Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம்-3

Advertisement

Mithrayuktha

Member
Member
காலை வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு மதியதிற்கான காய்கறிகளையும் நறுக்கி வைத்து விட்டு அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் ஆராதனா.
அடர் நீல நிறத்தில் சுடிதார் அணிந்து,அதற்கு ஏற்றாற்போல் ஒப்பனை செய்து, முடியை ஹாஃப் போனி டெயில் போட்டிருந்தாள்…. எல்லாம் முடித்துவிட்டு கண்ணாடியில் பார்க்க அவளுக்கு திருப்தியாய் இருந்தது. அலுவலகத்துக்கு தேவையானதை எல்லாம் சரி பார்த்துக் கொண்டிருக்க வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

“மாமா இன்னும் கிளம்பலயே கார் சத்தம் கேட்குது…..” என்று எண்ணிக்கொண்டு ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தாள்.

காரிலிருந்து இறங்கி காருக்கான வாடகையை செலுத்திக் கொண்டிருந்தான் ராஜேஷ் ‘இவன் வரத பத்தி யாருமே சொல்லவில்லையே’ என்று எண்ணிக் கொண்டிருக்க,

கார் சத்தம் கேட்டு வெளியில் வந்த யசோதாவுக்க்கு பெரிய ஆச்சர்யம்…..

“ஏங்க இங்க யாரு வந்திருக்கா பாருங்க…..” என்று வீட்டைப் பார்த்துக் குரல் கொடுத்துவிட்டு ராஜேஷை நோக்கி ஓடினார் யசோதா.

“யாரு யசோ…?”என்று எட்டிப்பார்த்த சூரிய நாதனுக்கும் ஆச்சரியமே.

அதற்குள் காருக்கான பணத்தை கொடுத்து அனுப்பிவிட்டு வந்து கொண்டிருந்தான் அவனை பாதி வழியில் நிறுத்திய யசோதா அவனை தலை முதல் கால் வரை பார்த்து பூரித்து போனார்.

“தம்பி நல்லா இருக்கியா பா….வரேன்னு முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல” என்று குறைபட்டுக் கொண்டார்

“சும்மாதான் மா ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு” என்று சிரித்தான்.

“அங்கேயே நிக்க வச்சு பேசுவியா உள்ள கூட்டிட்டு வா..
உள்ள வா தம்பி... நல்லா இருக்கியா” என்று வாஞ்சையாக விசாரித்தார் சூரிய நாதன்.

“நல்ல இருக்கேன் பா…”

“ஆமா இல்ல…. புள்ள அவ்ளோ தூரத்துல இருந்து வந்திருக்கிறது நான் வெளியவே நிக்க வச்சி பேசிட்டு இருக்கேன்…. உள்ள வாடா கண்ணா” என்று அழைத்தவர் சற்று யோசித்து இங்கேயே நில்லு தம்பி இதோ வரேன் என்று கூறிவிட்டு

“ஆராதனா....” என்று உள்ளே பார்த்து அழைத்தார்

“அத்தை” என்று வந்தவளிடம்

“ தம்பி வந்திருக்கான் பாரு போய் ஆரத்தி கரைச்சு எடுத்துட்டு வா… சீக்கிரம்” என்று கூறி விட்டு வாசலுக்கு விரைந்தார்

எத்தனை நாள் தம்பி லீவு என்று விசாரித்தார் சூரிய நாதன்

“ஒன்றரை மாசம் பா... நாலு வருஷமா பெருசா லீவ் எடுகல, அதனால் லீவ் கேட்ட உடனே கிடைச்சது அதன் வந்துட்டேன்…” என்று கூறினான் ராஜேஷ்

ராஜேஷ் மேற்படிப்புக்காக வெளிநாடு சென்று ,அவன் படிப்பு முடிந்து அங்கேயே வேலை கிடைக்க, படிப்பு முடித்து இரண்டு மாதம் வீட்டில் விடுமுறையை கழித்துவிட்டு மீண்டும் வேலைக்கு சென்றவன் 4 வருடம் கழித்து இப்போது தான் வருகிறான். அவன் விடுமுறைக்கு வந்த நேரத்தில் ஆராதனா தன் பெரியப்பா வீட்டிற்க்கு சென்றிருந்தாள், அதனால் ஆராதனாவை கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக அவன் பார்க்கவில்லை.

ஆரத்தி கலந்து வெளியே எடுத்து வந்து ஆராதனாவை பார்த்த ராஜேஷ் ஸ்தம்பித்தான் அவள் உடுத்தி இருந்த நீல நிற உடை அவள் நிறத்தை மேலும் அதிகரித்து காட்ட, பளிங்கு நிறத்தில் இருந்த முகத்தில் அவளது மையிட்டிருந்த வழிகள் அவள் முகத்தை மேலும் அழகாக காட்டியது, சாதாரணமாகவே சிவந்திருக்கும் உதட்டுக்கு மெல்லிய உதட்டு சாயம் அவளை பேரழகியாக காட்டியது.

“ இங்க குடு…” என்று ஆரத்தியை வாங்கி யசோதா ராஜேஷ்க்கு சுற்றி விட்டு ,ஆராதனா விடும் கொடுத்தார்.

அதை வாங்கிக்கொண்டு அவனைப்பார்த்து வரவேற்பாய் ஒரு புன்னகையை சிந்திவிட்டு அவனை தாண்டி சென்றாள்.

அவள் கடந்து சென்றதும் சுயநினைவிற்கு வந்த ராஜேஷ் தாய் தந்தையுடன் வீட்டினுள் நுழைந்தான்.

“ஐயோ எனக்கு கையும் ஓடல காலும் ஓடல….” என்று சமையல் அறைக்கு விரைந்தார் யசோதா

ஆரத்தியை கீழே கொட்டிவிட்டு உள்ளே வந்தவளிடம்

“எப்படி இருக்க ஆரா..?” என்றான் ராஜேஷ்

“நல்லா இருக்கேன்... நீங்க எப்படி இருக்கீங்க, வேலை எல்லாம் நல்லா போகுதா…?” என்று விசாரித்தாள்

“எல்லாம் நல்லா போகுது... உன்ன 12 வது படிக்கும் போது பார்த்தது இல்ல..? கிட்டத்தட்ட 6 வருஷம் ஆச்சு.”

“ஆமா…” பதிலளித்துவிட்டு சமயலறையில் நுழைந்து கொண்டாள்.

“இவன் நம்மள எப்போவும் இளக்காரமா, இல்லன்னா பாவமா தான பாப்பான் இன்னைக்கு என்ன வித்தியாசமா பாகுறான்” என்று யோசித்து கொண்டிருக்க

“இன்னும் நீ கெலம்பலயா?” என்று கேட்டார் யசோதா

ஆரத்தி கரை அதை கரை இதை கரைநு வேலை சொல்லிட்டு கெலம்பலயானு கேக்குது பாரு என்றெண்ணிக்கொண்டு “இதோ கெலம்பிட்டேன் அத்தை….” என்று புறப்பட்டு அலுவலகம் சென்றாள்.

புதுப்பாளையம் கிராமம்

பொழுது புலர்ந்து கொண்டிருக்க கார் ஊருக்குள் நுழைய, ஜன்னலை இறக்கிய இளமாறன் காலைக்காற்றை முகத்தில் வாங்கினான்… சொந்த மண்ணில் கிடைக்கும் இந்த மன அமைதி வேறு எங்கு சென்றாலும் கிடைக்க போவதில்லை என்ற எண்ணம் தோன்றியது. இன்னும் ஒரு வருடம் தான் இங்கு வந்து விடலாம், கனவுகள் கண்களில் விரிந்தது இளமாறனுக்கு, குனிந்து தன் தோளில் உறங்கி கொண்டிருந்த சுரபியை பார்த்தான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள், புன்னகைத்துவிட்டு

“ அபி…. ஹே அபி…. எழுந்துக்க, வீடு வந்துடுச்சி….”என்று எழுப்பினான், அவள் அசய கூட இல்லை. இவ வேற இப்படி கூப்டா எழ மாட்டா என்று அவளை உலுக்கி எழுப்பினான்.

“ஹே இளா….ரீச் அய்ட்டோமா” கண்ணை தேய்த்து கொண்டே எழுந்தாள்.

“வந்துட்டோம்.. வீடு வந்துடுச்சி இறங்கு டீயர்..” என்றான்

கார் நிற்க ஆரத்தி தட்டுடன் வெளியே வந்தார் அமுதா,

“ராஜா... வாப்பா... வாம்மா நல்லா இருக்கியா? பயணம் எல்லாம் சவுகரியமாக இருந்ததா” என்று கேட்டார்.

சுரபி முழித்து கொண்டு நிற்க, அவளுக்கு மொழிபெயர்த்து கூறினான் இளமாறன். சுரபி ஆங்கிலத்தில் “ நல்லா இருந்தது ஆன்டி..” என்று பதில் கூற இளமாறனை கேள்வியாக பார்த்தார் அமுதா.

“அவளுக்கு தமிழ் தெரியாதும்மா…” தாயின் குற்றம்சாட்டும் பார்வையை கண்டு,

“பிளீஸ் மா…” என்று உதடசைத்தான் இளமாறன்

அமுதா ஆசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்றவர் அதனால் அவளுடன் பேசுவதற்கு அவருக்கு எந்த தடயும் இல்லை, இருந்தும் சொந்த வீட்டில் எப்பொழுதும் எப்படி ஆங்கிலத்திலேயே பேச முடியும் என்று மனதில் கேள்வி எழுந்தது, மகனுக்காக என்றெண்ணிக்கொண்டு இருவருக்கும் தனித்தனியாக இருவருக்கும் ஆழம் சுற்றி உள்ளே அழைத்தார்.

“கல்யாணதுக்கு முன்னாடி சேர்த்து ஆலம் சுற்ற கூடாது” என்று விளக்கினார்.

“உள்ள வாங்க…” எனகூறிவிட்டு ஆலத்தை வீட்டில் வேலை செய்யும் பெண் செல்வியிடம் கொடுத்தனுபினார்.

“ஏன் கண்ணா உங்கள கூப்பிட சுகன் வரல?”

“இல்லையே மா…”

“வரேன்னு சொன்னானே கண்ணா…”

“சரி ராஜா ரெண்டு பெரும் களைப்பா இருப்பீங்க போய் குளிச்சிட்டு வாங்க சாப்பாடு எடுத்து வைகரேன்…”

சுரபியிடம் “ உனக்கு கீழ ரூம் இருக்கு டா மா… குளிச்சிட்டு வா, எல்லாம் ரெடியா இருக்கும் சாப்பிட்டு ரெஸ்ட் எடுபிங்க” என்று கூறி.

“செல்வி போய் பாப்பக்கு அவ ரூம் காட்டு” என்று அனுப்பி வைத்தார்.
 
Nirmala vandhachu ???
 
Nice epi.
Konjam periya epi koduthu irrunthal, romba kushi ya irrunthu irrukum allo.
Rare ah epi kodutha per kuda manasila nikkuthilla.
 
Top