Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் – 9

Advertisement

Dhanuja

Well-known member
Member
அத்தியாயம் – 9

கூடத்தில் அமர்ந்திருந்த தனது தாய் மாமனை பார்த்து வேகமாக இறங்கி வந்த உடையவன் "வாங்க மாமா … வாங்க அத்தை…." என்று அழைக்க பெரியவர் முகம் கடுமையாக இருக்க அவரது மனைவி தான் பேசினார்.

“நல்ல இருக்கியா தம்பி”

“இருக்கேன் அத்தை”

வஞ்சி கொண்டானும் வந்தவன் வாஞ்சியின் குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு “வாங்க” என்றழைத்தவன் அவர்களுடன் அமர்ந்து கொண்டான்.இரண்டு வருடத்திற்கு முன்பு உறவே வேண்டாம் என்று ஒதுங்கி வைத்தவர்களது வரவு எதற்கு என்பதை வஞ்சி கொண்டான் அறிந்தவன் போல் அமைதி காக்க பெரியவர் பேச்சை தொடங்கினார்.

“உடையா என்னடா நடக்குது இங்க வீதில போறதை வீட்டுக்கு வானு இழுத்து வச்சிருக்கீங்க” என்றவரது பார்வை வஞ்சியைத் தொட்டு மீள மாலாவிற்கு விஷயம் விளங்கிற்று

“மாமா…..” என்று உடையவன் தயங்க

“என் வருங்கால மனைவியைத் தான் கூட்டிட்டு வந்துருக்கேன் வர முகூர்த்தம் கல்யாணம் முறையா சொல்லாம்னு காத்து இருந்தேன் அதுக்குள்ள நீங்களே வந்துட்டிங்க”

“அட ஆத்தே அக்கோவ் என்னக்கா இவ…..” வஞ்சிக்கு நெஞ்செல்லாம் பதறியது

“இரு வஞ்சி எனக்கே படப் படன்னு வருது” என்று தன்னைச் சமாளிக்க முயன்றவர் தோற்று “இவன் நம்பள ஒரு வழியாக்கமா விட மாட்டான் போல”

“அக்கா அந்தப் பெரியவர்கிட்ட சொல்லலாம் வாங்க அவர் பேச்சே சரியில்ல என்கிட்ட ஒன்னும் இல்லாட்டியும் சுய மரியாதை இருக்கு அதையும் இழக்க முடியாது நல்லது பண்ண உங்க மரியாதையும் எனக்கு முக்கியம்”

“எல்லாம் சரிதான் ஆனா கை மீறி காரியம் நடக்குதே…… அமைதியா இரு வஞ்சி என்ன நடக்குதுன்னு பார்ப்போம்” என்றவர் வஞ்சியை அடக்கக் கண்ணில் நீர் தளும்பி நின்றது பெண்ணுக்குச் செல்லும் இடமெல்லாம் சரிவு என்றால் என்ன செய்யும் இந்தப் பெண் இனம்.

“என்ன உடையவன் இது பெரியவங்க நாங்க எதுக்கு இருக்கோம் எங்க அக்காவும் மச்சானும் உங்கள என் பொறுப்புல தான் விட்டுட்டு போய் இருக்காங்க.. …நாளைக்கி எது ஒன்னு நடந்தாலும் நான் தான் முன்னாடி நிற்கனும்”

“அது சரி அந்தப் பொறுப்பைச் சரியா நீங்க செஞ்சிங்களா என்ன?” வஞ்சி கொண்டான் பேச்சில் பதறிய உடையவன் “அண்ணா பேசாம இரு” என்று அடக்க வஞ்சி கொண்டான் வார்த்தையில் கொதித்துப் போனவர்.

“நான் பார்க்காம தான் வளர்ந்து நிக்கிறீங்களோ? என்னடா நான் செய்யல உனக்கு”

“ஆமா!... ஆமா!.... அதான் சிறப்பா செஞ்சிங்களே உங்க பொண்ண கல்யாணம் பண்ணி கொடுத்து” வஞ்சி கொண்டான் சீற பெரியார் அமைதியாகி போனார் இந்த ஒரு விஷயத்தில் தான் அவர் தவறியது.

தனது தந்தை தலை குனிந்து அமர்ந்திருப்பதைப் பார்க்க முடியாது “மாமா அவ செஞ்சதுக்கு அப்பா என்ன பண்ணுவார் உங்க மேலையும் தப்பு இருக்கு அவ உங்கள பிடித்துத் தான் கல்யாணம் பண்ணுனா”

“வாடி உங்க அக்காவ சொன்னா உடனே கோவம் பொத்து கிட்டு வருதோ?”

“ப்ச்….. அப்படி இல்ல மாமா நீங்க கொஞ்சம் அவளுக்குப் புரிய வச்சு இருக்கலாம்”

“அது சரி… புரிய வைக்க அவ என்ன வேத்து மனுசியா சின்ன வயசுல இருந்து ஒன்னா வளர்ந்தவ தானடி……..என் தங்கசிங்களைப் பார்க்க முடியலைன்னா என்கிட்ட சொல்லனும் அதை விட்டுட்டுச் சின்னப் புள்ளைங்க கூடச் சண்டை போட்டுட்டு டிவோர்ஸ் கொடுத்துட்டு போய்ட்டா,இதைச் சொல்லும் போது அனைவர் முகத்திலும் கவலை மண்டி கிடந்தது.

சரி என்ன பிடிக்கிறவ பேசி சரி பண்ணி இருக்கலாம் தானே என் மேல பாசம், ஆசை இருந்தா இன்னொரு கல்யாணம் பண்ணி குழந்தையோட இப்போ வாழ்ந்து கிட்டு இருக்க மாட்ட” இது மாலாவிற்கே புதிய செய்தி வஞ்சியைக் கேட்கவா வேண்டும்.

வஞ்சி கொண்டான் தாய் மாமன் திரு.வெங்கடேசன் மற்றும் மாமி விஜயலக்ஷ்மிக்குச் சாம்பவி,ராகினி என்று இரு பெண் பிள்ளைகள் அதில் ஒருவரான சாம்பவியைத் தான் வஞ்சி கொண்டானுக்கு முடித்தது.

வஞ்சி கொண்டான் தாய் வள்ளி துளசியைப் பிரசவித்த மறு கணமே இறந்து போகத் தனி ஒரு ஆளாகப் பிள்ளைகளை வளர்க்க படாது பாடு பட்டார் அழகேசன்.மனைவியின் இறப்பு ஒரு புறமென்றால் துளசியின் நிலை ஒருபுறம் அந்தச் சமயத்தில் அவருக்கு உற்ற துணையாக இருந்து உதவியது மச்சான் வெங்கடேசன் - விஜயலக்ஷ்மியும் தான்.

வஞ்சி கொண்டான்- சாம்பவி இவர்களது திருமணம் முடிந்தக் கையேடு அழகேசனும் இறந்து விட பிள்ளைகள் தான் தவித்து நின்றது.பொறுப்பைப் பெரியவன் பார்த்து கொள்வான் என்ற எண்ணமோ என்னவோ மனிதன் உயிர் படுக்கையிலே சென்று விட்டது.

அதன் பின் நடப்புக்கு வர சில மாதங்கள் பிடிபட…... புது மணத் தம்பதிகளுக்கு ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாட்கள் கடக்க மெல்ல மெல்ல வாழ்க்கை பிடி பட்டது.முகம் சுளிக்காமல் துளசிக்கு ஒரு வேலை உணவை கூட சரியாக கொடுக்க முடியவில்லை.

தினமும் சண்டை ஓர் நாள் வார்த்தைகள் எல்லை மீற அனைத்தும் கை மீறி போனது.அனைவரும் எடுத்து சொல்லியும் அசையவில்லை கருவுற்றதை சொன்னால் வாழ சொல்வார்கள் குடும்ப பொறுப்பு அனைத்தும் நமது தலையில் …… அதனை ஏற்கும் நிலையில் அவளது மனநிலை இல்லை வேறு.

ஆனால் கருவை கலைக்க முடியாமல் நாட்கள் கூடியதால் பிள்ளையை பெற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம். இதையெல்லாம் அறிந்த வஞ்சி கொண்டான் உணர்ச்சிகளற்ற மரம் ஆனான்.பிள்ளை பிறந்த அறுபது நாளில் வஞ்சி கொண்டனிடம் ஒப்படைத்து விட்டு சென்றவள் தான்.

வெங்கடேசனுக்கு மனதே விட்டுப் போனது ஆனாலும் பெண் என்று வரும் பொது அவரும் சுயநலமாகத் தான் செயல் பட்டார்.மனதை மண்ணில் புதைத்து விட்டு பெண்ணுக்குத் திருமணம் செய்தார்.அதில் துண்டு பட்ட குடும்பம் தான் இன்றும் விலகி நிற்கிறது.

நடந்தவை எண்ணி ரணத்தைக் கீறிக் கொண்டு மௌனமாக அமர்ந்திருந்தனர். நடந்ததைக் கேட்டு அட அற்ப பதறுகளே என்பது போல் அவர்களைப் பார்த்துக் கொண்டு இருந்தாள் வஞ்சி.சூழ்நிலையைக் கையில் எடுத்த உடையவன்

“மாமா எத்தனை நாள் அவனும் பேசாம இருப்பான் அவன் போக்குல வீட்டுருங்க” உடையவன் பேசியதற்கு அவர் பதில் சொல்லாமல் எழுந்து கொண்டவர்

“இவ உனக்கு வேணுமா இல்ல நீயும் ....” தனது இளைய மகளைக் காட்டி உடையவனிடம் கேட்க.

“அண்ணனுக்கு முடியட்டும் ஒரு முடிவு சொல்லுறேன் எனக்காகக் காத்திருக்கச் சொல்ல மாட்டேன் உங்க கடமையை நீங்க செய்யலாம்” என்று உடையவன் சொல்ல பானுவை ஏந்தி நிற்கும் பாவையின் கண்ணில் அருவி கொட்டியது.

“என்னடா அண்ணனும் தம்பியும் படுத்துறீங்க” என்று விஜயலக்ஷ்மி கண்ணீர் விட

“அத்தை அழுக்காதீங்க மதுக்கு ஒரு வழி பண்ணனும் துளசி காலம் முழுக்க எங்ககூடத் தான் அவளுக்கும் ஒரு சில ஏற்பாடு பண்ணனும் அதுவரைக்கும் கல்யாணம் பண்ணாம இருங்கனு நான் சொல்ல முடியுமா சொல்லுங்க?”

“எல்லாம் இனிக்க இனிக்கப் பேசுவீங்கடா… என்னங்க வாங்க போகலாம்” என்றவர் செல்ல அதுவரை உறுமி கொண்டு இருந்த வஞ்சி கொண்டான் அவரது கைகளைப் பற்றிக் கொண்டான் வளர்த்த பாசம் விட்டு போகுமா என்ன.

“அத்தை!”

“பேசாதடா போ உங்க உறவே வேணாம்”

“ப்ச் என்ன பேச்சு இது வாங்க உட்காருங்க” என்றவன் மது அத்தைக்குத் தண்ணி எடுத்துட்டு வா என்றவன் மது கொடுத்த தண்ணீரை பருக வைத்து அவரது தோள் தட்டி “அத்தை எனக்குக் கல்யாணம் முடியட்டும் அவ படிப்பு முடுச்ச உடனே கல்யாணம் பண்ணிடலாம்”

அவனது பேச்சில் பெரியர்வகள் மனம் குளிர்ந்து போனது தாய் தகப்பன் அற்ற பிள்ளைகளுக்குப் பாதகம் செய்தோமே என்று கலங்கி நின்றவர்கள் கலக்கம் நீங்கி தெளிந்தனர்.

சண்டை போட வந்தவர்கள் விருந்துண்டு திருமணத் தேதியை உறுதி செய்தே கிளம்பி சென்றனர்.இதையெல்லாம் மாலா வாய் பிளந்து பார்த்து நிற்க வஞ்சியோ எரிச்சலின் உச்சத்தில் நின்றாள்.
ஒருவழியாக மாலை அனைவரும் கிளம்பி செல்ல அவர்களை வழியனுப்பி விட்டு வந்தவன் வகையாகச் சிக்கி கொண்டான்.மாலா,மது,வஞ்சியின் மகள்,பானு ஒரு புறம் இருக்க அவர்களுக்கு எதிரில் உடையவன் அமர்ந்திருக்க அவனுடன் சென்று வஞ்சி கொண்டானும் அமர்ந்து கொண்டான்.

திருமணம் பற்றிப் பேச்சை எடுக்க எண்ணி “அக்கா..........” என்றவனைப் பிலு பிலுவென்று பிடித்துக் கொண்டாள் வஞ்சி “இந்தாருய்யா இதெல்லாம் குடும்பமா?... இல்ல குடும்பமானு கேக்கேன்?...” கையை அவனது முகத்துக்கு முன் நீட்டி நீட்டி பேச உட்காந்த வாக்கிலே பின்னால் ஓர் அடி தள்ளி அமர்ந்தான் வஞ்சி கொண்டான்.

“அவனவன் புள்ள இல்லாம இருக்கான் உங்களுக்குப் பதுமையாட்டம் ஒரு புள்ளய கடவுள் கொடுத்து இருக்கான் அது வச்சு காமந்து பண்ணி வளர்க்க தெரியல நீயெல்லாம் என்ன மனுசன்”

“உன் மாமன் பொண்ணு பஜாரியா இருப்பா போலப் பொம்பளையா அவ எப்படி பெத்த புள்ளைய தூக்கி கொடுக்க முடியுது.புருஷன் குடும்பத்தைப் பார்க்க முடியலைன்னா புருஷன் கிட்ட கேளு அதை விட்டுட்டு அத்து கிட்டு போய் இருக்கா பச்சை மண்ணை விட்டுட்டு”

“வஞ்சி! அண்ணி நல்லவங்க தான்”

“இதோ பார் அவளுக்குப் பணிஞ்சு கிட்டு வராத எனக்கு உங்க குடும்பத்துல யாரையுமே புடிக்கல எனக்கெல்லாம் நல்ல வாழ்கை அமையல உங்களுக்கு அமைஞ்ச வாழ்க்கையைக் காப்பாத்திக்கத் தெரியல பணம் இருந்தா மட்டும் போதுமா ஒரு குடும்பத்தை நிலை நிறுத்த ஒரு நல்ல பொண்ணு இருக்கணும்,

புருஷன் இல்லாம கால் வயறு கஞ்சி குடிச்சு பிள்ளை வளர்க்கலாம், ஆனா பொஞ்சாதி இல்லாம ஒரு ஆம்பளயால பிள்ளை வளர்க்க முடியுமா ?அதுவும் பொம்பள புள்ளைய?”

“பொஞ்சாதி போச்சுன்னா அப்படியே போகட்டும் விட்டுட்டு இப்போ பிள்ளை தான் பாவம்…. வேணாம் சாமி உங்க சங்காத்தம்….” என்றவள் பிள்ளையைத் தூக்கி கொண்டு “அக்கா வாக்கா போவோம்” என்று முன்னே செல்ல மாலா தயங்கி தயங்கி அவர்களைப் பார்த்துக் கொண்டே சென்றாள்.

மனம் ஆறாமல் வரும் வழியில் எல்லாம் புலம்பி கொண்டே வந்தாள் “கதை சொல்லுறானுக உப்புச் சப்பு இல்லாத விஷியத்துக்கு இரண்டும் கழண்டுக்கிட்டு போய் இன்னொரு கல்யாணம் விளங்கும் குடும்பம் கசம்…. கசம்…”

“வஞ்சி புலம்பாம வா”

“நீ சும்மா இருக்கா ஒரு பொண்டாட்டிய வச்சு வாழ தெரியல இதுல இன்னொரு கல்யாணம் கேக்........... “ என்றவள் பேச்சு அதிர்ந்ததில் நின்றது வஞ்சி கொண்டான் செய்த செயலால்
 
Last edited:
அடப்பாவி பெத்த பிள்ளய விட்டுட்டு
போய்ட்டாளா
இந்த ரெண்டு வஞ்சியும்
செமயா கலக்கறாங்கா

இப்ப என்ன தாலி கட்டிட்டானா
 
என்ன பண்ணான் சீக்கிரம் அடுத்த எபி போடுங்க
 
அடப்பாவி பெத்த பிள்ளய விட்டுட்டு
போய்ட்டாளா
இந்த ரெண்டு வஞ்சியும்
செமயா கலக்கறாங்கா

இப்ப என்ன தாலி கட்டிட்டானா
? Cinemala thaan akka appudi
 
Top