Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அழைப்பாயா ?14?

Advertisement

Rudhra Vikram

Member
Member
ரோஷினி வீட்டிற்குள் நுழைவதற்காகவே காத்திருந்தார் போல அமர்ந்திருந்தான் வித்தார்த்.

" ஏய்... ரோஷி... ரோஷி... இங்க வா... வந்து உட்காரு... " என அவளை அங்கு அமரவைத்தான் அவன். முதலில் ஏனென்று புரியாமல் முழித்தாலும் அவனின் முகத்தில் தெரிந்த படபடப்பு எதையோ உணர்த்தியது.

ரோஷினி வேண்டுமென்றே அவனைக் கண்டுக் கொள்ளாமல் மேசை மீது இருந்த தின்பண்டங்களை கையில் எடுத்தாள்.

" ரோஷி மா... எதுவும் உளறி வைக்கலையே... " என பாவமான முகத்துடன் கேட்க, கடினப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டாள் ரோஷினி.

" என்ன டா சொல்ற... நான் என்ன உளற போறேன்... ஐ ஆல்வேஸ் ஸ்பீக் த ட்ரூத், யு நோ... " என வாயிற்குள் ஒவ்வொன்றாக போட்டபடி கூற....

" அடியேய்... மொத்ததையும் சொல்லிட்டியா... " என இடித்து இறங்கியது போல
சாய, அவனைப் பிடித்து அமர வைத்தாள்.

" அட மை லவ்வபிள் பிரதர்... நீ தானே சொல்லிருக்க உண்மைய மட்டும் தான் பேசனும்னு அதான் நான் சொல்லிட்டேன்... "

" ஹே... ஹே.... என்னடி சொல்ற... "

" இங்க பாரு... நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது... எனக்கு அவங்கல தான் பிடிச்சிருக்கு... லவ் பண்ணிரு..."

" உனக்கு பிடிச்சிருந்தா நான் லவ் பண்ணனுமா... அதெல்லாம் முடியாது... "

" டேய்... ஏஞ்சல்கிட்ட நீ தான் என் அண்ணினு சொல்லிட்டு வந்துட்டேன்... சட்டுபுட்டுனு அண்ணிய வீட்டுக்கு கூட்டிட்டு வா... உன் மூஞ்சையே எத்தனை வருசத்துக்கு பார்க்குறது..." என்றபடி செல்ல,

" இது என்னடா உனக்கு வந்த சோதனை வித்தார்த்... " என்பது போல ஸ்கூபி பார்க்க, பாவமாக உள்அறைக்கு சென்றான் வித்தார்த்.

" ஒரு வேளை தெரிஞ்சிருக்குமோ... இல்ல இல்ல... இவளா சொல்றாளா... " என யோசனையில் மூழ்கியபடி
நடந்தான்.

அந்த அறையில் இருந்த மெத்தையில் அமர போக சட்டென அவனது காலில் ஏதோ தட்டுப்பட்டது. குனிந்து பார்த்த போது தான் அதைக் கண்டான்.

அந்த வெள்ளை நிற பெட்டி.

ஒரு கணம் தக்ஷனின் முகமும் கார்த்தியின் முகமும் கண் முன்னே வந்து செல்ல, அவ்விருவரின் மத்தியிலும் ரோஷினி மாட்டிக் கொண்டது போல தோன்றியது.

மெதுவாக அந்த வெள்ளை நிற பெட்டியை எடுத்தான் வித்தார்த்.

ஏனோ... ஒரு முறை கார்த்தியிடம் பேச வேண்டும் போல இருந்தது.

" ஹலோ... கார்த்தி... "

" .... "

" டேய் கார்த்தி... அமைதியா இருக்காத பேசு டா... "

" ம்ம்... "

" இன்னும் கோபம் குறையலையா டா... "

" ம்ம்.... "

" டேய்... எதுக்கெடுத்தாலும் ம்ம் ம்ம்ங்காத.... பேச விருப்பம் இல்லாம தான் போன்அ
அட்டென்ட் பண்ணியா... "

" ...... " எதிர் புறத்திலிருந்து பதிலே வரவில்லை.

" டேய்... என்கூட பேசலேனாலும் பரவாயில்லை. ரோஷினிகிட்ட ஒரு வார்த்தை பேசேன் டா... என் தங்கச்சிக்காக என் சுயமரியாதையையே இழந்துட்டு நிக்கிறேன் டா.. நீயும் என்னை சோதிக்காத..."

"....... "

அவன் வாய் திறந்து பேசுவதாக இல்லை என முடிவெடுத்த பின் நான் யார் என நினைத்துக் கொண்ட வித்தார்த் அழைப்பைத் துண்டிக்க முற்பட, அவனின் பெயர் மறுபுறம் கேட்டது.

" வித்தார்த்... "

" டேய்... கார்த்தி.... "

" Responsility is bigger than self respect. இதை நான் கேள்விப்பட்ருக்கேனே தவிர அது மேல எனக்கு நம்பிக்கை இருந்ததில்ல டா... சாரி டா... உன்னை நான் புரிஞ்சிக்காம போய்ட்டேன்... "

" டேய்... என்னடா சின்ன குழந்தை மாதிரி சாரி கேட்டுக்கிட்டு... சரி விடு... நானும் யோசிச்சு பாத்துட்டேன் டா... Responsilityனா என் தங்கச்சிய மட்டும் பாத்துக்குறது இல்ல டா... என் யூனிஃபார்ம்க்கும் ஒரு கடமை இருக்கு.... அந்த தக்ஷனுக்கு ஒரு பாடம் கத்துக் கொடுக்காம விட்றதா இல்ல..."

" இது... இது தான் டா... நான் எதிர்ப்பார்த்தது. உன் கிட்ட இருந்து கால் வந்தா கண்டிப்பா இதை தான் சொல்வனு நம்பினேன்... என் நம்பிக்கைய நீ
காப்பாத்திட்ட டா... "

அவனின் குரலில் ஒரு சந்தோஷம் தெரிந்தது.
அதை தன் சந்தோஷமாகவே பார்த்தான் வித்தார்த்.

சட்டென விழித்து எழுந்து பார்த்த போது தான் மூளைக்குத் தட்டுப்பட்டது கண்டதெல்லாம் கனவு என்பது.

அறையை சுற்றி முற்றி பார்க்க, கடைசியாக அந்த வெள்ளை நிற பெட்டியை மெத்தைக்கு அடியில் தட்டிவிட்டது தான் நினைவில் இருந்தது. அதன் பிறகு தொப்பென விழுந்தது தான் நினைவில் மீதமிருந்தது.

ஜன்னலருகே மெதுவாக நடந்து வந்தவன் அமைதியாக அங்கு மாட்டப்பட்டிருந்த திரைசீலைக்கு அருகே உறங்கிக் கொண்டிருந்த ஸ்கூபியைப் பார்த்து முறுவலித்தான்.

ஜன்னலை திறந்து பரந்து விரிந்த வானத்தைப் பார்த்தான். இரவு நேர வானத்தில் நிலவும் நட்சத்திரமும் சேர்ந்து அலங்கரித்து இருந்தது.

" என் நம்பிக்கையை காப்பாத்திட்ட டா... " அந்த வார்த்தை அவன் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

மெதுவாக அந்த வெள்ளை நிற பெட்டியை எடுத்து திறந்து பார்த்தான்
வித்தார்த். அதை திறந்து என்ன தான் இருக்கிறது என பார்த்து விடுவோம் என்ற உறுதியுடன் அதை திறக்க முற்பட்டான் வித்தார்த்.

சற்று கடினமாகவே இருந்தது. அதுவும் ஒரு வழியாக திறந்து விட, புருவ முடிச்சுடன் அந்த பெட்டிக்குள் இருந்ததையே பார்த்துக் கொண்டிருந்தான்.
தன்னிச்சையாக கைகள் அதை நோக்கி பயணித்தது.

அது ஒரு ஆப்பிள் ஐ
ஃபோன்... அப்படியெனில் இதன் உரிமையாளர் செல்வந்தராக தான் இருக்கக் கூடும்...

அதை எடுத்துப் பார்த்த போது தான் எங்கோ பார்த்ததாக நினைவு வந்தது. ஆம்... இது வாட்சனின் தொலைப்பேசி ஆயிற்றே... இல்லை... அதே மாடல். ஒரு வேளை வேறு யாருடையதாக கூட இருக்கலாம்.

அதை திறக்க முற்பட, திரையில் கடவுச்சொல் என மிளிர்ந்தது.

" ஓ மை காட்... இப்ப பாஸ்வேர்டுக்கு எங்க போவேன்... இது வேற ஐ போன் ஆச்சே... தப்பா போட்டா மொத்த டேட்டாவும் காலி தான்... கமான் வித்தார்த்... யூஸ் யுவர் நாலேஜ்... "

சட்டென மின்னலடித்து போல ஐடியா மாட்டிக் கொள்ள, எழுந்து அந்த அறையில் இருந்த விளக்கை ஒளிர விட்டான்.

அதன் பிரகாசத்தில் தொலைப்பேசியை காட்டி, அதிலிருந்து ஸ்கீரின் கார்டை மெதுவாக எடுத்தான்.

" ஒரு வேளை கடைசியா அவங்க டச் பண்ண ஃபிங்கர் பிரின்ட் இருக்கலாம்... " என அதன் அச்சு தெரியும் இடத்தைக் குறித்துக் கொண்டான் அவன்.

" Shalini... இது அந்த பொண்ணு பேராச்சே... தென்... இட் மட்ஸ் பீ ஹிஸ் மொபைல்... நான் நினைச்சது கரெக்ட் தான்... அதனால தான் அவர் பொண்ண அன்னைக்கு கிட்நாப் பண்ணிருக்காங்க... நானும் தெரிஞ்சவறேன்னு ஹெல்ப் பண்ண போய் கடைசில ரோஷினியவே பணயம் வைக்கிற மாதிரி ஆகிருச்சு... ஹூம்.... அப்ப ஏசிபியா இருந்தே ஒன்னும் பண்ண முடியல... இப்போ என்னால என்ன பண்ண முடியும்... "

பலமான யோசனையில் மூழ்கினான் வித்தார்த்.

" எஸ்ஸ்ஸ்.... செந்தில்... அவர் ஒரு ஜர்னலிஸ்ட் தானே... ஹம்... ஆனா அவரால முடிஞ்சா மீடியாலையே சொல்லிருப்பாரே... ஒரு வேலை அதுக்காக கூட அவரோட பொண்ணை கடத்தி இருக்கலாம். வேற வழில தான் போகனும்... மீடியா தான் பெட்டர் சொல்யூஷன்....

கண்டிப்பா இதை மக்கள்கிடட் கொண்டு போகனும்... மே பி..
இந்த ட்ரக்னால பாதிக்கபட்டவனோட அன்புக்குரியவங்க குரல் கொடுக்க வாய்ப்பிருக்கு... பட் இதை எப்டி மீடியாகிட்ட சேர்க்குறது... செந்திலோட
ஆஃபிஸ்க்கு போய் பார்ப்போம்... எம் டி கிட்ட பேசுவோம்... மே பி அவர் ஹெல்ப் பண்ணலாம்... "
என நினைத்தவன் ராம்குமாரின் உதவியை நாடி அங்கு சென்றான்.

ஆனால், அவனுக்கு தெரிய வாய்ப்பில்லை. தனக்கான ஆபத்து அவர் மூலமாக வழி மேல் விழி வைத்துக் காத்திருப்பதை, தெரிந்திருந்தால் அவ்வரிடம் சென்றிருக்க மாட்டானோ என்னவோ...
***
இங்கு ஏஞ்சல் எல்லாவற்றையும் எடுத்து பையில் திணித்துக் கொண்டிருந்தாள். ரோஷினி கூறியவை சற்று இதமளித்தது. அதை எண்ணி சிரித்துக் கொண்டே எடுத்து வைத்த ஏஞ்சலை பயத்துடன் பார்த்தான் ஜோசஃப்...

" ஐயையோ... இவளுக்குள்ள ஆவி புகுந்திருச்சோ... சிரிக்கிறதே வில்லங்கமா சிரிக்கிறாலே... " என்றபடி அவள் அருகில் வந்தான்.

" ஏஞ்சலு... ஏஞ்சலு... "

அவளிடம் இருந்து பதில் வரவில்லை. சற்றே பயந்து தான் போனான் ஜோசஃப்.

" அடியேய்... ஏஞ்சலு... " என கத்த, 'ஆஆஆஆ.. ' என பயங்கரமாக கத்தினாள் ஏஞ்சல். அதில் பயந்து போய் விழுந்தடித்துக் கொண்டு ஓட ஆரம்பித்தான் ஜோசஃப்.

அப்போதென்று அங்கு வந்த மேரி, அவனை நிறுத்தினாள்.

"டேய்... ஏன்டா இப்படி பயந்தடிச்சு ஓடி வர... " என்க...

" பே.. பேய். ச்சீ... பிசாசு... இல்ல குட்டி சாத்தான்... " என உளற அவன் தலையிலேயே ஒரு அடி வைத்தாள் மேரி.

" ஏஞ்சல் மூஞ்ச க்ளோஸ் அப்ல பாக்காத.... பாக்காதனு எத்தனை தடவை சொல்றேன் கேட்டா தானே... " என வேண்டுமென்றே ஏஞ்சலை பார்த்து சத்தமாக கூறினாள் மேரி.

" இன்னமும் இந்த செத்துப் போன காமெடி எல்லாம் சொல்லிட்டேன் சுத்து மேரி... நான் நாளைக்கு
கிளம்புறேன்... " கூறி முடித்துவிட்டு மேரியைப் பார்க்காமலேயே சென்றாள் ஏஞ்சல்.

அவளுக்கு தெரியாததா, மேரியின் முகம் இப்போது ரத்தமென சிவந்திருக்கும், கோபத்தால். அதை கோபமென்று நாம் தான் கூறிக்கொள்ள வேண்டும்... என நினைத்தபடி ஹாலில் இருந்த சோஃபாவில் தொப்பென விழுந்தாள் ஏஞ்சல்.

" நாளைக்கு அப்பா வராரு ஜோசஃப்... பேசி பார்க்கலாம்.... " என்றபடி செல்ல நாளைக்கு என்ன நடக்கப்போகிறதோ என்ற பயம் மட்டுமே ஜோசஃபிடம் குடி கொண்டது.
 
Top