Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனிதாவின் அப்பா 18 2

Advertisement

Admin

Admin
Member

“என்ன ஆச்சு மீனா ஏன் அழற?”



“நீங்க எப்படி அத்தை இப்படி இருக்கீங்க? உங்களைப் பார்த்தா எனக்கு ஆச்சர்யமா இருக்கு.... குழந்தையோட இருக்கிற பெண்ணைத் தன் மகனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க எந்த அம்மாவும் விரும்பமாட்டாங்க.”

“நீங்க எங்களுக்குக் கல்யாணமும் பண்ணி வச்சு.... நாம வாழ்க்கை கொடுத்த பொண்ணு தானேன்னு நினைக்காம... ஒவ்வொரு விஷயத்திலேயும் என்னோட விருப்பத்துக்கும் மதிப்பு தர்றீங்க.”

மீனாவின் கேள்விக்கு வைஷ்ணவி பொறுமையாகப் பதில் அளித்தார்.

“நான் தடுத்திருந்தாலும் உங்க கல்யாணம் நடந்திருக்கும். என்ன கொஞ்ச நாள் வேணா ஆகி இருக்கும். அவ்வளவு தான். நான் எப்பவும் எந்த விஷயத்திலேயும் நல்லதை தான் பார்ப்பேன். வீணா உன்னை வதச்சு, ஹரியை வதச்சு.... எல்லோருக்கும் ஏன் மனகஷ்ட்டத்தைக் கொடுக்கணும்.”

“எவ்வளவு நாள் இருப்பமோ தெரியாது. இருக்கிற வரை நாமும் சந்தோஷமா இருந்திட்டு, மத்தவங்களையும் சந்தோஷமா வச்சிப்போம். அவ்வளவு தான் என் பாலிசி.” வைஷணவி பேசப் பேச மீனா அழுதே விட்டாள்.

“இன்னைக்கு என்ன டா ஆச்சு இவளுக்கு?” வைஷ்ணவி அங்கிருந்த ஹரியை பார்த்து கேட்க....

“அவ கொஞ்சம் லூசு ஆகிட்டா மா... வேற ஒன்னும் இல்லை.... இன்னைக்குக் காலையில இருந்து இப்படித்தான் இருக்கா...” என்றான் அவன்.

“உன்னோட சேர்ந்துட்டா இல்ல.... அதனால இருக்குமோ...” வைஷ்ணவி தன் மகனை வார....

“உங்களுக்கு என்னை வம்பு இழுக்கலைன்னா தூக்கம் வராதே..... நீங்க கிளம்புங்க, நான் அவளைப் பார்த்துகிறேன்.” ஹரி சொல்ல... வைஷ்ணவி புன்னகையுடன் அங்கிருந்து சென்றார். அவர்கள் பேசியது மீனாவுக்கும் சிரிப்பை வரவழைத்தது.

“நானும் உங்க அப்பாவும் வெளிய சுத்தி ரொம்ப நாள் ஆச்சு. அதனால நைட் வெளியே சாப்டிட்டு தான் வருவோம்.” போற போக்கில் வைஷ்ணவி சொல்ல....

“ம்ம்... என்ஜாய்... என்ஜாய்....” என ஹரி அவரைக் கேலி செய்தான்.

மாலை நான்கு மணி போல் காபி குடித்து விட்டு வைஷ்ணவியும் வெங்கட்டும் கிளம்பி செல்ல... அனி அவர்கள் செல்வதை ஆசையுடன் பார்க்க... அதைக் கவனித்த ஹரி “நாமும் வெளியே போகலாமா...” என்றதும், அவள் சந்தோஷத்தில் குதிக்க... “நீயும் அம்மாவும் கிளம்புங்க. நாமும் நைட் வெளிய சாப்டிட்டு வரலாம்.” என்றான்.

ஹரி அவர்களை அழைத்துக்கொண்டு முதலில் தங்கள் ஷோரூம் சென்றான். மீனா இன்று தான் முதல் தடவையாக ஷோரூம் வருகிறாள்.

ஒருகையில் மகளைத் தூக்கிக்கொண்டு, மறுகையால் மீனாவை தோளோடு சேர்த்து அனைத்து ஹரி நடந்து வரும் போதே... அங்கிருந்த ஊழியர்களுக்கு அவள் யார் என்று புரிந்து விட்டது.

வரவேற்பில் இருந்த பெண்கள் அவளைப் புன்னகையுடன் வரவேற்க... அதற்குள் அவள் வந்தது மற்ற ஊழியர்களுக்கும் தெரிய வர... எல்லோரும் அவளிடம் வந்து ஆவலாகப் பேசிவிட்டு சென்றனர்.

அனியை அங்கிருந்த பெண் ஊழியரிடம் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, ஹரியே மீனாவுக்கு முழு இடத்தையும் சுற்றிக் காட்டினான். அனி அங்கிருந்த ஒவ்வொரு வண்டியிலும் ஏறி இறங்கி விளையாடிக் கொண்டு இருந்தாள்.

முழுவதும் சற்றிப் பார்த்ததும், மீனாவை தனது அறைக்குள் அழைத்துச் சென்ற ஹரி “இங்க உட்கார்ந்துக்கோ.... கொஞ்ச வேலை இருக்கு முடிச்சிட்டு வரேன்.” என்றவன், அவளைத் தன் இருக்கையில் உட்கார சொல்ல... மீனா அங்கே உட்கார தயங்கினாள்.

அவளின் தோளைப் பற்றி அழுத்தி உட்கார வைத்தவன், அவள் எதிரில் சென்று அமர்ந்து கொண்டு வேலை பார்க்க ஆரம்பித்தான். மீனா அவனையே விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அப்போது அனுமதி கேட்டுக்கொண்டு உள்ளே நுழைந்த பெண் ஊழியர் ஒருவர், இன்று புதிதாக வந்த வாகனங்களின் கணக்கு வழக்குகளைச் சொல்ல.... அதை ஹரி முகத்தில் முறுவலுடன் கேட்டுக்கொண்டு இருந்தான்.

அந்தப் பெண் சென்றதும் ஹரியை பார்த்து முறைத்த மீனா “உங்களுக்கு அந்தப் பெண்ணைப் பார்த்து அப்படி என்ன சிரிப்பு?” எனக் கேட்க... அவளின் பொறாமை ஹரியின் புன்னகையை மேலும் அதிகமாகியது.



“ஹே... நான் அந்தப் பொண்ணைப் பார்த்து சிரிக்கலை... உன்னைப் பார்த்து தான் சிரிச்சேன். நீ ஏன் என்னை அப்படிப் பார்த்திட்டு இருந்த? வீட்ல உன் பக்கத்தில இருக்கும் போது இப்படிப் பார்த்து வைக்க வேண்டியது தான....” ஹரி சொல்ல...

அந்த அறையில் இருந்து வெளியே சென்ற பெண்ணும் அதைத் தான் நினைத்துக்கொண்டு சென்றாள். என்ன அதிசயம் இன்னைக்குப் பாஸ் முகத்தில இவ்வளவு சிரிப்பு. பொண்டாட்டி பக்கத்தில இருக்கிறதுனால இருக்கும். இல்லைன்னா எப்பவும் உர்ருன்னு தான இருப்பார்.

ஹரி சொன்னதைக் கேட்டு மீனாவுக்கு வெட்கமாகப் போய்விட்டது. எப்போதும் எதாவது செய்து இவனிடம் மாட்டிக்கொள்கிறோம் என நினைத்தவள் “நான் அனி என்ன செய்றான்னு போய்ப் பார்க்கிறேன்.” எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து செல்ல... ஹரி அவளையே முகத்தில் முறுவலுடன் பார்த்துக்கொண்டு இருந்தான்.

சிறிது நேரத்தில் வந்த ஹரி மீனாவையும் அனியையும் அழைக்க.... அவர்கள் வந்த போது புதுப் பைக் ஒன்றுக்கு பூஜை நடந்து கொண்டு இருந்தது. யார் வாங்கினது என்பது போல் மீனா பார்க்க.... பூஜாரி சாவியை மீனாவிடம் கொடுத்தார்.

பூஜை முடிந்ததும் அனியிடம் இனிப்புகளைக் கொடுத்து ஹரி எல்லோருக்கும் கொடுக்கச் சொன்னான்.

“யாரும் பைக் வாங்கலைன்னா... நீங்களே வாங்கிடுவீங்களா....” மீனா கிண்டலாகக் கேட்க...

“இது எனக்கு இல்லை உனக்கு... நீ தான் ஓட்டப் போற....” ஹரி சொன்னதும், “நானா....” என மீனா பதட்டமாகி விட்டாள். அவள் பதட்டத்தை ரசித்தபடியே ஹரி அங்கிருந்து சென்றான்.

ஏழு மணி போல் கடையில் இருந்து கிளம்பினர். நல்ல வேலை ஹரி தான் வண்டியை எடுத்தான். முதலில் கோவில் சென்றுவிட்டு... அடுத்து ஓட்டல் சென்றனர்.

திரும்ப வரும் போது இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆகி விட்டது. வைஷ்ணவியிடம் வீட்டின் இன்னொரு சாவி இருந்ததால்.... நிதானமாகத் தான் வந்தனர்.

பெரிய சாலையில் இருந்து கிளை சாலைக்குள் வந்ததும், ஹரி வண்டியை ஓரமாக நிறுத்த.... மீனா ஏன் என்று புரியாமல் பார்க்க.... முன்புறம் இருந்த அனியை இறக்கி விட்ட ஹரி “நீ பின்னாடி உட்காரு டா.... அம்மாவை வண்டி ஓட்ட சொல்வோம்.” என்றதும்,

அனிக்கு ஒரே சந்தோஷம். “ஹை... அம்மா வண்டி ஓட்டப்போறாங்க.” என அவள் துள்ளி குதித்துச் செல்ல... கீழே இறங்கி நின்ற மீனா ஹரியை முறைத்தாள்.

“ஏறு... ஏறு...” என்ற ஹரி மீனாவை இழுத்து முன்புறம் உட்கார வைக்க... பின்னால் ஏறிய அனி, வண்டியில் நின்று கொண்டு ஹரியின் கழுத்தை கட்டிக்கொண்டாள்.

மகளைத் திரும்பி பார்த்த மீனா “யாரவது பார்த்தா நம்மைத் தெருவுல வித்தை காட்ற குடும்பம்னு நினைக்கப் போறாங்க.” என்றதற்கு,
“அதெல்லாம் ஒன்னும் நினைக்க மாட்டாங்க. நீ தெருவை பார்த்து வண்டியை ஒட்டு...” என்ற ஹரி வண்டியில் இருந்து கையை எடுத்து விட.... மீனா பயந்தே விட்டாள்.

“என்னை முதல்ல இறக்கி விடுங்க.” அவள் கத்த....

“கத்தாத டி.... நானே ஓட்றேன்.” என ஹரி வண்டியை எடுக்க.... அதன்பிறகு தான் மீனா அமைதியானாள்.

“இது சீட்டிங்...” அனி சொல்ல...

“இரு உனக்கு வீட்ல போய் வச்சுகிறேன். குடும்பத்தோட தெருவில விழ வழி பார்க்குறியா நீ...” மீனா திட்ட...

“அப்ப அம்மா அன்னைக்கு வண்டி ஓட்டலையா பா....சும்மா உட்கார்ந்திட்டு தான் வந்தாங்களா....” அனி சோகமாகக் கேட்டதும், ஹரி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு ஆமாம் என்று தலையசைக்க.... மீனா திரும்பி இருவரையும் முறைத்தாள்.

“உங்களுக்கு வண்டி கூட ஓட்ட தெரியாதா மா...” அனி மீனாவை விடுவதாக இல்லை....

“நீங்க முதல்ல வண்டியை நிறுத்துங்க. அவளுக்கு ரெண்டு போட்டாத்தான் அடங்குவா....” மீனா வண்டியில் இருந்து இறங்க பார்க்க.... அவளை அடக்கி உட்கார வைத்த ஹரி கட்டுபடுத்த முடியாமல் வாய்விட்டுச் சிரித்தான்.

அவன் இவ்வளவு சந்தோஷமாகச் சிரித்து எல்லாம் ரொம்ப நாட்கள் ஆகி விட்டது. வீட்டு வாயிலில் இருவரையும் இறக்கி விட்டவன், உள்ளே செல்ல திரும்பியவர்களைத் தடுத்து, இருவரின் கன்னத்திலும் முத்தம் வைத்து “தேங்க்ஸ்....” என மனமார சொன்னான்.

 
:love: :love: :love:

வைஷ்ணவி அம்மா நீங்க score பண்ணிகிட்டே இருக்கீங்க சூப்பர் ...

ஹரி, நீ மீனாவுக்காக புதிய பைக்கே வாங்கிட்டியா??? சூப்பர் போ...

புது வீடு...
புது பைக்...
புது பொண்டாட்டி,...
நடத்து ராசா நடத்து...
 
Last edited:
வைஷும்மா சூப்பர்
உங்க பையனும் மருமகளும்தான் எங்கேயும் போக மாட்டாங்க
நீங்களாவது வெங்கட் மாமாவுடன் கிளம்பினீங்களே
 
Last edited:
Top