Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 6

Advertisement

TNWContestWriter080

Well-known member
Member
விழியாக நான் இமையாக நீ 6

வெண்ணிலாவின் தோழிகளிடம், அவள் இன்னும் வீடு வந்து சேரவில்லை என்று சொல்லி, அவர்களுக்கு, அவளைப் பற்றி ஏதேனும் தெரிய வந்ததா என்று கேட்டு , விசாரித்து வந்த சபாபதி, எங்குமே தனது மகளைப் பற்றிய ஒரு துணுக்குப் பதில் கூட , தங்களுக்கு சாதகமாகக் கிடைக்கவில்லை என்பதால், பேயறைந்தவரைப் போன்ற முக பாவனையுடன், வீடு வந்து சேர்ந்தார்.
வீட்டிற்குள் நுழைந்ததுமே அவர் கண்களில் பட்டது நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்த ரவிச்சந்திரனும், அவனது தாய் சுமதியும் தான். இருவரையும் கண்டதும் ஒரு கணம் அவருக்கு அதிர்ச்சியில் தூக்கி வாரிப் போட்டது.

" தம்பி, நான் தான் உங்களை வர வேண்டாம்னு சொன்னேனே !"

ரவி " சார் நீங்க முதலில் உட்காருங்க , மிருதுளா கொஞ்சம் தண்ணீ எடுத்துட்டு வா மா " என அவரை முதல்ல ஆசுவாசப்
படுத்தினான்.

தண்ணீர் பருகி சற்று ஆற்றுப்பட்டவர் கண்ணில் அழுது சோர்வுற்ற மனைவி பட மனம் கலங்கியது " பாருங்க தம்பி, படிப்பு , வேலைன்னு கிட்டத்தட்ட இருபத்தியைந்து வயசு வரைக்கும் என் பொண்ணு, நல்லபடியா கடந்து வந்துட்டா. ஆனா இப்போ இப்படி ... "

" நான் என்னிக்குமே நெனச்சுக் கூடப் பார்த்ததில்லையே ! எப்படி அவ காணாமப் போனா? இதுக்கு யாரு காரணம்? பொண்ணுங்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நாடுகள்ல நம்மளோட நாடும் ஒன்னுன்னு, டிவி சேனல்ல நியூஸ் வாசிக்கறதைக் கேட்டிருக்கேன். ஆனா , இப்ப என் வீட்லயே அது நடந்துடுச்சே! நான் இதைத் துளிக் கூட எதிர்பார்க்கலை தம்பி " என்று சொல்லி விட்டு வாய் விட்டு அழத் தொடங்கினார், அந்தத் தந்தை.
ரவிச்சந்திரனும் செய்வதறியாமல், அவரது கைகளைப் பற்றிக் கொண்டபடி, " சார் அழாதீங்க, இப்ப அழுது என்ன ஆகப் போகுது சொல்லுங்க. வாங்க நாம போலீஸ் ஸ்டேஷன் போய் ஒரு கம்பிளைண்ட் கொடுத்துட்டு வருவோம் " என்று சொன்னான்.
அப்போது அதுவரை அமைதியாக இருந்த மேனகா " என்னங்க, தம்பி ஒரு லெட்டரை என் கிட்ட காண்பிச்சாரு . அதைக் கொஞ்சம் நீங்களும் வாங்கிப் பாருங்களேன். அதில இருக்கற தகவலைப் படிச்சா இன்னும் கூட பகீர்னு இருக்குது. இப்படி எல்லாம் கூட ஹாஸ்பிட்டல்ல நடக்குமா? " என்று ,மிகவும் கம்மிய குரலில், சொன்னார்
அழுதழுது அவளது குரலே நீர்ச்சத்து துளியும் இல்லாது வற்றிப் போய் விட்டிருந்தது.
சபாபதி, ரவிச்சந்திரனைப் பார்க்க, ரவி , பிரீத்தா தன்னிடம் கொடுத்த கடிதத்தை அவரிடம் கொடுத்தான்.
இப்போது அவனது மனம், சற்று நிதானத்துக்கு வந்து விட்டிருந்தது.
அதனால், அவனது யோசனைகள் தடையற்ற வெள்ளமாகி அன்றைய நிகழ்வுகளை அசை போடத் தொடங்கியது.
' ம்ம், இந்த லெட்டரை மட்டும் ஆதாரமா வச்சி நாம ஷீபா மேடம் பத்தி ஸ்டேஷன்ல கம்பிளெயின்ட் பண்ண முடியாது. இருக்கட்டும், அந்த லெட்டர் நம்ம கிட்டயே இருக்கட்டும். இப்போதைக்கு, வெண்ணிலா காணோம்னு மட்டும் சொல்லிக் கம்பிளெயின்ட் பண்ணுவோம். அப்புறம், நாளைக்குத் திரும்பவும் ரோகிணி ஹாஸ்பிட்டல் போவோம். அங்கே, பிரீத்தா போல, பாதிக்கப்பட்ட பெண்கள் வேற யாராவது இருக்காங்களா என்னன்னு நாமளே தேடுவோம். ஆனா, இதுக்கு, சப்போர்ட் பண்ற மாதிரி, வேற யாராவது நமக்குத் துணைக்கு வேணுமே ' என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன் , கடிதத்திற்காக சபாபதியிடம் கையை நீட்டினான்.
" தம்பி, இந்த லெட்டர் உங்களுக்கு எப்படி கிடைச்சுது, வாடகைத்தாய், கரு முட்டைன்னு என்னன்னெவோ இருக்குதே. இப்படி எல்லாம் கூட நடக்குமா? கடவுளே, இது தெரிஞ்சிருந்தா, நான் என் பொண்ணைப் படிக்க வச்சிருக்கவே மாட்டேனே. வேலைக்கும் அனுப்பி இருக்க மாட்டேனே. பத்தொன்பது வயசிலேயே மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் பண்ணி வச்சிருப்பேனே நான். ஆனா , அவளோட , மானத்துக்கோ , உயிருக்கோ ஏதாவது ஆபத்து வந்திச்சின்னா அதுக்கப்புறம் நாங்க யாருமே உயிரோட இருக்க மாட்டோம் " என்று மேனகாவைத் தாண்டிய, தவிப்புடன் சபாபதி கதறத் தொடங்கினார்.
மிருதுளா, அவரை நெருங்கி வந்து, " அப்பா, அழாதீங்க அப்பா. அக்கா கிடைச்சிருவா அப்பா. கண்டிப்பா கிடைச்சிடுவா. மாமா, மாமா நீங்க முதல்ல போலீஸ் ஸ்டேஷன் போய் அக்காவைக் காணோம்னு சொல்லி ஒரு புகார் கொடுத்துட்டு வாங்க மாமா . பிளீஸ் மாமா. அக்கா ரொம்ப நல்ல பொண்ணு மாமா. அவளுக்கு ஏதாவது ஆகியிருந்தா, அதை மட்டும் எங்களால தாங்கிக்கவே முடியாது மாமா " என்று ரவியை நோக்கிக் கை கூப்பியவாறே, கூறினால்.
அவளது கையை பற்றிய சுமதி, " பாப்பா இதென்ன இப்படி அழுதுட்டு இருக்கே. இந்த நேரத்தில நீ தான் தைரியமா இருக்கணும், உங்க அம்மா, அப்பாவுக்கு ஆறுதல் சொல்லணும். இப்படி அழலாமா? என அவளின் கண்ணீரை துடைத்தவர் " சரி, சரி ,வாம்மா, யாரும் இன்னும் சாப்பிடலை தானே. வா, தோசை மாவு இருந்தா, எடுத்து வை , உங்கம்மா , அப்பாவை சாப்பிட வச்சிட்டு அதுக்கு அப்புறமா நான் கிளம்பிப் போறேன் " என்று, பேச்சின் திசையை மாற்றிட தன் வரையில் முயற்சி செய்தாள் சுமதி.
சபாபதியும், மேனகாவும் தலை கவிழ்ந்தபடி அமர்ந்து அழுது கொண்டே இருந்தனர்.
மிருதுளா பெற்றோரை பார்த்தவள் சுமதியை ஒரு பார்வை பார்த்து விட்டு சமையலறை நோக்கி சென்றாள்.

ரவிச்சந்திரன் , சுமதியை நோக்கித் தலையை அசைத்து விட்டுத் தனது காரில் ஏறி, அருகில் இருந்த காவல் நிலையத்தை நோக்கிச் சென்றான்.
???????

அழுதழுது, மீண்டும் மயக்கத்திற்குச் சென்று விட்டிருந்த வெண்ணிலா, கண் விழித்தபோது, அவளுக்கு அருகில் குழந்தையுடன், ஒரு முதிய பெண்மணி நின்று கொண்டிருப்பதைக் கண்டாள்.
ஆனால், அவளது கை கால்கள் இன்னமும் கட்டிலோடு தான் பிணைக்கப்பட்டு இருந்தன.
வெண்ணிலா மெல்லிய குரலில், " யார் நீங்க தயவு செய்து என் கட்டை அவிழ்த்து விடுங்க நான் ஓட மாட்டேன் . " என்று கத்தினாள்.
ஆனால், அந்தப் பெண்மணி, அவளைப் புன்னகையுடன் பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள். அவளுக்கு அருகில் நின்று கொண்டிருந்த குழந்தை, உடனே, " பாட்டி, இந்த பாப்பாவும் கண்ணு முழிச்சுட்டாங்களா. நான் போய் வாசு கிட்ட சொல்லிட்டு வர்றேன் " என்று மழலைக் குரலில் சொல்லி விட்டு அங்கிருந்து ஓடிச் சென்று விட்டாள்.
அந்தப் பெண்மணி, ' அப்பா இந்த கோலத்திலயும் மகாலெட்சுமி மாதிரி அழகா இருக்காளே இவ ! இந்த அழகைக் கண்டு தான் , இந்த வாசுப் பையன் மயங்கிட்டான் போல ' என்று எண்ணிக் கொண்டவாறே அவளை எழுப்பி, " அம்மாடி, நீ எழஞந்திருச்சிக் குளிச்சிட்டு வா. உனக்கு எந்த ஆபத்தும் இல்லைம்மா. நீ பாதுகாப்பான இடத்துல தான் இருக்கே. என்ன இந்தப் பய இப்படி அவசரப்பட்டு இருக்க வேணாம். நீ, போய்க் குளிச்சுட்டு, வந்து ஒரு வாய், சாப்பிடு." என்று, மெதுவாக அவளை எழுப்பி அமர வைத்தாள், அந்தப் பெண்மணி.
வெண்ணிலா, சுற்றுமுற்றும் பார்த்தாள். அறையில் அந்தப் பெண்மணியைத் தவிர வேறு யாரும் காணப்படவில்லை.
தப்பிச் செல்ல, இது தான் சரியான கட்டம் என்று தனக்குள் முடிவு செய்து கொண்டவள், " சரி நான் குளிக்கப் போறேன், ஆனா இந்தக் கட்டை எல்லாம் அவுத்து விடுங்க " என்றாள்.
அந்தப் பெண்மணி, வெண்ணிலாவின் கால்களைப் பிணைத்துக் கொண்டிருந்த, கயிற்றினைப் பிரித்தெடுக்கவென கட்டிலை நெருங்கிய போது, ' அவன் ' குரல் முரட்டுத்தனமாக ஒலித்தது.
விரைந்து வந்த அவன், " அம்மா, போம்மா வெளியே! எனக்குத் தெரியும் என்ன செய்யறதுன்னு. ஏய், சுஷ்மி நீயும் வெளியே, போ பாட்டி கூட " என்று தனது கைகளைப் பற்றியபடி நின்று கொண்டிருந்த, சிறுமியையும் அவளுடன் இணைத்து வெளியேற்றினான்.
" டேய், டேய். உன் வேகத்தை எல்லாம் இங்கே காட்டாதே. பாவம்டா அந்தப் பொண்ணு. ரொம்பவே பயந்து போய் இருக்கா. முதல்ல அவ மனசு சமாதானம் ஆகற மாதிரி, சாஃப்டா ஏதாவது பேசுடா " என்று சொன்னாள் அந்தத் தாய்.
" மாமா, மாமா நானும் இங்கேயே இருக்கேன் மாமா. இந்த ஆன்ட்டி ரொம்ப அழகா இருக்காங்க இல்லை. நான் அவங்க கூடயே இருக்கேன் " என்று சொன்னாள் அந்தச் சின்னப் பெண்.
இதனை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வெண்ணிலாவுக்குப் பெருங் குழப்பம் ஏற்பட்டது.
' இவன் யாரு, முகத்தை வேற மறைச்சிட்டு இருக்கான். இவன் கூட வந்த குழந்தை, யாரு. இந்தக் கிழவி இவனோட அம்மான்னு வச்சிக்கிட்டாலும், இந்தக் குட்டிப் பொண்ணு யாரு? இவனோட குழந்தைன்னா, எதுக்கு இவனை மாமான்னு கூப்பிடணும் ' என்று தனக்குள் எண்ணிக் கொண்டாள்.
தீவிரமான யோசனைகளில் ஆழ்ந்து விட்ட அவளது மனம், அவனது அருகாமையை உணரவில்லை.
அவன் , மெதுவாகக் கட்டிலை நெருங்கி வந்து, அவளது கால்களைப் பிணைத்துக் கொண்டிருந்த கயிற்றினை அவிழ்த்து விட்டான்.
சுதாரித்து எழுந்து கொண்ட வெண்ணிலா, " எதுக்காக என்னை நீ இங்கே கூட்டிட்டு வந்து கட்டிப் போட்டு வச்சுருக்கே. என்னை விட்டுடு பிளீஸ். நீயும் எல்லாரையும் போல ஒரு சராசரி மனுஷன் தான்னு உன்னோட அம்மாவைப் பார்க்கும் போது எனக்கு நல்லாவே தெரியுது. உனக்கு இருக்கிறதும் ஒரு பெண் குழந்தை தானே. அப்புறம் எதுக்காக என்னை, என்னோட விருப்பம் இல்லாம இப்படி கடத்திக் கூட்டிட்டு வந்து வச்சிருக்கே. என்னை விட்டுடு " என்று அவனிடம் கெஞ்சத் தொடங்கினாள் வெண்ணிலா.
அவள் பேசியதை அவன், காதுகளில் வாங்கிக் கொண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை.
" நீ, இப்ப நான் சொன்னதைச் செய்யலைன்னா, அப்புறம் என்னோட சராசரி முகத்தை உன் கிட்ட காட்ட மாட்டேன். எனக்கு இன்னொரு முகமும் இருக்கு அதைத் தான் நீ பார்க்க வேண்டியது இருக்கும் . ம் எழுந்திரு. சொல்றதைக் கேளு " என்று மிரட்டினான் ' அவன் '.
" ஏன், என்னை இப்படி டார்ச்சர் பண்ற? ச்சே நீ எல்லாம் அக்கா தங்கச்சி கூட பொறக்கலை " என்று வெண்ணிலா, அனைத்துப் பெண்களுக்குமான பாஷையில் அவனிடம் பேசினாள்.
" ஏய், எத்தனை தலைமுறைக்கு தான், இந்த வார்த்தையை நீங்க உபயோகப் படுத்தப் போறீங்கடீ . தங்கச்சி கூடப் பொறந்துதனால தான் , அவ பட்ட வேதனையை, அவ வாங்கின அடியை வேற எந்தப் பொண்ணுமே படக் கூடாதுன்னு நான் போராடிக்கிட்டு இருக்கேன் " என்று சொல்லியபடி அது வரையில் தனது முகத்தின், அரைப் பகுதியை மறைத்துக் கொண்டிருந்த, முகக் கவசத்தை விலக்கினான் 'அவன் '.
அவன் முகம் கண்ட மறு நொடியே, அதிர்ச்சியில் உறைந்து போனாள் வெண்ணிலா. ஒருவாறு, குரலை நாவிற்கு வருவித்துக் கொண்ட அவள் " நீயா? நீ.., நீங்க...நீ எதுக்காக என்னைக் கடத்தணும்? " என்று கேட்டாள் வெண்ணிலா.
( வரும் )

What a twist? ???
 
Top