Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் - 8

Advertisement

Dhanuja

Well-known member
Member
அத்தியாயம் – 8
தன்னால் தான் மாலாவிற்கு இந்த நிலை.தான் இல்லையென்றால் அவரது வாழ்வு சுபமென்று கிளம்பியாயிற்று ஆனால் பிள்ளையைக் கருத்தில் கொள்ளாமல் விட்டோமே என்று வருந்தியவள்.குழந்தையின் பசி வீரியம் அதன் அழுகையில் உணர தவித்துப் போனாள் .

“ஜோ… ஜோ…. பாப்பா அழுக கூடாது” என்று சமாதானம் செய்தவளுக்குக் கண்ணீர் முட்டி கொண்டு வந்தது.பொது வெளியாகப் பேருந்து இருக்கப் பால் கொடுக்கச் சங்கடம் கொண்டு அவள் அமர்ந்திருக்க அவள் கையில் இருந்து குழந்தையைப் பறித்துக் கொண்டு இறங்கினான் வஞ்சி கொண்டான் முகத்தில் அத்தனை கோபம் காட்டி.

அவனைப் பார்த்தது அதிர்ச்சியென்றால் தன்னுடைய குழந்தையைப் பறித்து சென்றது இன்னும் அதிர்ச்சியைக் கொடுக்கச் சிலையாக நின்றவள் "இந்தாம்மா பொண்ணு இறங்குரிய என்ன" என்று நடத்துனர் கத்தவே சுயம் பெற்று ஓடினாள் அவன் பின்னாள்.

“ஏங்க?... என்னது இது?.... குழந்தைய கொடுங்க நான் போறேன்” என்று கெஞ்சி கொண்டே அவன் பின்னே செல்ல அவன் நுழைந்தது உயர் ரக மருந்தகம் அங்கு எதற்கு என்று யோசிக்கும் முன்பே பால் புட்டி ஒன்று வாங்கியவன் பணம் செலுத்தி பெற்றுக் கொண்டு மீண்டும் நடக்க

“ஐயோ!” என்றானது

“இங்கன பாருங்க எதுக்கு இதெல்லாம்…. பாப்பாக்கு அந்தப் பால் சேராது அது புட்டில குடிச்சுப் பழக்கம் இல்லங்க” அவள் தான் தொண்டை கிழிய கத்தி கொண்டு அவன் பின்னே திரிந்தாள் அவனோ தனது செயலில் கவனமாக இருந்தான்.இந்த சில்வண்டும் அவனது கழுத்தை கட்டி கொண்டு தங்களது பின்னால் ஓடி வரும் தாயை வேடிக்கை பார்த்துதான் தான் வெகு சிறப்பு.

மீண்டும் அவன் சென்ற இடம் ஒரு நேர்த்தியான உணவகம் முதலில் ஒருவனைக் கூப்பிட்டு சுடு தண்ணீர் கொண்டு பால் புட்டியை அலம்பச் சொன்னவன் அதில் பசும் பால் சிறுது சர்க்கரை கொண்டு கலக்கி கொண்டு வர சொல்லி பணிந்தவன் மறந்தும் தன் முன் நிற்கும் வஞ்சியைப் பார்க்கவில்லை

அவன் நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்கி வஞ்சி நிற்க ஒரு பத்து நிமிடங்கள் கடந்த நிலையில் பால் கொண்டு வந்தவரிடம் காசை கொடுத்துவிட்டு மீண்டும் குழந்தையைத் தூக்கி கொண்டு நடக்க.தெய்வமே என்று அவன் பின்னே சென்றாள்.

அவனுடைய காரில் வந்து இருப்பான் போலும் கார்ரை திறந்து குழந்தையைப் படுக்க வைத்தவன் மீண்டும் கார்ரை எடுக்கத் தன்னை விட்டு குழந்தையைத் தூக்கி கொண்டு சென்று விடுவானோ என்ற பயத்தில் காரில் ஏறி அமர்ந்து கொள்ள,

அவள் ஏறி அமர்ந்த மறு நொடி கார் சீறிப் பாய்ந்தது வஞ்சி நடுங்கி கொண்டு அமர்ந்திருந்தாள்.குழந்தையைக் கையில் ஏந்தி அவளுக்குப் புட்டியை புகட்ட அதுவும் அங்கு இங்கென்று ஆடி தடுமாறி கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்தது.
************************
கார் மாலா இருக்கும் தெருவில் நுழைய கிட்டத்தட்ட தெரு மக்கள் அனைவரும் கூடி இருந்தனர்.அனைவரும் சல சலக்க அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் மாலா திணறிக் கொண்டு இருந்தாள்.

கார் சற்று நெருங்கி வர சல சலப்பு குறைந்து அனைவரும் முணு முணுக்க ஆரம்பித்து விட்டனர்.வஞ்சி கொண்டான் இறங்கி பின் கதவை திறந்து குழந்தையைத் தூக்கி கொள்ள வஞ்சி தயங்கியவரே இறங்கினாள் இருவரையும் பார்த்து மாலா அதிர்ந்து நிற்க பக்கத்துக்கு வீட்டு சாந்தி

“அக்கா பார்த்தீங்களா இந்தக் கூத்த நீங்க தான் சப்போர்ட் வாங்குனீங்க பாருங்க இதுங்க லட்சணத்த இங்க நாங்க மானமா பொழைக்க வேண்டாமா?முதல இடத்தைக் காலி பண்ண சொல்லுங்க” என்று காட்டு காத்தல் கத்த

“இரு சாந்தி என்னானு விசாரிப்போம்” என்ற மல்லி அக்கா பேச்சை தொடங்க மாலா வஞ்சியிடம் விரைந்து வந்தவள் ஓங்கி அறைந்திருந்தாள் கண்ணில் கண்ணீர் மல்க அவரைப் பார்க்க அவளுக்கும் மட்டும் கேட்கும் குரலில் “இந்தக் கடன்காரன் கூட உனக்கு என்னடி வேலை எங்க போன நீ?”

“இல்லக்கா” என்றவள் நடந்ததைச் சொல்ல அவருக்கு அப்படி ஒரு கோவம்

“இது என்ன சினிமா கதைனு நினைச்சியா தனியா போய் பெரிய ஆள ஆக நாப்பது குடும்பம் வாழுற ஊருல தனுச்சு வாழ முடியாம வந்தவ… நாலு லட்சம் உள்ள ஊருல தனியா வாழ்ந்துடுவியா?............. முட்டாள்… முட்டாள்… பார் இப்போ நீ சொன்னதை நான் நம்புவேன் இதுங்க நம்புமா” என்று சுற்றி நிற்கும் கூட்டத்தைக் காட்டி கேட்க என்ன பதில் சொல்லுவாள் அரிவை பெண்.

“மாலா அங்க என்ன பேச்சு இப்போ பதில் சொல்லு அந்தப் பொண்ணுக்கு ஏத்துக்கிட்டு எங்ககிட்ட சண்டை கட்டுன்ன… இப்போ இதுக்கு என்ன பதில்” என்று இருவரையும் சுட்டி காட்டி கேட்க என்ன சொல்வாள் சொன்னாலும் அதைக் காது கொடுத்து இங்கு யார் கேட்பது அப்படியே கேட்டாலும் அதனை சரியாக யார் புரிந்து கொள்வது..

“அக்கா அவகிட்ட என்ன நடந்ததுன்னு விசாரிக்காம பேசுறது ரொம்பத் தப்புக்கா”

“இன்னும் நீ என்ன விசாரிக்கணும்” என்று வந்து நின்றார் மல்லியின் கணவன் மாலா வீட்டின் உரிமையாளர் "இங்க பார்மா மாலா உன்ன பல வருசமா தெரியும் அது தான் அமைதியா பேசிகிட்டு இருக்கேன் இன்னும் ஒரு மணி நேரம் தரேன் வீட்டை காலி பண்ணி கொடுத்துட்டு உன் பணத்தை வாங்கிட்டுக் கிளம்பு” என்று சொன்னவர் நிற்காமல் சென்று விட்டார்

அவர் சென்றதும் அருகில் வந்த மல்லி “மாலா இனி நான் எதுவும் செய்ய முடியாது அவரைப் பத்தி உனக்குத் தெரியும் அந்த மனுசனுக்குக் கோபம் வந்தா வச்சு பார்க்க மாட்டார்..... தலைப்பாடா அடிச்சுகிட்டேன் அந்தப் பொண்ண விரட்டி விடுன்னு கேட்டியா இப்போ நீ தான் நடுத் தெருவுல நிக்கிற அஞ்சாத, கலங்காதனு சொல்ல நாதி இருக்கா என்ன போ” என்றவரும் செல்ல

கூடி இருந்த மக்கள் கலைந்து சென்றனர் நடப்பதை அறிந்தாலும் கல்லு பிள்ளையார் என்ற நிலையில் குழந்தையை வைத்துக் கொண்டு திண்ணையில் அமர்ந்திருந்தான் வஞ்சி கொண்டான்.

“இங்கன எம்புட்டு ரகள நடக்குது சவுடால உட்காந்து வேடிக்கை பார்குறதை பார் நான் பாட்டுக்கு எங்கனயாவது போய் இருப்பேன் சா” என்றவள் கைகளைப் பிசைந்து கொண்டு நிற்க

நடந்த கலகத்தைச் சரசு மூலம் அறிந்த உடையவன் பதறிக் கொண்டு வந்தவன் தனது அண்ணனை நெருங்கி “என்ன பண்ணி வச்சு இருக்க” சிறு குரலில் வஞ்சி கொண்டானை கடிய

“நல்லது தான் பண்ணுனேன்”

“எது நல்லது அந்தப் பொண்ண எல்லாரும் தப்பா பேசுறதா”

“ப்ச்… இப்போ என்ன டா நான் தான் வீட்டுக்கு வான்னு சொன்னேன் அவ கேட்காம பானுவை கொடுத்துட்டு போய்ட்டா நானும் பின்னாடியே போய்க் கூட்டிட்டு வந்தேன் இதுல என்ன இருக்கு”வஞ்சியிடம் வெகு நாட்கள் பழகி பேசியவன் போல் பேச்சில் உரிமை கொடி கட்டி பறக்க மாலாவிற்கு அப்படி ஒரு கோபம் வஞ்சியோ எதையும் உணரும் நிலையில் இல்லை

“இதுல ஓராயிரம் இருக்கு உனக்குத் தான் புரியல பாரு உன்னால இரண்டு பேரும் வீடு இல்லாம இருக்காங்க இப்போ என்ன செய்யப் போற”

“நம்ப வீடு எதுக்கு இருக்கு”

வஞ்சி கொண்டான் பேச்சில் மாலாவிற்குக் கோபம் எல்லையை கடக்க “என்ன பெரிய தம்பி பேசுறீங்க நாங்க எப்படி உங்க வீட்டுல தங்குறது”

“அக்கா வீட்டுல தங்கி வேலை செய்றவங்க இல்லையா… நீங்க இரண்டு பெரும் நான் சொல்லும் போதே வந்து இருந்தா இதெல்லாம் தேவையே இல்ல”
“ஐயோ தம்பி உங்களுக்குப் புரிய மாட்டேங்குது” முதலில் இருந்து தொடங்கியவனை என்ன செய்ய

“சரி எனக்குப் புரிய வேணாம் ஆனா வாங்க வீட்டுக்குப் போகலாம்”

அடேய் சண்டாளா முடியல உன்னோட என்று எண்ணிய மாலா ஒரு முடிவுடன் உடையவனை நோக்கி “தம்பி உடனே எதாவது வீடு பார்த்து கொடுங்க பொழுது சாயிரத்துக்குள்ள”

“சரிக்கா” என்றவன் செல்ல

வஞ்சி கொண்டான் “அப்போ அங்க வர மாட்டீங்க”

“இல்லை” என்பது போல் தலை ஆட்ட அவர்களது பதிலில் கோபம் கொண்டவன் வஞ்சியின் குழந்தையைத் தோளில் போட்டு கொண்டு தனது வீட்டை நோக்கி நடக்க “இவனை……” என்று உடையவன் பின்னே செல்ல

வஞ்சியும் மாலாவும் உடையவன் பின்னே ஓடினர் “என்னடி இவன் இந்த அராஜகம் பண்ணுறான்”

“அக்கா!…. பாப்பா!....”

“பேசாத நீ… இத்தனைக்கும் காரணம் நீ மட்டும் தான்” என்றவள் வீட்டுக்குள் நுழைந்து கொண்டே “பெரிய தம்பி கொஞ்சம் நில்லுங்க நான் சொல்லுறதை கொஞ்சம் கேளுங்க”

“உங்களுக்கு வீடு வரும் ஆனா வஞ்சி இங்க தான் இருப்பா” வஞ்சி கொண்டான் உறுதியாகச் சொல்ல

“வேலைக்காரியா நான் அவளை அனுப்ப முடியாது” அவனை விட உறுதியாக மறுத்தார் மாலா

அவரது பேச்சில் சிறுது நிதானித்தவன் ஒரு புன் முறுவலுடன் “அப்போ உரிமையா இருக்க வச்சுடலாம்” என்று சொல்லி செல்ல

அவனது பேச்சு சில நொடிகள் சென்று பிடிபட இரு பெண்களுக்கும் நெஞ்சே வெடித்து விடும் போல் ஆனது மாலா ‘ஆங்’ என்று விழித்து நிற்க

அக்கா!... என்று அழுதே விட்டாள் வஞ்சி

உடையவனுக்கு வஞ்சி கொண்டான் பேசியது மகிழ்ச்சி என்றாலும் ஒரு பெண்ணை வற்புறுத்தி திருமணம் செய்ய மனம் ஒப்பவில்லை.முதலில் அந்தப் பெண் வாழ்க்கையை ஏற்க பழகட்டும் பிறகு பார்க்கலாம் என்று எண்ணியவன் "மாலாக்கா மது ரூமுக்குப் போய்க் கொஞ்சம் ஓய்வெடுங்க நான் கடைக்குப் போயிட்டு வரேன் பேசிக்கலாம் இப்போ என்ன பேசுனாலும் சரிவராது"

அவனது பேச்சில் தெளியாமல் “தம்பி....” என்று மாலா பேச வர

“நீங்க சங்கடப்படுற மாதிரி எதுவும் நடக்காது நான் இருக்கேன்.இதுவரை நடந்ததுக்கு மன்னிச்சுக்கோங்க” என்றவன் இரு கைகள் கூப்பி நிற்க கையறு நிலையில் மாலா

மாலா வஞ்சியின் தோற்றம் அவனையும் வருந்த செய்ய வஞ்சி கொண்டானை பார்த்து பேச முடிவு செய்து அவனது அறைக்குச் செல்ல போகும் அவனை கண்ணில் நீர் வழிய பார்த்திருந்த வஞ்சியின் கைகளை பற்றி இழுத்துக் கொண்டு மதுவின் அறைக்குச் சென்றாள்.

உண்ண மறந்து மாலை வரை வாய் போர் செய்து கொண்டு இருந்த நால்வரும் துளசியின் குரலில் தான் அடித்துப் பிடித்து ஓடி வந்தனர்.

என்னமோ ஏதோவென்று வந்தவர்கள் பார்த்தது நடுக் கூடத்தில் அமர்ந்திருக்கும் தங்களது தாய் மாமன் குடும்பத்தைத் தான் இளம் பெண் ஒருவள் பானுவை ஏந்தி நிற்க அறுபதை தொடும் நிலையில் ஒரு பெண்மணியும் அறுபதை கடந்த நிலையில் ஒரு பெரியவரும் அமர்ந்திருந்தனர்.
 
என்ன செய்ய போறானோ
வஞ்சி கொண்டான்

கல்யாணமா?
 
Top