Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 4 -காதல் என்னும் காந்த விசை

Advertisement

Nilaprakash

Member
Member
ஒவ்வொரு ஆணுக்கும் தனக்குரிய பெண்மையின் ரசனைக்கு என ஒரு வரையறை இருக்கும் . கார்த்திக் தனது அத்தனை எதிர்பார்ப்புகளையும் மொத்தமாக குறிப்பெடுத்து செதுக்கி வைத்தது போல் நின்றிருந்தாள் மலர்.

அவன் விழிகள் இமைக்காது அவளை ரசிக்கையில் மலர் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவளின் ஆணுக்குரிய ரசனையின் எதிர்பார்ப்பில் கார்த்திக் வித்தியாசமானவனே.

அவள் ஆணுக்கு மீசை கம்பீரம் என எண்ணுவாள் அவனோ முகம் முழுவதும் சேவ் செய்து தன் வசீகர புன்னகை யோடு நின்றிருந்தான்.

அவள் சற்றே கருத்த நிறமழகு என எண்ணுவாள்‌ அன்னபூரணியின் வெண்மை நிறம் அவனுக்கு முழுவதுமாக வாய்த்திருந்தது.

மலருக்கு தன் ஆணுக்குரிய ரசனையில் பொருந்தாது தன்னை ஈர்க்கும் அதிசயம் அவனாகவும் .. கார்த்திக் ன் கண்களில் தனது கனவுகளின் தேவதையாக அவளும் நிற்க .. இருவருள்ளும் ஒரு மின்சார உணர்வு விழி வழியே நுழைந்து மனதில் அமர்ந்து நகர மறுத்ததை உணர்ந்தனர்.

ரூபாவின் காதில் மெல்ல கிசுகிசுத்தாள் வீணா.

" பேச்சை ஆரம்பிச்சிரலமா "

பெண்கள் மூவரும் கார்த்திக் ன் எதிர் திசையில் அமர்ந்திருந்ததால் அவனின் முகமாற்றத்தை கண்டிருக்க வாய்ப்பில்லை.

கார்த்திக் வரும் போதே பேசி வைத்திருந்தான்.

" .. பொண்ணு மாப்பிள்ளை யும் தனியா ...பிடிச்சிருக்கா னு கேட்டரலாம் .. சொல்றீங்க ..நான் எல்லார் முன்னாடியும் எனக்கு இப்பத்திக்கு கல்யாணத்தில இஷ்டமில்லை னு சொல்லிடறேன் அப்ப தான் மிலிட்டரி இனி கல்யாண பேச்சு எடுக்க மாட்டார்"

வீணா பாவமாக பார்த்தாள்

" கார்த்திக் அந்த பொண்ணு பாவமில்லை "

" பிடிக்காத என்னை கட்டறது பாவமில்லை யா "

தன் கொழுந்தனின் வார்த்தைகளில் ம் நியாயம் இருப்பதால் அண்ணிகள் இருவரும் அதை செய்து முடிப்பதாக ஒத்துக் கொண்டனர்‌.

கார்த்திக் சொன்னதை வீணா நியாபகப்படுத்த கரிகாலன் தன் நண்பனிடம் அளவளாவி கொண்டு இருந்த தைரியத்தில் ரூபா பேச தொடங்கினாள்.

" நாமலே பேசிட்டு இருந்தா எப்படி .. பொண்ணு கும் மாப்பிள்ளை கும் பிடிச்சிருக்கா னு கேட்க வேணாமா "

கரிகாலன் தன் மருமகளை கோபத்துடன் நோக்கினார்.

சிங்கத்தின் பிடறிமயிரை பிடித்து தொங்கி ஆயிற்று ..இனி பயம் என்ன.. தங்கள் கொழுந்தனாரை தங்களை விட்டால் காக்க இயலாது என்பது போல் வீணா தொடர்ந்தாள்

" இல்லை காலம் முழுக்க வாழப் போறது அவங்க தான்.. அவங்க சம்மதம் முக்கியம் ல "

அன்னபூரணி தன் மருமகள்களை நோக்கினார்.

" இன்னைக்கு என்ன தான் ஆச்சு உங்களுக்கு .‌..ஏன் இப்படி இந்த மனுசன்ட .."

அவள் எண்ணிக் கொண்டு இருக்கையிலேயே கார்த்திக் வாய் திறந்தான்.

" எனக்கு பொண்ணைப் பிடிச்சிருக்கு "

வீணாகும் ரூபாவும் வாயடைத்து போய் ஒருவரை ஒருவர் நோக்கினர்.

கார்த்திக் அவர்கள் பக்கமே திரும்பாது மலர் தெரிகிறாளா என பார்த்தப் படி இருந்தான்.

கரிகாலன் மிகுந்த சந்தோஷத்துடன் கல்யாணப் பேச்சு பேச தொடங்கினார்.மலர் தன் அறைக்குள் சென்று தன் தோழியை பார்த்தாள்.

" என்னடி .. வேணாம் வேணாம் ன‌... இப்பவும் வேணாமா "

அவளின் கேள்விக்கு ஒரு வெட்க புன்னகை மட்டுமே பதிலாக வந்தது.

பரஸ்பர சம்பிரதாயங்கள் ,பலகாரம்
என அனைத்தும் முடித்து கரிகாலன் பேசினார்.

" செழியா .. கல்யாண தேதி முடிவு பண்ணிட்டு சொல்லு வந்து நிச்சயம் பண்ணிடலாம் "

கரிகாலன் பேசிக் கொண்டு இருக்க மற்ற நால்வரும் காரை நோக்கி நடந்தனர்.கார்த்திக் மலர் தெரிகிறாளா என மீண்டும் ஒருமுறை திரும்பி பார்த்தான்.

வீணா சற்று நக்கலாக சொன்னாள்.

" பார்த்து கொழுந்தனாரே வழுக்கி விழுந்நிட போறோம் ..ஒரே "

ரூபா சிரித்தாள் ‌. வண்டியில் ஏறி அவன் அமரவும் ரூபா கேட்டாள்.

" ஏன் வீணா ..இங்கே கார்த்தி கார்த்தி னு ஒரு மானஸ்தன இருந்தா பார்த்தே "

கார்த்திக் அவர்கள் புறம் திரும்பி காதில் போட்டுக் கொண்டு

" தப்பு தான் தப்பு தான் "

அதை கேட்டதும் அவர்கள் இருவரும் கலகலவென சிரித்தனர்.அன்னபூரணி மகனை கோபமாக நோக்கினாள்.

" எல்லாம் உன் வேலை தானாடா ? "

" அம்மா நீயும் ஆரம்பிக்காதேமா மிலிட்டரி வர்றார் "

அவன் சொல்லவும் மூவரும் அமைதி ஆயினர்.அன்று இரவு கார்த்திக் தன் படுக்கை அறையில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டு இருந்தான்.

ரிசர்ச் அப்டேட் கொடுக்க வேண்டி இருந்தது ‌.

" எங்க கொடுக்கறது ..கண் முன்னே நின்று கொண்டு வம்பிழுக்கும் இவளை .."

" இதுக்கு தான் இதெல்லாம் வேணாம் னு இருந்தேன் " அவன் மனதில் குழப்பம் மிகும் போதெல்லாம் அவன் அழைப்பது அவனது குருவை .

அவன் குரு அவனது தாய்மாமன் கர்னல் கருணாகரன்.அவன் அவருக்கு அழைக்க அவர் ஏதோ அசைன்மென்ட் மீட்டிங் ல் இருப்பதாகவும் நாளை காலை அழைக்குமாறும் பதில் வந்தது.

கார்த்திக் கஷ்டப் பட்டு உறங்க முயற்சித்தான். அவனது இரு விழிகளுக்கு இடையில் நின்று கொண்டு

தூங்கி தான் பாரேன் என்று சிரித்தாள் மலர்

அதே நேரம் அந்த இனிய அவஸ்தை யை அவளுக்கும் பரிசளித்துக் கொண்டு இருந்தான் கார்த்திக்.

மலர் எவ்வளவோ முயற்சித்தும் கார்த்திக் ன் முகம் அவளின் நினைவில் வர மறுத்தது‌.அவள் தூக்கம் முழுவதும் திருடிக்கொண்ட அந்த இனிய அவஸ்த்தையை அனுபவித்து தீர இன்னும் பல இரவுகளை பணித்திருந்தான் கார்த்திக்.

மலர் அதிசயித்து எண்ணினாள்
" முகம் கூட பதியாது போன ஒருவனிடமா தன்னை முழுவதும் பறிகொடுத்தோம் "

பல திரைக் காட்சி கள் பார்த்து அவள் நகைத்த விநாடிகள் நியாபகம் வந்தது .
" பார்த்த நொடிப்பொழுதில் காதல் வருமா "

ஏன் வராது என்று அவளை எள்ளி நகையாடி அந்த இரவு கழிந்தது.

காதல் எனும் மாய விசை செய்யாத அதிசயங்கள் பூமியில் உளனவோ. ??
 
Top