Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 5 - அடியே நான் தவிர்க்க முடியா தடுமாற்றமே

Advertisement

Nilaprakash

Member
Member
பொழுது புலர்ந்தது அவர்களின் இனிய கனவுகளோடு . கார்த்திக் பல் துலக்கிய படியே சமையலறைக்குள் நுழைந்தான்.

" மா ..காபி "

" பல் விலக்கிட்டே வராத டா ..போய் வாய் கொப்பளிச்சிட்டு குளிச்சிட்டு வா "
" இது வீடா இல்லை வீடா னு கேட்கிறேன் சரியான மிலிட்டரி கேம்ப்.. மிலிட்டரி கூட குடும்பம் நடத்தி நடத்தி நீ மிலிட்டரி ஆபிஸர் ஆவே மாறிட்ட மா .. எதுக்கு எடுத்தாலும் ரூல்ஸ் .."

" இப்ப உனக்கு சோறு வேணுமா வேணாமா "

அன்னபூரணி கரண்டியை பிடித்து கேட்கவும் அவளை முறைத்து விட்டு குளிக்க சென்றான்.
ரூபா தன் கணவனின் காதில் ஏதோ சொல்ல அவன் குலுங்கி சிரித்து தன் தம்பியை நோக்கினான்.

" ஏண்டா மாட்டேன் மாட்டேன் னு சொல்லி உன் அண்ணிகளை எல்லாம் மாட்டி விட்டுட்டியாமே "

ரூபா தொடர்ந்தாள் " அதை ஏன் கேட்கிறீங்க.. பிடிச்சு இழுத்துட்டு வராத குறை தான்..பொண்ணை துழாவிட்டே மறுபடியும் வீட்டுக்குள்ளே போயிடுவான் போல "

வீணா சத்தமாக சிரித்தாள்.கார்த்திக் ஒரு கெஞ்சல் பார்வையுடன்



"ஏன் அண்ணி ஏன் ..ஐ அம் பாவம் “

அவன் தட்டில் தோசை இட்ட அன்னபூரணி அவன் காதை திருகினாள்.

“ அறுந்த வாலு எப்ப பார்த்தாலும் திருவேலை பண்ணிட்டே இரு “

வீணா தன் சின்ன மகனிடம் தோசை ஊட்டி விட்டு கேட்டாள்.

“ உன் சித்தப்பா நேத்து என்ன புலம்பிட்டு இருந்தார் ரூம் ல “

அவன் கார்த்திக் நடந்தது போல் நடந்து காண்பித்து

“ தூக்கம் வரல .... தூக்கம் வரல..ஏன்டி “

அவன் சொல்லி முடிப்பதற்குள் வாயை பொத்தி ‌‌..

“ குடும்பமா இது .. மிலிட்டரி கேம்ப் ..உளவு பார்க்ற வேலையில இருந்து எல்லாம் நடக்குது “

இதை கேட்டதும் அமர்ந்திருத்த அனைவரும் சத்தமாக சிரித்தனர்.அந்த சத்தம் கரிகாலன் காலடி சத்தம் கேட்டதும் அப்படியே அமைதியானது.

கரிகாலன் வந்து அமர்ந்ததும் அண்ணண்கள் இருவரும் சாப்பிட்டு விட்டு அமைதியாக எழுந்து சென்றனர்..

கார்த்திக் தன் தாயிடம் தோசை கேட்க திரும்ப கரிகாலன் பேசத் தொடங்கினார்.

“ நேத்து உன் அண்ணிங்க கிட்ட பேச சொன்னது நீ தானே “

“ இல்ல மாமா ..நாங்க தான் “

ரூபா பேச வாயெடுத்தவள் தன் மாமனாரின் கண்களை பார்த்து அமைதியானாள்.

“ ஆமா ..”

“ இங்க பாரு ..உன் அண்ணண்களாட்ட நான் சொன்ன எதையுமே நீ கேட்டதில்லை ..உன் படிப்பு வேலை எல்லாமே ..இப்ப இந்த கல்யாணம் ..”

“ எனக்கு பிடிச்சு தான் சரி ன்னேன் “

“ நான் கொடுத்த வாக்கை மீற மாட்டேன் .. மறுபடியும் ஏதாவது விளையாட்டு பண்ண ... உங்களுக்கு சேர்த்து தான் சொல்றேன் “

அன்னபூரணி மகனுக்கென பேச தொடங்கினாள்.

“ அதெல்லாம் ஒன்னும் செய்ய மாட்டான் .. நீங்க சாப்பிடுங்க “

அவர் சாப்பிட்டு விட்டு எழுந்து சென்றார்‌.வீணாவும் ரூபாவும் கார்த்திக் ஐ பார்த்தனர்.

“ வேற ஏதாவது ஹெல்ப் கொழுந்தனாரே .. ஃபோன் நம்பர் .. கீன் நம்பர் ஏதாவது “

“ நீங்க செஞ்ச வரைக்கும் போதும் “

கார்த்திக் கையெடுத்து கும்பிடவும் அவர்கள் சிரித்து விட்டு தங்கள் அறைக்கு சென்றனர்.

அவன் தன் அறைக்கு செல்ல எத்தனிக்கையில் அவனின் அலைபேசி சிணுங்கியது .

“ குரு ...என்ன குரு எப்படி இருக்கீங்க “

“ என்னடா மருமகனே நேத்து கூப்பிட்டு இருந்தியா”

“ ஆமா குரு .. எனக்கு உன்னை விட்டா யாரு இருக்கா குரு “

“ பீடிகை எல்லாம் பலமா இருக்கு .. என்னடா உங்க அப்பாகிட்ட என்ன பேசனும் “

அவன் படிப்பு வேலை என அனைத்திலும் தன் தகப்பனை தாண்டி தன் முடிவுகளை செயல்படுத்த அவனின் மிக பெரிய அஸ்திரம் அவனது தாய்மாமன் கருணாகரன்.

“ இல்ல குரு ..எனக்கு ஒரே குழப்பமா இருக்கு “

“ உன் அம்மா சொன்னா .. பொண்ணு பிடிக்கலையா ..கல்யாணத்தை நிறுத்திரலாமா “

“ ஐயோ அப்படி எல்லாம் இல்ல “

“ அப்பரம் என்ன தான்டா பிரச்சினை “

“ குரு ..என் ரிசர்ச் இப்ப தான் ஃபைனல் ஸ்டேஜ் ல இருக்கு .. இப்ப கல்யாணம் பண்ணி குடும்பம் இந்த டிஸ்ட்ராக்சன் என் இத்தனை வருச உழைப்பை வீணடிச்சிரும் “

“ அப்ப வேணாம் னு சொல்லிரு “

“ குரு .. உனக்கு அத்தை யை பார்த்ததும் மனசுக்குள்ள பெல் அடிச்சுருக்கும் ல ..எனக்கு அவளை பார்த்தது ல இருந்து பெல் ஒட சேர்த்து டிரம்ஸ் ம் அடிக்குது “

கருணாகரன் தன்னை மறந்து சிரித்தார்.

“ நான் வேணா .. எனக்கு பொண்ணை பிடிச்சு இருக்கு ஆனால் இப்ப கல்யாணம் வேணாம் னு சொல்லிடவா..ஒரு ரெண்டு வருஷம் கழிச்சு..மூணு வருஷம் கழிச்சு “

“ இதுக்கு பொண்ணோட அப்பன் ஒத்துக்கனும் அதுக்கு முதல உங்க அப்பன் ஒத்துக்கனும் ...என்ன நடக்கும் னு கொஞ்சம் யோசிச்சு பாரு “

கார்த்திக் கு ஒரு நிமிடம் அந்த காட்சி கற்பனையில் விரிந்தது .. மிலிட்டரி துப்பாக்கி யில் ..டூமில் டூமில்...

தன் கற்பனையை தலையை ஆட்டி நிறுத்த முயற்சித்தான்.

“ குரு என்னை காப்பாத்து குரு ..நான் என்ன தான் பண்ணட்டும் ..அவ வேணும் எனக்கு ..என் ரிசர்ச் ம் முடிக்கனும் “

“ இத பார்ரா..நீ லவ் பண்ற பொண்ணு னா கூட வெயிட் பண்ண சொல்லலாம் .. பொண்ணு பார்த்திட்டு வந்து ரெண்டு வருஷம் கழிச்சு கல்யாணம் னா கண்டிப்பா அந்த பொண்ணு ...”

“ கல்லாலே அடிக்கும் ‌...”

“ தெரிஞ்சா சரி “

“ இப்ப நான் என்ன தான் பண்றது “

“ பேசாம கல்யாணம் பண்ணிக்கோ ..அவ உனக்கு தான் ஆனதுக்கு அப்பரம் உன் ரிசர்ச் லட்சியம் எல்லாம் பேசி புரிய வை “

கார்த்திக் சந்தோசத்தில் கத்தினான்.

“ இதுக்கு தான் குரு உன்னை மாமா கூப்பிடாம குரு னு கூப்பிடறது “

“ இந்த வேலைக்கு நீ என்னை குரு னே கூப்பிட்றா "

கருணாகரனின் பதிலில் சப்தமிட்டு கண்களில் நீர் வர சிரித்தான் கார்த்திக். அவனது மகிழ்ச்சியான வசந்த நாட்களில் அதுவும் ஒன்று

தொடரும்
 
Last edited:
No,no,no oru para pottutu epi nu pongu aattam aadureengo. Naan othukave maatten. Katha vera interesting ah poguthu, ithu ellam kalla attam authore.
 
பொழுது புலர்ந்தது அவர்களின் இனிய கனவுகளோடு . கார்த்திக் பல் துலக்கிய படியே சமையலறைக்குள் நுழைந்தான்.

" மா ..காபி "

" பல் விலக்கிட்டே வராத டா ..போய் வாய் கொப்பளிச்சிட்டு குளிச்சிட்டு வா "
" இது வீடா இல்லை வீடா னு கேட்கிறேன் சரியான மிலிட்டரி கேம்ப்.. மிலிட்டரி கூட குடும்பம் நடத்தி நடத்தி நீ மிலிட்டரி ஆபிஸர் ஆவே மாறிட்ட மா .. எதுக்கு எடுத்தாலும் ரூல்ஸ் .."

" இப்ப உனக்கு சோறு வேணுமா வேணாமா "

அன்னபூரணி கரண்டியை பிடித்து கேட்கவும் அவளை முறைத்து விட்டு குளிக்க சென்றான்.

கார்த்திக் குளித்து முடித்து வருவதற்குள் டைனிங் ஹாலில் அவனது அண்ணன் கள் இருவரும் சாப்பிட அமர்ந்திருந்நனர்.


ரூபா தன் கணவனின் காதில் ஏதோ சொல்ல அவன் குலுங்கி சிரித்து தன் தம்பியை நோக்கினான்.

" ஏண்டா மாட்டேன் மாட்டேன் னு சொல்லி உன் அண்ணிகளை எல்லாம் மாட்டி விட்டுட்டியாமே "

ரூபா தொடர்ந்தாள்
No,no,no oru para pottutu epi nu pongu aattam aadureengo. Naan othukave maatten. Katha vera interesting ah poguthu, ithu ellam kalla attam authore.
[/QU
No,no,no oru para pottutu epi nu pongu aattam aadureengo. Naan othukave maatten. Katha vera interesting ah poguthu, ithu ellam kalla attam authore.
Leenu mam actual aa எழுத எழுத post ஆயிடுச்சு
 
Last edited:
நல்ல அண்ணிகள்
சின்னது சித்தப்பன
அழகா செஞ்சு கண்பிக்குது

குரு மாமா அருமை
 

Advertisement

Top