Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அழைப்பாயா ?13?

Advertisement

Rudhra Vikram

Member
Member
அன்று காலை நன்றாகவே புலர்ந்திருந்தது... வித்தார்த் மற்றும் ஏஞ்சல் வழக்கமாக சந்திக்கும் இடமாக சந்தர் மாமாவின் கடை மாறியிருந்தது. ராம் குமாரும் அந்த குடும்பத்தில் ஒருவராக மாறியிருந்தார்.

வித்தார்திற்கு மற்றவரில் இருந்து ஏஞ்சல் வித்தியாசமாக தெரிந்தாலும் அவள் விளையாட்டிற்காக தான் அவ்வாறு பேசுகிறாள் போலும் என்றே நினைத்தான். ஏனோ தன் அடையாளத்தை கூறாமலே அவளின் சிறு சிறு பேச்சுக்கள் ரசிக்க வேண்டுமெனத் தோன்றியதை மட்டும் அவனால் மறுக்க முடியவில்லை.

அவனை அறியாமலேயே அவளின் புறம் சாயத் துவங்கி இருந்தான். ஆனால், அவன் மனத்தை உறுத்திக் கொண்டிருந்த ஒரு விடயம்...

அந்த வெள்ளை நிறப் பெட்டி...

வலதும் இடதுமாக நடந்து கொண்டிருந்தவனை விசித்திரமாக பார்த்தபடி ரோஷினியும் ஸ்கூபியும் அமர்ந்திருக்க, அவனோ அவர்கள் இருவரையும் கண்டு கொள்ள கூட இல்லை.

ரோஷினி, " அண்ணா... ஏன் அப்சட்டா இருக்க... கார்த்தி இந்த ஊர விட்டு போனதுனாலையா... " என்றதும் அவளைத் திரும்பிப் பார்த்தான்...

" இல்ல டா மா... அது அப்டிலா ஒன்னுமில்ல..."

அவள் கண்களைப் பார்த்து தான் கூறினான். மாறாக அவளின் கண்கள் தான் கலங்கி இருந்தன.

"அவனுக்கு என்ன பிடிக்கல அண்ணா... விடு.. நானே பெருசா எடுத்துக்கல... "
சிரித்துக் கொண்டே கூறியவளைப் பார்க்கப் பார்க்க விழித்திரை நீரால் சூழந்து கொண்டது.

இவையெல்லாம் யாரால்...?? மூளையின் கேள்விக்கு....

"உன்னால் தான்..."
மனசாட்சி முகத்தில் அறைந்தார் போல கூறியது.

வித்தார்த் தன்னால் தான் இவை எல்லாம் என குற்ற உணர்ச்சியின் பிடியில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தான்.

" இதற்கு மேலும் யோசித்தால் தலை வெடித்து செத்துருவேன் போல..." இரண்டு பக்கமும் தலையைத் தட்டிக் கொண்டே நடந்தவனை கலவரத்துடன் பார்த்தது ஸ்கூபி.

****

ஏஞ்சலின் கண்களில் நீர் அருவியாக கொட்டியது.

எவ்வளவு தான் அவளும் நடிப்பாள்? ஒரு வேலை ஆஸ்காரெல்லாம் தனக்கு தேவையில்லை என நினைத்துக் கொண்டாள் போலும்.

அந்த அறையிலிருந்து வெளியே செல்ல கால்கள் மறுத்தன... மேரியும், ஜோசஃபும் அழைத்துப் பார்த்து ஓய்ந்து போய் விட்டனர்..

"அறிவுக் கெட்டத்தனமா பேசாத ஜோசஃப்... என்னால இதை அவகிட்ட சொல்ல முடியாது... இந்த நேர்த்துல இது தேவையா... " மேரியின் குரல் கோபத்தின் உச்சத்தில் ஒலித்ததை ஜோசஃபால் உணர முடிந்தது.

" ஆனா இது என் கைல இல்லையே மேரி மா... அவளா தான் விருப்பப்பட்டு... " என அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே பாதியில் அமைதியானான்...

மேரி முறைத்துப் பார்த்ததினால் அல்ல. அவளுக்கு பின்னால் சற்று சோர்வாக நின்றிருந்த ஏஞ்சலால்.

" மே.. மேரி... "

ஏஞ்சலின் மேரி என்ற அழைப்பு சந்தோஷத்தை மட்டுமே கொடுத்து இருக்கிறது மேரிக்கு. ஆனால், இன்று அந்த 'மேரி' அழைப்பு கோபத்தை உண்டு பண்ணியது.

" என்ன ஏஞ்சல் இதெல்லாம்... எத்தனை வருசம்... என்கிட்ட கூட காண்டாக்ட்ல இல்லாம... கராத்தேல அத பண்ணணும்... இத ஜெயிக்கனும்னு ஏதோ ப்ளாக் பெல்ட், கப்னு வாங்கிட்டு வந்த... வந்து ஒரு இரண்டு மாசம் தான் ஆகுது... அதுக்குல்ல இப்ப எதுக்கு ஹோம்ல சேரனும்... உனக்கு என்ன நாங்களாம் இல்லையா... இது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல... " என்று அவளின் ஆதங்கத்தை வார்த்தைக் கனல் மூலம் கொட்டி தீர்த்தாள்...

ஏஞ்சல் அமைதியாக அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
அந்த பார்வையில் இருந்த ஏதோ ஒன்று மேரியை யோசிக்க வைத்தது...

" மேரி... உனக்கே தெரியும். எனக்குனு இருந்தது அண்ணா தான். அவனும் இப்ப வேற ஊருக்கு போய்ட்டான். அவன டிஸ்டர்ப் பண்ண நான் விரும்பல... ஒரு மாசம்... இரண்டு மாசம்... இன்னும் எத்தனை நாளைக்கு இங்கேயே இருக்க முடியும்...? " அவள் கூற்றில் இருந்த உண்மையை ஏற்று தானே ஆக வேண்டும்.

" நான் அப்பாக்கிட்ட பேசி பாக்குறேனே... உன்ன இப்டி தனியா போன்னு என்னால சொல்ல முடியாது ஏஞ்சல்... சொல்லவும் மாட்டேன்... "

'அப்பா' என்றதும் ஏஞ்சலின் முகம் மாறியதை மேரி கவனிக்காமல் இல்லை.

" மேரி மா... அதெல்லாம் வேணா... " என்று மேரியின் அருகில் வர...

கையை நீட்டி ஏஞ்சலை அவ்விடத்திலேயே நிறுத்தியவள், தலையை மறுப்பாக அசைத்து விட்டு...

" நான் சொன்னா என் அப்பா கேட்பாரு... அந்த நம்பிக்கை கொஞ்சம் மிச்சம் இருக்கு... அப்டியும் கேட்கலேனா அந்த உறவே எனக்கு தேவை இல்லைனு போய்டே இருப்பேன்... " மேரியின் குரலில் தெரிந்த உறுதியில் ஏஞ்சல் மேலும் பயந்து போனாள். இந்த பிரச்சனை வேண்டாம் என்று தானே ஆசிரமத்திற்கு செல்லவே முடிவெடுத்து இருந்தாள்.

" நானே பிரச்சனைய ஆரம்பிச்சு வச்சிட்டேன்..."
எதற்கும் பயப்படாதவள் பயப்படுவது ஒருவரிடம் மட்டும் தான்... மேரியின் தந்தை, ஜான்சன்...

வெளியூரில் சொந்தமாக ஒரு பிசினஸ் ஆரம்பித்து இப்போது ஒரு மிகப்பெரிய இடத்திற்கு வந்திருப்பவர். ஏனென்று தெரியாத ஒரு வித வெறுப்பு ஏஞ்சலின் மீது அவருக்கு. ஒரு அனாதையை அவர் மகளுக்கு ஈடாக வைத்து அவரால் பார்க்க முடியவில்லை போலும்.

" ஹம்... நான் கொஞ்சம் வெளிய போய்ட்டு வரேன்... மனசு சரியில்லை... மேரிய சமாதானம் செய்ங்க மாமா... "
கனத்த மனதுடன் அங்கிருந்து வெளியேறினாள் ஏஞ்சல்.

உண்மையிலே அவளின் பால் தவறு என்றால் அவள் அனாதையாக பிறந்தது மட்டுமே. எதற்கென்றே தெரியாத பல வெறுப்புகளை சுமந்தாலும் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பாள். சிறிய திருத்தம், அவ்வாறு காட்டிக் கொள்வாள்.

நடந்த படி கால் போன போக்கில் நடந்தாள் ஏஞ்சல்... இரவும் இல்லாத பகலும் இல்லாத மாலை பொழுது ஆதலால், பலர் சென்று வரும் சாலையாக இருந்தது.

எத்தனை வித்தியாசமான மனிதர்கள்...

அதோ ஒரு குட்டி பையன். தன் பொக்கை வாய் சிரிப்பில் சொர்கத்தை அடக்கி இருப்பவன்.

அதோ பக்கதிலேயே ஒரு பத்து வயது சிறுமி. வேறு யாரும் அல்ல... ராம்குமாரின் தவப்புதல்வி, ரூபி. வாய் பேச முடியாவிடினும் செய்கையில் ஆயிரம் ஆயிரம் அழகான செய்கைகள்.

இதோ எதிரே அறக்க பறக்க ஓடி வேலை செய்ததில் கலைத்துப் போய் காட்சியளித்தாலும் தன் குட்டி குழந்தையைப் பார்க்க போகும் மகிழ்ச்சியில் இளைஞன் ஒருவன்.

வௌயிட் கலர் சர்ட், ப்ளாக் டை என நேர்த்தியாக சென்ற நடுத்தர வயது நபர், தன் சக்தி முற்றிலும் வடித்து எடுக்கபட்டு விட்டதை அனுமானிக்கும் அளவு சோர்வு அவரது நடையில்.

கைத்தடியுடன் மெதுவாக நத்தை போல ஊர்ந்து வந்த முதியவர்.

இதில் தான் யார்? ஒரு சாமானிய ஸ்திரீ(பெண்)... அவ்வளவே... தனக்கான அடையாளத்தை கராத்தே என்ற கலை மூலம் தேடினாள்... தேடித் தொலைத்து விட்டு இங்கு நிற்கிறாள்...

முடிந்தவரை தானே சம்பாதித்து கற்றுக் கொண்டாள். அதற்கு மேலும் பணத்தை ஏற்பாடு செய்ய முடியாததால் தகுதி இருந்தும் வெளியேற்றப்பட்டாள்.

சற்று நேரம் எதை எதையோ எண்ணி கொண்டிருந்தது மூளை.

சிந்தனையில் இருந்தவளை மீட்டது அந்த குரல்...

" ஏஞ்சல்... ஏஞ்சல்... " என கையசைத்தபடி வித்தார்த் நின்றிருந்தான் அவனது வீட்டு முன்பு. அதே வீடு. மரத்தால் ஆன பூக்களால் அலங்கரிக்கப்பட்ட குட்டி வானுலகம்.

" ஹே... சித்து.... " தானும் கை ஆட்டி விட்டு அங்கு விரைந்தாள்.

ஒரு நீல நிற டீ சர்ட், கருப்பு நிற சார்ட்ஸ் என ஆளே வித்தியாசமாக இருந்தான். ஏஞ்சல் வாசலிலேயே நின்று கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"ஓய்.. அக்காவ்... என்னாச்சு... " என அவளின் முகத்திற்கு முன்னால் கையசைக்க...

" இந்த இடம் சூப்பரா இருக்கு டா குட்டி பையா... உங்க வீடா... " என்றபடி உள்ளே நுழைந்தாள்.

அவளின் முகத்தில் சிறு கலக்கம் தென்பட்டதை குறித்து வைத்து கொண்டான் வித்தார்த். ஆனால், ஏனென்று கேட்கவில்லை. கேட்டு அவளுக்கு மீண்டும் அதை நினைவுப்படுத்த விருப்பம் இல்லை.

" இந்த ஃபிலவர்ஸ் எல்லாம் அழகா இருக்கு டா... இதெல்லாம் யார் பராமரிக்கிறா... " என்றவள் அந்த பூக்களைத் தொட்டுப் பார்க்க...

வித்தார்தோ..., "ரோ.... " என ஆரம்பித்தவன் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த ரோஷினியைக் கண்டதும் ஏஞ்சலை ஒரு முறை பார்த்தான். ரோஷினி வீட்டின் கேட்டை நெருங்கி இருக்க... அவள் காதில் விழ வேண்டும் என்பதற்காகவே சத்தமாக கூறினான்.

"ம்ம்... ரோட்ல போற வரவங்களா பராமரிப்பாங்க... நான் தான்... " என்றதும் அவனை முறைத்துக் கொண்டே வந்த ரோஷினி சட்டென பிரேக் போட்டு நின்றாள்.

ஏஞ்சல் அப்படியே கதைகளில் கேட்ட ஏஞ்சலின் சாயலை ஒத்திருந்தாள். அவளை வித்தார்த்துடன் கண்டதும் ஏதோ பாதி புரிந்து பாதி புரியாத நிலையில் இருந்தாள் அவள்.

" நம்ம வீட்ல ஒரு பொண்ணு அதுவும் உன் கூட... அப்போ.... " என அவனுக்கு சைகையால் கூற...

" அப்போவும் இல்ல... எப்பவும் இல்ல... ஒழுங்கா ஓடிறு... " என விரட்டுவதிலேயே குறியாய் இருந்தான் அவன்.

அதற்குள் ஏஞ்சல் திரும்பி அவளைப் பார்த்துவிட, புருவ முடிச்சுடன் இருவரையும் பார்த்தாள்.

" என்னாச்சு... ஏன் அவங்க அங்கேயே நிக்கிறாங்க சித்து... " என்க ரோஷினிக்கு மேலும் குழப்பம் ஏற்பட்டது.

" சித்துவா... எவன் அவன்... " என்ற ரோஞ்சில் பார்க்க... வித்தார்த் சைகையால் ஏதோ கூறியதிலிருந்தே மொத்த கதையும் விளங்கிவிட்டது.

தன்னை சுதாரித்து கொண்டு வித்தார்த் அவளருகில் நடந்து சென்றான்.

" அது இவங்க டெலிவரி கேர்ள்... அது நீங்க தானே... " என்றதற்கு நாலாபுறமும் தலையசைத்தாள் ரோஷினி.

" ஆங்... அந்த கவரைக் குடுத்துட்டு போங்க... பை.... " என அவளை வீட்டுக்கு வெளியே கிட்டதட்ட இழுத்துக் கொண்டு சென்றான் வித்தார்த்.

" ஏய்... கொஞ்ச நேரத்துக்கு இந்த பக்கம் வராத... அப்டியே ஓடிறு... ராம் அங்கிள் அதோ அந்த கடைல தான் இருக்கார். அவர்கூட போய்டு... " என்று கேட்டை பூட்டி விட்டான்.

" உனக்கு என்ன டா... நான் என் அண்ணிகிட்ட பேசனும்... அவங்க என்ன உன்ன சித்துனு கூப்பிட்றாங்க... " என்று பேசிக் கொண்டே இருக்கையில், பூக்களின் வாசனைகளைப் படித்துக் கொண்டிருந்த ஏஞ்சல் அவர்களை நோக்கி நடந்தாள்.

" ஏய்... நான் இப்போதைக்கு சித்தார்த். உன் அண்ணன் வித்தார்த் ராத்திரி ராம் அங்கிள் வந்து கூட்டிட்டு போவான்.... இப்ப கிளம்பு... " என்று விட்டு திரும்ப... ஏஞ்சலின் காதில் எது விழுந்ததோ இல்லையோ... ரோஷினியிடம் கூறிய
' உன் அண்ணன் வித்தார்த் ' அது மட்டும் தெளிவாக கேட்டது.

" என்ன....நீங்க வித்தார்தோட சிஸ்டரா... " என வாயைப் பிளந்து கேட்க... அவள் வாயை முடியவன்...

" ஆமா... நீ வா... " என்று கூறிவிட்டு நடக்க துவங்கினான்.

" ஹாய்ய்... என் பேர் ஏஞ்சல்... உங்க பேர் என்ன... நீங்க வித்தார்த் சிஸ்டரா இல்ல... அந்த லூசு பையன் சும்மா சொல்றானா... " என ஏஞ்சல் அனல் பறக்க தன் கையை பேண்டில் துடைத்து விட்டு மென்மையாக கை குலுக்கினாள்.

ரோஷினிக்கு சிரிப்பு தான்
வந்தது. வித்தார்தை அருகிலேயே வைத்துக் கொண்டு சுற்றி முற்றி தேடுபவளை காண விசித்திரமாக இருந்தது.

" ஹா... ஆமா... ஆமாங்க நான் தான். என் பேர் ரோஷினி... " என பரஸ்பர விசாரிப்பு போய் கொண்டிருந்தது.

வித்தார்தோ ஏஞ்சல் இல்லாததை அப்போதே உணர்ந்து திரும்பி பார்க்க ஏஞ்சல் மும்முரமாக ரோஷினியிடம் எதையோ பற்றி கூறிக் கொண்டிருந்தாள்.

" அட... இவகிட்ட சொன்னது தப்பா போச்சு டா... அந்த லூசுகிட்ட போய் என்ன பத்தி இல்ல பேசிட்டு இருப்பா... ரோஷினி கேக்குற கேள்விக்கு எப்டி டா பதில் சொல்ல போற வித்தார்த்... எனக்கு நானே சூனியம் வச்சிக்கிட்டேனே... " என தலையில் அடித்துக் கொண்டான்.

அவனின் நிலையைப் பார்த்த ரோஷினி சிரித்து விட்டு செல்ல... அப்போதே சித்துவின் நினைவு வந்த ஏஞ்சல்,

" டேய்... குட்டி பையா... நான் இவங்கிட்ட பேச வேண்டி இருக்கு... உன்ன அப்பறமா பாத்துக்குறேன்.
பை.. பை.. " என்றுவிட்டு ரோஷினியிடம் பேசத் துவங்கினாள்.

" என்ன நடக்க
போகுதோ.. " என வானத்தைப் பார்த்து புலம்பியபடி உள்ளே சென்றான் வித்தார்த்.

இங்கு ஏஞ்சல் ரோஷினியிடம் விடை பெற்றுக் கொண்டாள்.

" பை ரோஷினி... நீ ரொம்ப நல்லா பேசுறீங்க... டேக் கியேர்... அப்பறம் உன் அண்ணாவ நல்லா பாத்துக்க... இல்லனா அடி விழும்... " என்று பொய்யாக மிரட்டினாள்.

" ஆஹா... சரிங்க அண்ணி... " என்றுவிட்டு செல்ல ஏஞ்சலோ சிலை போல நின்று துள்ளிக் குதித்துச் சென்ற ரோஷினியையே கண்ணெடுக்காமல் பார்த்த வண்ணம் இருந்தாள்.
 
Top