வீட்டிற்குள் நுழைந்ததும் முதல் வேலையாக அவளின் அன்னைக்கு அழைத்து அவள் பத்திரமாக வந்து சேர்ந்த தகவலை தெரிவிக்க சொன்னான்.



அவன் சொல்லும் வரையில் மாயாவின் மூளைக்கு அவளின் அன்னையை பற்றிய நினைவு கூடயில்லை! அவன் சொன்னபடியே போன் செய்து தாயிடம் பேசிவிட்டு, கார்த்திக் எங்கே என்று தேடினாள் அந்த இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டில்.



அப்போது தான் கவனித்தாள் வீட்டில் ஒரு பொருளும் இல்லை… சோபா, டிவி, சேர் கூடயில்லை. சமையல் அறையில் சில பாத்திரங்கள் இருந்தன. அதை தாண்டி சென்றதும், இரண்டாம் படுக்கையறை வந்தது. அதில் தான் கார்த்திக் நின்றிருந்தான் ஜன்னலை வெறித்து.



அந்த அறையில் தான் பொருள்கள் இருந்தன கொஞ்சம். ஒரு கட்டிலும் அதன் மேல் மெத்தையும் இருந்தது. நேராக அவனிடம் சென்று மாயா நிற்கவும், கார்த்திக் அவள் பக்கம் வேதனையுடன் திரும்பினான். “மாயா நான் சொல்லப் போறத நீ எப்படி எடுத்துப்பேன்னு தெரியலை. ஆனா, கொஞ்சம் பொறுமையா யோசி எதுவா இருந்தாலும்… ப்ளீஸ்ஸ்ஸ்!”



ஏற்கனவே மாயாவின் மனதில் ஓர் அபாய மணி அடித்துக் கொண்டிருந்தது! அது மேலும் பலமாக அடிக்கத் துவங்க, அவளுக்குள் இருந்த ஒரு யூகம் சரியாக போய் விடுமோ என நெஞ்சை கவ்விய பயத்துடன் மெதுவாக தலையசைத்தாள் மாயா! மாயா சம்மதம் தெரிவித்ததும், கார்த்திக்கிற்கு மாயா காணாமல் போன தினம் நடந்தவை மனதில் காட்சிகளாக படம் ஓடியது. அதை வார்த்தைகளில் வலியுடன் வடிவமைத்தான் அந்த நல்லவன்.



****************************************************************************************************



மாயா காணாமல் போன அன்று கார்த்திக் ஈரோடு நோக்கி செல்லும் முன், ஒரு பிரபல நகைக் கடையில் ஓர் பொன் தாலியை வாங்கினான். எப்படியும் மாயாவை திரும்ப கூட்டி வந்துவிட போகிறோம். நேராக மருத்துவமனை தான் செல்வோம். அப்போது அங்கேயே எல்லோரின் முன்னிலையிலும் அவளை திருமணம் செய்யலாம் என்ற முடிவுடனே அவன் அதை வாங்கினான்.



ஈரோடு பஸ் நிலையத்தில் தான் மாயா இருக்கிறாள் என அறிந்தவுடன் அவள் வர வேண்டாம் என கூறியும், அங்கே விரைந்தான் அவள் காதலன். ஆனால், மாயாவை அவன் எவ்வளவு தேடியும் காணவில்லை!! அவளின் போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது….



ஒரு மணி நேரமாக அலைந்து திரிந்தும் மாயா கிடைக்கவில்லை என்றவுடன் அவன் நெஞ்சு கூடு காலியானது! கடவுளே அவளுக்கு ஒன்றும் ஆகியிருக்க கூடாது என்ற வேண்டுதலுடன் விரைவாக அங்கே இருந்த கடைகளில் கேட்டான். அப்படி ஒவ்வொரு கடையாக கேட்டுக் கொண்டே சென்றதில், பஸ் நிலையத்தின் மூளையில் இருந்த ஒரு மூடப்பட்ட இருட்டான கடையில் சில முனகல்கள் கேட்டது!



மனதில் பய எச்சரிக்கை கொடி ஏற்றப்பட, அவசர அவசரமாக அந்த கடையின் ஷட்டரை முழுதாக இழுத்து தன் கண்மணியை கண்டுபிடித்தான் கார்த்திக். ஆனால், கண்டதும் அவன் நெஞ்சே ஒரு நிமிடம் நின்று பின் துடித்தது. உடைகள் எல்லாம் அவிழ்ந்து மூன்று ஆண்கள் மிருமாக மாறி கூதற, நினைவற்று இருந்தாள் மாயா!!! அவளுக்கு மயக்க மருந்து கொடுத்து, அவளை அழைத்து வந்திருக்க வேண்டும் என புரிந்துக் கொண்டான் கார்த்திக்.



இவன் ஷட்டரை திறந்ததும் மூன்று பேரும் அவர்களின் உடைகளை சரிப்படுத்திக் கொண்டு ஓடப் பார்த்தனர். “டேய் பாவிங்களா…” கார்த்திக் கத்தியபடி அவர்கள் மேல் பாய்ந்தாலும், அவனால் மூன்று பேரையும் சமாளிக்க முடியவில்லை. அவன் ஒன்றும் சினிமா ஹீரோ அல்லவே எல்லோரையும் துவைத்து துவசம் செய்ய!!



இவனை பிடித்து தள்ளிவிட்டு மூவரும் சென்றாலும், அவர்களின் முகம் மட்டும் ஆழப் பதிந்தது கார்த்திக்கின் மனதில். ஒரு நொடி தான் அவர்களை பற்றி யோசித்தான், மறுநிமிடமே அவன் காதலியிடம் கண்ணீருடன் சென்றான். கைகள் நடுங்க அவளின் உடைகளை அவளுக்கு அணிவித்துவிட்டு, அடுத்து என்ன செய்வது என்று சிந்தித்தான். நடந்ததை யாருக்கும் அறிய கூடாது என்பதில் மட்டும் மிகத் தெளிவாக இருந்தான் அவன்.
 
நெஞ்சம் கனமான பதிவு,
சிந்துலக்ஷ்மி ஜெகன் டியர்
 
Last edited:
எந்த தப்பும் செய்யாமல் இத்தனை நாட்களாக கார்த்திக் சிலுவையை சுமந்திருக்கிறான்
 
Last edited:
இவ்வளவு நல்லவனான கார்த்திக்கை எப்படி எல்லாம் திட்டி விட்டோம்.
 
Top