Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம்-2

Advertisement

Mithrayuktha

Member
Member
இளமாறன்......

இருபத்தி ஒன்பது வயது ஆண்மகன், கேசவன் அமுதா தம்பதியின் ஒரே மகன்…. 6 அடியில் மாநிறதில் கதாநாயகனுக்குரிய எல்லா அம்சமும் பொருந்திய முகம், தொடர்ந்து செய்யும் உடற்பயிற்சியின் உபாயத்தால் சிக்ஸ் பேக்ஸ் உடல், சிரித்தால் அனைவரையும் கவரும் பல் வரிசை மொத்தத்தில் ஆணழகன்.
நல்ல குணமும் அறிவும் உடையவன், எம்பிஏ முடித்து விட்டு சாப்ட்வேர் இன்ஜினியராக அமெரிக்காவில் பணிபுரிகிறான்.

இளமாறனுக்குப் பிறகு கேசவன் அமுதா தம்பதியருக்கு அடுத்த குழந்தை அமையவில்லை…. அதனால் மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டான், பெற்றவர்கள் மனம் நோகாமல் அவர்கள் விருப்பப்படி நடந்து கொண்டான். எப்பொழுதாவது கோபம் வந்தாலும் வெளியில் காட்டமாடான். மொத்தத்தில் மிகவும் நல்லவன் என்று தன்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெயர் பெற்றவன்.

இளமாறன் அமெரிக்கா சென்றது பெற்றவர்களுக்கு வருத்தமாக இருந்தாலும்.. மகனின் கனவுகளுக்கு உறுதுணையாக இருக்க, அமெரிக்காவிலிருந்து இளமாறன் வேலைபார்த்து அனுப்பும் பணத்தில் அவர்கள் பூர்விக கிராமத்தில் வீடு கட்டி அதை சுற்றி உள்ள நிலங்களை வாங்கினர் கேசவனும் அமுதாவும்.

இளமாரனுக்குக்கு விவசாயத்தில் ஈடுபாடு அதிகம், ஆர்கானிக் முறைப்படி காய்கறிகளை சாகுபடி செய்து அதை எக்ஸ்போர்ட் செய்ய வேண்டும் என்பதே இளமாறனின் கனவு. மகனின் ஆசையை நிறைவேற்ற அந்த ஊரிலேயே நிலங்களை வாங்க பெற்றோர்கள் முயற்சி செய்து கொண்டிருந்தனர். தொழிலுக்கு தேவையான நிலமும் பணமும் சேர்தபின் இளமாறன் இந்தியா வருவதாக இருந்தது.

இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன் கேசவன் மாரடைப்பில் இறந்துவிட…அவரது இறப்பிற்குப்பின் அமுதா மிகவும் சோர்ந்து விட்டார்.....32 வருட தாம்பத்தியம்….காதல் கணவர் இல்லாது போனது அவரால் இன்றளவும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.....

இளமாறன் திருமண வயதில் இருப்பதால், தனக்கும் வயது கூடிவிட்டது என்று இளாமாறனுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்து ஆறு மாதங்களாக பெண் தேடி வருகிறார்.

நல்ல இடத்திலிருந்து பெண் அமைந்ததும் இதைப்பற்றி இளமாறன் இளமாறனிடம் பேசலாம் என்று முடிவு செய்திருந்தார்.

ஆனால் இளமாறன் தன்னுடன் பணிபுரியும் இந்திய வம்சாவழியை சேர்ந்த சுரபியை விரும்பினான்... சுரபியின் பெற்றோருக்கும் இதில் விருப்பமே... சூரபியும் தங்களது திருமணத்திற்கு பிறகு தன்னுடன் இந்தியா வந்து தனக்கு உறுதுணையாக இருப்பாள் என்றேண்ணினான் (நீ மட்டும் நினைச்சா போதுமா? அவளையும் கேக்கணுமில்ல...). அதனால் எந்த தடையும் இன்றி அமெரிக்காவில் காதல் பறவைகளாக சுற்றித் திரிந்தனர்...

நல்ல குடும்பத்திலிருந்து பெண் அமைந்துவிட அமுதாவும் இதைப்பற்றி இளமாரனிடம் பேச, இனி மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்று தன் காதலைப் பற்றித் தாயிடம் கூறினான் இளமாறன்….

அவனது முடிவு அமுதாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் அவன் மகிழ்ச்சியே முக்கியம் என்று அவன் காதலுக்கு சம்மதம் தெரிவித்தார் அமுதா.. சுரப்பியை இங்கே இந்தியாஅழைத்து வர கோரினார்….அம்மாவின் சம்மதம் கிடைத்த சந்தோஷத்தில் சீக்கிரம் வருவதாக கூறினான் இளமாறன்.

மிகவும் சந்தோஷமாக காலையில் கிளம்பி ஆபீசை வந்தடைந்தான் இளமாறன்.....

சுரபியை தேடி அவளது கேபின் சென்று பார்த்தால் அவள் மும்முரமாக எதையோ கம்ப்யூட்டரில் பார்த்துக் கொண்டிருந்தாள்

" ஹே அபி..."

" ஹாய் இளா… குட் மார்னிங்"

"குட் மார்னிங் அபி.....ஐ வான்ன டாக் வித் யூ, இப் யூ ஆர் பிரீ லெட் அஸ் கோ டு கேப்பிடேரியா..."

சுரபி குடும்பம் வட இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பதால் அவளுக்கு தமிழ் பேச தெரியாது அதனால் அவர்களின் ஆங்கில பேச்சுவார்த்தை இனி தமிழில்.....

"ம்ம்ம்... போகலாம், அதுக்கு முன்னாடி இங்க வந்து எனக்கு கொஞ்சம் சஜஷன் சொல்றியா?" என்று அழைத்தாள்.

"என்னாச்சு….”

“ இன்னைக்கு ஒரு பேக் வாங்கலாம்னு பார்க்கிறேன், நீ வந்து கலர் சூஸ் பண்ணி ஹெல்ப் பண்றியா.. எனக்கு எந்த கலர் எடுக்கிறதுன்னு யோசனையா இருக்கு"

"ஓ கண்டிப்பா...." என்று அருகில் சென்று மானிட்டரை பார்க்க அந்த பேகின் விலை கிட்டத்தட்ட இந்திய ரூபாயின் மதிப்பில் ஒன்றரை லட்சம்...

"அடிப்பாவி இந்தக் காசுக்கு நான் இந்தியா போயிட்டு வந்துவிடுவேன், இவ என்னடான்னா அசால்டா பேக் வாங்கறேன்னு சொல்றா..." என்று எண்ணிக்கொண்டு.

“கொஞ்சம் காஸ்ட்லியா இருக்கும் போல அபி…” எனக் கூற,

“கம் ஆன் இளா…. இது குச்சி (Gucci) பேக் காஸ்ட்லியா தான் இருக்கும்… அதும் இல்லாம எனக்கு பணம் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை தேவையான அளவுக்கு என் அப்பா சேர்த்து வச்சிருக்காரு. .. சோ என் பணத்தை நான் தரலாமா செலவு பண்ணலாம்…” என்றாள்.

“இதை எடுத்துட்டு போனா எவ்வளவு கெத்தா இருக்கும் தெரியுமா…”

“பேக்ல என்னடி கெத்து…” என்று எண்ணிக்கொண்டு ஒன்றைத் தேர்ந்தெடுக்க,

“சூப்பர் இளா...எனக்கும் இந்த கலர் தான் வாங்கணும்னு தோணுச்சு அதனாலதான் நம்ம மேட் ஃபார் ஈச் அதர்னு எனக்கு எப்போவுமே தோணும்”

அப்பேதும் விடாமல் புன் சிரிப்புடன், “ வீன் செலவு பண்ணனும்னு அவசியம் இல்லை அபி... பாங்க்ல போட்டு சேர்த்து வைக்கலாம் இல்லனா, எதுலயாவது இன்வெஸ்ட் பண்ணலாம்ல….”

“ஒஹ்...காட் போதும் இளா…. வா கேப்டெரியா போகலாம் எதோ பேசணும்னு சொன்னல்ல …” என்று அழைத்துச் சென்றாள்.

இருவரும் கேஃப்டெரியா சென்று ஆளுக்கொரு கப்பில் காபியை நிரப்பிக்கொண்டு டேபிலில் அமர்ந்தனர்.

“சொல்லு இளா…”

இளமாறன் தன் அம்மா தம் காதலை ஒப்புகொண்டதை கூற… சூரபியோ மகிழ்ச்சியில் துள்ளி குதித்தாள்…

“வாவ் இளா….வேற என்ன சொன்னாங்க?”

“அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம் உன்ன பாக்கணும்னு சொன்னாங்க, சோ உனக்கு எப்ப ஃப்ரீ என்று சொல்லு அப்போ இந்தியா போகலாம்.”

“சூப்பர் இளா….என் ப்ராஜெக்டில் பெருசா இப்போதைக்கு வேலை இல்ல சோ எனக்கு டூ வீக் லீவு எடுக்க முடியும், சின்ன வயசுல இந்தியா போனது… இப்போ போறத நினைச்சா எக்ஸிட்டிங் ஆஹ் இருக்கு..” என்று ஆர்பரித்தாள்.

“குட் அப்படின்னா நானும் அந்த நாள்ல லீவ் சொல்லிடரேன்... டிக்கெட்ஸ் பார்க்கலாம் எப்ப கிடைக்குதோ அப்போ போகலாம்” என்று முடிவெடுத்தனர்.

திட்டமிட்டபடி இருவரும் இந்தியா கிளம்பி வந்து சேர்ந்தனர். ஏர்போர்ட்டை விட்டு வெளியில் வர சூடான காற்று முகத்தில் மோதியது...முகத்தை சுருக்கிய சுரபி

“என்ன இல்லா இவளோ ஹாட்டா இருக்கு” என்றாள்

“ஏர்போர்ட் ஃபுல்லா ஏசி இல்லமா… அதன் வெளியே வந்ததும் இப்படி உனக்கு சூடா இருக்கிற மாதிரி இருக்கும்”

“இல்ல இல்ல அமெரிக்காவின் வெய்யில் காலத்தைவிட இங்கு வெயில் கொஞ்சம் அதிகமா இருக்குற மாதிரி இருக்கு”

“ஆமா அபி இப்போல்லாம் இந்தியால முன்ன விட கொஞ்சம் வெயில் அதிகம் தான் என்றான்.

“இங்க எப்படி 2 வீக்ஸ் இருக்கிறது…. நல்ல வேலை சன்ஸ்கிரீன் எடுத்துட்டு வந்தேன்.... (ஏன் இந்தியால சன்ஸ்கிரீன் கிடைக்காதா?)இல்லன்னா ஸ்கின் ஃபுல்லா சன் டான் வந்திருக்கும்.”

இங்க இருகவங்க எல்லாம் மனுஷங்க இல்லையா.. என்றெண்ணி சிறிது கோபம் வந்தாலும் அவளுக்கு பழக்கமில்லாத வெயிலாதலால் அப்படி கூறுகிறாள் என்று கட்டுப்படுத்திக் கொண்டான்.

ஒரு வழியாக தன் அம்மா அனுப்பியிருந்த காரில் இருவரும் இளமாறனின் கிராமத்திற்கு கிளம்பினர்.

தன்னுடைய சுரபியக் விடுத்து நம் ஆராதனவை எப்படி ஏற்றுக்கொள்ள போகிறான்? ஏற்றுக்கொள்வானா… இல்லையா….என்று இனி வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்….
 
Nirmala vandhachu ???
 
Top