Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனிதாவின் அப்பா 21 1

Advertisement

Admin

Admin
Member


இறுதிப் பகுதி


ஒரு மாதத்திற்குப் பிறகு....

“உவ்வே... உவ்வே...” எனக் கேட்ட சத்தத்தில் பதறி அடித்து எழுந்த ஹரி குளியல் அறைக்குள் விரைய... அங்கே மீனா தான் வாந்தி எடுத்துக்கொண்டு இருந்தாள்.

“என்ன ஆச்சு மீனா?” என ஹரி மீனாவின் தலையைப் பிடித்துக்கொள்ள.... மீண்டும் மீனா “உவ்வே.... உவ்வே...” என்றாள்.

சத்தம் தான் வந்ததே தவிர வாந்தி ஒன்னும் வரவில்லை.... சிறிது நேரம் பார்த்த ஹரி “வயித்துல எதாவது இருந்தா தான வாந்தி வரும். வாய் கொப்பிளிச்சிட்டு வா...” என்றதும், மீனா அவன் சொன்னபடியே செய்துவிட்டு வந்தாள்.

களைத்து போய் வெளியே வந்தவளை பார்த்து “ஏன் இப்ப திடிர்னு வாந்தி வருது?” ஹரி கேட்க....

“தெரியலையே.... பல் தேய்க்க ப்ரஷை வாயில தான் வச்சேன். வயிற்ற புரட்டிட்டு வாந்தி வர மாதிரி இருந்தது.” என்ற மீனாவுக்கு நிற்கவே முடியவில்லை.... அவள் சென்று மீண்டும் கட்டிலில் படுத்துவிட.... ஹரி வைஷ்ணவியை அழைக்கச் சென்றான்.

“அம்மா... அம்மா....”

“என்னடா காலையிலேயே அம்மாவை தேடுற?”
“மீனா வாந்தி எடுக்கிறா மா...”

ஹரி சொன்னதும் வைஷ்ணவி பதற்றத்துடன் மீனா இருந்த அறைக்குள் சென்றவர், அவளுக்குக் காய்ச்சல் இருக்கிறதா என்று தொட்டு பார்க்க.... அப்படி ஒன்றும் இல்லை.

“என்ன ஆச்சு மீனா?”

“தெரியலையே அத்தை...”

“ஒருவேளை நைட் சாப்பிட்டது நெஞ்சிக்குள்ளே இருக்கோ...”

“இல்லைமா... இருந்திருந்தா வாமிட் பண்ணி இருப்பாளே..... பித்தமா இருக்கும். நிறையக் காபி குடிக்கிறா....” என்றான் ஹரி.

என்ன வா இருக்கும் என யோசித்த வைஷ்ணவிக்குப் பல்பு எரிய...... “மீனா, இந்த மாசம் நீ தலைக்குக் குளிச்ச?” அவர் ஆவலாகக் கேட்க....

வைஷ்ணவி கேட்டதும் தான் மீனாவுக்கு இந்த மாதம் இன்னும் குளிக்கவில்லை என்பது நினைவுக்கு வர..... குழந்தை தானோ என நினைத்தவள், சட்டென்று எழுந்து அமர்ந்தாள்.

அவள் உடலெங்கும் எங்கும் சந்தோஷ வெள்ளம் பாய “இல்லை.... நாள் தள்ளி போய் இருக்கு.” அதைச் சொல்லும் போதே அவளுக்கு அவ்வளவு வெட்கம்.

அவள் கன்னத்தை வழித்து “நல்ல விஷயமாவே இருக்கட்டும்.” என்ற வைஷ்ணவிக்கு இன்ப படபடப்பு.... அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.... அவர் அப்போது தான் ஹரியின் நியாபகம் வந்து அவனைப் பார்த்தார்.

அவனும் படபடப்பாகத் தான் இருந்தான். ஆனால் அவன் முகத்தில் சந்தோஷத்திற்குப் பதில் அதிர்ச்சியே இருந்தது. பிருந்தா இருந்த போது... இந்த மாதமாவது குழந்தை உண்டாகுமா என அவனுமே ஆவலாக எதிர்பார்தது உண்டு.

மாதங்கள் தான் சென்றதே தவிர அவர்கள் எதிர்ப்பார்த்த நல்ல செய்தி வரவே இல்லை. அதனால் அவன் மீனாவிடம் எந்த எதிர்பார்புமே வைத்திருக்கவில்லை.... இன்னும் சொல்லப்போனால் அவன் குழந்தையைப் பற்றி யோசிக்கவே இல்லை....




மீனா உண்டாகி இருக்கிறாள் என்பது சந்தோஷத்திற்குப் பதில் அவனுக்குப் பயத்தையே கொடுத்தது. இவளுக்காவது குழந்தை ஒழுங்காக உண்டாகி இருக்குமா.... மீனாவுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்பதைப் பற்றி மட்டும் தான் யோசித்தான்.
இவன் ஏன் இப்படி இருக்கான்? என்பது போல் வைஷ்ணவி பார்க்க.... அப்போது மீனாவும் அதையே தான் நினைத்தாள்.

குழந்தையைப் பற்றிய சந்தோஷமே அவனிடம் இல்லையே... ஒருவேளை தான் உண்டானது பிடிக்கவில்லையோ.... அல்லது பிருந்தா நினைவா... என மீனா குழப்பிக்கொண்டு இருந்தாள்.

“சரி நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க. நான் போய்த் தாத்தாவும் பேத்தியும் என்ன பண்றாங்கன்னு பார்கிறேன். இதே ஸ்கூல் நாளா இருந்தா அனி எழுந்துக்கவே மாட்டா... இன்னைக்கு லீவுனதும் காலையிலேயே எழுந்தாச்சு.” என்றபடி வைஷ்ணவி அவர்கள் இருவருக்கும் தனிமை கொடுத்து அங்கிருந்து செல்ல....

மீனா ஹரியை ஆவலாகப் பார்க்க... அவன் எதோ யோசனையிலேயே இருந்தான்.

“ஹரி...இங்க கிட்ட வாங்களேன்.”



“நீ எழுந்து கிளம்பு மீனா ஹாஸ்பிடல் போகணும்.”

“இன்னைக்கேவா....”

“ஆமாம் இன்னைக்கே தான்.” ஹரி சொல்ல... அவனை முறைத்த மீனா “சரி. ஆனா நீங்க என் கிட்ட வந்தா தான்.” என்றாள்.

ஹரி அவளின் அருகில் செல்ல... அவனை அணைத்துக்கொண்டவள் “நான் ரொம்பச் சந்தோஷமா இருக்கேன்.” என்றாள். ஹரி எதுவும் சொல்லவில்லை.... ஆனால் அவனும் அவளை அணைத்துக் கொண்டான்.

காலை உணவை வேகமாகச் சாப்பிட்டு விட்டு வெங்கட்டை தவிர மற்ற நால்வரும் காரில் ஹாஸ்பிடல் கிளம்பினர்.

“எதுக்குப் பா ஹாஸ்பிடல் போறோம்.” ஹரியின் பக்கத்தில் இருந்த அனி கேட்க....

“அம்மாவுக்கு உடம்பு சரியில்லை டா...” என்றான் ஹரி.

பின்னால் இருந்த மீனாவும் வைஷ்ணவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

இன்னைக்கு வீட்ல டெஸ்ட் பண்ணி பார்த்திட்டு நாளைக்குப் போவோம் என வைஷ்ணவி சொன்னதை ஹரி காது கொடுத்தே கேட்கவில்லை..... அதோடு வீட்டின் அருகே இருந்த மருத்துவமனைகளை எல்லாம் விட்டுவிட்டு, நகரில் இருந்த பெரிய மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தான்.

ஏற்கனவே சோர்வாக இருந்த மீனா, ட்ராபிகில் நின்று நின்று வந்ததில்... இன்னும் சோர்வாக உணர்ந்தாள். அதோடு அவ்வளவு பெரிய மருத்துவமனையைப் பார்த்ததும் பயமாக வேறு இருந்தது.

திடிரென்று வந்ததால் முன்பே பதிவு செய்ய முடியவில்லை.... ஆனால் காலை நேரம் என்பதால் அவ்வளவு கூட்டம் இல்லை.... வந்த சிறிது நேரத்திலேயே மருத்துவரை சந்தித்து விட்டனர்.

சோதனை செய்து பார்த்து விட்டு மருத்துவர் கற்பத்தை உறுதி செய்தார். அதோடு உடனே ஸ்கேன் எடுத்துக்கொண்டு வர சொல்ல.... ஹரி மீனாவை அழைத்துக்கொண்டு ஸ்கேன் எடுக்கச் சென்றான்.

ஸ்கேன் எடுத்து முடியும் வரை அவனுக்கு உயிரே இல்லை.... ஸ்கேன் எடுத்த பெண் ரிபோர்ட்டை ஒரு கவரில் போட்டுக் கொடுக்க.... அதை எடுத்துக்கொண்டு மீண்டும் மருத்துவரிடம் சென்றனர்.

அவர் பார்த்து எல்லாம் நார்மலா இருக்கு என்றார். ஆனால் ஹரி அவரிடம் “குழந்தை சரியான இடத்தில தான இருக்கு. ஒன்னும் பிரச்சனை இல்லை இல்ல...” என மீண்டும் மீண்டும் கேட்க அவருக்குக் கோபம் வந்துவிட்டது.

“எல்லாம் சரியாத்தான் இருக்கு எத்தனை தடவை கேட்பீங்க.” என எரிந்து விழுந்தவர், மீனாவுக்குத் தேவையான மருந்துக்களை எழுத ஆரம்பித்தார்.

“ஹரி, நீ போய் அவங்க எழுதி கொடுத்த மருந்து வாங்கிட்டு வா....” என அவனை அனுப்பிய வைஷ்ணவி மருத்துவரிடம் “சாரி டாக்டர், அவன் முதல் மனைவிக்குக் குழந்தை ட்யுப்ல உருவனதுனால அதைக் கலைக்கும் போது இறந்திட்டா... அதனால தான் திரும்பத் திரும்பக் கேட்கிறான்.” என்றதும்,

மருத்துவருக்கே ஒருமாதிரி ஆகிவிட்டது “ஓ சாரி...” என அவர் வருந்த....

“நான் ஏன் இதை உங்கிட்ட சொல்றேன்னா.... உங்ககிட்ட தான் பிரசவம் வரை வருவாங்க. அப்ப உங்களைக் கேள்வி கேட்டு எப்படியும் தொல்லை பண்ணிடுவான். கொஞ்சம் பொறுத்துக்கோங்க டாக்டர்.” என்றதும், டாக்டர் சிரித்து விட்டார்.

மருந்து வாங்கிக்கொண்டு வந்த ஹரியிடம் ஸ்கேன் ரிப்போர்ட்டை காட்டி “பார்த்துக்கோங்க ஹரி, எல்லாம் நார்மலா இருக்கு. அடுத்த மாசம் வரும் போது…. இந்த டெஸ்ட் எல்லாம் எடுத்திட்டு வரணும்.” என்ற மருத்துவர், அவன் மேலும் கேட்ட கேள்விகளுக்குப் பொறுமையாகப் பதில் சொல்லியே அனுப்பினார்.

வீட்டிற்கு வந்து வேகமாக மதிய உணவை வைஷ்ணவியும் மீனாவும் சேர்ந்து செய்ய.... “நீ போய் ரெஸ்ட் எடு....” என வைஷ்ணவி எவ்வளவோ சொல்லியும் மீனா கேட்கவில்லை....

“காலையில தான் ஒருமாதிரி இருந்துச்சு.... இப்ப நல்லா தான் இருக்கேன்.” என்றாள்.

மதியம் அனைவரும் சேர்ந்து சாப்பிடும் போது.... வைஷ்ணவி அனியிடம் “உனக்குத் தம்பி வேணுமா தங்கை வேணுமா...” என்றார்.

“எனக்குத் தம்பி தான் வேணும்.”



“தங்கையா இருந்தா.... என்ன பண்ணுவ?”

“அப்பவும் ஜாலி தான். நாங்க சேர்ந்து விளையாடுவோம்.” என்ற அனி “ஏன் கேட்டீங்க வைஷுமா?” என்றதும்,

“இன்னும் ஒன்பது மாசம் கழிச்சு உனக்குத் தம்பியோ தங்கையோ வரப் போறாங்க. நாம அதுக்குத் தான் இன்னைக்கு டாக்டர் கிட்ட போனோம். உங்க அம்மா வயித்துல பாப்பா இருக்கு.”

வைஷ்ணவி சொல்லி முடித்ததும் அனி “ஹே....” எனத் துள்ளி குதித்தவள் “அப்பாடியா மா...” என மீனாவை பார்த்து கேட்க... அவள் புன்னகையுடன் ஆமாம் என்றாள்.

“அத்வி, ஆதித்யாக்கு மாதிரி எனக்கும் தம்பி பாப்பா வரப்போகுது.... ஜாலி இல்லப்பா....” அணி ஹரியிடம் கேட்க.... மகளின் மகிழ்ச்சி ஹரியிடமும் தொற்றிக்கொண்டது. அவன் முகத்தில் இப்போது தான் புன்னகை வந்தது.

அதன்பிறகு அனி எல்லோரையும் கேள்விகளாலேயே துளைத்து எடுத்து விட்டாள்.


“எந்த மாசம் பாப்பா வரும்?”



“அதற்கு என்ன பெயர் வைப்பது?”


“பாப்பா பிறந்த பிறகு... அதை யார் பார்த்துக் கொள்வது?”

“ஏன் உங்க அம்மா, அப்பா தான் பார்த்துபாங்க.” வைஷ்ணவி சொன்னதும்.

“அம்மா, நீங்க புதுப் பாப்பாவை வச்சுக்கோங்க.” அனி மீனாவிடம் பொறுப்பைக் கொடுக்க....

“ஏன் உன் அப்பா என்ன பண்றார்? அவர் பார்த்துக்கக் கூடாதா...” வைஷ்ணவி அனியின் வாயை பிடுங்க.

“ஹான்.... அவங்க என்னோட அப்பா. அவங்க எனக்கு மட்டும் தான்.” என்ற அனி தன் இருக்கையில் இருந்து இறங்கி சென்று ஹரியின் மடியில் ஏறி உட்கார்ந்தவள் “நீங்க எனக்குத் தானப்பா அப்பா.... நீங்க புதுப் பாப்பாவை தூக்க கூடாது. அம்மா தான் வச்சுக்கணும்.” என்று ஹரிக்கு உத்தரவுயிட....

“சரிடா... நீ எப்படிச் சொல்றியோ அப்படி....” ஹரி சொல்ல மீனா அவனை முறைத்தாள்.

 
:love::love::love:

அப்பா அவரோட புள்ளையை தூக்கக்கூடாதா :eek: ரொம்ப தான் விவரம் உனக்கு......
என்னமா அனிதா இப்படி பண்ணுற....... உங்கப்பா எப்போ எப்போன்னு ஏங்கிகிட்டே இருப்பாரு இப்போ...... நீ தடா போடுறியே.......
நீ சொன்னால் உங்கப்பா கேட்பாரே அதானே பிரச்சனை.......
 
Last edited:
:love::love::love:

ஹரியோட பயமும் நியாயம் தான்..
ஆனா எல்லாம் நல்ல படியாக இருந்ததது மகிழ்ச்சியே...

அடடா அனிதா நீ பாப்பா வரபோகுதுனு பயப்படவே வேண்டாம்.. எப்பவுமே உங்க அப்பாவுக்கு நீ தான் ஃபர்ஸ்ட்...
 
Last edited:
Top