மனைவியின் கடுகடுப்பு நிறைந்த முகத்தைக் கண்ட கதிரவன்,"என்னம்மா?" என்று விசாரித்தான்.
"அம்மா கால் பண்ணாங்க" என்று மொத்தத்தையும் ஒப்புவித்தாள் காவேரி.
"அவங்க அப்படித் தான்னு தெரியுமே ம்மா? அப்பறமும் ஒவ்வொரு தடவையும் கவலைப்பட்டுக்கிட்டு இருக்கிற" என்று மனைவியிடம் ஆதரவாகப் பேசினான் கதிரவன்.
"உங்க வீட்டில் என்ன சொன்னாங்க?" என்று கணவனின் குடும்பத்தைப் பற்றி அவனிடம் கேட்டாள் மனைவி.
"அதையே தான் சொல்லி மறுத்தாங்க!" என்று அவளிடம் விளக்கினான்.
அவனும் அதிகாலையிலேயே தனது தந்தைக்குக் கால் செய்து,"அப்பா! எல்லாரும் வந்துட்டு இருக்கீங்க தான? எங்க வந்து உங்களை அழைச்சிட்டுப் போகனும்?" என்றான் கதிரவன்.
"என்னடா சொல்ற?" என்ற சாவகாசமாக வினவினார் அவனது தந்தை.
"உற்சவனோட கல்யாணத்துக்கு அப்பா! அங்கேயிருந்து யாரும் இன்னும் கிளம்பலையா?" என்று திடுக்கிட்டுப் போய்க் கேட்டான் கதிரவன்.
"நாங்க ஏன் வரனும்? நீ ஒரு வார்த்தை சொன்னியா? எங்களுக்குத் துணி எடுத்துட்டு வந்து, கொடுத்துட்டுப் போயிருக்கனும்ல? என்னத்துக்குன்னு நாங்க வரனும்?" என அவர் பொரியவும்,
"நீங்க வரவே வேண்டாம் ப்பா. அங்கேயே இருந்துடுங்க! நானும்,உங்க மருமகளும் அங்கே எட்டியே பார்க்க மாட்டோம்!" என்று உறுதியாக கூறி விட்டு அழைப்பைத் துண்டித்து விட்டான் கதிரவன்.
"ப்ச்!" என அயர்ந்து போனாள் காவேரி.
"நான் என் நண்பனைப் பார்த்துட்டு வர்றேன் ம்மா. நீ பாலனுக்கு ஏதாவது சாப்பிடக் கொடு" என்று சொல்லி விட்டு, உற்சவனிடம் சென்றான்.
"இந்த மோதிரத்தைக் கழட்டி வைச்சுக்கிறேன் டா! கல்யாணம் முடிஞ்சதும் எடுத்துப் போட்டுக்கவா?" என்று அவனிடம் கேட்டான்.
"ம்ம்.. உன் இஷ்டம் டா உற்சவா!" என அனுமதி அளித்தான் கதிரவன்.
அவனது வார்த்தைகளைக் கேட்டதும், இடது கை விரலில் அணிந்திருந்த மோதிரத்தைக் கழட்டிப் பத்திரமாக வைத்தான் உற்சவன்.
"உன் பையன் எங்கடா?" என்றான் கதிரவனிடம்.
"அவன் அங்கேயே இருக்கட்டும். நீ அவனை வச்சிட்டு மணமேடையில் உட்கார வேண்டாம். ஐயர் கடுப்பாகிடுவார்!" என்று அவனை எச்சரித்தான்.
"நிச்சயத்தார்த்தம் மாதிரி சென்ட் எதுவும் அடிச்சி விட்றாதடா!" என்று முன்னெச்சரிக்கையாக நண்பனைக் கண்டித்து, அவனை, அமைதியாக இருக்கச் செய்தான் உற்சவன்.
கதிரவனுடைய கை தானாகவே வாசனைத் திரவியப் பாட்டிலை எடுத்தது.
"இப்போ தான் வேணாம்னு சொன்னேன்டா!" என்று அறைக்குள் ஓடத் தொடங்கினான் உற்சவன்.
அங்கே வந்து,"டேய் மகனே!" என்று அவனைப் பிடித்து நிறுத்தினார் திரிலோகன்.
"அப்பா! அவன் சென்ட் போட்டு விடத் துரத்துறான்!" என்று தங்கையிடம் கோள் மூட்டி விட்டான்.
"கதிரவா! என்னடா கலாட்டாப் பண்ணிட்டு இருக்கீங்க?" என்றார்.
"அவனுக்குச் சட்டை மணக்கும்னு தான் ப்பா!" என அவரிடம் அசடு வழிந்தான் கதிரவன்.
"அட இவனே!" என்று அவனிடம் சொன்னவர்,
"இப்போவே உனக்கு வியர்த்துப் போச்சு உற்சவா! ஹோமம் முன்னாடி உட்கார்ந்தால், இன்னும் வியர்க்கும்!" என்று தான் தோளில் சூடியிருந்த துண்டை எடுத்து மகனுடைய நெற்றியைத் துடைத்து விட்டார் திரிலோகன்.
"காத்தாடிக்குக் கீழே உட்கார வச்சுக் கூப்பிட்டு வர்றேன் ப்பா" என அவரை அனுப்பி வைத்தான் கதிரவன்.
"முந்தின நாள் லேட்டாக வந்ததுக்கு, இப்போ உனக்கு எல்லாத்தையும் நாங்க தான் பண்ணுவோம் ஜனா! நீ அமைதியாக இருக்கனும்" என்று தோழியிடம் கூறிய சத்தியவாணியும், உதயகலாவும் அவளுக்கான மேல் வேலைகளை மனதாரச் செய்தனர்.
"அதுக்குன்னு என் தங்கச்சியைக் கூட விட மாட்டீங்களா டி?" என்று தன்னுடைய தங்கை நளாயினிக்காக வக்காலத்து வாங்கினாள் ஜனார்த்தினி.
"அவளும் உன்னை மாதிரியே அழகா மேக்கப் போட்டிருக்கா,அதைக் கெடுக்க வேண்டாம்னு தான்" என்றாள் உதயகலா.
"நான் அத்தைக்கும், அம்மாவுக்கும் ஒத்தாசைப் பண்றேன்" எனக் கமலினியிடம் போனாள் நளாயினி.
"மஞ்சள் சேலையில் கறைப் படாமல் ஊட்டி விடுங்க" என்று அறிவுரை செய்தாள் சத்தியவாணி.
ஜனார்த்தினிக்கு உணவு ஊட்டி விட்டுக் கொண்டு இருப்பது காவேரியே தான்!
அப்படியென்றால்,கதிரவனுடைய கரத்தின் வழியாகத் தான், சாப்பாட்டை ருசி பார்த்தவன், வெள்ளை வேட்டியில் சிந்தாமல், கவனமாகக் கேசரியைக் கையிலெடுத்து, தவபாலனுக்கு ஊட்டினான் உற்சவன்.
"மந்திரத்தைச் சொல்ல விடுங்கோ!" என்று ஹோமம் வளர்த்துக் கொண்டே, மேடைக்குக் கீழே இருந்தவர்களிடம் அமைதியாகப் பேசுமாறு பணித்தார் ஐயர்.
"மருமகனே! சாப்பிட்டாச்சா? வேட்டியில் கொஞ்சூண்டு ஆரஞ்சுக் கலர் பட்டாலும் அவ்ளோ தான்!" எனக் கூறினார் லிங்கேசன்.
"இதோ முடியப் போகுது மாமா! கதிரவா! பாலனைப் பிடி" என்று அவனிடம் தவபாலனைத் தூக்கிக் கொடுத்து விட்டு,
மேடைக்கு வந்து,ஹோமத்தின் முன்னே அமர்ந்த உற்சவனிடம்,"மாலையைக் கழுத்தில் போட்டுக்கோங்கோ! நான் சொல்றதை அப்படியே சொல்லுங்கோ!" என்று கூறினார் ஐயர்.
அதை அவன் செய்யவும், ஐயருடைய அறிவிப்பிற்கு இணங்கி, இடது புறத்தில் நளாயினி இடம் பெற்றிருக்க, ஜனார்த்தினியின் பின்னால் வந்தனர் சத்தியவாணி மற்றும் உதயகலா.
மேடையில் ஏறுவதற்குள் அன்னை மற்றும் தந்தையிடம் வந்தவள், அவர்கள் ஒன்று சேர்ந்து நின்ற தருணத்தில், சடாரென்று காலில் விழுந்தாள் ஜனார்த்தினி.
"சந்தோஷத்துக்குக் குறையே வராது ஆத்தா!" என்று திகைப்பின் பிடியிலிருந்த லிங்கேசனும், கமலினியும் மகளுக்கு ஆசி வழங்கினார்கள்.
அவளது செழுமையானத் தோற்றத்தாலும், ஆசி வாங்கியப் பாங்காலும், உற்சவனுடைய மனதை ஊடுருவிச் சென்று உயிரில் கலந்து விட்டாள் ஜனார்த்தினி.
"நானும் இங்கே பொண்ணுப் பக்கத்தில் உட்காரலாமா ஐயா?" என்று அவரிடம் பவ்யமாக வினவினாள் நளாயினி.
"தாராளமாக இருக்கலாம். ஆனால், இடைஞ்சல் கொடுக்கக் கூடாது!" என்று அவளை ஜனார்த்தினியின் அருகில் அமர அனுமதித்தவர்,
"எல்லார்கிட்டயும் தாலியைக் காட்டி ஆசீர்வாதம் வாங்கிட்டு வாங்கோ!" என்று கூறினார் ஐயர்.
அந்தச் சமயம், லிங்கேசன், கமலினி மற்றும் விசாலாட்சியும், திரிலோகனும் மேடையேறினர்.
குடும்பங்கள், நட்புகள், சொந்தங்கள் இவர்களுடன், திரண்டு வந்திருந்த ஊர்மக்கள், வயலில் வேலை செய்யும் ஊழியர்கள் மற்றும் இதர மக்களின் முன்னிலையில், தனது கையில் அளித்த, அந்தப் பொன்னிறத் தாலியை அவளது வெண்ணிறக் கழுத்தில் கட்டித், தன் அத்தை மகளைத், தன்னுடைய காதல் மனைவியாக்கிக் கொண்டான் உற்சவன்.
"காவேரி ம்மா! நாத்தனார் முடிச்சுப் போடு" என்று அவளிடம் கூறினார் விசாலாட்சி.
உள்ளமும், முகமும், ஆனந்த மயமாகி, அவர் சொன்னதை நிறைவாகச் செய்து முடித்தாள் கதிரவனுடைய தர்மப் பத்தினி.
செஞ்சாந்து வர்ணமாகிப் போனத் தன் முகத்துடன், தன் நெற்றியில் உற்சவன் வைத்து விட்டக் குங்குமத்தை நாணத்துடன் ஏற்றுக் கொண்டாள் ஜனார்த்தினி.
- தொடரும்