Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் – 19

Advertisement

Dhanuja

Well-known member
Member
அத்தியாயம் – 19
அன்று விடுமுறை என்பதால் அனைவரிடமும் ஒரு சோம்பல் மது சோபாவில் அமர்ந்து போனில் எதையோ பார்த்துக் கொண்டு இருக்க வழமை போல் வஞ்சி அடுக்கலைக்குள்.உடையவன் மதுவின் மடியில் படுத்துக் கொண்டு நண்பனிடம் பேசி கொண்டு இருந்தான்.

வஞ்சி கொண்டானும் கபிலனும் தனது மகள்களுடன் விளையாடி கொண்டு இருக்க மாலா சோக சித்திரமாக அமர்ந்து கொண்டு இருந்தாள் கண்ணில் கண்ணீர் அருவியாகக் கொட்ட நேரம் பார்த்துக் கொண்டு இருந்தது.எதார்த்தமாக விளையாடி கொண்டு இருந்தவன் திரும்பி பார்க்க மாலாவின் நிலை தெரிய கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

“என்னடி பிரச்சனை உனக்கு இப்போ ? ஹான்..... எதையோ பறி கொடுத்தவ மாதிரி உட்காந்து இருக்க”

“எனக்குக் குழந்தை வேணும்”

“இரு வாங்கித் தரேன்”
“என்ன நக்கலா என் நிலைமை புரியுத உங்களுக்கு”

“என்ன உன் நிலைமை”

“உங்ககிட்ட பேச முடியாது” என்று மாலா எழுந்து செல்ல பார்க்க ஆத்திரமாக அவளது கையைப் பற்றிய கபிலன் “என்னடி பேச முடியாது காரணமே இல்லாம எதையோ நினைச்சு அழுதா நான் என்ன செய்ய முடியும்”

“என்ன காரணம் இல்லமா னு சொல்லுறீங்க உங்களுக்கு என் மேல அன்பே இல்ல எதுக்கு என்ன கல்யாணம் பண்ணீங்க பிடிக்காம”

மாலா !......................... என்று கத்திய கபிலன் “இதுக்கு மேல பேசாதடி உனக்கு நல்லது இல்ல. பருவ வயசுல கல்யாணம் பண்ணி குழந்தை இல்லையா?.... அதுவும் கல்யாணம் ஆகி மூனு மாசம் தான் ஆகுது பேச வந்துட்டா பெரிய இவ மாதிரி…. நான் சொல்லும் போது கல்யாணம் பண்ணி இருந்தா இப்போ நம்பப் பிள்ளை தோளுக்கு மேல நிற்கும்”

“குத்தி காட்டுறீங்களா”
“உண்மைய சொல்லுறேன் இப்போ என்ன சொல்லிட்டாங்கனு அழுது கறையுற”

“ஏன் உங்களுக்குத் தெரியாத? நீங்களும் தானே இருந்தீங்க” இவர்கள் தனக்குள் வாக்கு வாதம் செய்ய மற்றவர்கள் என்ன என்று குழம்பி நின்றனர் வஞ்சி தான் கபிலன் பேசுவதைப் பார்த்து மனதுக்குள் ‘குடும்பமே இப்படி தான் போல’ என்று எண்ணி கொண்டாள்... பின்ன கொண்டானும் இப்படி தான் பேசி வைப்பான் எடக்காக

“எனக்குப் பதில் சொல்லுங்க”

“என்னடி சொல்ல சொல்லுற டாக்டர் என்ன சொன்னாங்க வயசு எனக்குக் கொஞ்சம் ஜாஸ்தி பார்த்துக்கோங்க சொன்னாங்க அது உண்மை தானே”

“சும்மா சும்மா வயச பத்தி பேசாதீங்க”

“அட ராமா” என்று தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான் கபிலன் அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதைக் கருத்தில் கொள்ளாமல் வயது என்ற வார்த்தையைப் பிடித்துத் தொங்கும் அவளை என்ன செய்ய எப்படி இவளுக்குப் புரிய வைப்பது என்று தெரியவில்லை.

வாழ்க்கையில் முதல் அடி கூட எடுத்து வைக்க வில்லை அதற்குள் துளசியின் இறப்பு இப்போது இவள் வேறு தலையை முடியை கோதி கொண்டவன் அப்போது தான் அனைவரும் தங்களைப் பார்ப்பதை உணர்ந்தான். மது வேறு அழுகும் நிலையில் இருக்க மாலாவின் கையைப் பிடித்தவன் “வா” என்று இழுத்துச் சென்றான் தங்களது அறைக்கு.

மது என்னவென்று தெரியாமல் அழுக தொடங்கி விட வஞ்சிக்கு ஐயோவென்று இருந்தது பெரியவர்கள் இல்லையென்றால் அதுவும் தாய் தந்தை இல்லையென்றால் பிள்ளைகளின் நிலை இது தான் போலும் வாழ்க்கையைத் தொலைத்து தொலைத்து தேடி கொண்டு இருந்தனர்.

சூழ்நிலை கணம் உணர்ந்த வஞ்சி கொண்டானை நெருங்கி அவனது கைகளைக் கிள்ளி வைக்க அவளது எதிர்பாரதச் செயலால் சற்று துள்ளியவன் “என்னடி கிள்ளி வைக்கிற” அவனை முறைத்து பார்த்தவள்

“மண்ணு மாதிரி நிற்காம அவளைக் கவனிங்க உங்க தம்பி முகமும் சரியில்ல கபிலன் அண்ணா மாலா அக்காவை பார்த்துப்பாங்க” என்றவள் குழந்தைகளைத் தன்னோடு வைத்து கொண்டாள்.

“வஞ்சி கொண்டான் மதுவிடம் நெருங்கி ப்ச்… என்னடா மது எதுக்கு அழகுற ஒண்ணுமில்லடா”

“அண்ணா அண்ணி சண்டை போடுறாங்க” சிறு பிள்ளை போல் தேம்பி தேம்பி அழுக என்ன சொல்லி அவளைத் தேற்றுவது என்று தெரியாமல் முழித்து நின்றான் அவனுக்கு இது போல் பேசி பழக்கம் இருந்தால் தானே.

அவனது நிலையைப் பார்த்துத் தலையில் அடித்துக் கொண்ட வஞ்சி மதுவிடம் நெருங்கி “மது அது புருஷன் பொண்டாட்டி சண்டை நிமிசத்துல மறந்து போய்டுவாங்க உனக்குக் கல்யாணம் ஆனாலும் நீயும் இப்படி தான் இருப்ப” இன்னும் என்னென்னமோ சொல்லி அவளைச் சமாதானம் செய்வதற்குள் நொந்து விட்டாள் வஞ்சி.

உடையவன் உணவு விடுத்து வெளியில் கிளம்பிவிட்டான் மதுவை சமாதானம் செய்து விட்டு வந்தவள் கண்ணில் உடையவன் வெளியில் செல்வது பட வஞ்சிக்கு எரிச்சலாக இருந்தது இவர்களை ஒன்று திரட்டி எப்போது தேர் இழுக்க.....

“எங்க அந்த மனுஷன்” என்று கொண்டானை தேட அவனோ அவனது அறையில் குப்புற படுத்திருந்தான்

“சுத்தம்.......... என்னங்க என்ன இது சாப்பிட வாங்க உங்க தம்பி வெளில போறார் அவருக்குப் போன் பண்ணி வர சொல்லுங்க”

“நீயே சொல்லு எனக்குச் சாப்பாடு வேணாம்”அவனது பதிலில் கோபம் பொத்துக் கொண்டு வர “ரொம்ப நல்லது சாப்பிட வேண்டாம், தூங்க வேண்டாம், எல்லாரும் தனித் தனியா இருந்தது அழுது சாகுங்க நானும் என் பொண்ணும் எங்க ஊருக்கு போறோம்”

ஏய்!.... என்று கூவலோடு எழுந்தவன் அவளை விடக் கோபமாக “இந்த வீட்டை விட்டு தாண்டி பார் தெரியும் செய்தி வருடி உன் பொண்ணு”

“என்ன செய்வீங்க”

“ஏன் என்ன பத்தி தெரியாத உனக்கு”

“இந்தச் சண்டியர் மாதிரி முறுக்குற வேலை வேணாம்”

“ரொம்பத் திமிறுடி உனக்கு”

“பின்ன என்ன நானும் உங்கள எல்லாத்தையும் ஒரு வழமைக்குக் கொண்டு வரணும் போராடுறேன் முடியுதா? திசைக்கு ஒன்னு போனா நான் என்ன செய்யச் சொல்லுங்க உங்களுக்குக் கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா.இந்த மாதிரி நேரம் நீங்க தான் உங்க தம்பியையும்,தங்கச்சியையும் அனுசரிச்சு நடக்கனும்”

“எனக்கு என்ன பன்னுறதுனு தெரியலடி”

“என்ன பேச்சு இது”

உண்மையா தான் சொல்லுறேன் எங்களுக்கு யாருடி இருக்கா சொல்லி கொடுக்க. உனக்கு ஒன்னு தெரியுமா நாங்க மூணு வேலை வீட்டுல சாப்பிடுறது கூட நீ வந்த பிறகு தான்.சாப்பாடே இப்படின்னா மத்த விஷியத்தை யோசுச்சு பார் உனக்கே தெரியும் நான் சரியான மண்ணுடி” என்றவன் வேதனை அவளைத் தாக்க

“ஐயோ என்னங்க நான் ஏதோ கோபத்துல பேசிட்டேன் மன்னிச்சுக்கோங்க”

“ப்ச்.. நான் என்ன எப்படி புரிய வைப்பேன்” என்றவன் நின்று கொண்டு இருந்தவளது கைகளைப் பற்றி இழுத்து தன்னுடன் அமர வைத்தவன் அவளது மடியில் புதைந்து கொண்டான் “கூட வளர்ந்தவ என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒரு குழந்தையைப் பெத்த என் மாமன் பொண்ணு கூட வராத நெருக்கம் உங்கிட்ட வந்தது எனக்கே அதிர்ச்சி தான் அதுக்குன்னு நான் தப்பானவன் இல்லை என்ன புரியுதா….. நீ எனக்கு அம்மாடி என்ன விட்டு போயிடாத” என்று கட்டி கொள்ள உறைந்து இருந்தாள் வஞ்சி...

தன்னைப் புரிந்து கொள்ள வேண்டுமே என்ற தவிப்பு அவனிடம் வெளிப்படவே அவனை இறுக்கி கொண்டவள் முதல் முதலாக மனம் திறந்தாள்.

*********************************************

அங்கோ

“என்னடி பேச்சு பேசுற உன்ன பிடிக்காம தான் இத்தனை வயசு வரை காத்திருந்து கட்டிக்கிட்டேனா? என் தம்பிய விட்டு உன்ன பார்த்துக்கச் சொன்னேனா? எப்போடா என்கிட்ட வருவான்னு காத்திருந்தேனா? நான் உன்ன பார்க்க வர நேரம் வஞ்சி வந்தா அவளை வச்சு உன்ன இங்க வரவச்சேன்

அது வரை அழுது கொண்டு இருந்தவள் அவனது கடைசிக் கூற்றில் அதிர்ந்து பார்க்க “என்ன பார்க்குற நான் என்ன சினிமா ஹீரோவ உன்ன எதாவது பண்ணி கல்யாணம் பண்ண சொல்லு…. இல்ல நான் என்ன பண்ணாலும் நீ தான் சும்மா விட்டுறுவியா.அதான் வஞ்சி கொண்டான் கிட்ட வஞ்சியைப் பத்தி விசாரிக்கச் சொன்னேன்,

அவனும் உங்க அக்கா மாரி கிட்ட விசாரிச்சு இருக்கான் பாவம் அந்தப் பொண்ணு சின்ன வயசு என்ன நேரமோ....... பெத்தவங்க இல்லாத நம்பள கடவுள் ஒரே கோட்டுல வந்து நிறுத்தி இருக்கார்.அவனுக்கும் வஞ்சியைப் பிடித்துப் போச்சு அந்தப் பொண்ணு இங்க வந்ததுல இருந்து தான் வீடும் குடும்பமும் நல்ல இருக்கு”

“பானு, மது கூட ஆரோக்கியமா இருக்காங்க காசு இருந்து என்ன பண்ண எங்களுக்கு அவுங்கள பார்த்துக்கத் தெரியல.வயசான மாமா மாமி கிட்ட இந்தப் பொண்ணுகளை விடவும் மனசில்ல அதான்….. இரண்டு வருஷம் முன்னாடியே நீ பேசுன தானே அந்தத் தைரியத்துல தான் இந்த கல்யாண முடிவு.நீ என்னடானா பிடிக்கலைனு அழகுற பரீட்சை எழுதாம எப்படி.. டி… பாசக” என்றவன் அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்துக் கொள்ள அவன் சொல்ல வருவது வெகு தாமாகத் தான் புரிந்தது மாலாவிற்கு

சீ…

“என்ன ச்சீ…. மனசாட்சி வேணாமாடி ராட்சசி முயற்சி பண்ணி பார்த்துல நீ அடுத்தக் கட்டத்துக்குப் போகனும்” என்றவன் அடுத்தச் செய்த செய்கை அனைத்தும் காத்திருப்பின் உச்சம் என்று தான் சொல்ல வேண்டும் எத்தனை வருட காதல் அங்கு ஆட்சி செய்யக் காமம் கலந்து களவு கொண்டு வாழ்க்கையின் முதல் படியை எடுத்து வைத்தனர்.

மாலாவின் பயம் தங்களுக்கென்று ஓர் உறவு இல்லாமல் போய்விடுமோ என்று தான் அந்த அளவிற்கு அவள் உடப்பிறப்புகள் அவளைக் பதம் பார்த்து விட்டனர் அதுவும் அன்பு கொள்ளக் கபிலன் இருந்தும் கை கொடுக்க உடன் பிறப்பு இருந்தும் தனிமை எத்தனை கொடுமை.நேற்று வேறு மருத்துவர் வயது சென்று கர்ப்பமானால்.
என்ன நன்மை தீமை என்று எடுத்து சொல்ல கலங்கி போனாள் பேரிளம் பெண்

சும்மாவா சொன்னார்கள்
1-8 ஒன்றாம் எட்டில் விளையாடாத விளையாட்டு வீண்
8-16 இரண்டம் எட்டில் கற்காத கல்வியும் வீண்
16-24 மூன்றாம் எட்டில் செய்யாத திருமணம் வீண்
24-32 நான்காம் எட்டில் பெறாத குழந்தை வீண்
32-40 ஐந்தாம் எட்டில் சேர்க்காத செல்வம் வீண்
40-48 ஆறாம் எட்டில் சுற்றாத உலகம் வீண்
48-56 ஏழாம் எட்டில் காணாது ஓய்வும் வீண்
56-64 எட்டாம் எட்டில் கிட்டாத மரணமும்……….

இக்காலத்தில் இக்கூற்றில் முழுமை பெற்றவர் உண்டோ அதற்கு இவர்கள் குடும்பமே ஓர் எடுத்துக்காட்டு.ஒருவர் வாழ்வு செழிக்க ஒருவர் வாழ்வு இங்குப் புதைக்கப் பட்டது தான் வேதனை கண்ணை வேற்று ஓவியம் வாங்கிய கதையாகி போனது.

கபிலன் மாலா காலம் கடந்து கரம் பிடித்தாலும் அவர்கள் புரிதல் கொண்டு கரை சேர்ந்து விடுவார்கள் என்பதில் ஐயமில்லை.
 
Panam irunthum anathaigal pola eduthu sollavum, seyyavum aal illamal thavithu poi irunthirukkirargal. Paavamthan.
 
Top