Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அன்பு விதை – 7

Advertisement

Dhanuja

Well-known member
Member
அன்பு தோழிகளே

அன்பு விதையின் அடுத்தப் பதிவை கொடுத்துவிட்டேன்,உங்கள் கருத்தை எதிர் நோக்கி நான்.






அன்பு விதை – 7
வீட்டின் அழைப்பு மணி அடிக்க,தூக்கம் கலையாத கண்களோடு வந்து திறந்தான் மனோ.அவன் கதவை திறந்த மறு நொடி பெண் வீட்டார் அவனைத் தள்ளி கொண்டு உள்ளே நுழைந்தனர்.அவனுக்கு அவர்கள் யாரென்று பிடிபடவே சற்று நேரம் பிடித்தது.


“வாங்க. வாங்க.. வாங்க மாமா,அத்தை. வா நர்மதா...........”


இவர்களது அரவம் கேட்டு தான் மனோவின் தாய்,தந்தை வந்தனர், முன் தினம் சோர்வு மீதம் இருந்தது அந்தப் பெரியவர்களுக்கு.தனது சொந்தத்தைப் பார்த்ததும் “வாங்க பெரியப்பா…..வாங்க அண்ணே…..” என்று அழைக்க,இருவரும் ஒன்றும் பேசாமல் முறைத்துக் கொண்டு இருந்தனர்.


மனோவின் பெற்றோர்களுக்கு ஒன்றும் விளங்க வில்லை,நேற்று தான் பூ வைக்கும் விழா முடித்து விட்டு சென்றனர்.இன்று காலையிலே வந்து இருக்கும் பெண் வீட்டாரை எண்ணி கலக்கம் தான் வந்தது.


“என்ன அண்ணே பேச மாட்டேங்கிறீங்க, என்ன விஷயம் எல்லாரும் வந்து இருக்கீங்க” என்ற மனோவின் தாய் பேச்சை ஆரம்பிக்கப் பொங்கிவிட்டார் பெண்ணின் தந்தை.


“உன்ன நம்பி தானே என் மகளைக் கல்யாணம் பண்ணி குடுக்கச் சம்மதிச்சேன்,நீ ஏன் மாப்பிள்ளை ஒரு பொண்ண விரும்புறாருனு சொல்லல.உண்மையான பாசம் இருந்தா சொல்லி இருப்ப” ஆரம்பிக்கும் போதே உச்சம் தொட்டார் பெண்ணின் தந்தை.


‘என்னது.....’ என்று அதிர்ந்தது வேறு யாருமில்லை நம் மனோ தான்.பாவம் அவனுக்கே தெரியாத அந்தக் காதலி யார் என்ற அதிர்ச்சி தான்.வேணி மீது ஆசை உண்டு தான் இல்லை என்பதற்கில்லை.அதற்காக விடலை பையன் போல் அவள் பின் சுற்றி திரியவில்லையே,முயற்சித்துப் பார்த்தான் பிடித்தால் அவள் தான் மனைவி என்பது போல்.அவளுக்கு விருப்பமில்லை என்பதை அறிந்து கொண்டு விலகி விட்டான்.


இப்போது என்னவென்றால் ஒரு புதுக் கதை,புது காதலி வேறு தன்னைச் சுதாரித்தவன் “இங்க பாருங்க மாமா,நான் லவ் பண்ணா, எங்க அம்மா,அப்பா கல்யாணம் பண்ணி வைப்பாங்க எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.நான் எதுக்கு மறைக்கணும் நீங்க தப்பா புருஞ்சு இருக்கீங்க”


‘இல்லை’ என்ற பதில் நர்மதாவிடம் இருந்து வர,அவளை ஏறிட்டேன் மனோ “என்ன சொல்லுற நர்மதா”.


“ஆமா எனக்கு எல்லாம் தெரியும்,அந்த வேணி பொண்ணு சொல்லுச்சு எல்லாமே என்று போட்டு உடைக்க” மனோக்கு புரிந்து விட்டது.இது அவள் வேலை தான் என்பது,சிறு பிள்ளை தனம். இதனால் எத்தனை பேருக்கு மனக்கஷ்டம் என்பதை அறியாமல் அவள் பண்ணிய செயல் மனோவை கோபம் கொள்ள வைத்தது.


அவன் அமைதியாகத் தனது அறைக்குச் செல்ல,அவனது மௌனம் சுற்றி இருக்கும் பெரியவர்களுக்குத் தோதகி போனது.பேச்சு கரை தொட இறுதியில் கரையை மீறி விட்டது.மனோவின் தந்தை அனைவரையும் வெளியில் செல்லும் மாறு கத்த,அவரது கத்தலுக்குக் கட்டுப்பட்டுப் பொருமி கொண்டே சென்றனர் பெண் வீட்டார்.


“அங்குத் தனது அறைக்குச் சென்ற மனோ போனை எடுத்துக் கோபமாக அருணிடம் டேய் இன்னும் பத்து நிமிசத்துல உன் குடும்பத்த கூட்டிட்டு வர,முக்கியமா உன் தங்கச்சி வேணி ராட்சசியையும் கூட்டிட்டு வா.பெண்ணாட பெத்து வச்சு இருக்கீங்க பேய்”.


போனை எடுத்துக் காதில் வைத்தது தான் தாமதம் என்ன ஏது என்று சொல்லாமல் படப் படத்த நண்பன்,தனது பதிலை கூட எதிர் பார்க்காமல் வைக்க ஏதோ பெரிய சிக்கல் போலும் என்ற அருணும், அவன் சொன்னது போல அனைவரையும் கூட்டி கொண்டு,அடித்துப் பிடித்து மனோ வீட்டுக்குச் சென்றான்.


அங்குச் சென்றவர்களை வா என்று கூட அழைக்கவில்லை, பெரியவர்கள் இருவருக்கும் பேச்சே வரவில்லை அவமானமாக இருந்தது.இதுவரை மனோவின் தந்தை யாரிடமும் இப்புடி எல்லாம் நின்று வாக்குவாதம் செய்ததில்லை.அதற்குத் தேவையும் வந்ததில்லை,ஆனால் இன்று?


மகன் தவறு செய்து இருந்தால் கூடத் தேவலாம்,அவனோ அவனது விருப்பத்தைத் தன்னிடம் சொல்லி சம்மதம் பெற்ற பின்னே,தன்னை விட்டுப் பெண் கேட்க சொன்னான்.இதில் எங்கு இருந்து அவனைக் குற்றம் சொல்வது.இந்த சிறு பெண் தான் விளையாடி இருக்கிறாள்,நட்பு கொண்ட குடும்பத்தைக் கடிந்து பேசவும் முடியவில்லை.


மனோ தான் அவர்களைப் பார்த்து “வாங்க அங்கிள்,வாங்க ஆண்ட்டி”என்றவன்.சிறு இடைவெளி கூடக் கொடுக்காமல் “உங்க பொண்ணு என்ன நல்லா அசிங்க படுத்திட்டா.புடுச்சு இருக்குனு டீசண்டா பொண்ணு கேட்டேன்ல அதான்” என்று மெதுவான குரலில் கோபத்தை அடக்கி பேச.


மூவரும் திடுக்கிட்டனர் வேணியைத் தவிர.என்ன அழுத்தம் பாரேன் அவளைக் கடிந்தவன் முன்னேறி செல்ல,மனோவின் தாய் அவன் கை பற்றி நிறுத்திவிட்டார்.


“மனோ பெரியவங்க நாங்க இருக்கோம்.கொஞ்சம் பொறுமையா இரு” என்றவர் நடத்த வற்றைச் சுருக்கமாகத் திருவேங்கடத்திடம் சொல்ல, மனிதனுக்குப் பொறுமை காற்றில் பறந்தது.சிறுதும் தாமதியாமல் கை நீட்டிவிட்டார்.


இதுவரை கண்களால் மட்டும் கண்டிக்கும் தந்தை கை நீட்டியது அதிர்ச்சியைக் கொடுத்தது வேணிக்கு.இருந்தும் அடித்துவிட்டாரே என்பதைத் தவிர,ஐயோ தப்பு செய்துவிட்டோமே என்ற எண்ணம் வரவில்லை நமது வேணிக்கு.


அருணுக்கு தரம சங்கடமாகி போனது ‘என்னது இது’ வேணி இப்புடி செய்துவிட்டாலே என்ற கவலை.நண்பனின் நிலையில் தான் இருந்தால் நினைத்து பார்க்கவே முடியவில்லை.அவனால எதுவுமே பேச முடியவில்லை கை கட்டி வேடிக்கை மட்டுமே.


இருகரம் கூப்பி அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார் திருவேங்கடம் தம்பதியினர் "மனோ அம்மா எங்களை மனுச்சுடுங்க" என்றவர்கள் பார்த்துப் பதறினர் மனோவின் பெற்றோர்கள்.


அவர்களுக்குத் தெரியாத என்ன? எப்பேர் பட்ட மனிதர்கள் இவர்கள் அன்பை மட்டுமே கொடுங்கோலக கொண்டு ஆட்சி செய்யும் கருணை இல்லத்தின் தூண்கள் அல்லவா.இதே வேறொருவர் விளையாடி இருந்தால் மனோவின் தந்தை பதிலடி கடுமையாக இருக்கும்,ஆனால் இப்போது அது முடியாதே.


“என்ன திருவேங்கடம் இது சின்னப் பொண்ணு விடுங்க”வீரியம் புரியாமல் காரியம் செய்துவிட்டு அதிர்ந்து நின்ற வேணி தனது தந்தை மன்னிப்பு கேட்கவும் பொங்கி விட்டாள்.


"இங்க பாருங்க உங்க பையன நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்,அதுக்காக எங்க அப்பா மன்னிப்புக் கேக்கெல்லாம் வேணாம்" என்றவளை


“வாய்ய மூடி வேணி சத்தம்! அப்பா பார்த்துப்பாங்க” என்ற அருண் அவளைக் கடிய,அமைதி காத்தால் பெண்”.


‘பண்ணுறதெல்லாம் பண்ணிட்டு கொழுப்ப பாரேன் இவளுக்கு,எனக்கு வாழ்கை கொடுக்குற மாதிரி பேச்சு வேற,தனியா மட்டும் என்கிட்ட சிக்கிடாத மனதில் மட்டுமே திட்டி கொள்ள முடிந்தது”


திருவேங்கடம் “மனோ அப்பா ஒரு ரெண்டு நாள் போகட்டும் நானே உங்கள பார்க்க வரேன்” என்றவர் அவரது பதலிலை எதிர்பார்க்காமல் கை கூப்பி விடைபெற்றார்.


அவரும் என்னதான் செய்வார் பெண் செய்திருக்கும் செயல் அப்படி.அவனைப் பிடித்தமில்லை என்ற சொன்னபின் ‘என்ன தேவைக்கு இது’ போலச் செய்து வைக்க வேண்டும் மகளைக் கருவி கொண்டே விடை பெற்றார் மனிதர்.


வீட்டுக்கு சென்றால் தன்னை உண்டு இல்லையென்று தனது தந்தை ஆக்கி விடுவார் என்பதை அறிந்த வேணி தனது அண்ணனை பாவமாகப் பார்க்க. “பண்ணறேதெல்லாம் பண்ணிட்டு என்ன பாவமா வேற பார்க்குற,இப்போதைக்கு வீட்டுக்கு வந்துடாத எங்கயாவது தோழிங்க வீட்டுக்கு போயிடு,வரும் பொது நான் கூட்டிட்டு வரேன்” சரியென்று தலை அசைத்தால் வேணி.


மனோ அனைத்தையும் பார்த்துக் கொண்டே தான் இருந்தான்.அனைவரும் விடைபெற.மனோவின் பெற்றோர்களைப் பார்க்க அச்சம் கொண்டு குனிந்த வாறே “வரேன் ஆண்ட்டி, சாரி” என்றவள் சிட்டாகப் பறந்து விட்டால்.வெளியில் வந்து பெருமூச்சிட்டவள் ஆட்டோ தேடினால்.அண்ணனும்,பெற்றோரும் வந்த காரில் செல்ல,இவள் ஆட்டோ பிடிக்கத் தெரு பகுதிக்கு வந்தாள்.


முன்னும் பின்னும் ஆட்டோ கிடைக்கிறதா என்றவரே தனது கண்களை நான்கு புறமும் சுழட்டியவள் வட்டத்தில் விழுந்தது ஓர் ஆட்டோ, அதனை நோக்கி ஓர் எட்டு எடுத்து வைக்க .மனோ வேகமாகக் காரை கொண்டு வந்து அவள் புறம் உரசும் போல் நிறுத்தினான்.


நொடி நேரத்தில் கார் கதவை திறந்தவன் ஒரு பார்வை தான் பார்த்தான். ரோபோவாக பயத்தில் காரில் ஏறி அமர்ந்து இருந்தாள் பெண்.கார் சீறிப் பாய்ந்தது.


அங்கு மீனா அருணுக்காக அவனது அலுவலகத்தில் காத்துக் கொண்டு இருந்தாள்.அவளுக்கு அவனிடம் முக்கியமாகச் சிலவற்றைப் பேச வேண்டும்.இன்னும் மூன்று நாள் சென்று திருமணம் என்ற நிலையில் பெண்ணவளுக்குப் பயம் பிடித்துக் கொண்டது.


சராசரி பெண்ணாக இருந்தாள் கூடத் திருமணம் அச்சம் என்பது இயல்பு தான் என்று சொல்லலாம்.மீனவோ அதற்கும் மேல் என்பதே அச்சத்தின் அளவும் கூடி தான் இருந்தது.அவன் நெருங்கி வர விலகி செல்லும் இந்த மீன் குட்டி அழகாக வந்து வலையில் விழுந்தது தனது மீனவனிடமே,விடுவானா கள்ளன்.


கணினியின் முன் இரு கன்னம் தாங்கி அவளைத் தனது அறையில் இருந்து ரசித்திருந்தான் அருண்.படம் புடிக்கும் கருவி மூலம் காதல் வளர்த்துக் கொண்டு இருந்தான் (வாழ்க சிசி டிவி கேமரா).பத்து நிமிடங்கள் கரைந்த பின்பே அவளைப் பார்க்க அனுமதி அளித்தான்.


ஓர் மென் சிரிப்புடன் வந்தவள் பயத்தில் தடுமாறி விழ போக. அந்த ராட்சசன் அவளையே விழுங்கி இருந்தானே தவிர உதவிக்கு எழ வில்லையே. பெண்ணவளுக்குத் தான் கோபம் வந்தது ‘கால் முடியாத பெண் தானே உதவி செய்யக் கூடாதா’ கல் போல் அல்லவா அமர்ந்து இருக்கிறான் கடவுளே இவனுடன் காலமெல்லாம் நான் என்ன செய்ய.


தட்டுத்தடுமாறி அமர்ந்தவள் “நான் உங்க கூட முக்கியமா பேசணும் கொஞ்சம் என்கூட வர முடியுமா” என்றவளை பார்த்து கேட்டனே ஒரு கேள்வி.


“வந்தா என்ன தருவ”.


“புரியாமல் பார்த்தவள் நான் முக்கியமா பேசணும் அருண்”.


ப்ச்….. அதான் சொல்லிட்டியே சரி நான் வரணும் அப்புடின்னா நிறுத்தியவன்… “ஜஸ்ட் ஒரு பைவ் மினிட்ஸ் லிப் லாக்.ஐ ஜஸ்ட் டேஸ்ட் தட் ஜூசி லிப்ஸ்” என்றவனை ஒரு பார்வை பார்த்தவள் சற்றுக் கோபமாக எழுந்து சென்றுவிட்டாள்.


அவன் அவளைப் போகாதே என்று சொல்லவில்லை,இத்தனை தூரம் வந்த பெண்ணைப் பேசியே விரட்டி விட்டோமே என்ற எண்ணம் சிறுதும் இல்லாமல் அவன் வேலையைத் தொடர்ந்தான்.


வெளியில் கார் நிறுத்தம் வந்த மீனா நிலை தான் மோசம்.அவளது மண நிலைக்கு இது எதுவும் ரசிக்கவில்லை.பாவி எப்புடி கேட்கிறான் பார்.வா என்ற அழைப்பில்லை,நல்ல இருக்கிறாயா என்ற நல விசாரிப்பில்லை,


இந்த பெண் முக்கியம் என்று சொல்கிறாள் என்னவென்று கேட்போம் என்ற பொறுப்பில்லை இவனை நம்பி நான்.ஐயோவென்று இருந்தது பெண்ணுக்கு இதற்குத் தான் தனக்குத் திருமணமே வேண்டாம் என்று அடித்துக் கொண்டேன் கேட்டார்களா? பெண்ணுக்கு தாங்கவில்லை.


பொதுவாக மீனாவை போல் உள்ளவர்களுக்குக் கோபம் சற்று அதிகம் தான்.அவர்களது பாதுகாப்பின்மை ஒரு புறம் ,உடலின் உபாதை ஒரு புறம் என்ற பயமாகக் கோபமாக வெளி படும்.இன்னும் அவர்கள் நிலையில் அதிகம் உள்ளது இதையெல்லாம் அறிந்து தான் லலிதா மகளிடம் பக்குவமாக நடந்து கொள்வார்,ஆனால் இனி அருணின் குணத்திற்கு அவனுடனான வாழ்க்கை அச்சத்தைத் தான் கொடுத்தது.


அவள் எண்ணி கொண்டு இருக்கும் போதே அருண் வந்து விட்டான்.அவளது கை பிடித்துத் தனது காரில் தள்ளி,காரை எடுத்தான் தள்ளிய வேகத்தில் பழுதாகி போன கையை ஊன்றி வைக்க வலி உயிர் போனது,அப்போதும் அருண் திரும்பவில்லையே……..


இந்த மூன்று ஜோடிகளின் திருமண வாழ்வில் விளையாட விதி தனது முதல் அடியை அழகாக எடுத்து வைத்து விட்டது.


இத்திருமணப் பந்தம் அன்பை விதைக்குமா? வம்பை விதைக்குமா ?என்பதைப் பார்ப்போம் காலத்தோடு இணைந்து.
 
Top