Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அவள் காதலில் நனைந்து ... ???

Advertisement

Ashokaa

Well-known member
Member
#சிந்திய_சில_நிமிடங்கள் ???

மாதங்கள் பல கடந்து என் சிந்தனையின் சிறுதுளியாய், எண்ணங்களின் வண்ணங்களில், நான் சிந்திய சில நிமிடங்கள் ?

அவள் காதலில் நனைந்து ... ???

சென்ற வார இறுதியில் தான் அவளைச் சந்தித்திருந்தேன். இன்று மீண்டும் சந்திக்க ஒரு வாய்ப்பு அமைய, சிரமங்களுக்கு நடுவிலும் வாய்ப்பை நழுவ விட ஏனோ மனம் வரவில்லை.

காதல் சந்திப்புகள் என்பது எந்த ஒரு காதலர்களும் தவற விட நினைக்காத ஒன்று தானே. இந்த அன்பின் அரசாட்சியில் பிறகு நான் மட்டும் என்ன விதி விலக்கா?

சந்திக்கத் தயாராக ஆரம்பித்ததுமே மனம் தானாகவே அவளைச் சந்திக்கும் அந்த நிமிடத்தை நினைக்க, அவளின் சிருங்கார மொழியில் மனம் பிறழ, அவளுள் என்னைத் தொலைக்கும் அந்த நொடியை எண்ண... என் மெய் சிலிர்க்க... அப்பப்பா ... காதலின் இந்த இனிய அவஸ்த்தைகள் எல்லாம் என் காதலியின் காதல் பரிசுகள்.

காதலியைக் காணப் போகும் வேட்கை, மனோ வேகம் என்பதன் பொருள் உணர்த்தி, என் மனதுடன் நானே போட்டியிட்டு அதிவிரைவாகவே தயாராகி வாசல் வந்துவிட்டேன்.

எங்கள் தனிமை சந்திப்புகளெல்லாம் தித்திப்புகள் என்றாலுமே இதுவரை அதற்கான வாய்ப்புகளை அவள் சில முறை மட்டுமே தந்திருக்கிறாள்.
அதற்கான எனது கோபம் அவள் அறிவாளா? நான் அறியேன். காரணம் எனது ஏக்கம் ஆதங்கம் எல்லாம் ஏனோ இன்றுவரை தீர்க்கப் படாமலே இருக்கிறது.

ஆனால் எனது இந்த அத்தனை உணர்வுகளையும் என்னுள் அடங்கிய ஆயிரம் ஆயிரம் கோபங்களையும் அவளின் சிறு தீண்டலில் சிதறடித்துவிடும் வல்லமை அவளின் அன்பிற்கு உண்டு.

ஆமாம், அவள் எனது காதலி ஆனது எப்பொழுது? எனது நீண்ட நெடுநாளைய கேள்வி இது? அவளை நான் முதலில் அறிந்த பொழுதா? இல்லை அவளை நான் முதலில் சந்தித்த பொழுதா? இல்லை அவளின் சந்திப்புகளுக்காக முதன் முதலாக ஏங்கிய பொழுதா?

எது என்னிடம் அன்பை விதைத்தது? எது அவளிடம் என்னை ஈர்த்தது? எது அவளின்பால் என் அன்பை நிறைத்தது? கேள்விகள் எல்லாமே என்றென்றும் என் மனதில் கேள்விகளாய் மட்டுமே. எங்கள் அன்பின் ஆரம்பம் அவள் அன்பின் ஆழம் போலவே அளவிட முடியாதது.

மனம் எல்லாம் மகிழ்ந்து துள்ள, என் மகிழுந்தும் என் கைகளில் சீராய் பாய, இமையின் ஓரம் எழுந்த இந்த சந்திப்புக்கான கனவுகளும் ஏக்கங்களும் இந்தக் கோடையின் சாலையோரக் காட்சிகளின் அழகை ரசிக்க மறுத்தது.

எழுபது நிமிட பயண நேரமும் என் எண்ணமெல்லாம் அவளே நிறைந்திருக்க மகிழுந்தை நிறைத்த கலகலப்பும், இன்னிசையும் கூட என் செவிகளைத் தீண்டியதே தவிர என்னவளின் நினைவை நிறுத்தவில்லை.

பயணம் முடிந்து அவளைக் காணக் கால்கள் துள்ள, கடைசி நிமிட எண்ணத்தின் ஓட்டமும் மனதின் பரபரப்பும் அதனால் ஏற்படும் ஒருவித படபடப்பும் சுற்றம் மறக்கச் செய்ய, எனக்கான தனிமையை என்னை அறிந்து மற்றவர்கள் தந்தே விட்டனர். (என் மனம் அறிந்தவர்கள் தானே அவர்களும் ...)

சென்ற முறை காணும் போது என்னை நெருங்க விடாமல் குளிர்ந்து குமுறிக் கொண்டிருந்தவள் பின் சில நிமிட நேரங்களை விழுங்கி என்னை மெல்ல மெல்ல ஆட்கொண்டாள். இன்று அவளின் மனநிலை என்னவோ?

காதல் கண்களில் ஏக்கம் பிறக்க, என் கால்களின் வேகம் என்னிடம் இல்லை. கண்கள் அவளைத் தேட, அதோ தூரத்தில் அவள்.

சலனமில்லாத அவளைக் கண்டதும் என்றும் போல இன்றும் ஆசை அடங்க மறுக்க அவளைத் தீண்டி அணைத்து முத்தமிடும் வேகம் என்னுள்.

செறிந்த காதலால் என் கைகளில் அடங்க மறுக்கும் அவளின் வேட்கையும் நான் நன்கு அறிந்தது தான்.

ஆனால் ஏனோ அவள் இன்று அமைதியாய், சிறு குழந்தையின் இதழ் தீண்டும் இன்னிசை சுமந்த தென்றலாய் என்னை வரவேற்க, என்றைக்கும் போலவே இன்றும் அவள் புதிதாய் தெரிகிறாள். பெண்மையின் ஆயிரம் முகங்களில் இதுவும் ஒன்று போலும்.

ஆதவனின் ஆட்சி உச்சம் பெற்ற வேளையிலும் வேகம் கொண்ட எங்களின் இன்றைய சந்திப்பு இருவருக்குமே புதிது தான்.

மனதின் வேகம் கால்களில் தெரிந்தாலும் அருகே அவளை நெருங்கிய அந்த சில கணங்களில் என்னுள் சிறு தயக்கம் ... அதில் என் பாதங்கள் சற்றே தடு மாற ... அவளும் சிறிது தடம் மாற ... என எங்களுக்குள்ளே சிறு விளையாட்டு.

நொடிகள் கடக்க என் இதயத்தின் தாபம் இமைக்குள் குடியேற, விழிகளால் அவளை விழுங்க, மென்தீண்டலாய் அவள் என்னைத் தீண்ட, அவளின் ஈர முத்தங்களால் பாதங்கள் ஸ்பரிசித்த அந்த மெல்லிய வெப்பம் மேலேற ஏற சற்றே குளிர்ந்து என் இதயம் நிறைந்து அவளின் தீண்டலில் என் உடலுள் உயிராய் உறையத் தொடங்கியது.

கண்கள் மூடி சற்றே அவளின் மெய் தீண்டலை உணர உணர அவளின் அன்பில் நான் கரைய, உள்ளத்தின் கொதிப்பில் இமை மூடிய என் விழிகளின் ஓரம் வெப்பத்தின் சிறு துளி.

என் இமையின் ஈரம் பொறுப்பாளா என் காதலி? மென் தீண்டல்களில் என் மெய்யுணர்ந்தவள் சற்றே வல்லினம் காட்டத் தொடங்க ... அவள் தீண்டலின் வேகம் என் மேனி உணர்ந்தாலும், என் ஈர நயனங்கள் ஏனோ திறக்க மறுத்து அவளின் அன்புக்குள் கட்டுண்டு நான் கரைய ... கால்கள் மண்டியிட்டு அவளுள் நான் சரிய....

என் விழி நனைத்தவள் வாரி அனைத்து என் தேகம் முழுவதும் முத்தமிட... காதல் களவாடிய அந்த நிமிடங்களில்... அவளின் அன்புக் கடலில் நான் நனைய.... இல்லை இல்லை அவளே கடலாக இருக்க அவள் என்னை எப்படி நனைக்க? என்னை நனைத்தது அவளின் அன்பு மட்டுமே. அலைகள் அல்ல.

அன்பால் எனை நனைத்தவள். யாராவள்? அவள் ஆர்கலி, என் காதலி. ஆழம் அறிய முற்பட்டபோது நான் ஆழி என்றாள். அன்பால் வாரி அனைத்து நான் வாருணம் என்றாள். அலைந்து திரிந்து அவளைக் கண்டபோது என்னை அலையாய் தழுவிக் கொண்டாள்.

அவள் அன்பில் நனைந்து நான் மேனி சிலிர்க்க என் விழித்திரை அகல விழி சுற்றம் உணர, உறக்கக் கேட்டது என் அன்னையின் குரல் "இவ அடங்கவே மாட்டா. இந்தா இன்னைக்கும் மொத்தமா நனைஞ்சுட்டா. இதுக்குத் தான் கடலுக்குப் போக வேண்டாம்ன்னு சென்னேன் பா."

"விடுங்கம்மா, நனையட்டும். அவளுக்குக் கடல் ரொம்பப் பிடிக்கும்" கண்களில் காதல் மின்ன கரையில் என் கணவர்.

என் கடல் காதலியின் காதலில் நனைந்தபடி நான்.

???
 
Last edited:
#சிந்திய_சில_நிமிடங்கள் ???

மாதங்கள் பல கடந்து என் சிந்தனையின் சிறுதுளியாய், எண்ணங்களின் வண்ணங்களில், நான் சிந்திய சில நிமிடங்கள் ?

அவள் காதலில் நனைந்து ... ???

சென்ற வார இறுதியில் தான் அவளைச் சந்தித்திருந்தேன். இன்று மீண்டும் சந்திக்க ஒரு வாய்ப்பு அமைய, சிரமங்களுக்கு நடுவிலும் வாய்ப்பை நழுவ விட ஏனோ மனம் வரவில்லை.

காதல் சந்திப்புகள் என்பது எந்த ஒரு காதலர்களும் தவற விட நினைக்காத ஒன்று தானே. இந்த அன்பின் அரசாட்சியில் பிறகு நான் மட்டும் என்ன விதி விலக்கா?

சந்திக்கத் தயாராக ஆரம்பித்ததுமே மனம் தானாகவே அவளைச் சந்திக்கும் அந்த நிமிடத்தை நினைக்க, அவளின் சிருங்கார மொழியில் மனம் பிறழ, அவளுள் என்னைத் தொலைக்கும் அந்த நொடியை எண்ண... என் மெய் சிலிர்க்க... அப்பப்பா ... காதலின் இந்த இனிய அவஸ்த்தைகள் எல்லாம் என் காதலியின் காதல் பரிசுகள்.

காதலியைக் காணப் போகும் வேடிக்கை, மனோ வேகம் என்பதன் பொருள் உணர்த்தி, என் மனதுடன் நானே போட்டியிட்டு அதிவிரைவாகவே தயாராகி வாசல் வந்துவிட்டேன்.

எங்கள் தனிமை சந்திப்புகளெல்லாம் தித்திப்புகள் என்றாலுமே இதுவரை அதற்கான வாய்ப்புகளை அவள் சில முறை மட்டுமே தந்திருக்கிறாள்.
அதற்கான எனது கோபம் அவள் அறிவாளா? நான் அறியேன். காரணம் எனது ஏக்கம் ஆதங்கம் எல்லாம் ஏனோ இன்றுவரை தீர்க்கப் படாமலே இருக்கிறது.

ஆனால் எனது இந்த அத்தனை உணர்வுகளையும் என்னுள் அடங்கிய ஆயிரம் ஆயிரம் கோபங்களையும் அவளின் சிறு தீண்டலில் சிதறடித்துவிடும் வல்லமை அவளின் அன்பிற்கு உண்டு.

ஆமாம், அவள் எனது காதலி ஆனது எப்பொழுது? எனது நீண்ட நெடுநாளைய கேள்வி இது? அவளை நான் முதலில் அறிந்த பொழுதா? இல்லை அவளை நான் முதலில் சந்தித்த பொழுதா? இல்லை அவளின் சந்திப்புகளுக்காக முதன் முதலாக ஏங்கிய பொழுதா?

எது என்னிடம் அன்பை விதைத்தது? எது அவளிடம் என்னை ஈர்த்தது? எது அவளின்பால் என் அன்பை நிறைத்தது? கேள்விகள் எல்லாமே என்றென்றும் என் மனதில் கேள்விகளாய் மட்டுமே. எங்கள் அன்பின் ஆரம்பம் அவள் அன்பின் ஆழம் போலவே அளவிட முடியாதது.

மனம் எல்லாம் மகிழ்ந்து துள்ள, என் மகிழுந்தும் என் கைகளில் சீராய் பாய, இமையின் ஓரம் எழுந்த இந்த சந்திப்புக்கான கனவுகளும் ஏக்கங்களும் இந்தக் கோடையின் சாலையோரக் காட்சிகளின் அழகை ரசிக்க மறுத்தது.

எழுபது நிமிட பயண நேரமும் என் எண்ணமெல்லாம் அவளே நிறைந்திருக்க மகிழுந்தை நிறைத்த கலகலப்பும், இன்னிசையும் கூட என் செவிகளைத் தீண்டியதே தவிர என்னவளின் நினைவை நிறுத்தவில்லை.

பயணம் முடிந்து அவளைக் காணக் கால்கள் துள்ள, கடைசி நிமிட எண்ணத்தின் ஓட்டமும் மனதின் பரபரப்பும் அதனால் ஏற்படும் ஒருவித படபடப்பும் சுற்றம் மறக்கச் செய்ய, எனக்கான தனிமையை என்னை அறிந்து மற்றவர்கள் தந்தே விட்டனர். (என் மனம் அறிந்தவர்கள் தானே அவர்களும் ...)

சென்ற முறை காணும் போது என்னை நெருங்க விடாமல் குளிர்ந்து குமுறிக் கொண்டிருந்தவள் பின் சில நிமிட நேரங்களை விழுங்கி என்னை மெல்ல மெல்ல ஆட்கொண்டாள். இன்று அவளின் மனநிலை என்னவோ?

காதல் கண்களில் ஏக்கம் பிறக்க, என் கால்களின் வேகம் என்னிடம் இல்லை. கண்கள் அவளைத் தேட, அதோ தூரத்தில் அவள்.

சலனமில்லாத அவளைக் கண்டதும் என்றும் போல இன்றும் ஆசை அடங்க மறுக்க அவளைத் தீண்டி அணைத்து முத்தமிடும் வேகம் என்னுள்.

செறிந்த காதலால் என் கைகளில் அடங்க மறுக்கும் அவளின் வேட்கையும் நான் நன்கு அறிந்தது தான்.

ஆனால் ஏனோ அவள் இன்று அமைதியாய், சிறு குழந்தையின் இதழ் தீண்டும் இன்னிசை சுமந்த தென்றலாய் என்னை வரவேற்க, என்றைக்கும் போலவே இன்றும் அவள் புதிதாய் தெரிகிறாள். பெண்மையின் ஆயிரம் முகங்களில் இதுவும் ஒன்று போலும்.

ஆதவனின் ஆட்சி உச்சம் பெற்ற வேளையிலும் வேகம் கொண்ட எங்களின் இன்றைய சந்திப்பு இருவருக்குமே புதிது தான்.

மனதின் வேகம் கால்களில் தெரிந்தாலும் அருகே அவளை நெருங்கிய அந்த சில கணங்களில் என்னுள் சிறு தயக்கம் ... அதில் என் பாதங்கள் சற்றே தடு மாற ... அவளும் சிறிது தடம் மாற ... என எங்களுக்குள்ளே சிறு விளையாட்டு.

நொடிகள் கடக்க என் இதயத்தின் தாபம் இமைக்குள் குடியேற, விழிகளால் அவளை விழுங்க, மென்தீண்டலாய் அவள் என்னைத் தீண்ட, அவளின் ஈர முத்தங்களால் பாதங்கள் ஸ்பரிசித்த அந்த மெல்லிய வெப்பம் மேலேற ஏற சற்றே குளிர்ந்து என் இதயம் நிறைந்து அவளின் தீண்டலில் என் உடலுள் உயிராய் உறையத் தொடங்கியது.

கண்கள் மூடி சற்றே அவளின் மெய் தீண்டலை உணர உணர அவளின் அன்பில் நான் கரைய, உள்ளத்தின் கொதிப்பில் இமை மூடிய என் விழிகளின் ஓரம் வெப்பத்தின் சிறு துளி.

என் இமையின் ஈரம் பொறுப்பாளா என் காதலி? மென் தீண்டல்களில் என் மெய்யுணர்ந்தவள் சற்றே வல்லினம் காட்டத் தொடங்க ... அவள் தீண்டலின் வேகம் என் மேனி உணர்ந்தாலும், என் ஈர நயனங்கள் ஏனோ திறக்க மறுத்து அவளின் அன்புக்குள் கட்டுண்டு நான் கரைய ... கால்கள் மண்டியிட்டு அவளுள் நான் சரிய....

என் விழி நனைத்தவள் வாரி அனைத்து என் தேகம் முழுவதும் முத்தமிட... காதல் களவாடிய அந்த நிமிடங்களில்... அவளின் அன்புக் கடலில் நான் நனைய.... இல்லை இல்லை அவளே கடலாக இருக்க அவள் என்னை எப்படி நனைக்க? என்னை நனைத்தது அவளின் அன்பு மட்டுமே. அலைகள் அல்ல.

அன்பால் எனை நனைத்தவள். யாராவள்? அவள் ஆர்கலி, என் காதலி. ஆழம் அறிய முற்பட்டபோது நான் ஆழி என்றாள். அன்பால் வாரி அனைத்து நான் வாருணம் என்றாள். அலைந்து திரிந்து அவளைக் கண்டபோது என்னை அலையாய் தழுவிக் கொண்டாள்.

அவள் அன்பில் நனைந்து நான் மேனி சிலிர்க்க என் விழித்திரை அகல விழி சுற்றம் உணர, உறக்கக் கேட்டது என் அன்னையின் குரல் "இவ அடங்கவே மாட்டா. இந்தா இன்னைக்கும் மொத்தமா நனைஞ்சுட்டா. இதுக்குத் தான் கடலுக்குப் போக வேண்டாம்ன்னு சென்னேன் பா."

"விடுங்கம்மா, நனையட்டும். அவளுக்குக் கடல் ரொம்பப் பிடிக்கும்" கண்களில் காதல் மின்ன கரையில் என் கணவர்.

என் கடல் காதலியின் காதலில் நனைந்தபடி நான்.

???
Nirmala vandhachu ???
Welcome back ma???
 
???

காதலியை ரசித்து ரசித்து காதலிக்கும் காதலி..... அருமை ???
என்னைக்குமே அந்தக் காதலியோட ஆழத்துல நான் மூழ்கித்தான் போகுறேன் மா ???
 
Top