Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா? -அத்தியாயம் 1.1

Advertisement

Poornima Madheswaran

Well-known member
Member
அத்தியாயம் 1.1:

ஏங்கடீ!, மணி ஆச்சி பாருங்க? “சாப்பிட்டு வந்து வேலைய ஆரம்பிக்கலாம் வாங்க என்றார்”அவர்களுடன் வேலை செய்த வயதான பெண்.


மற்ற வயதான பெண்மணி, "ஆமா வாங்க ஒருவாய் சாப்பிட்டு வந்து பாக்கலாம்" என்று கூறி வயலைவிட்டு வெளியே வந்தார். மற்றவர்களும் அவரை தொடர்ந்து சென்று தன்னை சுத்தம் படுத்திகொண்டு உண்ண சென்றனர்.



உணவினை எடுத்து வந்த மல்லிகா, “உமா நீ என்ன சாப்பாடு கொண்டு வந்த? கொண்டா" என்றவளிடம்..



"பூரிடீ!", இரு எடுக்கறேன், எல்லாருக்கும் சேர்த்து தான் எடுத்துகிட்டுவந்தேன், அவங்க கிட்ட தந்துவிட்டு மீதி தரேன் இரு டீ” என்று கூறியவள் அங்கிருந்தவர்களிடம் உணவினை பகிர்ந்து கொண்டால்.




அந்த வயதான பெண்மணிகள், “ஏத்தா! இந்த பல்லு போன கிழவி போய் பூரி எப்படி சாப்பிடுவேன்?”,




"ஏன் பாட்டி!"... "உன் பல்லு நல்லா வலுவா தான் இருக்குனு எனக்கு தெரியும்... நான் சேத்திதான் எடுத்துக்கிட்டு வந்தேன் இன்னும் இருக்கு சாப்பிடு அதவிட்டுபுட்டு பல்லு இல்ல பாயாசம் இல்லைனு பொய் சொல்லிகிட்டு சாப்பிட்டு நல்லா இருக்கானு சொல்லு என்ன?"...




"இந்தா ஆத்தா இது உனக்கு புடி" என்றவளிடம்... சரித்தா வாங்கிக்கிறேன் திட்டாத டீ வயசானவ இல்ல?...


“ஆமா!, உனக்கு வயசு ஆச்சி தான்? யார் இல்லைனா? உன்னால பூரி சுடமுடியாது எனக்கு தெரியும், அதனால உங்க ரெண்டு பேருக்கும் கொண்டு வந்தேன் பேசாம சாப்பிடுங்க" என்றவளிடம்...




அந்த பெண்மணி "நீ நல்லா இருக்கனு த்தா" என்றவரிடம்... புன்னகையை பரிசாக கொடுத்துவிட்டு, “எப்பவாவது ஒரு நாள் தான் செய்யறேன் அதை நாங்கமட்டுமா திங்கமுடியும்? இருக்கறது ஐந்து பேர் தான” என்றவள், "மாரியக்கா, தனம் இந்தாங்க" என அவர்களிடம் கொடுத்துவிட்டு மீதியை மல்லியிடம் கொத்தவள் அவள் கொண்டு வந்த கருவாட்டுக்குழம்பை எடுத்துக்கொண்டாள்.



இப்படியாக பேசி உணவு உண்டு முடித்து விட்டு வயலில் இறங்கியவர்கள் அமைதியாக வேலையை செய்து கொண்டு இருந்தனர்.




அதை பொறுக்காத தனம், “ஏன் இப்படி அமைதியா இருக்கிங்க? ஏதாவது பேசவேண்டியதுதான" என்றவளிடம்... மாரியக்கா, "யாராவது பாடுங்க” என்றவரிடம்…



மல்லி, "நான் பாடறேன்".



உமா, "அடியே! சினிமா பாட்டு பாட சொல்லல நாட்டுபுறபாட்டு பாடனும்". "தெரியும்டீ!, இன்னைக்கு நான் பாடாம விடமாட்டேன், நீங்கள் ஏலேலங்கிடி ஏலேலோ போடரிங்க என்று கூறி வேலையை செய்து கொண்டே பாட ஆரம்பித்தாள்".





"ஓடை எல்லாம் தாண்டிப்போயி – ஏலேலங்கிடி ஏலேலோ
ஒண்ணரைக்குழி நிலமும் பார்த்து – ஏலேலங்கிடி ஏலேலோ

சீமையெல்லாம் வறிஞ்சுக்கட்டி – ஏலேலங்கிடி ஏலேலோ
சேத்துகக்குள்ளே இறங்கினால் – ஏலேலங்கிடி ஏலேலோ

நாத்தெல்லாம் பிடுங்கையிலே – ஏலேலங்கிடி ஏலேலோ
நண்டும் சேர்த்துப் பிிடிக்கிறாங்க – ஏலேலங்கிடி ஏலேலோ

ஒருசாணுக்கு ஒரு நாற்றுத்தான் – ஏலேலங்கிடி ஏலேலோ
ஓடியோடி நட்டோமையா – ஏலேலங்கிடி ஏலேலோ

மடமடன்னு மடைவழியே – ஏலேலங்கிடி ஏலேலோ
மண்குளிரத் தண்ணீர்பாய – ஏலேலங்கிடி ஏலேலோ

சாலுசாலாத் தாளுவிட்டு – ஏலேலங்கிடி ஏலேலோ
நாலுநாலா வளருதம்மா – ஏலேலங்கிடி ஏலேலோ

மணிபோல பால்பிடித்து -ஏலேலங்கிடி ஏலேலோ
மனதையெல்லாம் மயக்குதம்மா -ஏலேலங்கிடி ஏலேலோ

அறுப்பறுக்க ஆளுக்கெல்லாம் – ஏலேலங்கிடி ஏலேலோ
ஆளுபணம் கொடுத்துவாரான் -ஏலேலங்கிடி ஏலேலோ

சும்மாடும் தேர்ந்தெடுத்து - ஏலேலங்கிடி ஏலேலோ
சுறுசுறுப்பாய்க் கொண்டு போனார் – ஏலேலங்கிடி ஏலேலோ

கிழக்கத்தி மாடெல்லாம் – ஏலேலங்கிடி ஏலேலோ
கீழே பார்த்து மிதிக்குதையா – ஏலேலங்கிடி ஏலேலோ

கால்படவும் கதிருபூரா – ஏலேலங்கிடி ஏலேலோ
கழலுதையா மணிமணியா – ஏலேலங்கிடி ஏலேலோ"

தொகுப்பாசிரியர்-கி.வா.ஜகத்நாதன்



“ஏன்டீ மல்லிகா!”, இந்த பாட்டு ஏழாவது படிக்க பசங்க புத்தகத்தில் தான இருக்கு என்று கூறி தான் அடக்கி வைத்திருந்த சரிப்பை வெளியிட்டாள் உமா.


"நான் இந்த பாட்டுவது பாடினேன்... நீ பாடு பாக்கலாம் உமா" எனக்கு கூறி உமாவை வம்பிளுத்தாள்.





"ஏம் பாட்டி!"... "நீங்க தான் நிறைய பாட்டு பாடுவீங்களே பாடுங்க பாட்டி" என்றவளிடம்...





அந்த பாட்டி , ”நான் பாடுனா நீயும் பாடனும் அப்படினா நான் பாடறேன் இல்லைனா நான் பாடமாட்டேன்".


"சரி பாட்டி எல்லாரும் பாடலாம், இந்த டீல் எனக்கு ஓகே பா" என்று கூறி அனைவரையும் சம்மதிக்க வைத்துவிட்டாள்.




அதன் நான் பாடறேனு சொல்லீட்டேன் இல்ல முதல்ல நீங்க பாடுங்க அப்புறமா நான் பாடறேன் எனக்கு கூறி பாடவும் வைத்துவிட்டாள்.



"களத்துக்குள்ளே காலைவைத்து -ஏலேலங்கிடி ஏலேலோ
கிழட்டுமாடுமக மிதிக்குதையா – ஏலேலங்கிடி ஏலேலோ

மேற்கத்திமா டெல்லாங்குடி – ஏலேலங்கிடி ஏலேலோ
மேலேபார்த்து மிதிக்குதையா – ஏலேலங்கிடி ஏலேலோ

வடக்கத்திமா டெல்லாங்குடி – ஏலேலங்கிடி ஏலேலோ
வாரிவாரி மிதிக்குதையா - ஏலேலங்கிடி ஏலேலோ

நாட்டியக் குதிரைகளில் – ஏலேலங்கிடி ஏலேலோ
நாலுகாலில் மிதிக்குதையா – ஏலேலங்கிடி ஏலேலோ

குள்ளமாடும் புள்ளமாடும் – ஏலேலங்கிடி ஏலேலோ
குதிச்சுக்குதிச்சு மிதிக்குதையா – ஏலேலங்கிடி ஏலேலோ

பால்கொடுக்கிற பசுவுங்கூட – ஏலேலங்கிடி ஏலேலோ
பையப்பைய மிதிக்குதையா – ஏலேலங்கிடி ஏலேலோ

பல்லுபோடாத காளைக்கன்றும் – ஏலேலங்கிடி ஏலேலோ
பால்மறந்த கிடாக்கன்றும் – ஏலேலங்கிடி ஏலேலோ

நெல்லுவேறே வைக்கோல் வேறே – ஏலேலங்கிடி ஏலேலோ
நல்லாருக்கு பார்க்கப்பார்க்க – ஏலேலங்கிடி ஏலேலோ

வண்டிவண்டியா நெல்லுத்தானும் -ஏலேலங்கிடி ஏலேலோ
வருகுதையா அரண்மனைக்கு – ஏலேலங்கிடி ஏலேலோ

கும்பல்கும்பலா நெல்லுத்தானும் – ஏலேலங்கிடி ஏலேலோ
குலுமையெல்லாம் நிறைக்குதையா – ஏலேலங்கிடி ஏலேலோ

கூனிக்கிழவி கூடைமுறத்தை – ஏலேலங்கிடி ஏலேலோ
கூனிக்கூனிக் கொண்டு போறாள் – ஏலேலங்கிடி ஏலேலோ

சந்துபொந்தெல்லாம் நெல்லுக்கிடக்கு – ஏலேலங்கிடி ஏலேலோ
சாக்கடையெல்லாம் நெல்லுக்கிடக்கு – ஏலேலங்கிடி ஏலேலோ

வயலெல்லாம் நெல்லுக்கிடக்கு – ஏலேலங்கிடி ஏலேலோ
வழியெல்லாம் நெல்லுக்கிடக்கு – ஏலேலங்கிடி ஏலேலோ"

(தமிழ் களஞ்சியம்)

என்று பாடிமுடித்தார் அந்த வயதான பெண்மணிகள்.





இதைக்கேட்ட தனம், "எப்படி பாட்டி!, இப்படி அருமையா பாட்டு பாடுரீங்க?... எனக்கு ஒரு வரி கூட பாட வர வரமாட்டிக்குது" என்றவளிடம்...



"அடி போடி!", “மனசுக்கு என்ன தோனுதோ அத பாடுடீ அவ்வளவுதான்” என்றவரிடம்…





சரி பாட்டி முயற்சி பண்ணி பார்க்கிறேன் எனக்கூறி நடவு பாடலை பாடினாள்.





“குத்தடி தோழிகளே கூலிக்கு நடுங்கோடி
இந்தக்கூலிக்குநடுங்கோடி

குண்டுசம்பா நாத்தெடுத்துக் குனிந்து நடுங்கோடி”

"தனம்!", அருமையா இருக்கு புள்ள, ஆமா புள்ள ஒரு புத்தகத்தில் படிச்சேன் ரொம்ப நாள் இருக்கும். அப்படியே பதிஞ்சு போச்சிடி.





“மாரி அக்கா இப்ப நீ பாடு... "அட இருடி எனக்கு நடவு பாட்டு எல்லாம் எனக்கு தெரியாது”, வேற பாடறேன். “கதிரடிக்கும் போது பாடற பாட்டு பாடறேன்” எனறவளிடம் .





ஏதோ ஒரு பாட்டு பாடு போதும் என்றார், அந்த வயதான பெண்மணிகள்.

“ பொலி வளரப் பொலி வளர
பொலியான பொலி பொலி
பொலி மேலே பொலி. வளர்ந்திருக்கனும்” என்று பாடினார்.




"அக்கா சூப்பரா இருக்க!"... எங்க கேட்டீங்க?“... "அது போன வருசம் எங்க அண்ணன் வீட்டுக்கு போகும்போது வழியில் உள்ள வயல்ல கதிரடிச்சாங்க அப்ப பாடிக்கிட்டு இருந்தாங்க நல்லா இருந்துதா அதான் மனசுல பதிஞ்சு போச்சிடீ” தனம் என்றார்.




“உமா!”, இப்ப நீதான் பாடி ஆகனும் பாடுபுள்ள கடைசி பாத்தி வந்துடுச்சி முடிச்சுபோட்டு காசு வாங்கிட்டு போலாம் என்றவரிடம்..




“அக்கா எனக்கும் நடவுபாட்டு தெரியாது களையெடுக்கும் போது பாடுகிற பாட்டை பாடறேன்” என்றவளிடம்…



"அட பரவாயில்லை பாடு" என்றாள் மல்லி.




“ கண்ணாடி வளையல் போட்டுக்
களையெடுக்க வந்த புள்ளே
கண்ணாடி மின்னலிலே
களையெடுப்பு பிந்துதடி” என்று முடித்தவுடன் தனம், “உமா ரொம்ப வித்தியாசமா, நல்லா இருக்குபுள்ள. ஆமா எங்க படிச்ச? ஒரு புத்தகத்தில் தான் படிச்சேன்” புள்ள என்றவளிடம்..




மல்லி, “சரி வாங்க போய் கைகால் கழுவிகிட்டு, காசு வாங்கிகிட்டு போலாம்”.




"அட இருடி அந்த வயலில் புல்லு நல்லா இருக்கும் அத கொஞ்சம் வெட்டிகிட்டு போலாம்". "வெள்ளையனுக்கு வேர நேத்தும் பச்சபுல் போடல, காட்டுகாரரு வந்துட்டாரு அவர்கிட்ட கேட்கலாம் என்றாள் உமா".




பின் கூலி வாங்கிய பெண்கள், "ஏங்க அண்ணா!... அந்த புல்லு கொஞ்சம் வெட்டிகிட்டு போகட்டுங்கலா?" என்றவர்களிடம், "பாத்து வெட்டுங்க ஒரே பொதறா இருக்கு" என்று கூறி சென்று விட்டார்.




அந்த புல்லை வெட்டி எடுத்துக்கொண்டு சென்றனர்.




மல்லி வேகமா வா இத வெள்ளையனுக்கு போட்டுவிட்டு, வாசல கூட்னுனா டியூசன் படிக்க வர புள்ளைகளுக்கு வசதியா இருக்கும். நீ சீக்கரமா வந்துடு? “ரவைக்கு உங்க அப்பா வீட்டுக்கு வந்தா சோறு வை, இல்லனா இங்கபடுக்க எடுத்துக்கிட்டு வந்துவிடு தனியா படுக்கவேண்டும், சாப்பாடும் நானே வச்சிடுறேன் மல்லி” என்றவளிடம்…




“சரிபுள்ள!”... "சீக்கிரமா வந்துடறேன். அப்படியே அப்பாகிட்டையும் சொல்லிகிட்டு வந்துடறேன். நான் வந்ததுக்கு அப்பறம் வேற வேலைய பாத்துக்கலாம்".


"மறக்காம லேப்டாப்க்கு சார்ஜ் போட்டுவை வேலைய ஆரம்பிக்கும் போது ஆப் ஆகிடபோது? அப்பறம் கஷ்டமா இருக்கும்... உமா பார்த்துக்கு நாளைக்கு மெயில் பண்ணனும் அப்பதான் பணம் ஏறும்" என்றாள் மல்லி….

என கூறிக்கொண்டு வரும் வழியில் இரண்டு சிறுவர்கள் ஆற்றில் இறங்கி மீன் பிடிக்க முற்பட்டுக்கொண்டு இருப்பதை பார்த்த உமா, "அங்கு கீழேகிடந்த குச்சியை எடுத்து அவர்களின் காலில் இரண்டு அடியைவைத்துவிட்டு அவர்களை அழைத்துக்கொண்டு சென்றவள்".





“கனகா அக்கா, சாந்தி அக்கா இங்க வாங்க உங்க பையனுக்கு என்னா பண்ணுனானுங்க கேளுங்கள்?”...



"என்னா பண்ணுனானுங்க உமா?...




"மீனுபுடிக்கரேனு போய் ஆத்துல இறங்கரானுங்க அதான் ரெண்டு வச்சி இழுத்துக்கிட்டுவந்தேன்" என்று உமா கூறியதும்... அவர்களின் அன்னை ஆளுக்கு இரண்டு விழாசிவிட்டார்கள்.




அந்த சிறுவர்களைபார்த்த மல்லி, "ஏன்டா அடங்காதவனுங்களா அங்கதான் ஆழம் அதிகமா இருக்கும் தெரியும் இல்ல அப்பறம் ஏன்டாபோறிங்க?... ஏன் இப்படி அடி வாங்கனும் அடங்கவே மாட்டாங்கலா?" என்றவளிடம்…



அவர்களின் அன்னைகள் ரொம்ப நன்றி உமா, "ஏதாவது ஆகி இருந்தா என்ன பன்னமுடியும்?... நல்ல வேலை நீங்க பாத்திங்க என்றதுக்கு மல்லி பரவாயில்லை விடுங்க அக்கா" என்றால்...




அதற்கு உமா! , “என்னது விடறதா?... அது எல்லாம் முடியாது கண்டிப்பாக இரண்டு பேருக்கும் தண்டனை உண்டு... உங்கள் அம்மா தடுத்தா கூட விடமாட்டேன்”... இன்னும் அரைமணி நேரத்தில் நீங்க இரண்டு பேரும் டியூசனில் இருக்கனும்... அங்க இருக்க சிறுவர்களை நீங்க இரண்டு பேரும் தான் இரவு வீட்டில் விட்டுவிட்டு உங்க வீட்டுக்கு வரனும், அவங்க வீட்டுப்பாடம் எழுதிவிட்டார்களானு பார்க்கனும் இதுதான் உங்கள் பனிஷ்மொண்ட் இன்னைக்கு விளையாட நேரம் தரமாட்டேன்.


அதற்கு மல்லி, “சரிங்க அக்கா!" இவனுங்கள அனுப்பிவைங்க எங்கேயாவது Escape ஆகிவிடுவானுங்க நாங்கவறோம் என்று கிளம்பி விட்டார்கள் இருவரும்.




அந்த சிறுவனின் அம்மாக்களும் அவர்களையே பார்த்துக்கொணடு இருந்தனர்.






இவற்றையெல்லாம் பார்த்த பக்கத்தில் புதிதாக குடிவந்து உள்ள பெண்மணி, “ஏன்டீ கனகா, சாந்தி உன் பையன அடித்துவிட்டு போறா நீங்க என்னடானா எதுவும் செல்லாம இருக்கீங்க” என்றவரிடம்..




அவர்கள் பதில் கொடுக்கும் முன், அவர்களின் மகன்கள், “நாங்க பண்ண தப்புக்கு தான் அக்கா எங்களை அடிச்சாங்க வேணுமுன்னே ஒன்னும் அடிக்கல என்றுகூறி அவரை உறுத்து விழித்தனர்” (அந்த பார்வை இதற்கு மேல் நீங்க அவர்களை பற்றி தப்பாக பேசினால் சேதாரம் உங்களுக்கு தான் என சொல்லாமல் சொன்னது).





அங்கு நம்ம பண்ணை வீட்டில் தடபுடலாக வேலைகள் நடந்து கொண்டு இருந்தது...
“நம்ம வெற்றியோ Flight ல் கோயம்முத்தூரை நோக்கி பயணித்துக்கொண்டு இருந்தான். அவன் முகத்தில் அப்படி ஒரு ஆனந்தம்”. தன் தாய் நாட்டையும், வீட்டையும் பார்க்கப்போவதில்….


அன்பு தொடரும் …….:love::LOL::D:love:
 
Last edited:
ஸ்டோரி ரொம்ப நல்லாயிருக்கு
நாட்டுப்புறப்பாடல்களும் அருமை,
பூர்ணிமா டியர்
 
Last edited:
Top