Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அன்பு விதை – 8

Advertisement

Dhanuja

Well-known member
Member
அன்பு தோழிகளே!

அன்பு விதையின் அடுத்தப் பதிவை கொடுத்துவிட்டேன் படித்துப் பார்த்து கருது கூறவும்.உங்கள் கருத்தை எதிர் நோக்கி நான்.


அன்பு விதை – 8

பேச வேண்டும் என்றவள் வானத்தை வெறித்து நிற்க,கேட்க வந்தவன் அவளை வெறித்து நின்றான்.முன்பின் வெளி ஆட்களுடன் பழகிருந்தால்,பகுர்ந்திருந்தால் பேச்சு இயல்பாக வந்து இருக்குமோ என்னவோ.அருணை அழைத்து விட்டு இப்போது பேச நா எழவில்லை, அவள் பேச போவதில்லை என்பதை அறிந்து அவனே பேச்சை தொடங்கினான்.

“மீனு குட்டி ஏற்கனவே செம கடுப்புல இருக்கேன்,என் தங்கச்சி குட்டி பிசாசு என்ன வச்சு செஞ்சுருச்சு,நீயும் உன் பங்குக்குப் படுத்தாதடி” அவனது செல்ல கோபமும் சிறு கடுமையும் அவளைப் பேச வைத்தது.

மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்தவள் மெதுவாக “அண்ணா அண்ணிகிட்ட அவனைப் பத்தி சொல்ல போறதா சொன்னான்.நான் கல்யாணத்துக்குப் பிறகு சொல்லுன்னு சொல்லிட்டேன்.உங்க தங்கச்சி எப்புடி? எதுக்குக் கேக்குரேனு உங்களுக்குப் புரியுதா” என்றவளை இயலாமையுடன் பார்த்தவன்.

“எல்லாரும் ஒரு முடிவுல தான் இருக்கீங்க போல,ஏன் பொண்ணு பார்க்க வந்தப்பவே சொல்லியிருக்க வேண்டியது தானே” இவர்கள் பண்ணும் கூத்துக்கு மீண்டும் வெளி நாட்டுக்கே போய்விடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டான் பாவம்.

“லூசா நீங்க”

“தெரியுதுல நீங்க கேக்குறதும் அதே மாதிரி தான் இருக்கு லூசுங்களா,ஏற்கனவே ஒருத்தி பிரச்சனை பண்ணி வச்சுருக்கா அதுவே முடிவுக்கு வரல,அடுத்து நீங்க ஆரம்பிங்க,உங்க அண்ணனுக்கு என்ன தியாகினு நினைப்பா”

“முன்னாடி சொல்லுறது எனக்கும் நல்லதுன்னு படுது”

“அப்போ டவுட்டு தான்”

“என்ன”

“உங்க அண்ணன் கல்யாணம்” அவன் சொன்ன தினுசில் பாவமாக அவனைப் பார்த்து வைத்தாள் மீனா.அவளது தோற்றம் கொண்டு தெளிந்தவன்.
“இங்க பாரு மீனா ஒரு பொண்ணோட அண்ணனா நான் இந்தக் கல்யாணத்தை வேண்டாம் தான் சொல்லுவேன்,அதே ஒரு நண்பனா யோசுச்சா….. அவனுக்குப் பொண்ணு கொடுக்கலாம், அப்புடி யோசுச்சு தான் அப்பா கேட்டப்போ கடந்த காலத்தை யோசிக்காம சரினு சொன்னேன்,நீயும் உங்க அண்ணனும் கல்யாணம் முடியுற வர பொறுமையா இருங்க,அவளுக்கு எப்போ தெரியுதோ அப்போ தெரியட்டும்”.

நீ ஒரு அளவுக்கு மேல அவனோட விஷியத்துல தலையிடாத, அவனையே யோசிக்க விடு,செய்ய விடு.அவனுக்குக் கல்யாணம் பண்ண அப்புறம் நீ கூடவே வர முடியுமா.

“முடியாது தான் ஆனா ரொம்பப் பயந்துக்குவான்.அவனைப் பத்தி தெரியும் தானே உங்களுக்குப் படிப்பு,பிசினஸ் மத்த விஷியத்துல அவன்கிட்ட கூட நெருங்க முடியாது.அவனோட பலவீனம் அந்த ஒரு வருஷம், மறக்க முடியல,குற்ற உணர்ச்சினு கூடச் சொல்லலாம். என் தப்பு தானே சொல்லிகிட்டே இருப்பான்”.


“சரிடா நீ சொல்லுறத புரிஞ்சுக்க முடியுது,நம்பள மாதிரி எல்லாரும் இருப்பாங்கன்னு சொல்ல முடியாது, அதை நீங்க இரண்டு பெரும் புருஞ்சுக்கோங்க,கல்யாணம் ஆக இன்னும் மூணு நாள் தான் இருக்கு,இப்போ தான் உங்களுக்கெல்லாம் இது தோணுமா”தனது தங்கை செய்து வைத்திருக்கும் காரியம்,இப்போது இவள் பேசியது எல்லாம் அவனுக்கு எரிச்சலை தான் கொடுத்தது.

எரிச்சலை மறைத்தவன் அவளிடம் நெருங்கி “இங்க பாரு மீனா எதையும் யோசிக்காத கல்யாணத்தைச் சந்தோசமா அனுபவை ஏன்னா? வாழ்க்கையில ஒரு முறை தான் திருமணம் நிகழ்வு வரும்.உங்க அண்ணன்கிட்டயும் சொல்லு”.

சரியென்று தலை அசைத்தவளை அணைக்க வர,சுதாரித்தவள் இரண்டடி தள்ளி நின்றாள்,அவளது விலகல் சிரிப்பை தர சத்தமாகச் சிரித்தவன் “உனக்கு மூணு நாள் தான் டைம் அதுக்குள்ள திருமண உறவை ஏத்துக்கப் பழகு,

இது சினிமா கிடையாது உனக்காக என்னால டைம் எடுக்க முடியாது புரியும் நினைக்குறேன்.இப்பவே முப்பதுக்கு மேல வயசு பறக்குது,இதுல உன்ன அருஞ்சு,புருஞ்சு குடும்பம் நடத்தி காதல் பண்ணி ,குழந்தை பெத்து,அதுக்கே எனக்கு நாப்பது ஆயிடும்.அப்புறம் எப்புடி குழந்தைகளை வளர்க்கிறது சொல்லு என்று நியாயம் கேட்க” பெண்ணவள் திருத்திருத்தாள்.

“முழிக்காத மீனு குட்டி எதார்த்தம் இது தான்,நீ ரொம்ப யோசிக்குற அதுவும் ஒரு குட்டி வட்டத்துக்குள்ள இருந்து,அது சரியில்லை புரியுதா” என்றவனைப் பார்த்து குத்துமதிப்பாகத் தலை அசைத்து வைத்தாள் அந்தப் பேதை.

பின்பு இருவரும் வீட்டை நோக்கி சென்றனர்.அவளை அவளது வீட்டில் விட்டுட்டு தனது தங்கையை அழைக்கச் சென்றான்.தன்னிடம் ஒன்றும் பேசாமல் விடை பெற்றுச் செல்லும் அருணை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே சென்றாள் மீனா.

------------------------------------------------------------------------------------------------

வாசலில் தானாகக் காத்திருக்கும் தங்கையின் முன் தனது வாகனத்தை நிறுத்தியவன் அவள் ஏறியதும் எதுவும் பேசாமல் காரை எடுத்தான்,சிறிது தூரம் சென்ற பின் ஒரு மரத்தின் ஓரம் காரை நிறுத்தியவன் அவள் புறம் திரும்ப,

அண்ணனது தீடிர் செய்கையில் பயந்து போனாள் வேணி "பயப்புடாத பெரிய பெரிய வேல பண்ணும் போதெல்லாம் வராத பயம் எப்போ என்ன” கடுமையாகக் கேட்க.

“நீயும் ரொம்பத் திட்டுற என்ன”
“நீ பண்ணுன வேலைக்குக் கொஞ்சுவாங்களா உன்ன,எல்லாமே விளையாட்டு தானா? உன்ன ரொம்பப் புடுச்சு தான் மனோ என்கிட்ட போர்ஸ் பண்ணி பொண்ணு கேட்டான்,நீ இப்புடித்தான் விளையாட்டுத் தனமா இருப்பேன்னு சொன்னேன் கேட்கல அவன், அவுங்க வீட்டுல சொல்லி அப்பாகிட்ட பேச சொல்லிட்டான்,அதுக்கு நீ என்ன பண்ண?”

“வேண்டாம் சொன்னேன்” குரல் உள்ளே சென்றது பெண்ணுக்கு.

“உனக்கு நீ பண்ண தப்பு புரியலையா வேணி” ஆற்றாமையாகக் கேட்டான். எப்பொழுதும் ஜாலியாக அசால்ட்டாக இருக்கும் அண்ணனே தன்னைத் திட்டுகிறார் என்றால் விடயம் பெரியது தான் போலும் என்று லேசாகப் பயம் எட்டி பார்த்தது. அதுவும் லேசாக......

தலையைக் குனிந்து மௌனமாக இருக்கும் அவளைப் பார்க்க பாவமாகத் தான் இருந்தது இருந்தும் இன்னும் சிறு பிள்ளை இல்லையே.வீட்டில் வேறு இரு திருமண வேலைகள்,ஆம் ஒரே வேலையாக முடித்து விடலாம் என்று நிச்சயம் செய்யாமல் நேரடியாகத் திருமணத்திற்குச் சென்று விட்டனர் பெரியவர்கள்.

இதில் இவள் வேறு மனோவிற்குத் தன் வயது தான்,அதுவும் ஒரே பிள்ளை அவனுக்குத் திருமணம் செய்தே ஆக வேண்டிய சூழ்நிலை.மூன்று திருமணம் சாத்தியமா தலையைப் பிடித்துக் கொண்டான் அண்ணன்.

பின்பு வண்டியை எடுத்தவன் வழி நெடுக அவளுக்குச் சொல்லி சூழ்நிலையைப் புரியவைத்தான்.எத்தனை தூரம் அவள் மண்டைக்குள் சென்றது என்பது நமக்குத் தெரியாது அல்லவா.

அண்ணனும் தங்கையும் வருவதைப் பார்த்த திருவேங்கடம் ஒன்றும் பேசாமல் தனது அறைக்குள் சென்றுவிட்டார்.இது தான் சாக்கென்று தனது தமக்கை அறைக்குப் பாய்ந்து விட்டாள் வேணி.பேச அவர்கள் இருவருக்கும் பெரிய சரித்திரமே கிடைத்து விட்டதே.

-------------------------------------------------------------------------------------------------

அருண் தனது அறைக்கு வந்தவன் சிந்தனையில் ஆழ்ந்து போனான் அவனுக்கு எதையும் தீவிரமாகச் சிந்தித்துச் செயல்படம் ரகமில்லை,ஆனால் சமீபகாலமாக அன்பு என்னும் ஆயுதம் அவனைத் தாக்கி நிலை குலைய செய்தது.

மீனா மற்றும் அவரது தயார் லலிதா. இரு பெண்களும் அவனுக்கு அன்பின் மறு பரிமாணத்தைக் காட்டியுள்ளனர் அவர்களைப் பற்றிக் கேட்டு சிறு பிரமிப்பு உண்டாகத் தான் செய்தது.

மீனாவை போன்ற சிறப்புக் குழந்தைகள் எல்லாம் தெய்வ குழந்தைகள்.அவனது தாத்தா காலத்தில் அவர் கை பற்றிக் கருணை இல்லத்தைச் சுற்றி வரும் பொது இது போல் பல குழந்தைகளைப் பார்த்தவன் தான்.

அவர்களிடம் நம்மை விடப் பல மடங்கு பலமும்,ஆற்றலும்,அறிவு கூர்மையும் இருக்கும்.அதனைச் சரியான வழியில் கொண்டு சென்றால் அவர்கள் முன்னேற்றம் நூறு சதவீதம் உறுதி அதைத் தான் லலிதா செய்தார்.

தனது மகளுக்கு ஆசானாக மாறி அவளது முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருந்தார்.எந்த சூழ்நிலையையும் கையாளும் திடமும்,தைரியையும் உள்ளவளாக வளர்ந்து நிற்கிறாள் மீனா.கருணை இல்லத்தில் உள்ளவர்களுக்கு நாமும் இந்த யுக்தியை கொண்டு செயல் பட வேண்டும் என்ற உறுதி பிறந்தது முதல் முறையாக.

அருண் பாவப்படும் குணம் கொண்டவன் இல்லை,தாத்தா மற்றும் அவன் தந்தையும் கட்டி காப்பாற்றி வந்த நூறுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறப்புக் குழந்தைகளைப் பேணி போற்ற அவனுக்கு நேரமில்லை,அதற்காக அலட்சியமும் செய்ய மாட்டான்.அவர்கள் மேல் மலை அளவு பாசம் உண்டு அதனை வெளி காட்டாது விலகி இருந்து செயல் படுவான்,அதனாலே திருவேங்கடத்திற்கு மகன் மேல் சிறு சுண்ணக்கமுண்டு.

இவையெல்லாம் இந்த ஒரு மாத காலம் அவன் எண்ணத்தில் உள்ளது தான்.
இப்போது புதிதாகச் சிறு பயமும் கேள்வியும் அவனை வாட்டுகிறது,முதலில் நீலாவின் திருமணம்,அடுத்து தன் திருமணம்,பற்றா குறைக்கு வேணி செய்து வைத்திருக்கும் வேலை,அதுவும் திருமணத்தில் தான் முடியும் என்பது திண்ணம்.

மூன்று திருமணம் ஒரே நேரத்தில் சாத்தியமா? அதுவும் ஒரே குடும்பத்தில்,ஏன் ?எதற்கு ? எதனால் அவசர முடிவு என்று சொந்தங்கள், தொழில் வட்டாரம் தொடங்கி நண்பர்கள் வரை பேசப்படும்.

அருணின் எண்ணம் தாறுமாறாக எண்ணியது தான் தவறான முடிவு எடுத்து விட்டமோ என்ற ஐய்யம் எழ கண்களை இறுக்க முடிகொண்டான்.காளையாகச் சுற்றி திரிந்தவன் கால் உடைந்த நிலையில் இன்று. அன்பு கொண்டு விட்டால் பல சோதனைகளைக் கடந்து,கசப்பை விழுங்கி,சுயம் தொலைத்து,தன்னை முற்றிலும் இழந்து தான் வாழவேண்டும் போலும்.

அவன் எண்ணம் சரிதான் என்பது போலச் சிரித்தது விதி.
 
Top