Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் – 6

Advertisement

Dhanuja

Well-known member
Member
அத்தியாயம் – 6

வஞ்சி கொண்டானை கண்ட நொடி என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறி நிற்க அவளது முந்தியை பற்றி அப்பா… அப்பா…. என்று வஞ்சி கொண்டானை காட்டி மிழற்றியது மழலை.பயத்தில் தடுமாறி நின்றவளுக்குக் குழந்தையின் குரல் செவியை எட்டவில்லை போலும்.

இலக்கில்லாமல் குழந்தையை வெறித்துக் கொண்டு கண்ணில் நீருடன் அமர்ந்திருந்தவனை விடவும் முடியாமல், நெருங்கவும் முடியாமல் தத்தளித்துப் போனாள் வஞ்சி முதல் முறை மாலாவின் பேச்சில் உள்ள உண்மை உரைத்தது.

அனுபவம் மிக்க முதிர் கன்னியான பேரிளம் பெண் சொன்னாலே படித்துப் படித்து அல்லவா எச்சிரித்தால் அவளது பேச்சை கேட்காமல் போனோமே என்று தவியாய் தவித்து விட்டாள் பெண்.
அவளும் தான் என்ன செய்ய அன்பு ஒன்றை முழுமையாகத் தர எண்ணியது தாய் உள்ளம் அது மற்றவர்கள் பார்வைக்கு வினையாகி போனால் பேதை என்ன செய்வாள் பாவம்.

எத்தனை மணி நேரம் இதே நிலையில் நிற்பது என்று எண்ணியவள் எச்சில் விழுங்கி “அது... அது.... எனக்குப் பாப்பா இருக்கு அதுக்குக் கொடுக்கும் பொது நம்பப் பாப்பாவும்…….” அதற்கு மேல் சொல்ல முடியாமல் தடுமாறி நிற்க அவளை மேலும் சங்கட படுத்தாமல் எழுந்து நின்றவன் அழுத முகத்தைக் கைக் கொண்டு அழுத்தி துடைத்துக் கொண்டு தனது மகளை அள்ளி கொண்டான் பல வருடங்களுக்குப் பிறகு

ஆம்! பானு அவன் மகள் தான் குழந்தையை உச்சி முகர பெறாத தாயின் உதிரத்தின் நெடி நாசி தீண்டி அவன் உயிரில் கலக்க ஆழம் பெற்றது அன்பின் விதை.தனது தடித்த உதடு கொண்டு முத்தமிட்டு இறுக்கி கொண்டான் அந்தப் பூவை அத்தனை மென்மை அதனிடம்.

பிஞ்சு கை கொண்டு அவன் கன்னம் வருட தனது கன்னத்தோடு அழுத்தி கொண்டான்.வேலைக்குச் செல்ல வந்த உடையவன் கண்ணில் இக்காட்சி பட ஆனந்த அதிர்ச்சி அவனது மனதில் உள்ள குழப்பம் மெல்ல மெல்ல தெளிந்தது.
மெதுவாகத் தனது தமயனிடம் வந்தவன் “அண்ணே உன் பொண்ண தூக்க இப்போதான் தோணுச்சா அவ என்ன அண்ணா பண்ணுவா பாவம் குழந்தை…..”

முதல் முறை வாய்த் திறந்தான் வஞ்சி கொண்டான் “என்ன எதுவும் கேட்காதடா பாப்பா என் கூட இருக்கட்டும்” என்றவன் குழந்தையைத் தூக்கி கொண்டு செல்ல அதுவும் தனது தந்தை கழுத்தை கட்டி கொண்டு படுத்துக் கொண்டது.

அவன் மறைந்ததும் ஒருமுறை வஞ்சியைப் பார்த்தவன் எதுவும் சொல்லாமல் சென்று விட்டான்.வஞ்சிக்கு தான் என்ன செய்வது என்று தெரியவில்லை இந்தக் கூத்தில் மதியம் ஒருமுறை தனது பிள்ளைக்குப் பால் கொடுக்க வேண்டும் என்பதே மறந்து போனது.

பிள்ளை வீறிட்டு அழ மாலா பதறி கொண்டு தூக்கி வந்தாள் “வஞ்சி ................வஞ்சி............ எங்க இருக்கப் பாப்பா அழகுற பார்… ஜோ!... ஜோ!..... அழ கூடாது இதோ அம்மாகிட்ட வந்தாச்சுப் பசிச்சுதா பாப்பாக்கு” என்று அதனைச் சமாதான பண்ணி கொண்டு வர

பிள்ளையின் குரல் கேட்டு ஓடி வந்த வஞ்சி குழந்தையை வாரி எடுத்துப் பசியாற்றினால் இளம் தாயின் இடைவிடா வேலையும், களைப்பும் சற்று முன் இருந்த பதற்றமும் அவளைச் சோர்வுற செய்யக் கலைத்திருந்தவளது கை பற்றி “வஞ்சி உனக்கு முடியலைன்னா நம்ப வேற வேலை தேடிக்கலாம் இல்லையா எனக்கு உதவி பண்ணு நமக்கு அந்த வருமானம் போதும்,

இது பக்கத்துல இருக்கே…. உடையவன் தம்பி உன்ன பாதுகாப்பா பார்த்துக்கும் அந்த எண்ணத்துல தான் உன்ன கூட்டிகிட்டு வந்தேன்…… நீயும் சின்னப் பொண்ணு உன்னால நாலு குழந்தைகளை வச்சு பார்க்குறது கஷ்டம் இப்போ தோனுது”

“இல்லக்கா அதெல்லாம் ஒண்ணுமில்லை”

“இது சரிவராது வஞ்சி இன்னும் பத்து நாள் இங்கன இரு அதுக்குள்ள நான் வேற ஆள ஏற்பாடு பண்ணிட்டு நீ நின்னுக்குறேனு உடையவன் தம்பி கிட்ட சொல்லிக்கலாம் என்ன”

“அக்கா பானு…” என்று இழுத்தவளை

வஞ்சி!....... இரண்டு நாள் அழுவா அப்புறம் பழகிடும் உனக்கு அவள பார்க்கணும் தோணுன வந்து பார்த்துக்கலாம் இனி இந்த வேலை வேண்டாம்” என்று அழுத்தி சொன்னவளது பேச்சை மறுக்க முடியாமல் சரியென்று தலை ஆட்டிவைத்தாள்.

அவளது தலை வருடி “நீ சின்னப் புள்ள வஞ்சி உனக்குச் சிலது சொன்னா புரியாது சரசக்கா பேச்சே சரியில்ல உன்ன பத்தி பேசி இருப்பாங்க போல நம்ப வீட்டுக்கார அக்காகிட்ட”

“நான் என்னக்கா பண்ணுனேன்”

“நீ பானுக்குப் பசியாத்துறதை பார்த்துட்டு சொல்லி இருப்பாங்க போல பேச்சு சரியில்லை வஞ்சி வேணாம் நம்மகிட்ட இருக்குறது சுயமரியாதை மட்டும் தான் அதையும் இழந்தா பிணத்துக்குச் சமம்”

“ச்சை…. என்னக்கா சரசக்கா இப்படி பேசுவாங்கனு நினைக்கலை”

“சரசு நால்லம்மா தான் வஞ்சி நான் தான் சொன்னேனே எல்லார் பார்வையும் ஒன்னா இருக்காதுன்னு நீதான் கேட்கலை”
“அக்கா வீட்டுக்காரம்மா உங்களை எதுவும் சொன்னாங்களா”

“ச்சா… ச்சா….. இல்ல வஞ்சி அக்கா எதுவும் சொல்லாது இருபது வருஷ பழக்கம் என்ன பத்தி நல்லா தெரியும்.என்ன சூதனமா இருக்கச் சொல்லுச்சு வேற ஒண்ணுமில்ல… சரி நான் கிளம்புறேன் உடையவன் வந்த உடனே வந்துரு என்ன.. பார்த்து பத்திரமா இரு” என்று கதவு வரை சென்றவள்.

“வஞ்சி பெரியவர் எங்க”

மேலே என்பது போல் கை காட்டியவளை “பார்த்து இரு” என்றவள் வேகமாகச் சென்று விட்டாள் மாலாவின் மனம் மட்டும் ஏதோவொன்று நடக்கப் போகுது என்று ஆணி தனமாக அடித்துச் சொல்லியது.கடவுளின் துணையுடன் அதனைக் கடக்க வேண்டும் வேறு வழியென்று புலம்பி கொண்டே சென்றாள்.

மாலாவின் பயம் சரி என்பது போலத் தான் நடந்தது இரவு வேலை முடித்துத் துளசிக்கு சாப்பாடு கொடுத்துவிட்டுப் படித்துக் கொண்டு இருந்த மதுவை அழைத்து மது, “பானு பாப்பாக்கும்,துளசிக்கு பாப்பாக்கும் ஊட்டி விட்டுட்டேன் நீயும் உங்க அண்ணன்களும் தான் சாப்பிடனும் பார்த்துக்கோ”

“ஏன் வஞ்சி அக்கா குட்டி பாப்பாக்கு சாப்பாடு ஊட்டளையா?”

“இல்லம்மா மாலாக்கா தனியா இருப்பாங்க நான் அங்கன போய்ப் பார்த்துக்குறேன்”

“சரிக்கா போயிட்டு வாங்க” என்றவள் குழந்தை கன்னத்தில் முத்தம் வைத்து அனுப்பினால் இந்தச் சில நாட்களாக நடக்கும் பழக்கம்.கல்லூரி முடிந்தவுடன் வீட்டை நோக்கி ஓடி வந்து விடுவாள் மது தனது மருமகள் பானுவும்,இந்த சில்வண்டும் அவளை அப்படி ஆட்டி வித்தது.

ஒரே கூச்சல் போட்டு இரவு உணவு வரை விளையாட்டு தான் இன்றும் அதே போல அவர்கள் விளையாடும் நேரம் அனைத்து வேலைகளையும் முடித்து விட்டாள் வஞ்சி. மதுவிடம் விடைபெற்று வீட்டுக்கு சென்றவள் மாலாவுக்கு உதவிவிட்டு.

இரவு உணவை முடித்துக் கொண்டு படுத்த இரு பெண்களுக்கும் இடுப்பு வலி உயிர் போனது.இருவரும் கடுமையான உழைப்பாளி கால்கள் வலி எடுக்க பல்லை கடித்துப் பொறுத்து கொண்டாள் பெண். வீட்டு வேலையென்றாலும், காட்டு வேலையென்றாலும் பெண்களின் உழைப்பு கூடுதல் தானே.

கண் மூடி கிடைத்தவளை பார்க்க பாவமாக இருந்தது மாலாவிற்கு ஆனால் பேசி ஆக வேண்டுமே மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தாள் “வஞ்சி மதியம் நான் பேசுனது தப்பா இருந்த மனிச்சுக்கிடு”

அவளது பேச்சில் பதறி எழுந்தவள் “என்னக்கா இப்படி பேசுறீங்க உங்களுக்கு இல்லாத உரிமையா என்ன? நீங்க சொல்லுறது என் நன்மைக்காக மட்டும் தானே விடுங்க அக்கா"

அவளது கைகளைப் பற்றியவள் “நீ எனக்குத் தங்கச்சி உங்களுக்காக நான் இருக்கேன் இனி என்கூட இரு வெளில வேலைக்குப் போக வேணாம்”

“சரிக்கா”

“உனக்குத் தையல் கத்துத்தறேன் இன்னொரு மிஷினை வாங்கிப் போட்டா ஓடுற ஓட்டம்”

“சரிக்கா”

“யார்கிட்டயும் கை கட்டி நிக்க வேண்டாம் பேச்சும் வாங்க வேண்டாம்”

“சரிதாக்கா” சொன்னதை கேட்கும் கிளி பிள்ளை நிலையில் வஞ்சி

“ஹ்ம்ம்” என்ற மாலா அத்துடன் பேச்சை முடித்துக் கொண்டு கண் மூடிக்கொள்ள அவளைப் பார்த்தவாறே கண் அசந்தாள் வஞ்சி.

நடு நாசி மணி மூன்றை நெருங்கும் வேளையில் மாலாவின் வீட்டு கதவு உடைப்பட்டது.பெண்கள் இருவரும் ஆழந்த உறக்கத்தில் இருப்பதால் சத்தம் காதில் விழவில்லை போலும்.நேரம் ஆக ஆகக் கதவு உடைபட அடித்துப் பிடித்து எழுந்தனர்.

முதலில் எழுந்த வஞ்சி பயந்து கொண்டே “அக்கா உங்க தம்பியா”

“இல்ல வஞ்சி அவனைத் தான் சண்டை போட்டு வராதான்னு சொல்லிட்டானே”

“ஐயோ!...க்கா… அப்புறம் யாரா இருக்கும்?”
“ப்ச்… நான் இருக்கேன்ல என்ன பயம் இரு நான் யாருனு பார்க்குறேன்” என்றவள் எழுந்து செல்ல வஞ்சிக்கு உதறல் தான் நித்தம் நித்தம் ஒரு நாளை ஆண் துணை இல்லாமல் கடத்துவது பெரும் பாடகி போனது இந்தப் பெண்களுக்கு.

எழுந்து சென்று கதவை திறந்தவள் அங்கு நிற்கும் நபரை பார்த்து மிரண்டு விழிக்க மாலா சிலையாகி நிற்பதை பார்த்து யாரென்று இல்லாத தைரியத்தைக் கையில் பிடித்துக் கொண்டு எட்டி பார்க்க வஞ்சி கொண்டானை பார்த்து வஞ்சியும் அதிர்ந்து நின்றாள்.

கையில் அழுகும் குழந்தையை வைத்துக் கொண்டு நின்றவன் வஞ்சியை மறைத்துக் கொண்டு நின்ற மாலாவிடம்

“மாலாக்கா வஞ்சிய வர சொல்லு பாப்பா தேடுறா” இத்தனை வருட பழக்கத்தில் அவன் இன்று தான் வாய் திறந்து தன்னை அழைத்திருக்கிறான் என்ற அதிர்ச்சியில் மாலா நிற்க என்னடா இது வம்பு என்பது போல் கைகளைப் பிசைந்து கொண்டு நின்றாள் வஞ்சி

அவனது அசையாத பார்வை வஞ்சியைத் துளைப்பதை அறிந்த மாலா “குழந்தைய கொடுத்துட்டு போங்க பெரிய தம்பி காலையில கொண்டு வந்து விடுறேன்” என்க

அதற்கு அவன் சொன்ன பதிலில் இருவரும் அலறினர்.

ஐயோ!.... என்ன பெரிய தம்பி நீங்க புரியாம பேசுறீங்க நாங்க பொம்பளைங்களா இருக்கோம் நடு ராத்திரி வந்து வா வீட்டுக்கான நல்லாவா இருக்கும்”

“ஏன்?”

“என்னடா இவனோட” மனதுக்குள் கடிந்தவள் பயத்தில் தனது புடவையைப் பின்னால் இருந்து இறுக்கப் பிடித்திருக்கும் வஞ்சியைத் திரும்பி பார்த்து அடிக்குரலில் “பார்த்தியா நீ பண்ணி வச்ச வேலையை இவன் சரியான முரடு என்ன சொன்னாலும் கேட்க மாட்டான்”

“அக்கா பயமா இருக்கு உடையவன் சாருக்கு போன் போடுங்க” அதுவும் சரியென்று பட
அழுகும் குழந்தையைக் காட்டி அவனைத் திசை திருப்ப எண்ணி “தம்பி பாப்பா அழுகுது பாருங்க அதை முதல கவனிப்போம் நீங்க இந்தத் திண்ணையில உட்காருங்க” என்றவள் அவன் பதிலை எதிர் பார்க்காமல் குழந்தையை கிட்டத்தட்ட பிடுங்கி கொண்டு கதவை அடைத்து கொண்டாள் எங்கே கதவை திறந்து வைத்தால் வந்து விடுவானோ என்ற பயம்

“வஞ்சி நீ முதல அவளைத் தூங்க வை” என்றவள் உடையவனுக்கு அழைத்து விடயத்தைச் சொல்ல அடித்துப் பிடித்து ஓடி வந்தான்.தனது அண்ணனின் எதிர்பாரா செயலில் திகைத்தவன் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவனிடம் நெருங்கி வர.....உடையவன் பேச்சை முன்பே கணித்தவன் போல

“நீ என்ன சொல்ல போறன்னு தெரியும்...............” என்றவன் அடுத்து கூறியது அதிர்ச்சியின் உச்சமென்றே சொல்ல வேண்டும்…


வஞ்சியைக் கொண்டாட இந்த வஞ்சி கொண்டானோ?..........
 
Last edited:
நல்லா இருக்கு பதிவு
வஞ்சி கொண்டான்
வஞ்சிய கல்யாணம் செய்ய
கேப்பானோ
 
நல்லா இருக்கு பதிவு
வஞ்சி கொண்டான்
வஞ்சிய கல்யாணம் செய்ய
கேப்பானோ
இருக்குமோ
 

Advertisement

Top