Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் – 15

Advertisement

Dhanuja

Well-known member
Member
அத்தியாயம் – 15

“முன்னாடியெல்லாம் என்ன பார்த்தா பதறிட்டு ஓடுவா ஆனா இப்போ” என்று தன் நிலையை நொந்து கொண்டு இருந்தான் வஞ்சி கொண்டான்.திருமணம் முடிந்த நாளில் இருந்து வஞ்சி தனது கணவனை ஓட ஓட தான் விரட்டுகிறாள்.

என்னது கணவனா! ஆஆ...... திருமணமா!.... ஆம் ஒன்றல்ல இரண்டு திருமணம் அவ்வீட்டில் நடந்து முடிந்தாயிற்று.

இரு வாரங்களுக்கு முன்னால் நடந்த உரையாடலுக்குப் பிறகு அனைவரையும் கூட்டி கொண்டு குடும்பமாக தனது தாய் மாமன் வீட்டுக்குச் சென்றான் கபிலன்.அவர்கள் வீட்டினுள் நுழைய அதிர்ந்து போனார் வெங்கடேசன் இவர்களைச் சத்தியமாக எதிர் பார்க்கவில்லை அதிலும் கபிலனை.

சற்று தடுமாறியவர் சுதாரித்துக் கொண்டு “வாங்க… வாங்க...... வாம்மா மது,வா மாலா…” அவரது அழைப்பை சிறு தலை அசைப்புடன் ஏற்றுக் கொண்டனர் “விஜி பிள்ளைங்க வந்து இருக்கு வா” என்றவர் அனைவரையும் ஒரு பார்வை பார்த்து வைத்தார்.
மது எழுந்து “நான் ராகினிய பார்த்துட்டு வரேன்” என்று ஓடிவிட்டாள்

விஜ்யலக்ஷ்மி வந்தவர் “வாங்க!... வாங்க!... பெரியவங்க எல்லாம் வந்து இருக்கீங்க”

“அத்தை இப்படியெல்லாம் பேசாதீங்க” கபிலன் வருத்தமாகச் சொல்ல

“பின்ன எப்படிடா பேசறது உங்க கிட்ட வீடு தேடி வந்தா என்ன பேச்சுப் பேசுனான் தெரியுமா உன் தம்பி” என்றவர் அழுகவே ஆரம்பித்து விட்டார் கபிலன் வஞ்சி கொண்டானை முறைக்க ஓடி வந்து தனது அத்தையின் தோள்களைப் பற்றியவன் “அத்தை சாரி எனக்கு.............” என்றவன் பேசமுடியாமல் கண் கலங்கி நிற்க அவனது கலங்கிய முகத்தைப் பார்க்க முடியாமல் தனது அழுகையை நிறுத்த முயற்சித்தார்.அவன் மருமகன் என்றதை தாண்டி மகன் போல் அல்லவா வளர்த்தார்.

“விஜி கொஞ்சம் சும்மா இரு” என்றவர் “சொல்லுடா எல்லாரும் சேர்ந்து வந்து இருக்கீங்க அப்போ விஷயம் பெருசா தான் இருக்கும்.இல்லனா நீயே வந்துருப்பியா”

“மாமா நானும்,வஞ்சி கொண்டானும் கல்யாணம் பண்ணிக்கலாம் இருக்கோம் நீங்க தான் முன்ன நின்னு நடத்தி வைக்கணும்”

“நல்ல விஷயம் ஆனா தகவலா தான் எனக்குச் செய்தி இல்லையா”

“அப்படில்லா மாமா சூழ்நிலை சரியில்லை”

“சூழ்நிலையை ஒருவாக்குனதே நீங்க தானடா எனக்கு எல்லாம் தெரியும் என்னமோ செய்ங்க நல்ல இருந்தா சரி.சொந்தத்துல பொண்ணு கொடுக்க ஆட்கள் இருந்தும் நீங்க பண்ணுறது சரியில்லை”

“மாமா!.............”

“கபிலன் எனக்குத் திருமணத்துல வருத்தம் தான். ஆனா உன் வயசு,அவன் நிலை” என்று வஞ்சி கொண்டானை கை காட்டியவர் “அப்புறம் துளசி பாப்பா,பானு அதாவது என் பேத்தி இவங்களைக் கொண்டு தான் இந்தத் திருமணம் என்ன பொறுத்தவரைக்கும் நான் அப்படி தான் சமாதானம் பண்ணனும் வேற வழி”

வெங்கடேசன் பேசியது மாலா விற்குச் சங்கடத்தைக் கொடுத்தாலும் அதனை வெளி படுத்தவில்லை என்ன நடந்தாலும் கபிலனுடன் தான் தன் வாழ்க்கை என்பதை முடிவு செய்துவிட்டாள் பேரிளம் பெண்.

விஜயலக்ஷ்மி தான் கணவனைக் கடிந்து கொண்டார் “என்ன பேசுறீங்க நீங்க சொந்த மாமன் மகளே அந்தப் பிள்ளைகளை அனுசரிச்சு போகல இதுல மத்த சொந்தம் என்ன பண்ணும்”

மனைவியின் பேச்சில் உள்ள நியாயம் சுட அமைதியாகிவிட்டார் சாம்பவி அவர் பெண் தான் என்றாலும் அவள் செய்தது மகா பாதகம் அதுவே ஓர் குற்ற உணர்வை கொடுக்கத் தினமும் இந்த ஆண்களுக்காக வேண்டி கொள்வார்.

அவரால் அதை மட்டுமே செய்ய முடியும் அவர் பேத்தியை கூட வைத்து பார்த்துக் கொள்ள முடியாதவர் இவர்கள் திருமணத்தைப் பத்தி பேசி என்ன செய்யத் தங்க ஊசி என்பதால் கண்ணில் குத்தி கொள்ள முடியுமா என்ன

அதன் பின் வெங்கடேசன் எதுவும் பேசவில்லை ஒரு வாரத்துக்குள் திருமணம் ஏற்பாடு செய்தார் மிகவும் எளிமையாக வயது கடந்து திருமணம் என்று கபிலனும் இது மறுமணம் தானே என்று வஞ்சி கொண்டானும் ஆடம்பரத்தை ஒதுக்கி விட்டு தம்பி,தங்கை,தாய் மாமன் குடும்பம் மட்டுமே வைத்துக் கொண்டு முருகன் கோவிலில் திருமணத்தை முடித்துக் கொண்டனர்.

வாய் வார்த்தையாக வஞ்சி சொல்லவில்லை என்றாலும் திருமணம் ஏற்பாடு நடக்கும் பொது எதுவும் சொல்லாமல் பார்த்துக் கொண்டு இருந்தாள். கபிலன் அறிந்த வரையில் அவளுக்குத் திருமணத்தில் சம்மதம் தான் அதனால் தான் அவன் துணிந்து திருமணத்தை ஏற்பாடு செய்தது இதோ திருமணமும் முடிந்து மூன்று நாட்கள் ஓடி விட்டது.

வழமை போல் வாழ்க்கை என்றாலும் வஞ்சியின் பேச்சு சற்று கூடி தான் போனது அவனது கொண்டவனிடம் “உங்கள தான் சொல்லுறேன்”

“என்னடி நானும் பார்கிறேன் ரொம்பத் தான் மிரட்டுற” என்று வஞ்சி கொண்டான் வஞ்சியை நெருங்க பயம் வந்தாலும் காரியம் ஆக வேண்டுமே என்று அசையாமல் நின்றாள்.தான் நெருங்கினால் பயந்து ஓடுவாள் என்று எண்ணியவன் அவள் அசையாமல் நிற்கவும்

“பயம் விட்டுப்போச்சு ஹ்ம்ம்…..”

“எதுக்குப் பயந்துக்கணும் நீங்க என்ன சிங்கமா”

“கொழுப்புடி”

“ப்ச்.... விளையாட்டை நிறுத்திப்பிட்டு வெரசா வாங்க போயிட்டு வந்துடலாம்”

“வஞ்சி டாக்டர் வீட்டுக்கே வந்து பார்த்துப் போவார் துளசி பிறந்ததுல இருந்த அவர் தான் பார்க்கிறார் என்ன வேணுமோ அவர் கிட்ட கேளு”

“அவ பிறந்த குழந்தை இல்ல இன்னும். உங்களுக்கு விளக்கமா சொல்ல முடியல நான் பெரிய மாமா கிட்ட பேசிகிறேன்” என்று செல்ல போனவளை கை பிடித்து இழுத்தவன் “நானே கூட்டிட்டு போறேன் வா”

அவன் சொன்னதும் பானுவையும்,இனியாளையும் (வஞ்சியின் மகளது பெயர் திருமணம் முடிந்த உடனே அதனைப் பதிவு செய்தவன் தனது மகளுக்குப் பெயர் வைத்துத் தன்னைத் தந்தை என்று சொல்லி பிறப்புச் சான்றிதழ் பதிவு செய்துவிட்டான்) இருவரையும் மதுவிடம் கொடுத்து விட்டு கிளம்பி விட்டாள் வஞ்சி.
திருமணம் முடித்தவுடன் ஓர் மகிழ்ச்சியோ இல்ல வேறேதும் உணர்வோ வரவில்லை வஞ்சிக்கு அவள் சிந்தனையில் முழுக்கத் துளசி தான்.இவர்கள் திருமணம் செய்தது துளசிக்கு அத்தனை மகிழ்ச்சி அவளுக்குத் தெரிந்த வகையில் வெளி படுத்தி ஆர்பரித்தாள் பெண்.

ஆனால் வஞ்சிக்கு மட்டும் எதோ தவறு என்று பயம் வந்தது துளசியை எண்ணி.அதற்குக் காரணம் நாளுக்கு நாள் அவளது மாற்றங்களும் வளர்ச்சியும் கிராமத்துப் பெண் என்பதால் சில விடயங்கள் எப்படிக் கையாள்வது என்று வஞ்சிக்கு தெரியவில்லை அதனால் தான் மதுவின் உதவியோடு பெண் மருத்துவரை நாடலாம் என்று வஞ்சி கொண்டானை கிளப்பிக் கொண்டு இருந்தாள்.

இருவரும் ஓர் தனியார் மருத்துவமனைக்குச் சென்றனர் துளசியை அவள் நாற்காலியில் அமர வைத்து இருவரும் கூட்டி சென்றனர்.வஞ்சி கொண்டான் பேசி முன் ஏற்பாடு செய்ததால் நேராக மருத்துவரை பார்க்க அனுமதிக்க இருவரும் உள்ளே நுழைந்தனர்.

“வாங்க பொண்ண தூக்கி அங்க படுக்க வைங்க வஞ்சி சார்”

“ஓகே மேடம்” என்றவன் தனது தங்கையைத் தூக்கி படுக்க வைத்தவனை “நீங்க கொஞ்சம் வெளில இருங்க” என்றவர் பரிசோதிக்கத் தொடங்கி விட்டார் வஞ்சி கொண்டான் வெளியில் வந்து அமர்ந்து கொண்டான்.வஞ்சி உள்ளே நின்றாள்.

பரிசோதித்துக் கொண்டு இருக்கும் பொது வலியில் துளசி முனக தவித்துப் போனாள் வஞ்சி.துளசியை முழுவதுமாகப் பரிசோதித்தவர் “உங்க கணவனைக் கூப்பிடுங்கம்மா” வெளியில் வந்த வஞ்சி “ஏங்க உங்கள் டாக்டரம்மா கூப்பிடுறாங்க”

“ஹ்ம்ம் வரேன்” என்றவன் உள்ளே நுழைந்தான்

“நர்ஸ் அந்தப் பொண்ணுகிட்ட நின்னுக்கோங்க விழுந்துற போரா என்றவர் உட்காருங்க வஞ்சி சார்… சொல்லுங்க…”

“என் மனைவி தான் பேசணும் சொன்னாங்க டாக்டர்”

“சொல்லும்மா என்ன தெரியணும்”

கணவனைச் சங்கடமாகப் பார்த்தவள் பேச தயங்க “தயங்க ஒன்னுமில்ல சொல்லுங்க அவருக்கும் தெரியணும் அவுங்க சிஸ்டர் தானே”

“அதில்ல பாப்பா உடம்புல கொஞ்சம் மாறுதல் தெரியுது”

“நீங்க தான் அவளை பார்த்துகிறீங்களா”

“ஆமாங்க”

“ஆமா கொஞ்சம் இல்ல நிறைய மாறுதல் அவுங்க வயசுக்கு இது ரொம்பக் குறைவான மாறுதல் தான் ஆனா நார்மல் சைல்ட் இல்லாத பட்சத்துல இது மாதிரி தான் இருக்கும்”

“அதாங்க பயமா இருக்கு எப்படி பார்த்துக்கணும்”

“நான் என்ன வாங்கணும் எப்படி பார்த்துக்கணும் சொல்லுறேன் கவலை வேண்டாம் ஆனா இவங்க பிறிப்பிலே இப்படிதான் அதுனால் கொஞ்சம் கவனமா தான் இருக்கனும்” என்றவர் துளசிக்குச் செய்ய வேண்டியதை சொல்ல கவனமாகக் கேட்டுக் கொண்டால் சிலவற்றை அவர் ஆங்கிலத்தில் சொல்ல இவளுக்குப் புரியவில்லை.ஆனால் அவர் சொல்வதை வஞ்சி கொண்டான் குறித்துக் கொண்டான்.

டாக்டரை பார்த்துவிட்டு வந்தவன் வீட்டுக்குச் செல்லும் வழியில் டாக்டர் சொன்ன அனைத்தையும் வாங்கிக் கொண்டே சென்றான்.இருவரும் நுழைய அங்கே கூடத்தில் அனைவரும் அமர்ந்திருந்தனர்.மாலா இரு பிள்ளைகளும் தூங்க வைத்துக் கொண்டு இருந்தாள்.

“என்னடா சொன்னாங்க டாக்டர்? இப்போதான் மதுகிட்ட கேட்டேன் அவ ஹாஸ்பிடல் போயிருக்காங்கனு சொன்னா என்ன ஆச்சு?” கபிலன் பதற

“ஒண்ணுமில்ல அண்ணா இவ தான் லேடி டாக்டர் பார்க்கணும் சொன்னா அதான்” பேசிக்கொண்டே துளசியைப் படுக்கையில் படுக்க வைத்தவன் கபிலனுடம் அமர்ந்து கொண்டான் அவனுக்கும் டாக்டர் சொன்னதை எண்ணி வஞ்சி ஏன் பயந்தாள் என்பதைக் கண்டு கொண்டான்.

அவனது சோர்வை கண்ட கபிலன் “என்ன ஆச்சு”

“துளசி அடுத்தக் கட்டத்துக்குப் போகப் போராண்ணா” அவன் சொன்னது புரிந்தாலும் பதட்டம் வர “என்னடா சொல்லுற”

“நம்ப டாக்டர் கிட்ட போகணும் நீங்க வறீங்களா”

“ஹ்ம்ம்” என்றவன் உடனே கிளம்ப அவனும் அழைத்துக் கொண்டு சென்றான் அங்கே அவர் சொன்ன செய்தியில் ஆண்கள் இருவருக்கும் வாழ்க்கையே வெறுத்து விட்டது

“அண்ணா நம்பக் கவனிக்காம விட்டுட்டோமே” என்று தன்னை அடித்துக் கொண்டு அழுதவனை என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியவில்லை கபிலனால்

“நமக்கு என்னடா தெரியும் இதெல்லாம் பெண் வாடையே இல்ல மது வளர்ந்தது மாமா வீட்டுல… என்ன பண்ண சொல்லுற இதுல யாரை நம்பக் குத்தும் சொல்ல முடியும்.

“எதுவும் வீட்டுல பேசிக்க வேண்டாம் அவ இருக்கிற வரை ராணி மாதிரி பார்த்துக்கலாம்” என்றவன் வஞ்சி கொண்டானை சமாளித்து அழைத்துச் சென்றான்.

அவனைச் சமாதானம் செய்தாலும் கபிலனுக்கு மனம் என்னவோ ஒரு நிலையில் இல்லை.யாரை சொல்லி என்ன செய்ய விதி அதன் வழியில் சிறப்பாக அடுத்தக் காயை நகர்த்தியது.

காலம் கடந்தாலும் இனி விடியல் தான் என்று இருந்த குடும்பத்தை மீண்டும் இருளுக்குள் தள்ளியது துளசியின் நிலை.
 
Top