Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதிரையின் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் - Episode 36

Advertisement

Aathirai

Well-known member
Member
Episode 36

அனைவரின் முன்னிலையிலும் அவள் அப்படிச் சொன்னதும், என்ன சொல்லப் போகிறாளோ என்ற எண்ணம் அங்கே உள்ள அனைவருக்கும் உண்டானது. முக்கியமாக அஞ்சலியின் வீட்டில் உள்ள அனைவருக்கும்.

“எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்.” என்றாள்.

அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ந்து தான் போயினர். ரகுராமிற்க்கு திரும்பவும் நெஞ்சு அடைத்து விடும் போல் இருந்தது. “ஏன்.? என்னாச்சு.? எதுக்கு அப்படி சொல்ற.?” என்று பதட்டத்துடன் கேட்டார்.

“ரகு.. இருப்பா..” என்று மாப்பிள்ளையின் அப்பா அவளருகில் வந்தார்.

“ஏன்மா.? இந்தக் கல்யாணத்துல உனக்கு இஷ்டம் இல்லையா.?” என்றார்.

“அப்படி இல்ல. எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம். இன்னும் நான் படிப்பையே முழுசா முடிக்கல.” என்றாள்.

“ஓ.. அதுதான் உன் பிரச்சினையா.? நல்லவேள, டேய் ரகு. உன் பொண்ணுக்கு இப்போதைக்கு தான் கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லைன்னு சொல்றா. அப்போன்னா கொஞ்ச நாள் கழிச்சு பண்ணிக்கறேன்னு சொல்றா. சரிதானே மா..” என்றார் அவர் சிரித்துக்கொண்டே.

“இல்ல. அதுமட்டுமில்ல. எனக்கு மேரேஜ்க்கு முன்னாடி அட்லீஸ்ட் ஒரு வருஷத்துக்காவது வேலைக்குப் போகணும்.” என்றாள்.

“இப்போ, உன்ன வேலைக்குப் போகணும்னு சொல்லி யார் உன்னக் கட்டாயப்படுத்துனா.? அவசியமா போகணும்னு ஒண்ணும் இல்ல.” என்றார் ரகுராம்.

“அப்படி இல்ல. சும்மா ஏதோ டிகிரி முடிச்சிட்டு, மேரேஜ் இன்விடேஷன்ல பேருக்கு பின்னாடி போட்டுக்கிறதுக்காக மட்டும் நான் படிக்கல. நான் படிச்ச படிப்புக்கு, ஒரு பிரயோஜனம் இருக்கணும். எனக்குள்ள ஒரு சாட்டிஸ்ஃபேக்‌ஷன் இருக்கணும்னு நினைக்கிறேன். அதுக்காகத்தான் நான் வேலைக்கு போகணும். அதனால தான் இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்றேன்.” என்றாள் அஞ்சலி.

“அஞ்சலி தெரிஞ்சுதான் பேசிட்டிருக்கியா.?” என்றார் ரகுராம். இவளுக்கு எப்படி இத்தனை தைரியம் வந்த்து என்று யோசித்தார். அதே போல், அங்கே இன்னும் இரண்டு ஜீவன்கள் அவளின் தைரியமான பேச்சைக் கண்டு மகிழ்ச்சியாக இருந்தனர்.

“அங்கிள்.. விடுங்க. அவ இஷ்டப்படி ஸ்டடீஸ் கம்ப்ளீட் பண்ணிட்டு அவ வேலைக்குப் போகட்டும். எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்ல. சோ, இன்னும் ஒன் அண்ட் ஹால்ஃப் இயர்க்கு என்னையும், அவளையும் தொந்தரவு பண்ணாதீங்க. மேரேஜ் பண்ணிக்கனும்னா நாங்களே சொல்றோம்.” என்றான் நிரஞ்சன் தடாலடியாக.

இந்த ட்விஸ்ட்டை எதிர்பார்க்கவில்லை அஞ்சலி. இவன் என்ன, தனக்கு சாதகமாய் பேசுகிறானே.? என்று அந்த நிமிடம் அவனைப் பிடிக்கவில்லை என்றாலும், அவனுக்கு நன்றி சொல்லத் தோன்றியது.

“நானும், ஆஸ்ட்ரேலியால நிறைய வொர்க்க அப்படியே விட்டுட்டு வந்திருக்கேன். இனி எனக்கென்ன வேலை இருக்கு இங்க. சோ, நான் இந்த வீக்கே கிளம்பறேன். எனி ப்ராப்ளம்.?” என்று பேசினான்.

“இல்லப்பா, அதுக்கில்ல. நான் இன்னும் ஒரு ஆறு மாசத்துல கல்யாணம் வைச்சுடலாம்னு யோசிச்சுட்டிருந்தேன். ஆனா, இப்படி ஒன்றரை வருஷம் தள்ளிப் போட்டுட்டீங்களே.?” என்றார் ரகுராம்.

“அங்கிள், கல்யாணம் பண்ணிக்கப் போறது நாங்க. எங்களுக்கே மெதுவா பண்ணிக்கலாம்னு தோணுது. நீங்க ஏன் இவ்ளோ அவசரப்படறீங்க.?” என்றான் நிரஞ்சன்.

“டேய்.. ரகு. இது என்ன, நம்ம தயாரிக்கற ஆட்டோ மொபைல் பார்ட்ஸ்ஸா.? உடனே தயாரிச்சு, உடனே செட் பண்றதுக்கு. இது அவங்களோட வாழ்க்கை. அத அவங்களே டிசைட் பண்ணனும்னு நினைக்கறாங்க. இப்போ இருக்கற ஜென்ரேஷனெல்லாம் ரொம்ப ஃபாஸ்ட்டாவும் இருக்காங்க. அட் த சேம் தனக்கு எது எப்போ தேவையோ அத கரெக்ட்டா செலக்ட் பண்றாங்க. இதுல நாம இன்வால்வ் ஆகாம இருக்கறதே கரெக்ட். அதனால, நீ ஒண்ணும் வொர்ரி பண்ணிக்காத. உன்னோட பயம் எனக்குப் புரியுது. வேணும்னா உன்னோட சாட்டிஸ்ஃபேக்ஷனுக்கு சின்னதா நம்ம ரிலேஷன்ஸ் மட்டும் சேர்ந்து என்கேஜ்மெண்ட் பண்ணிக்குவோம். அப்போ கிட்டத்தட்ட பாதி மேரேஜ் ஆன மாதிரி தான. நான் இந்த வாரம் ஒரு நல்ல நாள் பார்த்துட்டு உனக்கு நாளைக்கே போன் பண்றேன். நாம் என்கேஜ்மெண்ட் மட்டும் வைச்சுக்கலாம். என்ன சரியா.?” என்றார் அவர் ரகுராமின் தோள்களைப் பற்றியவாறே.

அவர் ஏனோ, அரை மனதுடன் தலையாட்டினார். “ம்ம். என்ன எல்லாருக்கும் இதுல சம்மதம் தானே.?” என்றார்.

அனைவரும் தலையசைக்க, அஞ்சலி இப்போதைக்கு கல்யாணம் இல்லை என்று சிறிது மனதுக்குள் சந்தோஷத்தை நிரப்பிக் கொண்டாள்.

அவர்கள் கிளம்பி விட்டார்கள். அதுவரை, பொறுமையாய் இருந்த ரகுராம் பேச ஆரம்பித்தார்.

“என்ன நடக்குது இங்க.? நான் என்ன நினைச்சேன், இவ என்ன பண்ணி வைச்சிருக்கா.? நான் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நிம்மதி இல்லாம இருக்கறது.? ஏன் எல்லாரும் இப்படிப் பண்றீங்க.?” என்று சற்று சோர்ந்து போனவராய் ஷோஃபாவில் அமர்ந்தார்.

பானுமதி அருகில் வந்து அமர்ந்தவர், “இப்போ, என்ன்ங்க தப்பா நடந்து போச்சு.? அவ இந்தக் கல்யாணம் வேண்டாம்னா சொன்னா.? இப்போதைக்கு வேண்டாம்னு தானே சொன்னா.? அப்பறம் என்ன உங்களுக்கு கவலை.?” என்றார்.

“ம்ம்.. அவ வேண்டாம்னு தான் சொல்லாம சொல்லிருக்கா.?” என்றார்.

“ஆமாம் பா. எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம்னு தான் தோணுச்சு. ஆனா, உங்களோட நம்பிக்கைய வீணடிக்கக் கூடாதுன்னு தான் நான் இப்போதைக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன். ஆனா, இப்போ சொல்றேன் எனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டம் இல்ல. உங்களுக்காக மட்டும் தான் நான் சரின்னு சொன்னேன். இப்போ வரைக்கும் என்கிட்ட இந்தப் பையனப் பிடிச்சிருக்கான்னு ஒரு வார்த்தை யாராவது கேட்டீங்களா.? பையனுக்கு பிடிச்சிருந்தா போதும்னு தான நீங்க சொன்னீங்க. உங்களுக்கு எங்க நானும் அக்கா மாதிரி வேற யாரையாவது லவ் பண்ணி மேரேஜ் பண்ணிப்பேன்னு பயம். அதுக்காகத்தான, எனக்கு இஷ்டம் இருக்கோ, இல்லையோ கல்யாணம் பண்ணி வைச்சிடனும்னு முடிவு பண்ணீங்க.? எனக்கு விருப்பமே இல்லாத கல்யாணத்துல எனக்கு என்ன சந்தோஷம் இருக்கும்னு நினைக்கறீங்க.? அதெல்லாம் உங்களுக்கு முக்கியம் கிடையாது. வாழப் போறது நான். ஆனா, உங்களுக்கு அதைப் பத்தியெல்லாம் என்ன கவலை. கழுத்த நீட்ட சொன்னா, நீட்டனும். அவன் எப்படிப்பட்டவன்.? நல்லவனா, கெட்டவனா.? எதுவுமே தெரியாது. ஆனா, வாழணும். அப்படித்தானே பா உங்களோட நினைப்பு.” என்று இதுவரை தான் மனதில் அடக்கி வைத்திருந்த அனைத்தையும் அவரிடம் கொட்டிவிட வேண்டும் என்று நினைத்தாள். ஆனால், அவளுக்கு அந்தத் தைரியம் வரவில்லை. சொல்லமுடியாமல் அழுதுகொண்டே உள்ளே சென்றாள் அஞ்சலி.

மகேஷூம், மீனாவும் அவள் பின்னாலேயே சென்றனர்.

“சரி, விடுங்க. நீங்க எதுவும் இப்போதைக்கு மனசப் போட்டு குழப்பிக்க வேண்டாம். ஏதோ, அவளுக்குத் தோணுனத சொல்லிட்டா. அதுதான் என்கேஜ்மெண்ட் வைச்சுக்கலாம்னு சொல்லிருக்காங்களே. அப்பறம் என்ன.?” என்றார் பானுமதி.

“ஹூம்ம்.. இருந்தாலும், ஒன்றரை வருஷம் கழிச்சு கல்யாணம்னா, அதுவரைக்கும் நான் வயித்துல நெருப்பக் கட்டிக்கிட்டு நிம்மதியா தூங்க முடியாம அவஸ்தைப்படணும்னு நினைக்கிறியா.? அவ எப்போ அப்படி ஒரு நம்பிக்கை துரோகம் பண்ணாளோ, அப்போவே இவ மேலயும் எனக்கு நம்பிக்கையே போச்சு. இனி கல்யாணம் ஆகற வரைக்கும் எனக்கு நிம்மதியே கிடையாது.” என்று புலம்பினார்.

பானுமதிதான் அவரைத் தேற்றிக் கொண்டிருந்தார். மகேஷூம், மீனாவும் அஞ்சலியின் அறையை நோக்கி சென்றனர்.

“ஏய்.. அஞ்சலி. எதுக்கு இப்போ அழற.? எழுந்து முதல்ல உட்காரு.” என்றபடி மெத்தையில் விழுந்து அழுதுகொண்டிருந்தவளை இருவரும் எழுப்பி அமர வைத்தனர்.

“இந்தா முதல்ல தண்ணியக் குடி..” என்றபடி மீனா கொடுக்க, அதை வாங்கிக் குடித்தாள் அஞ்சலி.

“இங்க பாரு அஞ்சலி. இன்னைக்கு நீ ஒரு பெரிய விஷயம் பண்ணிருக்க. அதுதான் உன்னோட ஃபர்ஸ்ட் சக்ஸஸ். ஏன்னா, இதுவரைக்கும் நீ உனக்குத் தேவையானத என்கிட்ட சொல்லித்தான் நிறைவேத்திக்குவ. ஆனா, இன்னைக்கு நீயே ஒரு விஷயத்தக் கேட்டு அதை நடைமுறைப்படுத்திட்ட. அதுவே ஒரு பெரிய விஷயம் தான.? இப்போ, நீ அழக்கூடாது. சந்தோஷமா இருக்கணும்.” என்றார் மகேஷ்.

“ஆமா அஞ்சலி. மாமா சொல்ற மாதிரி எதுக்கும் கவலைப்படாத. இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டியே. அதுவே போதும். இன்னும் உனக்கு டைம் இருக்கு. நீ ஜாலியா இரு. சரியா. அழாத.” என்று கண்களைத் துடைத்து விட்டாள் மீனா.

“எனக்குமே அந்தப் பையன அந்த அளவுக்கு ஒண்ணும் புடிக்கல. ஒருத்தரப் பார்த்தாலே நமக்குத் தெரியும் இல்ல. அவங்க சரியானவங்களா, இல்லையான்னு. ஆனா, இன்னைக்கு அந்த மாப்பிள்ளையப் பார்த்ததும் எனக்கு அப்படியொண்ணும் சரியா படல. இருந்தாலும், நாம் அவனுக்கு தான் தேங்ஸ் சொல்லணும். ஏன்னா, அவன் மட்டும் ஒன்றரை வருஷத்துக்கு அப்பறம் மேரேஜ் ஓகே தான்னு சொல்லலைன்னா உங்கப்பா சீக்கிரமே மேரேஜ் பண்ணிடம்னு சொல்லியிருப்பார். கடவுள் இன்னைக்கு அவன் ரூபத்துல வந்து உனக்கு ஹெல்ப் பண்ணிருக்கிறான்” என்றார் மகேஷ்.

அஞ்சலி எதுவும் பேசவில்லை. மௌனமாகவே இருந்தாள்.

“இன்னொரு விஷயம் தெரியுமா.? நீ இத சொல்லலன்னா நானே எல்லார் முன்னாடியும் கேட்கலாம்னு இருந்தேன். நல்லவேளை நீயே சொல்லிட்ட. குட். இப்படித்தான் இருக்கணும். உனக்குத் தேவையானத நீ தான் கேட்டு வாங்கிக்கணும். எல்லா நேரத்துலயும் நான் உன் கூடவே இருக்க மாட்டேன்.” என்றார் மகேஷ்.

“சரி, அஞ்சலி நீ மேக்கப்பெல்லாம் ரிமூவ் பண்ணிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடு. தேவையில்லாம உட்கார்ந்துட்டு அழுதுட்டு இருக்காத.” என்று சொல்லிவிட்டு மீனா வெளியேறினாள்.

இருவரும் சில ஆறுதல் வார்த்தைகள் சொன்னதில் அவளுக்கு கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது. அதன் பிறகு பானுமதியும் வந்து சமாதானம் செய்தார். அடுத்த மூன்று தினங்களுக்குப் பிறகு, அவளது நிச்சயதார்த்தம் சிறிய விழாவாக அவர்களது வீட்டிலேயே நடத்தப்பட்டது.

அஞ்சலிக்கு பிடிக்கவில்லை என்பதை வெளியே காட்டிக்கொள்ளமல் இருக்க மிகவும் சிரமப்பட்டாள். நிரஞ்சனோ அன்று எப்படி இருந்தானோ, அதே போலவே இருந்தான். அவனிடம் நம்பரை வாங்கிக் கொண்டார் மகேஷ். அவனும் அவருக்குக் கொடுத்து விட்டான்.

அதே போல், அஞ்சலியின் நம்பரை அவரிடம் கேட்டு வாங்கிக்கொண்டான் நிரஞ்சன். முதலில் தர யோசித்தாலும், நிச்சயமானவனிடம் எப்படி வேண்டாமென்று சொல்வது கொடுத்து விட்டார்.

அன்று எடுத்த போட்டோக்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள் அஞ்சலி. திடீரென்று என்ன நினைத்தாளோ, அந்த போட்டோவை தனது வாட்ஸாப் குரூப்பில் அனுப்பி வைத்தாள். அது, இவர்கள் இருக்கும் குரூப்பிற்க்குச் செல்ல, அனைவரும் பார்த்து விட்டனர்.

உடனே, மது, ஷாலினி, ரூபா, ரவி என்று அனைவரும் சாட்டில் அவளிடம் கேட்க, அவளோ பதில் சொல்ல விருப்பம் இல்லாமால், போன் செய்தவர்களின் அழைப்பை ஏற்க முடியாமல் அப்படியே போனை சைலண்ட் மோடில் வைத்துவிட்டு உறங்கிப் போனாள்.

ரவி, அர்ஜூனுக்கு அழைத்தான். ரிங்க் போய்க்கொண்டிருந்தது. நீண்ட நேரத்திற்க்குப் பிறகே, அவன் எடுத்தான்.

“டேய் அர்ஜூன்.. எங்க இருந்த.? போன இவ்ளோ நேரமா எங்க வைச்சிருந்த.? போன் பண்ணா உடனே எடுக்க மாட்டியா.?” என்று எடுத்த எடுப்பிலேயே அவன் திட்டிக்கொண்டிருக்க,

“என்னடா உன் பிரச்சினை. நான் வேலையா இருக்கேன் டா. நாளைக்குள்ள ஒரு ப்ராஜெக்ட் கம்ப்ளீட் பண்ணித் தரணும்னு. அதான், இப்போ தான் முடிச்சிட்டு போய் முகம் கழுவிட்டு வந்தேன். அதுக்குள்ள நீ கூப்பிட்டிருக்க. ஏன், இவ்ளோ பதட்டமா பேசற.? என்னாச்சு.?” என்றான்.

“நீ ஆன்லைன்ல இல்லையா.?” என்றான்.

“இல்ல. ஏன்.?” என்று அவன் சாதாரணமாகச் சொல்ல,

“போய் முதல்ல வாட்ஸாப் குரூப்ல செக் பண்ணு.” என்றபடி போனை வைத்து விட்டான்.

எதற்க்கு இவன் இவ்வளவு பதட்ட்த்துடன் பேசுகிறான் என்று அர்ஜூனுக்கு குழப்பமாக இருக்க, அவன் சொன்னதைப் போல் மொபைல் டேட்டாவை ஆன் செய்து, ஆன்லைனில் வந்த்தும், பல மெசேஜ்கள் வந்த வண்ணம் இருந்தன. அதில் இவர்களின் தனி குரூப்பில் தான் அதிக மெசேஜ்கள்.

அதைத்தான் முதலில் அழுத்தினான். அஞ்சலி சில போட்டோக்களை அனுப்பி வைத்துள்ளாள் என்பதை அறிந்தான். அதை டவுன்லோட் செய்து பார்த்தவனுக்கு சர்வ நாடியும் அடங்கிப் போனது. தான் காண்பது கனவா, நிஜமா என்று.? உறைந்து போய் அமர்ந்திருந்தான் அர்ஜூன்.


(தொடரும்...)
 
Very nice epi dear.
Ennapa ippadi BP ethuringo. Antha Jeevan enna oru tension ah irrukum. Pavam Arjun.
 
Top