Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதிரையின் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் - Episode 37

Advertisement

Aathirai

Well-known member
Member
Episode 37

அஞ்சலி அனுப்பிவைத்த போட்டோவைக் கண்டவனுக்கு அன்று இரவு முழுவதும் தூக்கமே போய் விட்டது. தான் இருக்க வேண்டிய இடத்தில் வேறொருவனை அஞ்சலியுடன் பார்த்ததை நினைத்து மிகவும் வருத்தப்பட்டான் அர்ஜூன். அவனால், அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

எதற்க்காக இப்படிச் செய்தாள்.? அப்போது ஏன், அன்று அவள் அந்தப் பையனிடம் சொல்லி என்னைக் கேட்கச் சொல்ல வேண்டும்.? ஒவ்வொரு முறை பார்க்கும் பார்வையும் காதலை உணர்த்த இதை ஏன் ஒப்புக்கொள்ள வேண்டும்.?

இதற்க்கு விடை தான் என்ன.? காலம் இதற்க்கு பதில் சொல்லுமா.? இல்லை ஏமாற்றி விடுமா.? தீர்வுதான் என்ன.? என்று பல்வேறு கோணங்களில் யோசித்து யோசித்து தூக்கம் இல்லாமல் பைத்தியக்காரனைப் போல் மொட்டை மாடியில் திரிந்து கொண்டிருந்தான்.

அவளுக்கு போன் செய்து கேட்டு விடலாமா என்ற எண்ணம் உதித்தது. ஆனால், தெரிந்த விஷயம் தான். இது போன்ற சமயங்களில் அவள் போனை எடுக்கமாட்டாள் என்று மது பலமுறை அவனிடம் சொல்லக் கேட்டிருக்கிறான். மதுவுக்கு போன் செய்து கேட்டால் என்ன.? என்று தோன்ற, அவளின் நம்பருக்கு அழைத்தான்.

சில நொடிகள் அழைப்பு போய்க்கொண்டிருக்க, மது எதிர்முனையில், “ஹலோ..” என்றாள்.

“ஆங்.. மது எப்படி இருக்க.? நான் தான் அர்ஜூன்.” என்றான்.

“சொல்லு அர்ஜூன். நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க.?” என்றாள்.

“ஆங் இருக்கேன் மது.” என்ற குரலில் சோகம் தெரிய,

“என்னாச்சு அர்ஜூன்.? ஏன் ஒரு மாதிரியா இருக்க.?” என்றாள் மது.

“நீ நேத்து வாட்ஸாப் பாத்தியா.? அஞ்சலி ஏதோ போட்டோ அனுப்பிருக்கா, பாத்தியா.? அது நிஜமா.? அவளுக்குக் கூப்பிடலாம்னு நினைச்சேன். ஆனா, அவ எடுக்க மாட்டான்னு நீ தான் சொல்லுவ. அட்லீஸ்ட் நீ பேசியிருந்தா ஏதாவது தெரியும்னு தான் உன்னைக் கூப்பிட்டேன். என்னதான் நடக்குது.?” என்று அவன் கேட்க,

“ஹூம்ம். நானும் அவளுக்கு கிட்ட்த்தட்ட ஆயிரம் தடவை கூப்பிட்டிருப்பேன். போனையே எடுக்கல.? அட்லீஸ்ட் மெசேஜ் பண்ணாலாவது பார்ப்பான்னு நினைச்சேன். ஆனா, அதுக்கும் எந்த ரிப்ளையும் இல்ல. இந்த மாதிரி சமயத்துல தான் எனக்கு அவ மேல கோபமா வரும். என்ன பண்ண முடியும்.? அவ்வளவு சீக்கிரம் மனசுல இருக்கறத வெளிப்படையா சொல்ல மாட்டா. அதுதான் பிரச்சினையே.” என்றாள் மது.

“அது என்கேஜ்மெண்ட் போட்டோ தான.?” என்று பயந்துகொண்டே கேட்டான் அர்ஜூன்.

“கண்டிப்பா என்கேஜ்மெண்ட்டா தான் இருக்கணும் அர்ஜூன். பார்த்தா அப்படித்தான் தெரியுது.” என்றாள்.

“ம்ம்ம்... என்ன திடீர்னு. எதுவும் சொல்லாம.? அவ உன்கிட்ட எதுவும் சொன்னாளா.?” என்றான்.

“தெரியலையே அர்ஜூன். அவ என்கிட்ட எதுவும் சொல்லல. பட், ஒன்திங்க் அவ அன்னைக்கு ஊருக்கு கிளம்பும் போதே கொஞ்சம் பதட்டமாத்தான் கிளம்பினா. அவங்க வீட்டுல எது நடந்தாலும், திடீர்னு தான் நடக்கும். அத அவளே என்கிட்ட சொல்லிருக்கா. இதுவும் அப்படித்தான் நடந்திருக்கும்னு நினைக்கிறேன்.” என்றாள் மது சந்தேகத்தோடு.

“சரி மது, அவ உன்கிட்ட பேசினா நீயே என்னன்னு கேட்டுட்டு என்கிட்ட சொல்லு. சாரி உன்னையும் டிஸ்டர்ப் பண்னிட்டேன்.” என்றான் அர்ஜூன்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல. சரி, நீ எதுவும் நினைச்சுட்டு இருக்காத. ஜஸ்ட் என்கேஜ்மெண்ட்டா தான் இருக்கும். நான் அவகிட்ட பேசறேன். நீ ஒழுங்கா இரு சரியா.? டேக் கேர்.. பை..” என்றபடி போனை வைத்துவிட்டாள் மது.

மதுவுக்கும் தெரியவில்லை. அப்போது எப்படித்தான் இதை தெரிந்து கொள்வது.? அப்போது அவள் கல்லூரி வரும் வரை காத்திருக்க வேண்டுமா.? என்று நினைத்தான் அர்ஜூன்.

எதற்க்கும் ஒருமுறை அவளுக்கு போன் செய்து பார்க்கலாம் என்று அவளுக்கு அழைத்தாள் மது. சிறிது ரிங்கிற்க்குப் பிறகு அட்டண்ட் செய்தாள் அஞ்சலி. அதிசயமாய் உணர்ந்தாள் மது.

“ஹே.. அஞ்சலி. என்ன ஒரு அதிசயம்.? நீ போன அட்டண்ட் பண்ணிட்ட.? நான் கூட நேத்து மாதிரியே போனே எடுக்க மாட்டியோன்னு நினைச்சேன்.” என்றாள் மது.

“அப்படியெல்லாம் இல்ல. போன சைலண்ட்ல வைச்சுட்டேன். அதனால தான் தெரியல. இப்போதான் சைலண்ட் மோட்ல இருந்து ரிங் மோட்க்கு மாத்தினேன்.” என்றாள்.

“ஹூம்ம். அப்போ, நாங்க நைட் போன் பண்ணது உனக்கு மிஸ்ட் கால்ஸ்ல இருந்திருக்குமே. அதைப் பார்க்கலையா. ஈவன் மெசேஜ் கூட அனுப்பிருந்தேன்.” என்றாள் மது.

“ஆங் பார்த்தேன் மது. ஆனா, பேசணும்னு தோணல.” என்றாள்.

“சரி, என்ன என்கேஜ்மெண்ட் முடிஞ்சுதா.? ரொம்ப சீக்ரெட்டா நடந்திருக்குன்னு நினைக்கிறேன். எங்களுக்கெல்லாம் இன்ஃபர்மேஷன் கூட குடுக்க மாட்டியா.? வெறும் போட்டோ மட்டும் அனுப்பி சொல்லிட்ட.” என்றாள் மது.

தன்னை மீறி நடந்த நிச்சயத்தைப் பற்றி என்ன சொல்வது.? என்று நினைத்தாள் அஞ்சலி.

“எனக்கே நேத்து காலைல தான் தெரியும் மது.” என்றாள்.

“அஞ்சலி. அதெப்படி உனக்கு முன்னாடியே சொல்லாம இருப்பாங்க.?” என்றாள் மது.

“நிஜமா அப்படி தான் நடந்துச்சு மது. என்னைக் கேட்டா நான் என்ன பண்ணுவேன். நான் வெறும் பொம்மைதானே.? அப்பாதான் எல்லாத்தையும் பண்றார். எல்லாமே அவரோட இஷ்டம் தானே. இது பரவால்ல. அவர் விட்டா எனக்கு உடனே கல்யாணம் பண்ணனும்னு நினைச்சார். ஆனா, இந்த தடவை தான் நான் பேசினேன்.” என்று நடந்ததைச் சொல்ல,

“ஏய்... அஞ்சலி. நிஜமாலுமே தான் சொல்றியா.? எங்கிருந்து இந்த தைரியம் வந்துச்சு உனக்கு.? இவ்ளோ நாளா இத எங்க மறைச்சு வைச்சிருந்த.?” என்றாள் மது ஆச்சர்யத்துடன்.

“ஹூம்ம். இந்த டைம் அம்மா கொஞ்சம் சப்போர்ட் பண்ணாங்க மது. அவங்களுக்கும் அப்பா இப்படிப் பண்றது புடிக்கல. ஆனா, என்ன பண்றது.? இப்போதைக்கு எங்களால கல்யாணத்த மட்டும் தான் தள்ளிப் போட முடிஞ்சது. அதுக்கு கூட அவர் ஒத்துக்கல. அந்த நிரஞ்சன் வீட்டுல ஒத்துக்கிட்டதால தான்.” என்றாள் அஞ்சலி.

“சரி, எல்லாம் இருக்கட்டும். நீ இப்படி தான் திடீர்னு வாட்ஸாப்ல போட்டோவ எல்லாருக்கும் அனுப்புவியா.?” என்றாள் மது.

“அது அப்போ இருந்த மூட்ல என்ன பண்றதுன்னு தெரியாம எல்லா குரூப்ல இருக்கறவங்களுக்கும் அனுப்பினேன். அது இந்த குரூப்புக்கும் வந்துடுச்சு. நான் என்ன பண்றது.?” என்றாள்.

“நீ சாதாரணமா சொல்லிட்ட. ஆனா, ஒரு ஜீவன் எவ்வளவு ஃபீல் பண்ணி தூங்கவும் முடியாம, சாப்பிடவும் முடியாம கஷடப்பட்டுட்டு இருந்துச்சு தெரியுமா.?” என்றாள் மது.

“அர்ஜூன் தான.? நான் அவன் போன் பண்ணுவான்னு எதிர்பார்த்தேன். ஆனா, ஏனோ பண்ணல.?” என்றாள் சாதாரணமாக.

“அடிப்பாவி. நீ இவ்ளோ மாறிட்டியா.? நீ தான் எப்போ போன் பண்ணாலும் எடுக்க மாட்டியே. அதுவும் இந்த மாதிரி சமயத்துல. அதனால தான் அவனும் உனக்கு போன் பண்ணாம எனக்கு போன் பண்ணி பேசினான். ரொம்ப ஃபீல் பண்ணான். பாவம் அஞ்சலி அர்ஜூன்.” என்றாள் மது.

“ம்ம்ம்.. பாவம் தான். என்னை லவ் பண்ணானே அதுதான் அவன் செய்த பாவம். என்ன பண்றது.?” என்றாள் அஞ்சலி வெறுப்புடன்.

“ஏய்.. அப்படி சொல்லாத அஞ்சலி. அர்ஜூன்கிட்ட பேசு. அவன் போட்டோவப் பார்த்ததில இருந்து ஒரு மாதிரியாதான் இருக்கான். வாய்ஸே சரியில்ல.” என்றாள் மது.

“சரி நான் ட்ரைப் பண்றேன்.” என்று மட்டும் சொல்லிவிட்டு வைத்தாள் அஞ்சலி.

ஆனால், ஒவ்வொரு நாளும் தயங்கித் தயங்கி எப்படி போன் செய்வது.? ஒருவேளை இந்த நிச்சயம் ஏன் என்று கேட்டால் இவனிடம் என்ன சொல்லி சமாளிப்பது.? இப்படி யோசித்து யோசித்தே கடைசி வரை போனே செய்யாமல் விட்டுவிட்டாள் அஞ்சலி.

ஆனால் மது, அர்ஜூனுக்கு போன் செய்து விவரத்தை சொல்ல, அவனுக்கும் ஆச்சர்யம் தான். ஆனாலும், இதை ஏன் தன்னிடம் சொல்லவில்லை.? என்ற ஒரு எண்ணமும் அவனிடம் இல்லாமல் இல்லை. அவனும், அதே எண்ணத்தில் அவளுக்கு போன் செய்யாமலேயே விட்டு விட்டான்.

இதோ வந்துவிட்டது. அவர்களின் கடைசி செமஸ்டர். இதில் எந்த சப்ஜெக்ட்டும் இன்றி முழுக்க அவர்கள் ப்ராஜக்ட் வொர்க் மட்டுமே செய்ய வேண்டும். அவரவர் அவர்களின் விருப்பங்களுக்குத் தகுந்தாற் போல், ப்ராஜெக்ட்டுகளை தேர்வு செய்து விட்டு அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கைடுகளிடம் விளக்கம் சொல்ல வேண்டும்.

அவ்வப்போது அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நாட்களில் வந்து ப்ராஜக்டுகள் எந்த அளவிற்க்கு வந்துள்ளது என்று கைடுகளிடம் சொல்லிவிட்டுச் செல்ல வேண்டும். ஐந்தாம் மாதம் முடிவில் வைவா எனப்படும் கடைசி தேர்வு உண்டு. அதோடு படிப்பு நிறைவு பெறும்.

இந்த முறையும் அர்ஜூனே அதிக பெர்சண்ட்டேஜூகளைப் பெற்றிருந்தான். அவர்கள் கிளாசுக்கு வந்த லெக்சரர் அவனை வெகுவாக பாராட்டிக்கொண்டிருந்தார். அனைவரும் அவனுக்கு கைத்தட்டிக் கொண்டிருக்க, அர்ஜூனோ எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தான். காரணம் தான் யார் என்று தெரியுமே.?

ஆனால், இந்த முறை ப்ரேக்கில் அஞ்சலி அவனிடம் வந்தாள், “அர்ஜூன்.. கங்க்ராஜூலேஷன்ஸ்.. இந்த டைமும் நீ தான் டாப்பர்.” என்று அவனிடம் கையை நீட்ட,

அவனோ, “கங்க்ராஜூலேஷன்ஸ்..” என்று அவனும் சொன்னான்.

“நீ தேங்க்ஸ் தான சொல்லணும். எதுக்கு எனக்கு கங்க்ராட்ஸ் சொல்ற.?” என்று கேட்க,

“உனக்கு ஞாபகமே இல்லையா.? உனக்கு நிச்சயம் ஆயிடுச்சே. அதுக்கு தான் நான் கங்க்ராட்ஸ் பண்னேன்.” என்றான்.

அவன் அப்படிச் சொன்னதும், அவளுக்கு ஒரு மாதிரி ஆனது. முகமே வாடிவிட்டது. ஆனால், அவனோ எதுவும் பேசாமல் அவளைக் கடந்து சென்றான். அவளால் பேச முடியவில்லை.

அதற்க்குள் விஷயம் தெரிந்து அனைவரும் அவளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த வண்ணம் இருந்தனர். ஆனால், அவளுக்கு இஷ்டமில்லாமல், அவளை மீறி நடந்த ஒரு நிகழ்ச்சி என்பதை அவள் எப்படி சொல்வது என்று தெரியாமல் திணறினாள்.

“என்னாச்சு அஞ்சலி.?” என்றாள் மது.

“ஒண்ணும் இல்ல..” என்றபடி, அவளிடம் எதுவும் சொல்லாமல் போய் தன் இடத்தில் அமர்ந்து கொண்டாள்.

ஆனால், மதுவுக்கு எதுவும் தெரியாமல் போய் விடுமா.? இருவரும் எதுவும் சொல்லிக்கொள்ள மாட்டார்கள். மற்ற காதலர்களைப் போல் தைரியமாக முடிவெடுக்கவும் தெரியாது இவர்களுக்கு. எல்லாம் இவர்கள் கையை மீறிப் போய்க்கொண்டிருக்கிறது. இவர்கள் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது என்று நினைத்தாள்.

அதன் பிறகு, அவரவர் எங்கு பிராஜக்ட் செய்ய வேண்டுமோ அங்கே செய்து கொள்ள ஏதுவான இடத்தைத் தேர்வு செய்தனர்.

மதுவுக்கு, பிரவீன் சென்னையில் உள்ள அவனது கம்பெனி மூலமாக ப்ராஜெக்டை அவளுக்கு தேர்வு செய்து கொடுத்தான். அதே போல், அவள் தோழிகளுக்கும் சிபாரிசு செய்ய, வழக்கம் போல் நால்வரும் பிரவீன் சொன்ன கம்பெனியிலேயே ப்ராஜக்ட் செய்ய முடிவெடுத்தனர். அதனால், சென்னையிலேயே இருந்தனர்.

அர்ஜுனுக்கு இதில் சிரமமே இல்லை. ஏனென்றால், அவன் ஏற்கனவே பல ப்ராஜெக்ட்டுகளைச் செய்து கொடுத்திருந்தான். அதில் ஒன்றைக் காட்டினாலே போதும். அதே போல், அவன் ரவிக்கும் ஒன்றை காட்டினான். அதை ரவி ஏற்றுக்கொண்டான்.

அதனால், ப்ராஜக்ட் விஷயங்கள் எதுவும் எந்தத் தடையுமில்லாமல் போனது. ஆனால், அர்ஜூனுக்கும், அஞ்சலிக்கும் இடையில் நடக்கும் இந்தப் போராட்டம் தான் முடிவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.

இது எங்கு போய் முடியும்.???


(தொடரும்...)
 
Very nice epi dear.
Romba serious ah poguthey.Tension pannureenga,Arjun pava , eppadiyavathu twist koduthu Anjali yoda serthu vitturunga.
 
Very nice epi dear.
Romba serious ah poguthey.Tension pannureenga,Arjun pava , eppadiyavathu twist koduthu Anjali yoda serthu vitturunga.

ரொம்ப நன்றி டியர்.. நீங்க இவ்ளோ சீரியஸா என் கதையைப் படிக்கறத நினைச்சா
ரொம்ப சந்தோஷமா இருக்கு. இன்னும் அவங்களுக்குள்ள நிறைய இருக்கு.
இனி வரும் அத்தியாயங்களில் பாருங்கள்.. விமர்சித்ததற்க்கு நன்றி டியர்...???
 
Top