Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் - 11

Advertisement

Dhanuja

Well-known member
Member
அத்தியாயம் – 11



“என்னக்கா சொல்லுறீங்க ஒரே மர்மமா இருக்கு”


“அதெல்லாம் ஒன்னுமில்ல நான் உங்கிட்ட சொல்லல”


“அதான் ஏன் சொல்லல”


“எதுக்குச் சொல்லனும் நீ வேலைக்கு வந்திருக்க அந்த வீட்டு ஆட்களைப் பத்தி மட்டும் தெரிஞ்சா போதும் அவுக குடும்பம் பத்தி தெரியனும் என்ன அவசியம் சொல்லு, ஆனா இப்போ அப்படி இல்ல நீ வாழ போற தானே அதான் சொல்லுறேன் இந்த விஷயம் வெளில போக கூடாது” என்று கண்டிப்பு வைக்க.


வஞ்சி மௌனம் கொண்டு தலையைக் குனிந்து கொண்டாள்.அவளைப் பார்த்த மாலா மெல்ல அவளது தலையைத் தடவி “இங்க பார் வஞ்சி நான் இப்படிதான் எனக்கு அடுத்தவங்க சங்கதி பேச பிடிக்காது வந்தோமா!.... வேலைய பார்த்தோமா!... போனோமா!... அதான் வேலை”


“அக்கா நான் அப்படி இல்லங்கக்கா”


“ப்ச்…. நான் சொல்ல வரதை சரியான முறையில புரிஞ்சிக்கோ நானும் உன்ன மாதிரி தான்.இந்தப் பொண்ணுகளைப் பார்த்த உடனே என்ன மீறி பழகிட்டேன் மது குட்டி சின்னப் பொண்ணு துளசி அவளை விடச் சின்னப் பொண்ணு.



எங்க அப்பா அம்மா வேலை பார்த்த வீடு வஞ்சி இது… அவுக போனதுக்கு அப்புறம் நான், ஆனா தங்கி இல்ல மதியம் சமையல் மட்டும் செஞ்சிட்டு தையல் பயிற்சி போய்டுவேன். பழக்கம் தான் ஆனா என்ன? ஏது? அதுமாதிரி ரொம்ப இல்ல .



"வஞ்சி கொண்டான் அப்பா அவரோட அண்ணன் பையன் தான் கபிலன். அவர் சிறு வயசா இருக்கும் போதே பெத்தவுங்க இறந்துட்டாங்க என்ன நேரமோ……”



“இவங்க தான் வளர்த்தாங்க.அவரும் குடும்பத் தொழில் தான் நல்ல வசதி வாய்ப்பு.என்ன பொண்ணு கேட்டாங்க நான் மறுத்துட்டேன்.என் சுமைய அவுங் தலையில் வைக்க விரும்பல உன்ன மாதிரியே…. அதை நான் சொல்லும் போது ரொம்ப என்ன சமாதானம் பண்ண முயற்சி பண்ணார் நான் கடைசி வரை முடியாதுனு சொல்லிட்டேன்,


அதுல கோபமா போனவர் தான் போகும் பொதுச் சாபம் வேற விட்டுட்டு போனாரு நீ தனியா தாண்டி நிற்ப!….. அது!.. அது!… வாழ்க்கைய அமைச்சுக்கிட்டு போயிடும் அப்போ புரியும் என் அருமை.உண்மையா அப்போ என் கடமை மட்டும் தான் பெருசா தெரிஞ்சுச்சு”


“இப்போ............... "


அதுக்கு அப்புறம் இங்க வேலைய விட்டுட்டு முழுசா தையல் பக்கம் போயிட்டேன் ஆனா ஐயா, அம்மா, பிள்ளைங்களைப் பார்க்க அடிக்கடி வருவேன்” என்றவர் கண்ணில் கண்ணீர் தவற விட்ட வாழ்க்கையை எண்ணி.


அவரது நிலை புரிய “அக்கா”


கண்களைத் துடைத்தவர் “இதுல நான் சொல்லாம விட்டது நிறைய இருக்கு என்ன மாதிரி நீயும் ஆகிட வேண்டாம்.பாவம் உன் பொண்ணு நல்ல யோசுச்சு முடிவெடு காலம் போனா வராது” என்றவர் எழுந்து செல்ல பார்க்க அவரது கைகளைப் பற்றியவள் “ஏன்க்கா என்ன சொல்லுறது உங்களுக்கு பொருந்தும் தானே.எனக்கும் அந்த ஆசை இருக்காதா என்ன?நீங்க பேசலாம் தானே அவர்கிட்ட?”


அவள் சொல்ல வருவது புரிய சிறு புன்னகை சிந்தியவாறே “அதெல்லாம் இரண்டு வருசத்துக்கு முன்னாடி மனம், ரோசம் இல்லாம போய் நின்னேன் உனக்கு வேணுனா நான் வரணுமா போடி முடியாது.தனியா கடந்து சாவுன்னு சொல்லிட்டார்.நல்ல வேளை நேருல பேசல பேசி இருந்தா அடிச்சு வெளில தள்ளி இருப்பார்” என்றவள் செல்ல வஞ்சிக்கு தான் தலை வலியாக இருந்தது.


என்ன முடிவெடுப்பது மறு கல்யாணம் என்பது தற்போது உள்ள காலக் கட்டத்தில் இயல்பு போல் என்றாலும் அவள் வளர்ந்த விதமும் வாழந்த விதமும் ஏற்க மறுத்தது.என்ன செய்து இதனைச் சரி செய்வது? மாலா சொல்வதைப் போல் தைரியமாக இருந்து பெண்ணை வளர்க்க வேண்டும்.


பல பெண்கள் கணவன் துணையின்றிப் பிள்ளைகளை வளர்த்து பெயர் சொல்லுவதை அவளே பார்த்து இருந்தாலும். அவர்களுக்கு ஓர் இரு உறவு அல்லது நண்பராவது உடன் இருந்தனர் ஆனால் தனுக்கு?......


இத்திருமணம் சரிதான் என்றாலும் நிறையப் பாதகங்கள் உள்ளது கணவன் மனைவி வாழ்க்கை.குழந்தைகள் வளர்ப்பு,பெரிய குடும்பம் என்பதால் பொறுப்புகள் அதிகம்.


மனித மனம் குரங்கு… இன்று இனித்தது நாளை கசந்து போகும் சூழ்நிலை வந்தால் அதனைத் தாங்க சக்தியில்லை எனவே வஞ்சி கொண்டானிடம் பேச வேண்டும் அதே போல் உடையவன்,மது,துளசியிடமும் பேச வேண்டும் என்று எண்ணியவள் அப்படியே தூங்கி போனாள்.

*******************************
வஞ்சி எண்ணியதை அங்கே மாலா செய்து கொண்டு இருந்தார்.வஞ்சி குழந்தை உறங்கியதை பார்த்தவர் மது,உடையவன்,வஞ்சி கொண்டானை அழைத்துக் கொண்டு மாடிக்கு சென்று பேசி கொண்டு இருந்தார்.


“சொல்லுங்க தம்பி....”


“நான் சொல்லுறதை எல்லாம் சொல்லிட்டேன் வஞ்சி என் பொறுப்பு”


“நான் பேசுனத்துக்கு பதில் இது இல்லங்க” ஆம் மாலா நிறைய பேசி இருந்தார் குடும்பம்,வஞ்சியின் உணர்வு,மரியாதை,சொந்தம்.திருமணம் சூழல், முதல் திருமணத்தின் நிழல் என்று


“அவ என் பொண்ணு”


ப்ச்…. இவனை பற்றி தெரிந்தும் பேச வந்த தன்னை நொந்து கொண்டு மாலா மதுவிடம் திரும்பி “மது நீ சின்னப் பொண்ணு கிடையாது உனக்கே எல்லாம் தெரியும் சொல்லு உனக்கு இதுல சம்மதமா அவ உன்னை விடச் சின்னப் பொண்ணு கிராமத்துல கஷ்ட பட்டு தான் வந்து இருக்கா. இந்தக் கல்யாணம் அவளுக்கு ஒரு பிடிப்பை தருணுமோ ஒழிய கஷ்டத்தைக் கொடுக்கக் கூடாது”


“எனக்குச் சம்மதம் தான் மாலாக்கா”


“சின்னத் தம்பி”


“என்ன கேட்கவே வேணாம் இந்த வீட்டு விடியல் அவுங்க கையில தான் போல” உடையவன் உணர்ந்து சொல்ல மீண்டும் வஞ்சி கொண்டானிடம் தனது பார்வையைச் செலுத்த


“உங்க பார்வைக்கும் கேள்விகளுக்கும் பதில் என் செயல் தான் கல்யாணம் பண்ணி வைங்க” அவன் பிடியில் நின்றான்


அவனது பிடிவாதம் சிறு புன்னகை தர “உங்க அண்ணனுக்குப் பேசிடுங்க” என்ற மாலா செல்ல பார்க்க வஞ்சி கொண்டான்


“நீங்களே பேசுங்க” அவனது பதிலில் வேர்த்து விட்டது பெண்ணுக்கு ஏனென்றால் அவர்கள் விடயம் தெரிந்தது நான்கு பேரு தான் இப்போது வஞ்சி.


வஞ்சி கொண்டான் அவரது முகம் பார்த்து நிற்க இலக்கம் காட்டாமல் “நீங்க தான் பேசனும்” என்பதைச் சற்று அழுத்தி சொல்லிவிட்டு செல்ல.தான் அவருடன் பேசுவது இவருக்கு எப்படி தெரியும் மாலாவிற்குப் படபடப்பு....


‘தன்னைச் போடி’ என்று சொன்னவன் தன்னை அவனுடன் சேர்த்து கொள்ள என்னவெல்லாம் செய்தான் என்பதைப் பாவம் பேரிளம் பெண்ணுக்கு தெரியாதே...


குழம்பியவரே கீழே சென்றவர் வஞ்சியின் குழந்தையை அனைத்துக் கொண்டு படுத்து விட்டார்.நிலா காலங்கள் போல் பழைய நினைவுகள் வரிசை கட்டி வந்து நிற்க சோர்ந்து போனாள் பெண்.இன்று வஞ்சியிடம் பேசியதே கபிலனை கூடுதலாக நினைக்க வைக்க மேலும் வஞ்சி கொண்டான் பேசியது அதிர்ச்சியை கொடுத்தது.


எப்படித் தெரியும்? அவர் தான் சொல்லி இருப்பார்.... ஏன் சொன்னார்? என்ன வேலை இது? என்று கேள்வியும் அவரே பதிலும் அவரே என்பது போல் தனக்குள் புலம்பியவரே தூங்கி போனார்.இனி அவர் இரவு தூங்கா இரவாக மாறப் போவது தெரியாமல்....

*********************

விடியல் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் பெரிய கனவுகளைத் தருவது அது போல் தான் பல கனவுகளைக் கொண்டு விழித்தனர் அவ்வீட்டு மக்கள்.வஞ்சி வழமை போல் வேலைகள் செய்ய மாலாவும் இணைந்து கொண்டாள்.இனி சரசு வேலை பார்க்க வருவது போல் தெரியவில்லை அதனால் எல்லாம் பொறுப்பாக வஞ்சியின் கையில்....

உடையவன் வேலைக்குக் கிளம்ப அவனுடன் கிளம்பி வந்தான் வஞ்சி கொண்டான். அவனைப் பார்த்த அனைவரும் வாய் பிளந்து நின்றனர் முதல் முறை சற்று எடுப்பான உடை அணிந்து வேலைக்குச் செல்பவன் போல இருந்தான்.


வஞ்சியோ அவனைப் பார்த்து விட்டு அப்பா இன்னைக்குத் தான் மனுஷன் குளிச்ச மாதிரி இருக்காரு பார்க்க என்றவள் தனது எண்ணத்தை அடக்கி விட்ட வேலையைத் தொடர


வந்தவன் நேராகச் சென்று துளசியைப் பார்த்து விட்டு அவளுக்கு முத்தம் வைத்து எதோ பேச அதுவும் கையைக் கால்லை ஆட்டி சத்தமாக ஒழி எழுப்பியது பேச தான் வராது, ஆனால் புரிதல் தன்மை அதிகம் கண்ணால் பேசும் பைங்கிளி அவள்......தங்கையின் நெற்றில் முத்தம் வைத்து உணவு உண்ண மேசையில் அமர


வஞ்சி இயல்பு போல் பரிமாறினாள் பானு அப்போதுதான் முழித்து வந்தாள் வஞ்சி கொண்டான் அவளை ஏறெடுத்துப் பார்க்காமல் உணவே குறி என்பது போல் உள்ளே தள்ளி கொண்டு இருக்க வஞ்சியும் கடமையை செய்ய இருவரும் பானுவை கவனிக்கவில்லை


உடையவன் சிரித்துக் கொண்டே உண்ண அவனைப் பார்த்த வஞ்சி “இவர் ஏன் சிரிக்கிறார் அப்பா இந்த வீட்டுல உள்ள அம்புட்டும் ஒரு மாதிரித்தேன் இருக்குதுங்க” எண்ணியவள் சேலை இழுக்க பட கோபமாகத் திரும்பியவள் அங்குப் பானு நிற்கவும்


“நீயா வா!... வா!....” என்று அவளை தூக்கி முத்தம் வைக்க


உண்டு கொண்டே “அப்போ நீ யாருனு நினைச்ச” என்று வஞ்சி கொண்டான் கேட்டு வைக்க திரு திருவென முழித்த வஞ்சி பாவமாக மாலாவை பார்த்தாள் நீயே போய் தலையை கொடு… இது தேவையா உனக்கு….. நீயே சமாளி சாமி …….என்பது போல் மாலா உள்ளே சென்று விட்டாள்


வஞ்சி பதில் பேசாமல் நகரப் போக இப்பொது அவனே கை பற்றி நிறுத்தினான்.உடையவன் அதே புன்னகை மன்னனாக உண்டு முடித்து அவர்களைத் திரும்பியும் பார்க்காமல் சென்றான்.


“பதில் சொல்லிட்டு போ”


“கைய விடுங்க என்ன பழக்கம் இது”

“எல்லாம் நல்ல பழக்கம் தான் சொல்லு”


அவனது திமிர் பேச்சில் அவளுக்குக் கோபம் வர “உங்க பக்கத்துல தானே நிக்குறேன் தீடிர்னு இழுக்கவும் நீங்க தாணு நினைச்சேன் அதுல தப்பில்லை ஏன்னா நேத்தும் இதே மாதிரி தான் என்கிட்ட இருந்து குழந்தைய வாங்குனீங்க”


ஓ ! என்றவன் உண்ட தட்டை எடுத்துக் கொண்டு சென்று கை கழுவி கொண்டு வந்து அவள் முந்தானையைப் பற்ற வருவது போல் வந்து பக்கத்தில் உள்ள துண்டை எடுத்து துடைக்க ஒரு நொடி பதறி விட்டாள் இதோடு விட்டேனா பார் என்பது போல் இருந்தது அடுத்த செயல்.


சிறுதும் லட்ஜையின்றி வஞ்சியின் தோளில் முகத்தைப் புதைத்துத் தூக்கம் கலையாமல் இருக்கும் பானுவின் கன்னத்தில் முத்தம் வைத்தான்.வஞ்சியின் கழுத்தில் அவனது மூச்சு கற்று சில வினாடி தீண்டி செல்ல சிலிர்த்து நின்றது பெண்.


“பை பானு” என்றவன் அறியா பிள்ளை போல் கிளம்பி சென்றுவிட்டான்.அவன் செய்த செயலில் கோபம் கொண்ட வஞ்சி வழமை போல் “அக்கா” என்று கத்த அவரும் இந்தக் கூத்தை பார்த்துக் கொண்டு தானே நின்றார்.


கோபமாக வஞ்சியின் முன் நின்று “இன்னொரு தரம் கத்துன குத்திடுவேன் பண்ணுறதை எல்லாம் பண்ணிட்டு என்னையும் சேர்த்து இழுத்து வச்சு இருக்க நீ....” என்றவர் அவள் பதில் பேசும் முன் சென்று விட்டார்


அவரும் என்ன செய்வர் பாவம் இன்று கபிலனிடம் பேசியே ஆக வேண்டும், என்பது வஞ்சி கொண்டான் கட்டளை அதனால் தான் கோபம் கொண்டு விட்டார் ஆனால் இதற்குக் காரணம் தான் என்று அறியவரும் போது மாலாவின் நிலை என்னவோ?.............


அனைவரும் செல்ல என்னடா இது என்பது போல் பானுவை அணைத்த வரே அமர்ந்து விட்டாள் வஞ்சி.












 
Top