Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனிதாவின் அப்பா 20 2

Advertisement

Admin

Admin
Member


“நானும் இவரும் தான் காலையில குளிச்சோம். இன்னும் பசங்க குளிக்கலை.... இவங்களைக் குளிக்க வைக்கணுமா... எனக்கு ரொம்ப அலுப்பா இருக்கே...” என்ற ஹரிணியிடம்



“நீங்களும் அண்ணாவும் ரெஸ்ட் எடுங்க.... நானும் இவரும் குழந்தைகளைப் பார்த்துக்கிறோம்.” என்ற மீனா ஹரிணியிடம் அத்வி மற்றும் பிரசாத்தின் உடைகளை வாங்கிக் கொண்டாள்.



அத்வியும் அனியும் இன்னும் கொஞ்ச நேரம் கடலில் விளையாட வேண்டும் என்றதும், ஹரி அவர்களை அழைத்துக்கொண்டு கடலை நோக்கி செல்ல...



“டிரெஸ்ஸை நனைக்காம விளையாடுங்க.” என மீனா எச்சரித்து அனுப்பியவள், சின்ன ஹரியுடன் தங்கள் அறைக்கு வந்து அவனைக் குளிக்க வைத்தாள்.



அவனைக் குளிக்க வைப்பது பெறும் பாடாக இருந்தது. அவள் எதை எடுத்தாலும் அதைப் பிடிங்கி கொள்வான். மக், சோப் என எதை எடுத்தாலும் வாங்கிக் கொள்வான். அவனைக் கஷ்ட்டப்பட்டுக் குளிக்க வைத்தவளுக்கு உடைகளைப் போட்டு விடுவது இன்னும் சிரமாக இருந்தது.



ஒருபக்கம் போட்டு முடிப்பதற்குள் மறுபக்கம் கழட்டி விடுவான். அனியோடு அவளுக்கு இந்தச் சிரமமெல்லாம் இருந்தது இல்லை.... எப்படியோ உடைகளைப் போட்டு முடித்தவள், அவனைத் தூக்கி கொஞ்ச.... அந்த நொடி இது மாதிரி ஒரு மகன் தனக்கும் வேண்டும் என்று தோன்றியது.



அத்வியும் அனியும் வந்ததும் அவர்கள் இருவருமே சேர்ந்து குளிக்கச் சென்றனர். அவர்கள் குளித்து விட்டு வந்ததும், மீனா அவர்களுக்கு உடைகளை எடுத்துக்கொடுக்க.... அவர்களே போட்டுக் கொண்டனர். அவர்களுக்குத் தலை வாரி விட்டவள், உடைகளை எடுத்துப் பையில் அடுக்கினாள். சின்ன ஹரியை பெரிய ஹரி வைத்துக்கொண்டு இருந்தான்.



அவள் எல்லாவற்றையும் எடுத்து வைக்க... அந்த நேரம் சரியாக விக்ரமும் ஹரியை செல்லில் அழைத்து விட்டான். ஈர உடைகளைத் தனியாக ஒரு பையில் எடுத்துக்கொண்டு.... அடுத்தப் பத்து நிமிடத்தில் அறையைக் காலி செய்துவிட்டுக் காரில் இருந்தனர். அங்கிருந்து நேராக விக்ரமின் சூப்பர் மார்க்கெட் சென்றனர்.



விக்ரம் அவர்களை வரவேற்று அழைத்துச் சென்றான். “உனக்கு என்னென்ன வேணுமோ எடுத்துக்கோ....” விக்ரம் அனியிடம் சொல்ல.... “எனக்கும் பா....” என்ற அத்வி அனியை அழைத்துக்கொண்டு சென்றாள்.



மீனாவுக்கு ஹரிணி கடையைச் சுற்றிக்காட்டினாள். விக்ரம் கடைக்குள் நுழைந்த நொடி அவனை வேலைகள் சூழ்ந்து கொள்ள.... அவன் பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தான். அந்தக்கடையில் அந்தளவுக்கு வியாபாரம் நடந்தது.



அவர்கள் எடுத்து வந்த பொருட்களுக்கு அத்வியே பில் போட... அதை அனி ஆர்வமாகப் பார்த்திருந்தவள் ஹரியிடம் “அப்பா, நீங்களும் இந்தக் கடை வைங்களேன் பா... ரொம்ப ஜாலியா இருக்கும்....” என்றதும், எல்லோரும் சிரித்துவிட்டனர்.



அவள் அப்பாவின் கடையில் பைக் தானே இருக்கிறது. இங்கே இருப்பது போல் விதவிதமான சாக்லேட், பிஸ்கட், ஐஸ்கிரீம் என இருந்தால் அவளுக்குக் குஷி தானே.... காரில் செல்வதால் நிறையத் தின்பண்டங்களை எடுத்துக்கொண்டனர். விக்ரம் எல்லோருக்கும் பழரசம் தருவித்துக்கொடுக்க... அதைக் குடித்ததும் பெங்களூர் கிளம்பிவிட்டனர். குழந்தைகளுக்கு மட்டும் வீட்டில் இருந்து உணவு வந்திருந்தது அதையும் எடுத்துக் கொண்டனர்.



ஹரிணி குழந்தைகளை அழைத்துக்கொண்டு பெங்களூர் செல்வதால்... விக்ரம் தன் மனைவியுடன் தனியே பேசிக்கொண்டு இருந்தான்.

“நீங்க எங்களைக் கூப்பிட வரும் போது... கண்டிப்பா ரெண்டு நாளாவது அங்க இருக்கிற மாதிரி வரணும்.” ஹரிணி சொல்ல.... “சரி.... நீயும் குழந்தைகளும் பத்திரமா இருங்க...” என விக்ரம் அவளை வழி அனுப்பினான்.



வைஷ்ணவிக்கு எதாவது வாங்க வேண்டும் என மீனா விரும்பியதால்.... சென்னையின் ஒரு பெரிய கடையில் ஹரி காரை நிறுத்த.... ஹரிணி தான் குழந்தைகளுக்கு உணவு கொடுத்துக்கொண்டு அங்கேயே இருப்பதாகச் சொல்ல.... சரி என்று ஹரியும் மீனாவும் மட்டும் உள்ளே சென்றனர்.



மூன்றாவது தளத்தில் வைஷ்ணவிக்கு மட்டும் இல்லை ஹரிணிக்கும் வாங்கினர். ஹரி அவனாகவே மீனாவுக்குச் சில புடவைகள் வாங்கினான். “நீ புடவையில ரொம்ப அழகா இருக்க.... அதனால அடிக்கடி புடவை கட்டு.” என அவன் சரசமாக அவள் காதில் சொல்ல.... மீனா புன்னகைத்தாள்.



ஹரியாகட்டும் மீனாவாகட்டும் கொஞ்ச நேரமாகப் பார்வையால் தங்களைத் தொடர்ந்தவரை கவனிக்கவில்லை. அவர் வேறு யாருமில்லை மீனாவின் மாஜி மாமியார். அதாவது ஆகாஷின் அம்மா.



அவரும் ஷாப்பிங் வந்திருக்க... அவர் கண்ணில் மீனா பட்டுவிட.... இவள் எதோ ஒரு சந்தில் ஒண்டு குடித்தனத்தில் இருப்பாள் என அவர் நினைத்திருக்க... மீனாவின் வளமையும், செழுமையும் அவரின் வயிற்று எரிச்சலை தூண்டி விடப் போதுமானதாக இருந்தது.



இவர்கள் நிறைய வாங்கி இருந்ததால்.... கடை பையனே பில் போட்டுக் கொண்டு வர... பணம் கட்டிவிட்டு கிளம்பினர். மீனா கிளம்புகிறாள் என்றதும், அவளை விட்டால் பிடிக்க முடியாது என்பதை உணர்ந்த ஆகாஷின் அம்மா வேகமாக மீனாவின் முன்னால் சென்று நிற்க....



முதலில் அதிர்ந்தாலும் தவறு செய்தவர்களே தைரியமாக இருக்கும் போது.... தனக்கு என்ன என்ற எண்ணத்தில்? தன்னைத் திடபடுத்திக்கொண்டு நிமிர்ந்த மீனா, அவரைத் தெரியாத பார்வை பார்த்து வைக்க.....



“என்ன என்னைத் தெரியலையா?....” அவர் கேட்டதும், அதற்காகவே காத்திருந்தவள்,



“ஏன் தெரியாம நல்லா தெரியுமே...” என்றவள், ஹரியின் பக்கம் திரும்பி “நான் படிச்ச காலேஜ்ல இவங்க தான் பாத்ரூம் கழுவினாங்க.” என்றாளே பார்க்கலாம்.



ஆகாஷின் அம்மா “என்னது?” எனத் திகைத்து நிற்கும் போதே.... மீனா ஹரியின் கைபிடித்து அங்கிருந்த படிக்கட்டில் வேகமாக இறங்க.... அவரால் அவரின் கனத்த சரிரத்தை தூக்கிக் கொண்டு அவர்களின் வேகத்திற்குப் பின் தொடர்ந்து வர முடியவில்லை....



தன்னைப் பார்த்து எப்படிச் சொல்லிவிட்டாள்? அவளைச் சும்மா விடக்கூடாது என மூச்சு வாங்க வந்தவர், வாசலை அடைந்த போது... மீனா காரில் ஏற... கார் கிளம்பிவிட்டது.



ஆகாஷின் அம்மாவிடம் திமிராகக் காட்டிக்கொண்டாலும் மீனா படபடப்பாக உணர்ந்தாள். ஹரி அப்போது எதுவுமே பேசவில்லை.... கார் ஓடுவதிலேயே கவனமாக இருந்தான்.



ஹரிணிக்கு ஒன்றும் புரியவில்லை... ஹரி வாங்கி வந்த பொருட்களைக் கார் டிக்கியில் கூட வைக்கவில்லை... பின்பக்கம் போட்டு விட்டு... ஏறு... ஏறு... என எல்லோரையும் உள்ளே தள்ளி... உடனே காரையும் எடுத்து விட்டான்.



கிண்டி தாண்டி போரூர் வந்ததும், காரை ஒரமாக நிறுத்திய ஹரி மீனாவிடம் தண்ணீர் பாட்டிலை நீட்ட... அவள் குடித்ததும் “இப்ப ஓகேவா...” அவன் கேட்டதும், அவனை ஆச்சர்யமாகப் பார்த்த மீனா “உங்களுக்கு அவங்க யாருன்னு தெரியுமா...” எனக் கேட்க...



“ஏன் தெரியாம? அந்தப் பொம்பளை பட்டு புடவை கட்டி அவ்வளவு நகை போட்டிருக்கு. அதைப் பார்த்துப் பாத்ரூம் கழுவுரவங்கன்னு நீ சொன்னா நான் நம்பிடுவேனா...”. ஹரி சொல்ல....



அதற்குள் ஹரிணி “யாரு? என்ன?” என விசாரிக்க... ஹரி கடையில் நடந்ததைச் சொல்ல.... ஹரிணி விழுந்து விழுந்து சிரித்தாள். அவள் சிரித்ததும் ஹரிக்கும் மீனாவுக்குமே சிரிப்பு வந்தது.



“நல்லா வேணும்... நீங்க அவங்களை அப்படியே விட்டுட்டு வந்திருக்கக் கூடாது. இன்னும் நல்லா கேட்ருக்கணும்.” ஹரிணி சொல்ல... ஹரி பதில் சொல்லாமல் அனியை பார்த்தான்.



விடியற்காலையில் எழுந்தது அதோடு அலைச்சல் எல்லாம் சேர்ந்து சாப்பிட்டதும் பிள்ளைகள் மூவருமே உறங்கி இருந்தனர். மகள் உறங்கி விட்டாள் என்பதை உறுதி செய்து கொண்டே ஹரி பேச ஆரம்பித்தான்.



“எனக்கு எவ்வளவு நேரம் ஆகும் ஆகாஷ் முன்னாடி மீனாவை கொண்டு நிறுத்த.... பாருடா எங்க வீட்டு மகாராணின்னு சொல்லனும்னு எனக்கும் ஆசை தான். அனிக்காக மட்டும் தான் நான் அப்படிச் செய்யாம இருக்கேன்.”



“அவனுக்கு அனி இருக்கிறது தெரியாது. தெரிஞ்சு எனக்கு என் பொண்ணு வேணும்னு அவன் கேட்டா... சட்டப்படி அவனுக்கு அனிகிட்ட உரிமை இருக்கு....அதனால அவன் அனியோட பேச பழகச் சட்டம் அனுமதிக்கும். ஆனா என் பொண்ணு... அவ மனசு என்ன பாடுபடும். அந்த ஆகஷோட நிழல் கூட அனி மேல படக்கூடாது.”



“அவன் அனி மேல இருக்கிற பாசத்தில இல்லைனாலும், மீனாவை பழிவாங்கவாவது கண்டிப்பா அனிக்குத் தொந்தரவு கொடுப்பான். அதனால தான் அந்த அம்மா வர்றதுக்குள்ள காரை எடுத்திட்டு வந்திட்டேன். இப்ப அவங்க அம்மா மூலமா கண்டிப்பா ஆகஷ்க்கு மீனா நல்லா இருக்கான்னு தெரியவரும். இப்போதைக்கு இதுவே போதும்.”



“எனக்கு அனியோட நிம்மதியும் சந்தோஷமும் தான் முக்கியம்.” என்ற ஹரி காரின் டிக்கியை திறந்து பொருட்களை வைத்து விட்டு வந்து காரை எடுக்க... கார் பெங்களூரை நோக்கி விரைந்தது.



இங்கே ஆகாஷ் வீட்டில் ஹரி நினைத்தது தான் நடந்தது. மீனா வேறு திருமணம் செய்து மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்பதை ஆகஷால் ஜீரணிக்கவே முடியவில்லை. இத்தனைக்கும் அவன் இன்னொரு திருமணம் முடித்து மனைவி குழந்தை என்று வாழ்கிறான். ஆனால் சந்தோஷமாக இருக்கிறானா எனக் கேட்டால் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.



இவன் ஆடிய ஆட்டம் தெரிந்து அவனுக்குப் பெண் கொடுக்க யாரும் முன்வரவில்லை... மீனாவை விரட்டி விட்டால்... பெரிய பணக்காரர்கள் பெண் கொடுக்க வரிசையில் நிற்பார்கள் என நினைத்து ஆகாஷின் பெற்றோர் கனவு கண்டு ஏமாந்து போய் விட....



இவனைப் போலவே ஒரு தறுதலையை மகளாகப் பெற்ற ஒரு பெற்றோர் மட்டும் தங்கள் மகளை ஆகாஷுக்குத் திருமணம் செய்ய முன் வந்தனர்.



இவர்களுக்கும் வேறு வழி இல்லை... அவர்களுக்கும் வேறு வழியில்லாமல் திருமணம் நடந்தது. வந்தவள் ராட்சசியே தான். அவளிடம் ஆகாஷின் ஜம்பம் பலிக்கவில்லை....



இவன் சிகரட் பிடித்தால் அவளும் பிடித்தாள். இவன் தண்ணி அடித்தால் அவளும் அடித்தாள். இவன் வெளியே சுற்றிவிட்டு இரவு தாமதமாக வந்தால்.. அவளும் அதையே செய்தாள்.



மீனா ஆகாஷிடம் கொடுமை படும் போது வேண்டுமென்றே பார்த்துக்கொண்டிருந்த ஆகாஷின் பெற்றோர், இப்போது நடப்பதையும் வெறுமனே பார்த்துக்கொண்டு தான் இருக்க முடிந்தது. எதாவது சொன்னால்......



“என்னை வரதட்சனை கேட்டுக் கொடுமை படுத்திறதா எழுதி வச்சிட்டு விஷம் குடிச்சிடுவேன்.” என மிரட்டினாள்.



ஆகாஷ் எதாவது கேட்டால், “நீயும் அப்படித்தானே பண்ற...உனக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா.” என்றாள். ஆகாஷ் அவளை அடிக்கக் கைநீட்டினால்... அவளும் பதிலுக்கு அடித்து விடுவாள் என்று தெரியும். அதனால் ஆகாஷ் தன் மனைவியிடம் அடங்கிப் போக ஆரம்பித்தான்.



நீ ஒழுங்கா இரு... நானும் ஒழுங்கா இருக்கேன் என இருவரும் உடன்படிக்கைக்கு வர அதன் பிறகு இருவரும் ஒத்து வாழ்ந்தனர். ஆனாலும் ஆகாஷின் மனதில் தன் மனைவி மீது வெளியே சொல்ல முடியாத ஆத்திரம் இருந்தது. யாருக்கும் அடங்காமல் இஷ்ட்டம் போல் சுற்றிக்கொண்டு இருந்தவனை அடக்கி உட்கார வைத்துவிட்டாளே....



அவன் அடங்கி போக இன்னொரு விஷயமும் உண்டு. அவன் மனைவி பெரிய பணக்காரி. அவளோடு ஒத்து வாழ்ந்தால் தானே இன்னும் வசதியாக வாழலாம்.



இப்போது அவன் அம்மா வந்து மீனாவை பற்றி சொன்னதும், நான் வேண்டாம் என்று தூக்கி போட்டவள் நன்றாக வாழ்கிறாளே... ஆனால் நான் அடிமை போல அல்லவா இருக்கிறேன் என மனம் குமுறினான்.



நாம் நல்லது நினைத்தால் தான் நமக்கு நல்லது நடக்கும். இப்போதும் தன் தவறை ஆகாஷ் உணரவில்லை.... சிலர் எப்போதுமே திருந்த மாட்டார்கள்.



“டேய், நான் இவ்வளவு சொல்றேன். நீ சும்மா உட்கார்ந்திட்டு இருக்க...” ஆகாஷின் அம்மா கொதித்துப் போய்க் கேட்க....

“நான் வேற என்ன மா செய்ய முடியும். மீனாவால பின்னாடி பிரச்சனை வரக் கூடாதுன்னு, அப்ப கல்யாணம் நடந்ததுக்கான ஆதாரம் எல்லாம் அழிச்சாச்சு. இருந்தாவாவது அவ புருஷன் கிட்ட போய்க் காட்டலாம்.” என்றான் ஆகாஷ்.

“அவ புருஷனுக்கு முன்னாடி நடந்த கல்யாணம் தெரியாமல் எல்லாம் இருந்திருக்காது. அவ தான் தைரியமா என் முன்னாடி நின்னாளே... அதுவும் என்னைப் பார்த்து எப்படிச் சொல்லிட்டா..... என்னைப் பார்த்தா பாத்ரூம் கழுவுற மாதிரியா இருக்கு....”

“திரும்பத் திரும்ப அதையே சொல்லாதீங்க மா.... நான் என் பொண்டாட்டி கிட்ட வேற எனக்கு முன்னாடி கல்யாணமே நடக்கலைன்னு சொல்லி வச்சிருக்கேன். இது வேற தெரிஞ்சா அவ சாமி ஆடுவா.....”

“நீங்க பாட்டுக்கு என் பொண்டாட்டிகிட்ட எதாவது உளறி வச்சிடாதீங்க. அப்புறம் அவ நம்மை வீட்டை விட்டு வெளியே துரத்தினாலும் துரத்திடுவா....”




“வெளியே துரத்தினா கூட பரவாயில்லை.... பதிலுக்கு நானும் இன்னொரு கல்யாணம் பண்ணிப்பேன்னு கிளம்பினாலும் கிளம்பிடுவா....”

“எல்லாம் உன்னால தான்டா.... நீ ஒழுங்கா இருந்திருந்தா இந்தப் பிரச்சனையே இல்லை..... உனக்கு ஒழுங்கான இடத்தில கல்யாணம் ஆகி இருக்கும். உன் பொண்டாட்டிட்ட இருக்க முடியாம தான் நான் வெளியவே சுத்திட்டு இருக்கேன்.”

“இந்த மீனாவை நான் ஒரு தடவை பார்த்துதான் இந்த நிலைமை.... இனியும் அவளைப் பார்த்தா... என் நிலைமை இன்னும் மோசமாகிடும். அதனால நீங்க அவளைப் பார்த்ததையே மறந்திடுங்க. அவளை எங்காவது பார்த்தாலும், பார்க்காத மாதிரி வந்துடுங்க.”

அவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டபடி வந்த ஆகாஷின் அப்பா “அவளாடா உன்னைத் தேடி வந்தா... நீ தான அவ பின்னாடி சுத்தின... நீ அவளோட ஒழுங்கா குடும்பம் நடத்த மாட்டேன்னு தெரிஞ்சே.... நாங்களும் உனக்கு அந்தப் பெண்ணைக் கல்யாணம் பண்ணி வச்சோம். உன் ஆசை தீர்ந்ததும் வெளியேவும் துரத்தினோம்.”
“இப்படித் தப்பெல்லாம் நாம செஞ்சிட்டு.... பழியை ஏன் அந்தப் பொண்ணு மேல போடுற....”

“உன்னைக் கல்யாணம் பண்ண பாவத்துக்காக அந்தப் பொண்ணு காலமெல்லாம் உன்னையே நினைச்சிட்டு இருக்க முடியுமா.... அவளுக்கு வேற நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கு, சந்தோஷமாதான் இருக்கட்டுமே....”

“ஏற்கனவே நிறையப் பாவம் பண்ணி ஆச்சு. இனியாவது அம்மாவும் பையனும் திருந்திற வழிய பாருங்க.” எனச் சொல்லிவிட்டு அவர் உள்ளே செல்ல... தாயும் மகனும் ஒருவரை ஒருவர் பாவமாகப் பார்த்துக்கொண்டனர். வேறு என்ன செய்ய முடியும்? ஒன்றும் செய்ய முடியாது.
 
:love: :love: :love:

ஆகாஷ்க்கு நல்லா வேணும்..
நீ விட்டுட்டா மீனா நல்லா இருக்க
மாட்டானு நினைப்போ...

வினை விதைத்தவன்
வினை அறுப்பான்
தினை வினைத்தவன்
தினை அறுப்பான்

மீனா நீ புடவையில ரொம்ப அழகா இருக்கியாமே...

நீ கட்டும் சேல மடிப்புல நா கசங்கி போனேன்டி ..
உன் எலுமிச்சம் பழ நேர இடுப்புல கெறங்கி போனேன் டி..
 
Last edited:
:love: :love: :love:

ரொம்ப பழகாமல் வேற குழந்தைகளை குளிக்க வைக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான்........
இதே தான் பண்ணுவாங்க........ அதுவும் சேட்டை புள்ளைங்க கேட்கவே வேணாம்........
டிரஸ் போடுறதுக்குளேயே tired ஆகிடுவோம்........

படிச்சா காலேஜ் ல பாத்ரூம் கழுவினவங்க :p:p:p
உங்க பையன் விட்டுட்டா ஒண்டுக் குடித்தனத்துல தான் முடங்குவாங்களா???
உங்களுக்கு உங்களை மாதிரி ஒரு பொண்ணு கிடைக்கும்........ அப்புறம் வாலை சுருட்டிக்கிட்டு இருப்பீங்க......
ஆனால் தப்பு செய்யாத பெண்களுக்கு ஏன் தண்டனை??? நல்ல இருந்தால் பொறுக்காதே உங்களுக்கு.......

ஹரி முடிவு நல்லா தெளிந்த முடிவு....... அந்த பொறம்போக்கால் அனிதாக்கு எந்த தொந்தரவும் இருக்கக்கூடாது தான்.......
 
Last edited:
Top