அத்தியாயம் 132

Advertisement

SHALU shalu

Well-known member
Member
அதன் பின்னர், ஸ்வரூபன் மற்றும் ருத்ராக்ஷிக்கான மறு வீட்டு விருந்து நடத்துவதற்கான நாளைக் குறித்து விட்ட கவிபாரதியோ,

“நாம மட்டும் தானே? அதனால் வீட்டிலேயே சமைச்சிடலாமா?”என்று கேட்டார்.

அதை ஆமோதித்து,“ம்ம். அது தான் சரியா இருக்கும் மா” என்று பதிலளித்தார் மிருதுளா.

“ஆமாம். ருத்ராக்ஷியோட வீட்டாளுங்க எப்போதாவது தான், ஊருக்கு வர்றாங்க. அதனால் முடிஞ்ச அளவுக்கு வீட்டுச் சாப்பாடாகவே செஞ்சிக் கொடுப்போம்” என்று தன் மருமகளை அழைத்து,

“உனக்கும், உங்க வீட்டு ஆளுங்களுக்கும் என்னென்ன சாப்பாட்டு வகைகள் பிடிக்கும்ன்னு சொல்லு ம்மா. அதையே விருந்துக்குச் சமைச்சிடலாம்” என அவளிடம் வினவினார் கவிபாரதி.

“சரிங்க அத்தை” என்றவள், அவரிடம் தன்னுடைய பிறந்த வீட்டு ஆட்களுக்குப் பிடித்த உணவுகளை வகைப்படுத்தினாள் ருத்ராக்ஷி.

“எல்லாத்தையும் சீட்டில் எழுதி வச்சுக்கோ மிருதுளா” என்றவரிடம்,

“இதோ ம்மா” எனக் குறிப்பு எடுத்து விட்டு,

“ஆனால் ம்மா, அவங்க தானே முதல்ல விருந்து வைக்கிறோம்ன்னு சொல்லி இருக்காங்க? இல்லை, நாம வைக்கிறோமா?” என்று அவரிடம் கேட்டார் மிருதுளா.

“அவங்க தான் முதல்ல வைப்பாங்க ம்மா. நாம முன்னாடியே அவங்களுக்குப் பிடிச்சதைக் கேட்டு வச்சிக்கிட்டா, எதை எல்லாம் நம்மால் செய்ய முடியும், முடியாதுன்னு தெரிஞ்சிக்கலாம்ல? அதுக்குத் தான் இந்தக் குறிப்பு” என்று விளக்கம் அளித்தார் கவிபாரதி.

“ஓஹோ. சரி ம்மா” என்று கூறி விட்டார் மிருதுளா.

அன்றைய நாள் காலையிலேயே தங்களது வயலிற்குச் சென்றிருந்தான் ஸ்வரூபன். அதனால் மூன்று பெண்களும் வீட்டில் இருந்தபடியே மறு வீட்டு விருந்திற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டும், சிரித்துப் பேசிக் கொண்டும் அந்த நாளைச் செலவழித்தார்கள்.

இதே சமயம், அன்றைக்குச் சந்திரதேவ், காஷ்மீரன் மற்றும் மஹாபத்ராவும் தத்தமது வேலைக்குச் செல்லாமல் விடுப்பு எடுத்துக் கொண்டுத் தங்கள் வீட்டுப் பெண் மற்றும் மாப்பிள்ளைக்குச் சிறப்பாக மறு வீட்டு விருந்து கொடுக்கத் திட்டம் போட்டுக் கொண்டு இருந்தனர்.

“அவங்க எப்படியும் நமக்கு வீட்டில் தான் சமைச்சுப் போடுவாங்க. நம்மால் முடிஞ்சா நாமளும் அதையே பண்ணலாம். ஆனால், அது நம்மால் முடியாது. அதனால், பெஸ்ட் கேட்டரிங்கை அரேன்ட்ஜ் பண்ணி மறு வீட்டு விருந்து அன்னைக்கு ஜமாய்ச்சிடனும்” என்று உறுதியாக உரைத்தார் சந்திரதேவ்.

காஷ்மீரன்,“ஆமாம் ப்பா” என்றவனோ,

“உனக்கு யாராவது கேட்டரிங் ஆளுங்கத் தெரிஞ்சா சொல்லு ம்மா” என மனைவியிடம் கூற,

“ஷூயர் ங்க. எங்க அப்பாவுக்குக் கண்டிப்பாகத் தெரியும். நான் அவர்கிட்டேயும் கேட்கிறேன்” என்று சொல்லி விட்டு அந்தக் கணமே தன்னுடைய செல்பேசியை எடுத்துத் தந்தைக்கு அழைத்து விவரத்தைக் கேட்டவளோ,”அவருக்கு மூனு பேரைத் தெரியுமாம். அவங்களோட நம்பரை அனுப்பி இருக்கார். அதைப் பார்த்துச் செலக்ட் செய்துக்க சொல்லிட்டார்” என்று அவனிடம் தெரிவித்தாள் மஹாபத்ரா.

“அதை எனக்கு அனுப்பி விடு” என்றவுடன்,

அவள் அந்த எண்களைக் கணவனுக்குப் புலனத்தில் அனுப்பி வைத்து விட்டாள்.

அவற்றில் சில எண்களுக்கு அழைத்துப் பேசி விட்டு, ஒரு கேட்டரிங்கின் பெயரைச் சொல்லி, “இவங்களையே புக் செய்துக்கலாம் ப்பா” எனத் தந்தையிடம் கூற,

“சரி ப்பா”என்றார் சந்திரதேவ்.

“உனக்கு ஓகேயா மஹா” என்று மனைவியிடம் வினவினான் காஷ்மீரன்.

“எனக்கும் ஓகே தான் ங்க” என்றதும்,

“அவங்க சைவமும் சமைப்பாங்களான்னுக் கேட்டுக்கோ. மாப்பிள்ளை வீட்டு ஆளுங்களுக்கு ரெண்டு வகையான சாப்பாட்டையும் விருந்துக்கு வைக்கனும்” என்றுரைத்தார் சந்திரதேவ்.

“ஓகேப்பா” என்றவன் அதையும் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டான் காஷ்மீரன்.

“விருந்துக்கு உங்க அப்பா, அம்மாவையும் நேரில் வந்து முறையாக வந்து அழைப்போம் மா” என்று தன்னிடம் உரைத்த மாமனாரிடம்,

“நம்மளுக்குள்ளே என்ன ஃபார்மாலிட்டி மாமா? நீங்க கால் செய்து கூப்பிட்டாலே போதும்” என்று புன்னகையுடன் கூறினாள் மஹாபத்ரா.

“அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. உன்னோட பிறந்த ஆட்களுக்கும் நாங்க உரிய மரியாதை தரனும்!” என்றதும்,”உங்க இஷ்டம் மாமா” எனக் கூறி விட்டாள் மருமகள்.

அதேபோல், தனது மகள் மற்றும் மருமகனுக்கு மறு வீட்டு விருந்து அளிக்க ஒரு நல்ல நாளைத் தேர்ந்தெடுத்து ஸ்வரூபனின் அன்னையிடம் தெரிவித்தார் சந்திரதேவ்.

“சரிங்க சம்பந்தி. நாங்க கண்டிப்பாக வந்துட்றோம்” என்றுரைத்து விட்டு இதைப் புது ஜோடிகளிடம் கூறினார் கவிபாரதி.

“நீங்க, மிருதுளா அக்கா, வித்யாதரன் அண்ணாவும் எங்க கூட வருவீங்க தானே?” என்று அவரிடம் கேட்டாள் ருத்ராக்ஷி.

“ஆமாம் மா. எங்களைக் கண்டிப்பாக வரச் சொல்லி உங்கப்பா மிரட்டி இருக்கார்!” என்று கூறிச் சிரித்தார்.

“அப்போ சரிங்க அத்தை” என்றாள் மருமகள்.

அதே சமயம், அந்தச் செய்தி மிருதுளா மற்றும் வித்யாதரனுக்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் தங்களது வருகையை உறுதிப்படுத்தி விட்டனர்.

தனது வயலிற்குச் சென்று,”சோமு அண்ணா! இங்கே வாங்களேன்” என்று அங்கே வேலை செய்யும் மூத்த ஊழியரை அருகில் அழைத்தான் ஸ்வரூபன்.

“என்ன தம்பி?” என்றார் சோமசுந்தரம்.

“நாளை மறுநாள் எங்க வீட்டில் மறு வீட்டு விருந்து நடக்கப் போகுது. அதனால் நான் அப்போ வயலுக்கு வர மாட்டேன். நான் வர்ற வரைக்கும் நீங்க இங்கே எல்லாத்தையும் பொறுப்பாகப் பார்த்துக்கிறீங்களா?”

“கண்டிப்பாகப் பார்த்துக்கிறேன் தம்பி. உங்களோட மனைவி வீட்டிலிருந்தும் வர்றாங்களா?” எனக் கேட்க,

“ஆமாம் அண்ணா. அவங்க எல்லாருமே வருவாங்க” என்று அவரிடம் சொன்னான் ஸ்வரூபன்.

“சரிங்க தம்பி. நான் இங்கே பார்த்துக்கிறேன். நீங்க கவலைப்படாதீங்க” என்று உறுதி அளித்தார் சோமசுந்தரம்.

அன்றைய இரவு தங்களது அறையில், அப்போது தான் கூடல் முடிந்து, தனது மனைவியின் தோளில் குட்டிக், குட்டி முத்தங்களைக் கொடுத்துக் கொண்டிருந்த ஸ்வரூபனோ, அதற்குச் சற்று இடைவெளி விட்டு,”ருத்ரா ம்மா, நீ உன்னோட மெழுகுவர்த்திச் செய்ய சொல்லிக் கொடுக்கிற கிளாஸை மறுபடியும் எப்போ ஆரம்பிக்கப் போற?” என்று அவளிடம் கேட்டான்.

உடனே அவனது நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு விட்டு,”மறு வீட்டு விருந்து முடிஞ்சதுக்கு அப்பறம் ஆரம்பிக்கலாம்ன்னு நினைச்சு இருக்கேன் ங்க” எனப் பதிலளித்தாள் ருத்ராக்ஷி.

“அப்பறம் உன்னோட லைப்ரரி வேலை என்னாச்சு? அதைப் பத்தி துரைமுருகன் சார் கிட்டே பேசினியா?”

“இல்லை ங்க. இன்னும் அவர்கிட்ட பேசலை. நம்ம கல்யாணத்துக்கு அப்பறம் இருக்கிற எல்லா சடங்கையும் முடிச்சிட்டுத் தான் பேசனும்” என்றதும்,

“ஓகே ம்மா. ஆனால் இது ரெண்டையும் நீ எப்பவுமே விட்றாதே! சரியா?” என்று மனைவிக்கு வலியுறுத்தினான் ஸ்வரூபன்.

ருத்ராக்ஷி,“கண்டிப்பாக விட மாட்டேன் ங்க” என்றவளோ, அவனது முகம் முழுவதும் முத்தங்களால் அர்ச்சிக்க, அதில் ஊமத்தம் கொண்டவனோ,

அவளைத் தனது ஆளுகைக்குக் கொண்டு வந்து மீண்டுமொரு கூடலுக்கு அடி போட்டான் கணவன்.

தனக்கும் அதில் விருப்பம் என்பதை அவனது தோளில் முத்தத்தைப் பதித்து வெளிப்படுத்தினாள் ருத்ராக்ஷி.

உடனே அவளது இதழ்களைத் தன்னுடைய உதடுகளால் ஒற்றி எடுத்தவன், அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறினான் ஸ்வரூபன்.

அடுத்த நாள் காலையில் தனது தங்கைக்கு அழைத்து,”ருத்ரா ம்மா, நீயும், மாப்பிள்ளையும் எப்படி இருக்கீங்க? உங்க அத்தை நல்லா இருக்காங்களா?”எனக் கேட்டான் காஷ்மீரன்.

அவனது குரலையும், அந்த விசாரிப்பையும் கேட்டவுடன்,”நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம் அண்ணா. நீங்க மூனு பேரும் எப்படி இருக்கீங்க?”என்றாள் உற்சாகமாக.

“நாங்களும் நல்லா இருக்கோம் மா” என்றவன்,

“உன்னோட புகுந்த வீட்டு ஆளுங்களுக்கு என்னென்ன சாப்பாட்டு ஐட்டம்ஸ் பிடிக்கும்ன்னுக் கேட்டுச் சொல்றியாடா?” என்றான் காஷ்மீரன்.

ருத்ராக்ஷி,“நீங்களுமா?” என்றவளிடம்,

“ஏன்டா?” எனக் கேட்டான்.

“இங்கே இவங்களும் உங்களுக்குப் பிடிச்ச சாப்பாட்டோட லிஸ்ட்டைக் கேட்டாங்க அண்ணா” என்று புன்னகையுடன் கூறினாள்.

“ஹா ஹா! சரி ம்மா. நீ அவங்க கிட்ட கேட்டு எனக்கு வாட்சப் பண்ணிரு” எனக் கூறி விட்டு வைத்தான் காஷ்மீரன்.

ருத்ராக்ஷியின் புகுந்த வீட்டு மறு விருந்திற்குத் தனது தந்தையையும், தாயையும் தங்களுடன் வருமாறு அழைத்தாள் மஹாபத்ரா.

“இல்லை வேண்டாம் மா. எங்களால் இப்போ எல்லாம் அவ்வளவு தூரம் அலைய முடியும்ன்னு தோனலை. அதனால், அவங்க எல்லாரும் உன் வீட்டுக்கு வரும் போது நாங்க வர்றோம்” என்றவுடன்,

அவர்களது உடல்நலன் கருதி அதை ஏற்றுக் கொண்டு, அந்த விஷயத்தைத் தன்னுடைய கணவனிடமும், மாமனாரிடமும் தெரிவித்து விட்டாள் மஹாபத்ரா.

“நானும் உங்க கூட வர்றேன்னு சொன்னால் கேட்க மாட்டேங்குறீங்களே!” என்று தன் தாயிடம் குறைபட்டுக் கொண்டான் ஸ்வரூபன்.

“நீ புதுசாக கல்யாணம் ஆனவன். அதனால் இப்படியெல்லாம் அங்கே, இங்கே வரக் கூடாது. உன்னைக் கொஞ்ச நாளைக்கு வயலுக்கே போக வேண்டாம்னு சொன்னேன். அதையும் நீ கேட்காமல் போயிட்டு இருக்கிற. அதுவே எனக்குப் பக்குன்னு இருக்கு. நீ பேசாமல் இரு. அதான் எங்க கூட வித்யாதயன் தம்பி வர்றாருல்ல? இதை நாங்க பார்த்துக்கிறோம்” எனத் தீர்க்கமாக உரைத்து விட்டார் கவிபாரதி.

அதைக் கேட்டுத் தாயைப் பொய்யாக முறைத்தான் ஸ்வரூபன்.

கணவனின் முகம் போன போக்கைப் பார்த்துச் சத்தமாக சிரித்து விட்டாள் ருத்ராக்ஷி.

அதைக் கண்டு அவளது முகத்தையும், கன்னத்தையும் வழித்து திருஷ்டிக் கழித்தார் கவிபாரதி.

மறு வீட்டுச் சாப்பாட்டிற்குச் சில வகைகளை ஆட்களை வைத்துச் சமைக்க முடிவு எடுத்து இருந்தார்கள் அல்லவா? அவர்களைப் பார்க்கச் சொல்வதாக கூறவும் தான், தானும் அவருடன் வருவதாக உரைத்து இருந்தான் ஸ்வரூபன்.

அதைக் கேட்டுத் தான், அவனை வர வேண்டாமென்று மறுத்து விட்டு இப்போது வித்யாதரனுடன் சமையல் ஆட்களைப் பார்க்கச் சென்றுள்ளார் கவிபாரதி.

“இந்த ஊரிலேயே உங்களோடது தான் தரமான சமையலாக இருக்கும்னு சொன்னாங்க. அதனால் தான் உங்க கிட்ட வந்திருக்கோம். இவங்க வீட்டு மறு விருந்துக்குத் தான் சமைக்கனும். இது தான் லிஸ்ட்டு. இந்த வகையைச் சமைப்பீங்களான்னுப் பார்த்துக்கோங்க!” என்று அவர்களிடம் தன் கையிலிருந்த குறிப்புத் தாளைக் கொடுத்தார் வித்யாதரன்.

அதை வாங்கிப் பார்த்து விட்டு,“ம்ம். இதையெல்லாம் நல்லா சமைச்சிக் கொடுத்துடலாம் ங்க” என்று அந்த சமையல்காரர் கூறவும்,

“அட்வான்ஸ் பணம் எவ்வளவு ப்பா?”என்று கேட்டுத் தெரிந்து கொண்டு, உடனே தன்னிடமிருந்த பணத்தை எண்ணிப் பார்த்து அவரிடம் கொடுத்தார் கவிபாரதி.

“நீங்க சொன்ன நாளில் சாப்பாடு எல்லாம் சரியான நேரத்துக்குச் சுடச்சுட வந்து சேர்ந்திடும்” என்று அவர்களுக்கு உறுதி அளித்தார் சமையல்காரர்.

அதன் பிறகான நாட்களில், மறு வீட்டு விருந்திற்கு முந்தைய நாள் இரவே ருத்ராக்ஷியின் புகுந்த வீட்டிற்குச் சென்று இறங்கினர் சந்திரதேவ், காஷ்மீரன் மற்றும் மஹாபத்ரா.


- தொடரும்
 

Advertisement

Back
Top