Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அன்புமதி எங்கே?

Advertisement

Vasantham

New member
Member
மாலை ஐந்து முப்பது மணி. மகன் வருகையை எதிர்பார்த்து வாசலில் வந்து நின்றாள் பூரணம்.வெளியில் மகனின் வண்டி சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தாள்.

வண்டியிலிருந்து இறங்கிய மகனிடம் ‘ராஜா உன் மனைவி அன்பு மதி வரவில்லையா?’ என்று கேட்டாள்.அம்மா அவள் வரவில்லை என்று சொல்லிக் கொண்டே வீட்டினுள் சென்றான். அவள் வீட்டினுள் நுழைந்து கொண்டே, ‘ஏன் அவளை அழைத்து வரக் கூடாதா ?அவள் அம்மா வீட்டிற்கு சென்று ஒரு வாரம் ஆகிவிட்டது’ என்று சொன்ன தாய்க்கு பதிலேதும் கூறாமல் அவன் அறைக்குள் நுழைந்தான்.

மறுபடியும் வெளியில் கிளம்புவதற்கு அவன் தயாரானான். ‘அம்மா! நான் ரமேஷ் வீடுவரை சென்று வருகிறேன், வரும்போது உங்களுக்குத் தேவையான உணவு வாங்கி வருவேன். உங்களுக்கு என்ன வேண்டும் அம்மா?’

வெளியில் வாங்கும் சாப்பாடு பூரணத்திற்கு வயிற்றுக்கும் பிடிக்கவில்லை, மனதிற்கும் பிடிக்கவில்லை.

' ராஜா நீ அவளை மட்டும் வீட்டிற்கு அழைத்து வந்தால் போதும்'


‘ஏம்மா! அவளுக்கு நன்றாக சமைக்கத் தெரியவில்லை என்று சொன்னீர்கள் அல்லவா? அவள் அம்மாவிடம் சிறிது நாட்கள் சமையல் கற்றுவிட்டு வரட்டும். உங்களுக்கு வாய்க்கு ருசியாக நான் ஹோட்டலில் வாங்கி தருகிறேன் அம்மா."

'வேண்டாம் அப்பா அவளை அழைத்து வந்து விடு. எனக்கு ஹோட்டல் சாப்பாடு ஒத்துக் கொள்ளவில்லை. வீட்டை சுத்தப்படுத்தவும் என்னால் முடியவில்லை. இனி அவள் சமையல், செய்யும் வேலைகளை குறை சொல்ல மாட்டேன். தயவுசெய்து அவளை அழைத்து வந்து விடு .அவளில்லாமல் வீடு, வீடு போலில்லை.

உடனே புறப்பட்டு அவன் மனைவி வீடு நோக்கி சென்றான். "அன்புமதி நமது திட்டம் வெற்றி பெற்று விட்டது. இனி அம்மா உன்னை குறை சொல்லப் போவதில்லை. உடனே புறப்பட்டு வா. வீட்டிற்கு செல்லலாம்"
 
Top