Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அன்பு விதை – 5

Advertisement

Dhanuja

Well-known member
Member
அன்பு தோழிகளே!

அன்பு விதையின் அடுத்தப் பதிவை கொடுத்துள்ளேன் படித்துப் பார்த்து கருத்தை சொல்லவும்.



அன்பு விதை – 5



இன்று ஞாயிறு சோம்பலாக விடிந்தது அருணுக்கு,சுமார் பத்து மணி அளவில் எழுந்து வந்தவன்,அம்மா காபி குடுங்க சாவகாசமாகச் சோபாவில் அமர்ந்தவன் அதிர்ந்து எழுந்து நின்றான்.திரு திருவென முழிப்பு வேறு. தன் எதிரில் அமர்ந்து தன்னை முறைத்துக் கொண்டு இருந்தான் மனோ.



தலையில் வேகமாக அடித்துக் கொண்டே , “சாரிடா மனோ மறந்து போய்ட்டேன்”.மனோவிடம் பதில் இல்லாமல் போனது,சுசிலா கொடுத்த காபியை பருகியவன் செய்தி தாளில் முழுகி போனான்,கோபமாம். அடுத்து அருண் பேச முயற்சிக்கும் முன்பே.



தூக்க கலக்கத்தில் தள்ளாடிய படியே வந்த வேணி தனது அண்ணன் தான் என்று எண்ணி செய்தித்தாளில் முகத்தைப் புதைத்து இருந்தவனிடம் சென்று, அவனது தோளில் சுகமாகச் சாய்ந்து கொண்டு, விட்ட தூக்கத்தைத் தொடர்ந்தாள்.



முதலில் அதிர்ந்த மனோ பின் வாய் முழுக்கப் பல்லாக, அவள் தலை கோதி வாகாக இறங்கி தோளை அவள் புறம் வளைந்து கொடுத்தான்.அதுவரை நடக்கும் கூத்தை பார்த்துக் கொண்டு இருந்த அருண்,வேகமாக வந்து வேணியை எழுப்ப போக,அவனது கை பிடித்துத் தடுத்துக் கொண்டு இருந்தான் மனோ.



இருவரும் சத்தம் செய்யாமல் சண்டை இட்டுக் கொண்டு இருந்தனர்.வாய் அசைவில் மெதுவாக. “டேய் நாயே விடுடா என் தங்கச்சிய”.



“அவ என் புஜ்ஜி போடா மாட்டேன்”.



“அடுச்சே கொல்லுவேன் விடுடா”.



“முடியாது போடா”.



மகனுக்குக் காபி கொண்டு வந்த சுசிலா இருவரது சண்டையைப் பார்த்தவர்,தனது மகளின் நிலையும் பார்த்து, "ஏய்,வேணி எழுந்திரிடி".அவரது கத்தலில் அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்தாள் மகள்.



தூக்கத்தில் விழித்ததால் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போதுதான் தனக்கு எதிரில் இருக்கும் தமையனை பார்த்தவள். ‘ஐயோ அப்போ இது யாரு’ பதறி விலக,அங்கே மனோ முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு.



“ஹாய் எப்போ வந்திங்க சாரி நான் அண்ணா நெனைச்சு படுத்துட்டேன்.அம்மா எனக்கு இவருனு தெரியாதும்மா”.அவருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை,மனோ முன்பு மகளையும் கண்டிக்க முடியவில்லை.



“எழுந்து பிரஷ் பண்ணிட்டுவா இன்னக்கி அக்காக்கு புடவை எடுக்கப் போறோம்”, அவளை அங்கிருந்து விரட்டியவர்.“டேய் அருண் மீனுக்கும் புடவை எடுக்கணும் எங்கையும் வெளில போயிடாத” என்றவர். “மனோ நீயும் வாப்பா”, என்றார்.



“அவன் ரெஸ்ட் எடுக்கட்டும்.............” அருண் சொல்லி முடிக்கவில்லை. “கிளம்பிடுறேன் ஆண்ட்டி, அவருக்கு பதில் மனோ. அருண் தோள் அனைத்து, “என்ன மச்சான் அப்புடி பாக்குற,வா போகலாம்”.



அறைக்கு வந்தது தான் தாமதம் “டேய் எரும ஏன்டா என் உயிரை வாங்குற,அவ சின்னப் பொண்ணு உனக்கும் அவளுக்கும் எட்டு வருஷம் வித்தியாசம் வருதுடா”.



“அது எங்க பிரச்சனை, நான் உங்க அப்பாகிட்ட பேசிட்டேன் எங்க அப்பாவும் பேசிட்டாரு,வேணி ஓகே சொல்லிட்டா கல்யாணம் தான்.



“அவ நீ நெனைக்குற மாதிரி இல்ல சொல்லிட்டேன் அப்புறம் உன் இஷ்டம்.எனக்கு என்னமோ அவ ஓகே சொல்லமாட்டானு தோணுது”. “சோ வாட் பொண்ண தூக்கிடுவேன்”.



“என்னது இது நிறையச் சினிமா பார்பியா அவ கிட்ட வாங்கிக் கட்டிகிட்டாதான் அடக்குவ,அப்புறம் அசிங்கமா என்கிட்ட வந்து அழுகாத”.



“நான் ஏண்டா அழுகுறேன் ஆம்பள சிங்கம்,இன்னிக்கே அங்கிள் பேசுறேன்னு சொல்லியிருக்காரு கண்டிப்பா உனக்கு அடுத்து எனக்குத் தான்.கல்யாணம் பண்ணிட்டு அவ படிக்கட்டும் நோ ஆப்ஜெக்ஷன்”.



“சில ஜென்மங்க பட்டாதான் திருந்தும்”.மனோ அருண் பேச்சை அலட்சியம் செய்து. “சரி சரி பொண்ணு போட்டோ வச்சு இருக்கியா காட்டு”. “நேருளையே பார்க்கலாம் எங்க கூடத் தான வர”.



“ஹ்ம்ம் அதுவும் சரிதான்”.



----------------------------------------------------------------------------------------------------

அனைவரும் காலை உணவிற்குச் சபையில் கூட.கவனமாக வேணியின் எதிரில் அமர்ந்தான் மனோ.அருண் தலையைக் குலுக்கி கொண்டு அவன் பக்கத்தில் அமர்ந்தான்.



“வாப்பா மனோ நல்ல இருக்கியா,அப்புறம் பிசினஸ் எப்புடி போகுது”.திருவேங்கடம் கேட்க அங்கே பேச்சுத் தொடர்ந்தது.



“நல்ல இருக்கேன் அங்கிள்,இப்போ ஓகே தான் இன்னும் நெறைய மாற்றங்கள் இருக்கு,இப்போதைக்கு வரவுக்கும் செலவுக்கும் ஓகே, அதே போல லாபமும் இல்ல நஷ்டமும் இல்ல.அப்பா பிசினஸ்ல இருந்து காசு எடுத்துதான் பண்ணுறேன் போகப் போகத் தான் தெரியும்”.

அவன் செய்வது ஐ டி ஆப் கிரேட்டிவ் தொழில் என்பதால் பாதி நாள் வெளிநாடு வாசம் தான். (நீண்ட விளக்கம் எதற்கு என்றால் வருங்கால மாமனார் என்பதால்.)



“அதெல்லாம் போகப் போகச் சரியாகும்,அப்புறம் அப்பா நேத்து பேசுனாரு நானும் சுசீலாவும் பேசுனோம்”.தலை மூடி முதல் பாதங்கள் வரை விழிப்புக் கொண்டது மனோவிற்கு,இப்போது அருணும் சற்றுக் கவனித்தான்.



திருவேங்கடத்திற்குப் பேச்சுகள் குறைவு என்பதால் அவசியமான விடயங்கள் மற்றுமே அவர் பேச்சில் இருக்கும், இப்போதும் அது போலவே தான்.உடனே விஷியத்தை முடிக்க எண்ணி கேட்டார் தள்ளி போகும் காரியம்,அவரை பொறுத்த வரைக்கும் விரையம் தான்,அதனால் தான் தங்கள் மக்களின் திருமணம் சாதகம் பாதகம் பார்த்து எடுக்கப் பட்ட முடிவு.



“என்ன சொன்னாரு அங்கிள்”.



“வேணியை பெண் கேட்டாரு உங்களுக்கும் இதில் விருப்பம் தாணு சொன்னாரு”.பேச்சை முடிக்கும் முன்பே.



அப்பா! தாத்தாவெல்லாம் நான் கட்டிக்க மாட்டேன் கிச் குரலில் கத்திவிட்டாள் வேணி.அவளுக்கு அதிர்ச்சி என்ன தான் நடக்குது இந்த வீட்டில்.ஏற்கனவே அருணின் திடிர் திருமணம், அதுவே அவளைக் குழப்பி அடித்தது,இதில் தனக்குமா.



அவளது தாத்தா என்ற விழிப்பில் அருண் சிரிப்பை அடக்க, நீலா சிரித்தே விட்டாள்.சுசிலா தான் இருவரையும் கண்டித்தார் ஏய் பெரியவங்க முக்கியமா பேசும் பொது என்ன சிரிப்பு,அவ தான் சின்னப் பொண்ணு நீயுமா நீலா.



இருவரும் ஒருசேர “சாரி மா” என்றனர்.



பின்பு திருவேங்கடம் சங்கடமாக “தம்பி சின்னப் பொண்ணுக தப்பா எடுத்துக் காதிங்க.உங்களுக்கு அவளுக்கும் வயசு வித்தியாசம் இருந்தாலும் அவளுக்குப் புடுச்சா பேசலாம் அப்புடின்னு தான் முடிவா இருந்தோம்.அவர் சற்று நிறுத்த”.



வேணி எழுந்து சென்று விட்டாள் முகம் கருத்து விட்டது மனோவிற்கு.சற்று கனமான மௌனம் அனைவரும் உணவை மட்டும் உண்டு.கடைக்குக் கிளம்பி விட்டனர்.அருணின் காரில் மனோ மட்டும்.தனியாகப் பேச சொல்லி திருவேங்கடம் அருணிடம் சொல்லிவிட்டார் மகளின் அநாகரிகம் அவருக்குப் பிடிக்கவில்லை.



“டேய் மனோ பீல் பண்ணுறியா” இல்லை என்பது போல் தலையை ஆட்டியவன்.



“எனக்குப் பொண்ணு ரெடியா இருக்கு அருண். வேணிய ரொம்பப் புடிக்கும் அதான் அம்மா அப்பாகிட்ட சொல்லி கொஞ்சம் காத்திருக்கச் சொன்னேன்.உங்கவீட்டுல பேசிட்டுப் பார்த்துக்கலாம் அப்புடின்னு.இப்போ அந்தப் பொண்ணுக்கு ஓகே சொல்லவேண்டியது தான்.கொஞ்சம் கஷ்டமா தான் இருக்குப் பட் என்ன பண்றது”.



ஆச்சிரியமாக அவனைப் பார்த்த அருண் “இந்த மெச்சூரிட்டி தாண்ட அவ கிட்ட மிஸ்ஸிங் அதான் வேணான்னு சொன்னேன்,எங்க வீட்டுல யோசிக்காம பேசுற ஒரே ஆள் அவதான்”.



“பரவாயில்லை விடுடா இருவரும் பேசிக்கொண்டே கடைக்கு வந்துவிட்டனர்”.



அவர்கள் உள்ளே செல்ல முதலில் விக்னேஸ்வரனை பார்த்த மனோ ஆர்வம் மிக “அருண் விக்னேஷ் டா”.



“ஆர்வத்தைக் குறை மாப்பிள அவன் தான் என் தங்கச்சிய கட்டிக்கப் போறான்”.இன்று அனைவருக்கும் அதிர்ச்சி நாள் போலும் மனோ அதிர்ந்து என்னடா சொல்லுற. “இதையும் கேட்டு அதிர்ச்சி ஆகு நான் கட்டிக்கப் போறது அவன் தங்கச்சியைத்தான்”.



“மீனவா............. ஆமாடா எப்புடி மச்சான் நீ ஷாக் ஆகம இருக்க”.“இதுல என்ன ஷாக் விக்னேஷுக்கு இப்போ வரைக்கும் நடந்தது தெரியாது.அதே மாதிரி மீனா ப்ரோபோசல் எதார்த்தமா நடந்தது”.



“அதுசரிட நீ எதுக்குத் தங்கச்சிக்கு அவனைப் பார்த்த”.மனோவை தீர்க்கமாகப் பார்த்தவன்.



“அவன் தெரிஞ்சு தப்பு செயலை மனோ.அவுங்க அம்மா அப்பாக்கும் தெரியாதுன்னு நினைக்குறேன்,மீனா தான் தெளிவா மூவ் பண்ணியிருக் கா”. “அந்த பொண்ணு அப்பவே ஸ்மார்ட் தாண்ட என்ன ஆண்டவன் அதுக்கு இப்புடி ஒரு குறையக் கொடுத்துட்டான்”.



“அதை ஏன் பாக்குற,அவ பிளஸ் என்னனு பாரு” அருணிடமிருந்து அம்பாக வந்தது பதில்.கடை என்றும் பாராமல் அவனைக் கட்டி அனைத்தவன் குட் அருண்.எனக்கு இது மாதிரி மனசு வருமான்னு தெரியல பட் உன் தெளிவு,மனசு,முடிவு செம போ.



நண்பர்கள் இருவரும் பேசி கொண்டு இருக்க அவர்களிடம் வந்த லலிதா. “வாங்க மாப்பிள்ளை” என்று அழைக்க நண்பர்கள் இருவரும் பேச்சை நிறுத்தி அவர்களைப் பின்பற்றினர்.மனோவை பற்றி அறிமுகம் செய்து கொண்டே நடந்தான் அருண்.



மீனா அங்குச் சாதாரணப் பருத்தி சுடிதாரில் தலையைப் பின்னி சிறுது மல்லி பூ தோள் தொடாமல்,அதற்கு எத்ரிமறையாக நீலாவும் வேணியும் டிசைனர் சுடிதாரில் தலை நிறைய மல்லி பூ வைத்து,கடையை ரணகளம் செய்து கொண்டு இருந்தனர்.



லலிதா, “மீனு மாப்பிள்ளை கூடப் போய் டிரஸ் செலக்ட் பண்ணு” போறியா என்று கேட்காமல் மகளிடம் செய் என்பது போல சொல்லி. “கல்யாணப் புடவை என்ன கலர் நீலாம்மா” என்று சுசீலாவை கேட்க.அவர் க்ரீன் அல்லது மஞ்சள் என்று சிரித்தார்.



தலையை அவரைப் பார்த்து ஆட்டிய மீனாவை பார்த்தார் லலிதா.அவர் பார்வை புரியாத மகளுக்கு மெல்லிய குரலில் சுசீலாவிடம், “சரிங்க அத்தை” என்று அருணிடம் சென்றாள். “ஏங்க பொண்ண பயம் படுத்துறீங்க”.



“அப்போதான் அவளுக்குப் பழக்கம் வரும்.இனி அவ கூட என்னால வர முடியாது நீலாம்மா அவ தான் பார்த்துக்கணும்”. “அதெல்லாம் என் மருமக பார்த்துப்பா” என்ற சுசிலாவின் கையைப் பிடித்த லலிதா.இந்த புரிதலுக்காகத் தான் உங்க சம்பந்தம் வேண்டுமுனு பிடியா நின்னேன். கல்யாணம் பண்ண கேட்டபோது கொஞ்சம் உறுத்தலா இருந்தது.



சுசீலாவிற்கு லலிதாவின் மனநிலை புரிந்தது,ஆதரவாக அவர் கையைத் தட்டி கொடுத்து நானும் சராசரி தாய் தான் மீனா அம்மா.என் பையனுக்குப் பிடிக்கும் பொது நான் என்ன சொல்லுறது.அதுவும் இல்லாம என் கணவர், என் மாமனார், இந்தக் கருணை இல்லம், எல்லாம் எனக்கு ஒரு பக்குவத்தைக் கொடுத்திருக்கு,நல்ல நாளில் எதுக்குக் கவலை வாங்க பிள்ளைங்களைப் பார்ப்போம்”.இரு தாய்கள் உள்ளமும் நிறைந்து இருந்தது.



அங்கு “ஏங்க இந்தப் புடவை எப்புடி இருக்கு” ஒரு பதட்ட குரலில் மீனா.அவளை ஒரு புண் சிரிப்புடன் பார்த்த அருண்.உங்க அம்மா சொன்னாங்களா இப்புடி கேட்க சொல்லி.தலையைக் குனிந்து கொண்டாள் மீனா.

“அவளது முகத்தை நிமிர்த்தியவன் நீ குடுத்துவச்ச குழந்தை தெரியுமா”.புரியாமல் “எதுக்கு அப்புடி சொல்லிரிங்க”. “உனக்கு தங்கமான அம்மா”.ஹ்ம்ம்..... ஆமா மெல்லிய குரலில் ஓர் சலிப்பு மீனாவிடம்.



லலிதாவின் சின்னச் சின்னச் செயல் கூட மகளின் நலனை முன் நிறுத்தியே இருக்கும்.மங்கையான பிறகும் மகளின் பின் சுற்றி தெரியும் தாய்யைப் பற்றி மீனா அறியவில்லை.அவளுக்கு லலிதாவை பிடிக்கும், ஆனால் அம்மா ஏன் இப்படியெல்லாம் என்று ஒரு சலிப்பு,கோபம்,எரிச்சல் அவளுக்கு.



அவர்கள் தன் நிலையைப் புரிந்து கொள்ளாமல் செயல் படுவது தான் அவளது வருத்தமே,யாரு சொல்வது அவளுக்கு அவளது தாய் மட்டும் தான் அவளைச் சரியாக வழி நடத்துகிறார் என்று.இன்று வரை லலிதா என்றால் நாளை முதல் அருண்.



அன்பு வரம் பெற்றவள் மீனா.அவளது உடல் நிலை எண்ணி கருணை அற்ற கடவுள் என்று சபித்தால் அது முட்டாள் தனம்.அவர் அன்பு என்னும் விதையைத் விதைத்துள்ளார் என்பதை யார் அறிவார்.



அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன் பார்வை அபாயகரமாக மாறுவதைப் பார்த்த மீனா.மீண்டும் தாயிடம் தஞ்சம் அடைந்தாள்.அவரோ மருமகனை கன்னித்தது போல, “நீங்க மீனவ கூட்டிட்டுக் கார் பார்க்கிங் போங்க மாப்பிள்ளை நாங்க டிரஸ் எடுத்துட்டு வரோம்”.



கண்டிப்பாகத் தன் மகள் புடவை தேர்வு செய்ய மாட்டாள் என்பதைக் கணித்துத் தான் லலிதா அருணிடம் அனுப்பிவைத்தார்.அருண் அவளது கை பற்றி நடத்தி சென்று காரில் அமரவைத்து.



அப்பா ...... என்று பெருமூச்சுடன் உங்க அம்மா இந்த வார்த்தை சொல்ல ஏவுளோ நேரம் காத்து இருக்குறது.ஒன்றும் புரியாமல் “எதுக்கு” என்றவளை அருகில் இழுத்து, “இதுக்கு என்று கொடுத்தான் கன்னத்து முத்தமென்று”.மொத்தமும் காலி மீனா........இனி ஓர் இரு வார்த்தையும் அருணிடம் இல்லை என்பது உறுதி .
 
Top