Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அரக்கன்( ஒரு இரக்கமற்றவன்) அத்தியாயம் ஒன்று EPISODE - 22

Advertisement

naveen prabu

Member
Member
EPISODE - 22

அடுத்தநாள் நவம்பர் 14 நேரம் மதியம் 3.00

பாரஸ்ட் போலீஸ், லோக்கல் போலீஸ்னு மொத்தம் அறுபதுக்கும் மேல காவலர்கள் காட்டை சல்லடை போட்டு தேடிக்கொண்டிருக்க நவீனுக்கு திடிரேனு ஒரு யோசனை


“சத்தியா…”


“சார்…”


“கார் எடு…”



“எங்க சார்…”


“ஊட்டி…”


“சார்… ஏன்…”


“இதுவரைக்கும் அவன் கிடைக்கல சத்தியா, கண்டிப்பா அவன் இங்கேயிருந்து தப்பிச்சிருக்க நறிய வாய்ப்பு இருக்கு ஒருவேளை அவன் இங்கேயிருந்து தப்பிச்சிருந்தா கண்டிப்பா ஊட்டிக்கு போகணும்னு நினைப்பான்… சோ ஊட்டிக்கு போகலாம்…”


“ஓகே சார்…”


போலீஸ் ஜீப் ஊட்டியை நோக்கி விரைந்தது… போகும் அணைத்து செக் போஸ்டிலும் சூர்யாவை பற்றி விசாரித்தவாரே ஊட்டி சென்றார்கள். போகும் வழியில் திடிரேன நவீன்


“சத்தியா அந்த பஸ்ச ஓவர்டேக் பண்ணி பஸ்ச நிறுத்து…”


நவீன் கையில் துப்பாக்கியை தூக்கிக்கொண்டு கார் நிக்கும் முன்னரே இறங்கி பஸ்ஐ நோக்கி ஓடி உள்ளே தேடினார், சூர்யா இல்லை, முகத்தில் வருத்தத்தோடு இரங்கினார் பஸ்நகர்ந்தது, நவீன் நகர்ந்து சென்று காரின் இருக்கையில் அமர்ந்தார்


“சத்தியா பஸ் மேல ஏறி செக் பண்ணியா…”


“பண்ணிட்டேன் சார்… இல்ல”



“சார்… இந்தாங்க சார் இந்த தண்ணிய குடிங்க… நிச்சியம் கண்டுபுடிச்சிடலாம் சார்…”


நவீன் பிரமை புடித்ததை போல் சூர்யாவை தேடி அலைவதினால் அவர் தூங்காமல் கண்களை சுற்றிலும் கருவளையம் காணப்பட்டது.

நவீன் தன் கையில் இருக்கும் துப்பாக்கியை காரின் டேஷ்போர்டில் வைத்துவிட்டு சத்யவிடம் தண்ணியை வாங்கி மூஞ்சியை கழுவிக்கொண்டு மீண்டும் ஊட்டியை நோக்கி விரைந்தனர்.


நேரம் இரவு 9.00மணி கார் சூர்யாவின் வீட்டை நெருங்கியது, காரை சிறிது தூரத்திலேயே நிறுத்திவிட்டு நவீனும் சந்தியாவும் வீட்டை நெருங்கினார்கள். வீட்டில் ஒரு சிறிய மஞ்சள் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. வீட்டில் ஜன்னல் வழியே உள்ளெ மெல்ல எட்டி பார்த்தான் சத்தியா. தான் கொண்டுவந்த டேனியலின் மகளின் தலையில் உள்ள ரத்தத்தை பாத்திரம் கழுவும் சிங்க்கீல் கழுவிக்கொண்டிருந்தான் சூர்யா.


“சார்… சூர்யா…. உள்ள தான் இருக்கான்…”


“சத்தியா... நீ இந்த சைடு போ வேற எதாவது வழி உள்ள போக இருக்கானு பாரு, நா இந்த சைடு போறன் ஹெட்செட்ட எடுத்து காதுலா மாட்டு ஏதாவதுன்னா எனக்கு சொல்லு… சத்தம் போட்டுடாதே, போனை சைலண்டுலா போடு, என் காலை அன்டன் பண்ணு…”


“சரி சார்…”


சத்தியா குனிந்தவாரே ஓடின்னான், நவீனும் மிக கவனமாக எந்தவித சத்தமும் எழுப்பாமல் வீட்டை சுற்றி உள்ளெ நுழைய வழி தேடினார்கள்.


“சார்… பின்னாடி ஒரு கதவு இருக்கு சார்…”


“சத்தியா நீ கதவ திறந்து உள்ள போ மதத்தை நா பாத்துக்கறேன்…”


“சரி சார்…”


மெல்ல பின் கதவை சத்தம் வராமல் உள்ளெ நுழியே முயற்சிக்க கதவின் அருகில் இருக்கும் கண்ணாடி பாட்டில் தரையில் விழுந்து நொறுங்கியது, சத்தம் கேட்ட சூர்யா தலையை போட்டு விட்டு பக்கத்தில் இருந்த கத்தியை எடுத்துக்கொண்டு சத்தம்வரும் திசையை நோக்கி நடந்தான்.

சத்தியா நுழைந்துஇருப்பதை பார்த்த சூர்யா மரைந்துகொண்டான், சத்தியா அந்த கதவை மெல்ல சாத்திவிட்டு சூர்யா இருந்த அறையை நோக்கி மெல்ல நடந்தான், நவீன் ஜன்னல் கண்ணாடியை மெதுவாக மேல தூக்கி உள்ளெ நுழைந்தார். சூர்யா சந்தியாவின் பின் நின்றுகொண்டிருந்தான், சூர்யா பின்தொடர்வதை தெரியாத சத்தியா

“சார்… உள்ள சூர்யாவ காணும்…” போனில்

சத்தியாவை கண்ட சூர்யா தன் கையில் இருக்கும் கத்தியை வைத்து சத்தியாவை பின் முதுகில் வெட்ட முயற்சிக்கும் தருணத்தில் சூர்யாவின் தலையில் பலமான அடி, கண்கள் மங்கி சுயநினைவை இழந்து தரையில் விழுந்தான்.



சூர்யாவுக்கு மயக்கம் தெளிந்தது சூர்யா தான் பேஸ்மென்ட் அறையில் ஒரு நாற்காலியில் உட்காரவைத்து கைகல் நாற்காலியின் பின்னால் கட்டப்பட்டு இருப்பதை உணர்ந்தான். எதிரில் நவீன் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார் அவர் பின்னால் சத்தியா நின்றுகொண்டிருந்தான்.


“டேய்… இது வரைக்கும் எத்தனை கொலை பண்ணி இருக்க?…” நவீன் விசாரணையை தொடர்ந்தார்


சூர்யா மௌனமாக இருந்தான், நவீன் சத்யவிடம் சைகை காட்ட சத்தியா சூர்யாவின் முகத்தில் ஒரு குத்து வைத்தான்.


“சொல்லு எத்தனை கொலை பண்ணி இருக்க…”


மீண்டும் மௌனமாகவே இருந்தான், சத்தியா இந்தமுறை சூர்யாவின் சட்டையை பிடித்து மூக்கில் ஒரு பலமான குத்து விட்டான், சூர்யாவின் முகத்தில் இருந்து ரத்தம் பீறிட்டது. சூர்யா மயங்கிய நிலைக்கு சென்றான், பக்கத்தில் இருந்த தண்ணியை சூர்யாவின் முகத்தில் ஊற்றினார் நவீன்.


“சத்திய... அந்த கத்திய எடுத்து விரலை வெட்டு…”


சிறிதும் தாமதிக்காமல் அருகில் இருந்த கத்தியை எடுத்து சூர்யாவின் சுண்டி விரலை துண்டாக்கினான் சத்தியா, சூர்யாவின் அலறல் சத்தம் அரை முழுவதும் எதிரொலித்தது.


“சொல்லு…” மீண்டும் நவீன் பேச தொடங்கினார்


சூர்யா மீண்டும் மௌனமாகவெ இருந்தான், பொறுமை இழந்த நவீன் சூர்யாவின் விளாவில் குத்தினார், சூர்யாவுக்கு பலமாக இறைத்தது

.

“மூணு குடும்பத்தை கொலை பண்ணிட்டா நீ என்ன பெரிய புடுங்கியா… உன்ன கண்டுபிடிக்க தெரிஞ்ச எனக்கு அது ஒரு விழியாமே இல்ல…”


தலையை தொங்க போடு அமர்ந்திருந்த சூர்யா சிரிக்க தொடங்கினான்…

ஹாஹாஹாஹாஹாஹா…...


“மூணு குடும்பமா…”


ஹஹஹஹஹஹஹஹஹாஹா….


“அந்த கதவை திறந்து பாரு…”


தன் பின்னால் இருக்கும் ஒரு கபோர்டை காட்டினான். சத்தியா நடந்து சென்று கபோர்டை திறக்க கபோர்டு முழுவதும் தலைகள்.



ஹாஹாஹாஹாஹாஹா…... ஹஹஹஹஹஹஹஹஹாஹா….


“மூணு குடும்பமாம்… 18 டா 18…”



“பிஞ்சி குழந்தைகளை கொன்னு இருக்கியே உனக்குலாம் இரக்கமே இல்லையடா….” என்றான் சத்திய


“இரக்கமா…. ஹஹஹஹஹஹஹஹஹாஹா…. நான் அரக்கன் டா...”


டேபிளில் இருந்த ஒரு கத்தி சரியாக சூர்யாவின் பின்னால் இருபதை கவனித்த சூர்யா வேண்டுமென்ரே நவீனை கோபமடைய வைக்க மீண்டும் நக்கலாக சிரித்தான்.


கோவம் தாங்க முடியாமல் நவீன் சூர்யாவை எட்டி உதைக்க சூர்யா சரியாக கத்தியின் மேல் விழுந்து கத்தியை தன் முழுக்கை சட்டையினுள் மறைத்துவைத்துக்கொண்டான். சத்தியா சூர்யாவை நாற்காலியுடன் நிமித்தி உட்காரவைத்து சூர்யாவின் முகத்தில் பலம் வாய்ந்த பல குத்துகள் வைத்தான். சூர்யாவின் முகம் முழுவதும் ரத்தம் ஒழுக சூர்யா சிரித்தான்….


“ஹாஹாஹாஹாஹாஹா…”


“நான் மூணு தப்பு பண்ணிட்டேன் அதுனால தான் நீங்க என்ன புடிச்சிடீங்க… ஒன்னு புலியூர் காட்டுக்குள்ள காட்டுக்குள்ள ஆளு வந்ததுனால அலெக்ஸ் குடும்பத்தை வெட்டி ஆசிட்ல காரைக்காம அப்புடியே விட்டுட்டு போய்ட்டேன்… அதுதான் நான் பண்ண பெரிய தப்பு…”


பேசிகொன்டே சூர்யா தன் கைகள் கட்டி இருந்த கயிற்றை அறுக்க ஆரமித்தான்


“ரெண்டு… ஆன்டனி அவனுக்கு சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்லனு சொன்னதை நான் நம்பிட்டேன்…”


கயிறு முற்றிலுமாய் அறுந்தது


“மூணு… இன்னும் உங்க ரெண்டுபேரையும் உயிரோட விட்டுஇருக்குறது…”


பேசிகொன்டே சூர்யா கத்தியை பலமாக நவீனின் கழுத்தில் குத்த வில் போன்று வளைத்து பக்கவாட்டில் கையை நீட்டி குத்த ஓங்கினான்,ஒரு வினாடி நவீனிக்கும் சத்தியாவுக்கும் என்ன நடக்கிறதுனே புரியாமல் நின்றுகொண்டிருந்தனர், நவீன் சற்றே பின்னல் தன் உடம்பை நகர்த்தி தப்பித்துக்கொள்ள கத்தி சந்தியாவின் கழுத்தில் பாய்ந்தது, சத்தியா கழுத்தை பிடித்துக்கொண்டு சரிந்தார்.


“சத்தியா…” நவீன் சந்தியாவின் அருகில் குனிந்து சந்தியாவின் கழுத்தில் இருந்து வரும் ரத்தத்தை நிறுத்த குதியிருந்த கத்தியை எடுத்து எரிந்துவிட்டு காயத்தை கைகளால் மூடினார். சூர்யா செவுற்றின் அருகில் இருந்த பழைய கிராமபோனை எடுத்து நவீனின் தலையில் அடித்தான். நவீனுக்கு கண்கள் மங்கியது. நவீன் தன் பின் தலையை தொட்டு ரத்தம் வருவதை பார்த்தார், ஒரூ வினாடி நவீனின் மனைவி விபத்தில் சிக்கி அவளை காப்பாற்ற முற்படும்போது தன் கைகளில் இருந்த அதே ரத்தம் நினைவுக்கு வந்தது. கண்கள் மங்கியது. சூர்யா கத்தியை தேட நவீன் தன் இடுப்பில் இருந்த துப்பாக்கியை தேடி பார்த்தார் கார் டேஷ்போர்டில் வைத்தது நியாபகத்துக்கு வர


“அவளோ தான் நம்மளையும் கொல்லப்போறன்…” தன் எதிர்ப்பை முற்றிலுமாய் இழுத்து விழுந்தார் நவீன்.


கத்தியை எடுத்துக்கொண்டு நவீனின் தலை முடியை பிடித்து கழுத்தில் கத்தியை வைத்து


“அவன் தொ சகா போறான்… என்ன கண்டுபுடிச்ச உன்ன நா என் கையாலேயே உன் கழுத்தை அறுத்து பொறுமையா நீ சாகுறத ரசிச்சி பக்க போறன்… எனக்கு தேவையான எல்லாத்தளையையும் எடுத்துடன் இப்போ என் குடும்பத்தை உயிரோட கொண்டுவர போறான்… அத பாக்குறதுக்கு நீ தான் உயிரோட இருக்க போறதில்ல…”


சூர்யா பேசிகொன்டே நவீனின் கழுத்தில் கத்தியை அழுத்த..

துப்பாக்கி வெடிக்கும் சத்தம்…


சூர்யாவின் தலைக்குள்ள துப்பாக்கி குண்டு நுழைந்து வெளியே சென்றது, சூர்யா தரையில் விழுந்தான். நவீனும் மயங்கினார்.


இரண்டு நாட்களுக்கு பிறகு ஹாஸ்பிடலில் நவீன் கண்விழிப்பதை கண்ட ஜெய் நவீனின் அருகில் சென்று




“சார்… ஒன்னும் இல்ல ரெஸ்ட் எடுங்க…”


“சத்தியா…” என்றார் நவீன்


“சத்தியா நல்லா இருக்காரு சார்… காப்பாத்தியாச்சி…”


“சூர்யா?…”


“அவன் சேத்துட்டான் சார்…”


“யாரு…”


“ஆன்டனியோட மாமா ஜோசப்…”



“எப்புடி…”


“அவர் பொண்ணு மப்புல இறந்ததுல அவுர் மனைவிக்கு ரொம்போ உடம்பு சரி இல்லாம பொய் இருக்கு, இங்க இருந்தா சரி வராதுன்னு ஊட்டில இருக்க அவுங்க தம்பி வீட்டுக்கு வந்திருக்காங்க, அப்போ தான் நீங்க காரை பார்க் பன்னிட்டு போறத பாத்துட்டு உங்ககிட்ட பேசலாம்னு ஜோசப் வந்துஇருக்காரு, வந்த இடத்துல சூர்யா உங்கள கொல்லப்பண்ண உங்க கழுத்துல கத்தி வெச்சி இருக்குறத பாத்துட்டு உங்க ஜீப்கிட்ட ஓடி வந்து போலீஸ்க்கு போன் பண்ணும்போது தான் உங்க துப்பாக்கியை பாத்துட்டு அத எடுத்துட்டு வந்து சுட்டு இருக்காரு…”



“எப்புடி சரியா சுட்டாரு…”


“சார்… அவுரு பேங்க்ல செக்யூரிட்டியா இருந்து ரிட்டயர்டு ஆனவராம். அவருக்கு துப்பாக்கி சுட தெரியுமாம்… நல்லவேளை அவர் மாட்டு வரலைனா அவன் மறுபடியும் தப்பிச்சி இருப்பான்…”


பத்துநாள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் பணிக்கு திரும்பினார் நவீன். நவீன் துரிதமாக செயல் பட்டு 10 நாட்களில் குற்றவாளியை பிடித்தற்காக கோமிஸ்ஸின்ர் மணிவேல் பாராட்டினார்.


நாட்கள் ஓடின...


மதங்களும் ஓடின...


20/4/2021 நவீனின் ஸ்டேஷனுக்கு ஒரு போன் கால்

“சொல்லுங்க… நா எஸ்.ஐ சத்தியா பேசுறான்…”


“அப்புடியா…”


“எப்போ…”


“நல்லா செக் பண்ணீட்டீங்களா…”


“அதுக்கு வாய்ப்பை இல்ல…”


“சரி… அதுல பேஜ் நம்பர் 217, அத உடனே போட்டோ எடுத்து என் போனுக்கு அனுப்புங்க…”


“சரி… நா சார் கிட்ட சொல்லுறன்…”அழைப்பை துண்டித்துவிட்டு மெஸ்சேஜிக்குக்காக காத்திருந்தான் சத்தியா.


மெசேஜ் வந்தது… சந்தியாவின் கண்களை அவனாலே நம்ப முடியவில்லை… இன்ஸ்பெக்டர் நவீனின் ரூமுக்கு ஓடினான்


“சார்…மறுபடியும் ஒரு பேமிலி மிஸ்ஸிங்…”


“எப்புடி?…”


“நம்ப பழைய சூர்யா கேஸ் மாதிரியே…”


“என்ன ஒளரற?…”


“அமாம் சார்… கானம் போன குடும்பம் இருந்த வீட்டுல இருந்து எடுத்த அதே கல்ட் பைபிள்… அதே எடிட் செய்யப்பட்ட பேஜ்… இத பாருங்க…”


“என்னடா சொல்லுற காட்டு…”


“சூர்யா செத்துட்டான் தான?…”


“அமாம் சார்… எனக்கு உடம்பு சரி ஆனதுக்கு அப்புறம் நானே பொய் என் கண்ணால மார்ச்சுவரில இருந்த அவன் போனத பாத்துட்டு வந்தன், அதுக்கு அப்புறம் தான் எரிச்சாங்க…. ஒரே கொழப்பாமா இருக்கு சார்…”


“ஹ்ம்ம்… நம்ப கேஸ் டீடெயில்ஸ்ச பத்தி நியூஸ்க்கு கூட கூடுகள… அப்புடி ஒரு வேலை குடுத்து இருந்த கூட அத வெச்சி அதே மாதரி வேற எவனாவது செய்யுறானு சொல்லலாம், நாம நியூஸ்க்கும் டீடெயில்ஸ் கொடுக்கல, சூர்யாகூட வேற யாரும் சேர்ந்து கொலை பண்ணல அப்புறம் எப்புடி சேம் பேட்டெர்ன்ல… சரி சீக்கிரம் வேன் ரெடி பண்ணு நம்ப டீம்-ம உடனடியா வர சொல்லு… சீக்கிரம்...


தொடரும்…...



கதை & எழுத்து
நவீன் பிரபு - NAVEEN PRABHU

END OF
அரக்கன்( ஒரு இரக்கமற்றவன்) அத்தியாயம் ஒன்று.

© copyright all rights reserved


ஆதரவு அளித்த
அணைத்து
நல்ல உள்ளங்களுக்கும்
நன்றி ...!!!
 
ஏனப்பா இவ்வளவு கஷ்டப்பட்டு சூர்யாவைப் பிடிச்ச நவீனுக்கும் சத்தியாவுக்கும் ப்ரோமோஷன் ஏதும் இல்லையா?
இன்னும் அதே இன்ஸ்பெக்டர் அதே எஸ் ஐ தானா?
அய்யய்யோ
மறுபடியும் அடுத்து இன்னொரு சூர்யாவா?
இப்போ எத்தனை சிகரெட்?
எத்தனை பிளாக் டீ யோ?
 
தொடரும் கொலைகள். இன்னொரு சூர்யா... சூப்பர்... movie பார்த்த மாதிரி இருக்கு. :whistle: ? (y)
 
Top