Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அன்பு விதை – 1

Advertisement

Dhanuja

Well-known member
Member
அன்பு தோழிகளுக்கு என் வணக்கம் என்னைப் பற்றிய சிறு அறிமுகம்,

எனது பெயர் தனுஜா,நான் எஸ்.எம் தளத்தில் கதை எழுதி வருகிறேன்,நானும் ரவுடி தான் என்பது போல,நானும் கதை எழுதுகிறேன்,இப்போட்டியில் கலந்து கொண்டு,பல விடயங்களைக் கற்றுக் கொள்ள வந்துள்ளேன்,என் கதையைப் படித்துப் பார்த்துக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும்.


எனது அன்பின் முதல் விதையை விதைக்கிறேன் இங்கு.



அன்பு விதை – 1


“அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்”.
அன்பைத் தாழ்ப்பாள் போட்டுத் தடுக்க முடியுமா? அன்பு மிகுதி அடைந்தால், கண்ணில் ஈரம் பெருகி வெளிப்படும்.

கருணை கரம் என்னும் பெயர் தாங்கிய பலகை சுமார் பல ஆண்டுகள் கடந்து விட்டேன் என்பதைக் கம்பீரத்துடன் எடுத்துரைத்து நின்றது,அதனை தாண்டி சென்றால் அழகான கட்டிடம் செங்கல்,மணல்,சிமெண்ட் என்று அல்லாது அன்பும் சேர்த்து கட்டிய அழகான கூடு அது.

அந்தப் பெரிய வீட்டின் அருகிலே அவர்களது இல்லம் உள்ளது சுமார் பல ஏக்கர்கள் தாண்டும் என்பது அனுமானம் தான்,அதன் உரிமையாளர் மிகப் பெரிய செல்வந்தர் திரு.திருவேங்கடம்.மனைவி சுசிலாவின் உதவியுடன் இல்லத்தை நடத்திவருகிறார் அவருக்கு மூன்று பிள்ளைகள். முதல் மகனின் பெயர் அருண்குமார்,இரண்டாம் மகளின் பெயர் நீலா மணி,மூன்றாம் மகளின் பெயர் கிருஷ்ண வேணி.

இவ்வுலகில் விலை மதிப்பில்லாத ஒன்று என்றால் அது அன்பு மட்டுமே என்பது திருவேங்கடத்தின் தந்தையின் கூற்று,அனைவருக்கும் அதை வாரி வழங்க அவர் ஆரம்பித்த இல்லம் தான் கருணை கரம்.கருணை பிறக்கும் இடத்தில் அன்பு இருக்கும்,இரண்டுக்கும் இடைவெளி அதிகம் இல்லை அல்லவா!

தனது தந்தை செய்து வந்த சேவையைத் திருவேங்கடம் தொடர்ந்து வழி நடத்தி வருகிறார்,தனக்கு பிறகு தனது மகன் செய்வார் என்ற எண்ணத்தில் இருக்க,அவனது மகனோ அதில் விருப்பம் இல்லை என்பதைத் தெள்ள தெளிவாகச் சொல்லிவிட்டான், குடும்பத் தொழில்கள் ஒருபுறம் இருக்க, இப்போது வெளிநாட்டில் இருந்து தனது தொழிலை வளர்த்து,அதனை இந்திய மண்ணிலும் விதைக்க வந்து கொண்டு இருக்கிறான்.

எதை விதைக்கப் போகிறான்,எதை அறுக்கப் போகிறான் என்பது விதியின் கையிலும்,காலத்தின் போக்கிலும் விட்டுவிடுவோம்.( விதியை மதியால் வென்றாலும்,அந்த மதியை செயல் பட வைப்பதே இந்த விதிதான் என்பதை யார் அறிவார்).
-------------------------------------------------------------------------------------------------
இரவு நேர உணவுக்கு அனைவரும் கூடி இருந்தனர்,சுசிலா அனைவருக்கும் இன் முகத்தோடு உணவு பரிமாற, அவரை அந்த வீட்டின் கடை குட்டி ஓட்டி கொண்டே உண்டாள்,"என்ன அம்மா வழக்கத்துக்கு மாற முகத்தில ஓவர் பொலிவு".

நீலா,"அது ஒண்ணுமில்ல வேணி அம்மாவோட ஒரிஜினல் புள்ள வரான்ல அந்தச் சந்தோசம் தான்".

ஒரிஜினல் புள்ளையா! அப்போ நாங்கெல்லாம் தவுட்டுக்கு வாங்குனவுகளா! வேணி வாய்யை பிளக்க, இருவரையும் செல்லமாகத் தலையில் அடித்தார்,அவரது தந்தை திருவேங்கடம்.

“உனக்கு வாய் கூடிப்போச்சு நீலா குட்டி, இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம் ஆகி போகப்போற ,இன்னும் சின்னப் புள்ள மாதிரி விளையாட்டு போக்கிரி”.

தலையை தேய்த்தவாரே,"போங்க அப்பா வலிக்குது நாங்க சொன்னது உண்மை தானே,அண்ணன் வரான்னு தெரிஞ்ச உடனே, அம்மா முகத்துல சந்தோசத்தைப் பாருங்க".

அவளுக்கு அவன் செல்லம்,எனக்கு நீங்க இரண்டு பேரும் செல்லம்,ஒருவாறு மகள்களைச் செல்லம் கொஞ்சி ,மனைவியிடம் சில பல பார்வை கண்டனங்களைத் தாண்டி இரவு உணவை உண்டு விட்டு நிம்மதியாகத் தூங்கினார்.

ஆம் இன்று மற்றுமே அவருக்கு நிம்மதியான உறக்கம், நாளையில் இருந்து அவரது புதல்வன் வந்துவிடுவானே,இனி அவன் கொண்டு வரும் வம்பை சமாளிக்கவே அவருக்கு நேரம் போதாமல் போகப் போகிறது.

தவமாய்த் தவமிருந்து பிறந்த மகன்,அவனைச் செல்லமாய் வளர்த்தது தவறோ என்பது போல யோசிக்க வைக்கப் போகிறான் நமது நாயகன் மிஸ்டர்.அருண்குமார்.

-----------------------------------------------------------------------------------------------
கோவை மாநகரம் வளமை போல மிதமான வானிலை,லேசாகத் தூறல் வேறு உடலை அவ்வப்போது முத்தமிட்டுச் செல்ல,அதனை ரசிக்கும் எண்ணம் என்பது சிறிதும் இல்லாமல் எங்கோ பார்வையைப் பதித்த வாரு நின்று இருந்தாள்,எப்பொழுதும் தோன்றும் அதே கேள்வி,"ஏன் என்னை இப்புடி படைத்தாய்?யாரு செய்த தவறு?,கண்களை மூடி கண்ணீரை அடக்க முயற்சித்தாள்.

முடிந்தால் தானே அதுவும் அவள் பேச்சை கேட்கவில்லை மெல்ல மெல்ல கன்னம் தொட்டுத் தொண்டை குழியில் இறங்கி மார்பின் மத்தியில் ஒழிந்து கொண்டது,அனைத்து துக்கத்தையும் தாங்கும் நெஞ்சம் இதனையும் தாங்கி கண்ணீரை உள் இழுத்துக் கொண்டது.

அழகி தான்! அவள் அழகி தான்! கோதுமை நிறம் கொண்ட பொன் சிலை அவள்,அன்பு மணம் அழகு,அமைதியான குணம் அழகு,பணிவு அழகு,கர்வம் இல்லாத கம்பிரம் அழகு,கூர்மையான அறிவு அழகு,அதனை பொருட்படுத்தாது இருக்கும் தன்மை அழகு,இத்தனை அழகையும் ஒன்று சேர்த்து பார்க்கையில்,காது கேளாத செவியும், மடங்கிய கையும்,சாய்ந்து நடக்கும் கால்களும், ஒரு குறையாகத் தெரியுமா என்ன.

பிறவியிலே வலது பக்கம் முழுவதும் பாதிக்கப் பட்டுவிட்டது,இதில் தப்பியது அந்தக் குண்டு கண்கள் மட்டும் தான்,ஒன்பது மாதங்கள் வரை நன்றாக இருந்த குழந்தை பிரசவத்தில் நடந்த குழறுபடியால் வலது பக்கம் முழுவதும் செயல் இழந்து இன்று ஊனமாக .

கைக்கு நிறைவாகக் குழந்தையைக் கொடுத்துவிட்டு,அதற்குக் குறையும் குடுத்த ஆண்டவனை என்ன சொல்ல.

எங்கோ பார்வையைப் பதித்து இருந்த பாவையை அழைத்தார் அவளது தந்தை சிதம்பரம் சி.எம் குரூப் ஆப் கம்பெனிஸ் முன்னால் முதலாளி,இந்நாளில் அவரது மகள் தான் முதலாளி . சிதம்பரத்திற்கு இரு செல்வங்கள் முதல் மகன் விக்னேஷிஸ்வரன்,இரண்டாவது மகள் மீனா.

அவரது முற்போக்கு சிந்தனையால் அறுபதை தொடும் முன்பே விக்னேஸ்வரனுக்கும்,அவரது மகளுக்கும் தொழில்களைப் பிரித்தாயிற்று. "என்னடா கண்ணு அவர் வலது பக்கம் இருந்து பேசியதால் அவள் காதில் விழவில்லை,கோபம் வரும் போதெல்லாம் காது மிஷின் காது தூரம் பறந்து விடும்,இன்றும் அது எங்கோ பறந்து விட்டது.

அவளின் இடது புறம் வந்தவர் மீண்டும் அழைக்க,இப்போது தான் சுயம் பெற்றவள் அவரை நிமிர்ந்து பார்த்தாள்,அவர் கண்ணில் கொஞ்சல் இருந்தது,"அம்மாடி நீ தான் நாத்தனார் முறை செய்யணும்.உங்க அண்ணன் நிச்சியத்துக்கு முன்னாடி நிக்கணும்,நீயே வரமாட்டேன்னு சொன்னா எப்புடி டா.

“நீ இல்லாம அவன் நிச்சியம் பண்ணிக்க மாட்டான் பாப்பு”,அவர் பேசுவதையே பார்த்தவள்,மெதுவான குரலில்,”அப்பா அம்மாகிட்ட சொல்லுங்க என்னைய எதுவும் சொல்ல கூடாதுனு அப்போ தான் வருவேன்,முக்கியமா யாருகிட்டயும் என்னைய அறிமுகப் படுத்தக் கூடாது".

நீ சொல்வதெல்லாம் நடக்குற காரியமா என்பது போலப் பார்த்தவரின் எண்ணத்தை அறிந்தவள்,"அப்போ நோ ஆப்சன் நான் வரல,பொண்ணு வீட்டுல கேட்டா உடம்பு முடியலன்னு சொல்லிடுங்க".

ஐயோ!....... என்று பதறியவரை யோசனையோடு பார்த்தாள் மீனா.

“ஏன்ப்பா அதிர்ச்சி ஆகுறீங்க”.

“அது ஒன்னுமில்லாம நீ வா நான் அம்மாகிட்ட சொல்லுறேன்,அவ உன்ன தொந்தரவு பண்ணாம அப்பா பார்த்துகிறேன் சரியா”.

ஒருவராக மகளைச் சமாளித்தவருக்குத் தலை வலிப்பது போல் இருந்தது,பிறகு என்ன மகள் சொல்லுவதை மனைவிடம் சொன்னால் அவர் கதி அதோ கதிதான், லலிதாவிற்குத் தனது மகளது குறை ஒரு குறையாகவே தெரியாது,எல்லோரிடமும் தனது மகளைச் சிறு கர்வத்தோடு தான் அறிமுகம் செய்வார்.

‘காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்று சொன்னால், அதற்கு அவர் பதிலடி ‘தங்கத்தில் ஒரு குறை இருந்தாலும் தரத்தில் குறை இல்லை’ என்பதாக இருக்கும்,அவருக்கு மகள் மீது அத்தனை கர்வம், இதுவும் ஒரு வகையான அன்பு,தனது பிள்ளைக்குக் குறை என்று சொன்னால் அழுது கதறும் தாய்மார்கள் இடையில் தன்னம்பிக்கை கொண்டு வளர்த்த தாய் லலிதா.

அவருக்குத் தன் மகனுக்கு அமைந்த சம்பந்தத்தை விட மனதில்லை,அதை தன் மகளுக்குச் சாதகமாக்க அந்தத் தாயுள்ளம் துடிக்கிறது,அதற்குத் தான் கணவன் மூலம் மகளுக்குத் தூது.

இதே விடயத்தை லலிதாவே சொன்னார் என்றால், மகள் அவரின் எண்ணவோட்டத்தைக் கண்டு கொள்வாள்,அதன் பின் நடப்பதற்கு யார் பொறுப்பு ஏற்பது,அதற்குத் தான் கணவனை மிரட்டி அனுப்பிவைத்தாள்.

தீவிர யோசனையில் வந்த கணவனைத் தடுத்தவள்,"என்னங்க சொன்னா",ஆவலுடன் கேட்கும் மனைவியின் பரிதவிப்பை புரிந்தவர்,"ஓவர எதிர் பார்க்காத லலிதா,அவ வரேன்னு சொல்லி இருக்கா,அதுவும் ஒரு கண்டிஷன் வச்சு".

தாய் அறியா சூழ் உண்டோ,"என்ன சொல்லி இருப்பா நான் அவ பக்கமே வர கூடாது,பேச கூடாது,யாருகிட்டயும் என் மக இவனு அறிமுகப் படுத்தக் கூடாது அதானே".

அசந்து விட்டார் சிதம்பரம்,"என்ன லல்லி நேருல பார்த்த மாதிரி சொல்லுற".

“நான் அவளுக்கு அம்மாங்க”.

“அது சரி, பாம்பின் கால் பாம்பறியும்”.

“என்ன சொன்னிங்க”.

இந்த வாய் இருக்கே !அதன் மேல் இரு அடிகளை வைத்தவர்,தனக்கு இருக்கும் இருபத்தி ஒன்பது பற்களையும் காட்டி,சும்மாடா லல்லி,வா தலைக்கு மேல வேலை இருக்கு,அவரது கை பற்றி இழுக்க. அவரது கேலியை பொருட்படுத்தாது லேசாகக் கலங்கியதோ அக்கண்.

அவரது கலக்கத்தைப் பார்த்தவர் என்னடா ? வாஞ்சையாகக் கேட்க.
“அவளுக்கு என்னங்க குறை அறிவு,பணம்,குணம்,மனம் எல்லாம் இருக்கு,அவளா ஆரோகியமா ஒரு குழந்தையைப் பெத்து தர முடியும்,அப்புடி இருந்தும் ஏங்க இந்தப் பேச்சு” ,திருமணச் சந்தையில் அனைவரும் அவளது ஊனத்தைப் பற்றிப் பேசியதை கேட்க கேட்க ,அந்தத் தாய் உள்ளம் பரிதவித்துத் தான் போனது.

பின்பு கண்களை அழுத்தி துடைத்தவர் சற்று தெளிந்தவராக,என் கணக்கு சரியா வருங்க,அவரது நம்பிக்கை அவரையும் தொற்றி கொள்ள,சிறு புன்னைகையுடன் தனது ஆசை மனைவியை அனைத்துக் கொண்டார்.

இங்கு அன்பு விதைக்கப்படுமா என்ன?
 
உங்களுடைய "அன்பு
விதை"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
தனுஜா செந்தில்குமார் டியர்
 
Last edited:
உங்களுடைய "அன்பு
விதை"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
தனுஜா செந்தில்குமார் டியர்
Santhosam amma ninga oru Moratu reader prove panitinga ponga thanks ma u r the boost
 
Top