Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதிரையின் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் - Episode 38

Advertisement

Aathirai

Well-known member
Member
Episode 38

அர்ஜூனின் பேச்சுக்காக ஏங்கும் நிலைமை ஆனது அஞ்சலிக்கு. முதலில் அவள் அப்படி இருந்தாள். இப்போதோ அவன் அவளைப் போல் எதுவும் பேசாமல் இருந்து அவனைக் கொன்றான்.

காதலனாய் வேண்டாம், ஒரு நண்பனாகக் கூட பேசவில்லை அவளிடம். அதுதான் அவளுக்கு வேதனையாய் இருந்தது. அதே நேரம் ப்ராஜக்ட் வேலைகளும் வேகமாய்ப் போய்க்கொண்டிருந்தன.

ஒரு நாள் ஷாலினியின் வீட்டிலிருந்து அவளுக்கு அவசர அழைப்பு வரவே, அவள் திடீரென்று கிளம்பிப் போனாள். என்னவோ, ஏதோ என்று தோழிகள் மூவரும் குழம்பி நிற்க, மது ஷாலினிக்கு போன் செய்து பேசும் போதுதான் விஷயம் அனைத்தும் தெரிந்தன.

“ஏய்.. என்னாச்சு மது.? அவ என்ன சொன்னா.? எதுக்கு திடீர்னு வரச் சொன்னாங்க.?” என்று அடுக்கடுக்காய் கேள்விகள் வைத்தனர் அஞ்சலியும், ரூபாவும்.

“ஹூம்ம்.. நாம பயப்பட்ட மாதிரி எதுவும் நடக்கல. ஆனா, சர்ப்ரைஸா ஒண்ணு நடந்திருக்கு.” என்று புதிர் போட்டாள் மது.

“ஏய்.. கொலவெறி ஏத்தாத மது. என்னன்னு தான் சொல்லேன்.” என்று ஆர்வம் தாங்காமல் கேட்டாள் ரூபா.

“இரு, இரு அவசரப்படாத. சொல்றேன். நாங்க ரெண்டு பேரும் ஊருக்கு ட்ரெயின்ல போகும் போது ஷாலினிய எப்பவும் ஒருத்தன் பார்த்துட்டே இருப்பான்னு சொன்னேன் இல்ல. அதே மாதிரி அன்னைக்கு அவ மட்டும் தனியா நான் இல்லாம போகும் போது கூட அவகிட்ட வந்து பேசினான்னு சொன்னா இல்ல.?” என்று மது தொடர்ந்து கொண்டிருக்க,

“ஏய். அந்தப் பையன் பேரு கூட நித்தின் தான.?” என்று ரூபா தன் மண்டையை பிளந்து சொல்ல,

“அப்பா, உனக்கு என்ன ஒரு மெமரி பவர். அதே நித்தின் தான். அவன் ஷாலினி வீட்டுக்கே போய் அவளப் பொண்ணு கேட்டு சம்மதமும் வாங்கிட்டானாம்.” என்று மது அதிர்ச்சி பொங்க சொல்லிக்கொண்டிருந்தாள்.

“ஏய்.. நிஜமாலுமேவா மது. நீ சொல்றதெல்லாம் சினிமால வர மாதிரி இருக்கு. யோசிக்கவே முடியல. நிஜத்துல இப்படிக் கூட நடக்குமா.?” என்றாள் அஞ்சலி.

“அப்படித்தான் இப்போ ஷாலினிக்கு நடந்திருக்கு. அவனுக்கு எவ்ளோ தைரியம் இருந்தா அவங்க பேரண்ட்ஸ் கிட்டயே போய் பேசி, சம்மதத்தையும் வாங்கிருப்பான் பாரு.” என்று மது சொல்ல, அவர்கள் இருவரும் விழியை அகல விரித்து கேட்டபடி இருந்தனர்.

“சரி, எப்படி சம்மதம் வாங்குனான் அவன்.?” என்று ரூபா சந்தேகமாகக் கேட்க,

“நானும் இதே கேள்வியைத்தான் கேட்டேன். அப்போதான் தெரிஞ்சது, அவ அன்னைக்கு கல்ஃப்ல இருக்கற மாப்பிள்ளை தான் பேரண்ட்ஸ்க்கு செட் ஆகும்னு சொன்னதனால, இங்க இருந்த வேலையை விட்டுட்டு துபாய் போய் ரிலேட்டிவ் வீட்டுல தங்கி நாலு மாசமா வேலை தேடினானாம். அதுக்கப்பறம் வேலை கிடைச்சு ஒரு வருஷம் வேலை பார்த்து அது பெர்மனெண்ட் ஆனதும் தான் உடனே இங்க வந்து அவங்க பேரண்ட்ஸப் பார்த்து பேசிருக்கான். தன் பொண்ணுக்காக இத்தனை தூரம் பண்ணிருக்க பையன யார்தான் வேண்டாம்னு சொல்லுவாங்க சொல்லு. அதான் உடனே ஓகே சொல்லிட்டாங்களாம். அதுக்கப்பறம் தான் ஷாலினிக்கே போன் பண்ணி வரச் சொல்லிருக்காங்க. இப்போ, இரண்டு வீட்டுலயும் பேசி, நாளைக்கு என்கேஜ்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணிருக்காங்களாம். இவளோட ப்ராஜக்ட் முடிஞ்சதும் உடனே மேரேஜ் வைச்சுக்கலாம்னு சொல்லிட்டாங்களாம்.” என்று ஒரு முழு நீள படத்தையே சொன்னாள் மது.

“ஹூம்ம்.. ஏதோ மேஜிக் மாதிரி இருக்கு மது நீ சொல்றது. ஷாலினியோட லைஃப்ல எல்லாமே திடீர்னு நடந்துருச்சு இல்ல. அவளுக்கு யோசிக்கக் கூட டைம் இருந்திருக்குமான்னு தெரியல.” என்றாள் அஞ்சலி.

“ஹே.. சூப்பர் பா. ஹூம்ம்.. எல்லாருக்கும் என்கேஜ்மெண்ட் அது இதுன்னு ஃபிக்ஸ் ஆயிடுச்சு. எல்லார் வீட்டுலயும் பாரு, எவ்ளோ பொறுப்பா கல்யாணம் பண்ணி வைக்க பிளான் பண்றாங்க. நமக்கும் தான் இருக்குதே.” என்று தலையில் அடித்துக்கொண்டாள்.

அஞ்சலி அவள் அடுத்து ஏதாவது சொல்லிவிடுவாளோ என்று எண்ணி அப்படியே நகர்ந்து விட்டாள். மதுவும், ப்ரவீனிடம் பேசுவதாக பாவ்லா காட்டி விட்டு நகர்ந்தாள். தன்னுடன் இருக்கும் மூவருக்கு மட்டும் எல்லாம் சரியாக நடக்க, தனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்க வேண்டும் என்று நினைத்து உள்ளுக்குள் பொறுமினாள் ரூபா.

அவள் நினைத்த நேரமோ என்னமோ, அவள் இடையில் ஒருமுறை ஊருக்கு சென்ற போது அவளுக்கு தயாராக இருந்தான் அவளின் தூரத்து அத்தை மகன். அவளுக்கு அவன் மேல் இஷ்டம் இருந்தாலும், பெரியவர்களாகப் பார்த்து சொல்லாமல் எப்படிப் பேசுவது என்று அமைதியாக இருந்தவளுக்கு, இப்போது லாட்டரி டிக்கட்டில் பரிசு கிடைத்ததைப் போல் ஒரு சந்தோஷம்.

அவன் பெயர் சங்கரன்., தன் அப்பாவின் சுய தொழிலையே அவனும் ஏற்று அதை வெற்றிகரமாக நடத்தி வருபவன். படித்திருப்பவன். ரூபாவும் படித்திருப்பதால் இருவருக்கும் பொறுத்தமாய் இருக்கும் என்று எண்ணி அவர்கள் திருமணத்தை முடிவு செய்தனர்.

உடனே தோழிகளுக்குப் போன் செய்து தன் இத்தனை நாள் ஏக்கத்தைத் தீர்த்துக்கொண்டாள். அவர்கள் மூவருக்கும் சந்தோஷம் தான். ஆனால், இவள் தான் வெந்து சாகிறார்கள் என்று நினைத்தாள்.

ஆக மொத்தம் நால்வருக்கு நிச்சயமாகி விட, யாருடைய கல்யாணம் முதலில் நடக்கும் என்று தான் குழப்பமாக இருந்தது. ப்ராஜக்ட் முடியும் தருவாயில் இருக்க, அதே கம்பெனி அஞ்சலியையும், மதுவையும் இண்டர்வியூ செய்ததில் அவர்கள் கம்பெனியிலேயே பணிபுரிய ஒப்பந்தமானார்கள் இருவரும். ரூபாவும், ஷாலினியும் தேர்வாகவில்லை என்றாலும், அவர்கள் அதை நினைத்து பெரிதாய் ஒன்றும் நினைக்கவில்லை.

திடீரென்று மதுவின் தாத்தாவிற்க்கு உடம்பு சரியில்லாமல் போகவே, தனது பேத்தியின் திருமணத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் பார்த்து விட வேண்டும் என்று பெரியவர்களுக்கு ஆசை வந்தது.

மதுவின் பெற்றோர்களும், ப்ரவீனின் பெற்றோர்களும் கலந்து பேசி முடிவு செய்து மே மாதக் கடைசியில் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். அதற்க்குள் அவளது வைவாவும் முடிந்து விடும் என்பதால் தான் அப்போது திருமணத்தை வைத்தனர்.

அவர்கள் சேருவதற்க்குக் காரணமாய் இருந்த மருதமலை ஆண்டவனின் சந்நதியில் திருமணமும், அதைத் தொடர்ந்து மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சியையும் வைத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர். திடீரென்று திருமணம் என்றதும், சற்று தயக்கமாக இருந்தது மதுவுக்கு. ப்ரவீன் போன் செய்த போது இதைப் பற்றி பேசினாள்.

“அதுக்குள்ள கல்யாணம்னு சொல்லிட்டாங்க ப்ரவீன். எனக்கு ஒரு மாதிரியா இருக்கு. அட்லீஸ்ட் ஒரு வருஷத்துக்கு ஜாப் போகணும்னு நினைச்சேன். இப்போ பாரு, எல்லாமே தலைகீழா மாறிப் போச்சு.” என்று கவலையுடன் சொன்னாள் மது.

“ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல மது. நீ மேரேஜ்க்கு அப்பறம் எவ்ளோ வருஷம் வொர்க் பண்ணனும்னு நினைக்கிறியோ வொர்க் பண்ணு. எனக்கு எந்த் அப்ஜெக்‌ஷனும் இல்ல.” என்றான் ப்ரவீன் கூலாக.

“அதெப்படி ப்ரவீன். மேரேஜ்க்கு அப்பறம் நீ அங்க, நான் இங்கன்னு எப்படி வொர்க் பண்ண முடியும் சொல்லு.” என்றாள் மது.

“என்னோட கம்பெனி தான், நீ எப்போ வேணும்னாலும் சிங்கப்பூருக்கு வர முடியும். நான் அதுக்கு அரேஞ்ச் பண்ணிடறேன். ஃபர்ஸ்ட் ட்ரெயினிங்க் பீரியட் மட்டும் அங்கயே இருக்கற மாதிரி இருக்கும். அதுக்கப்பறம் இங்க வந்துடலாம். சரியா. ஃபீல் பண்ணாத.” என்று அவளை சமாதானம் செய்தான் ப்ரவீன்.

“ம்ம்.. சரி.. ஓகே.” என்று தன்னைச் சமாதானம் செய்துகொள்ள முயற்சி செய்தாள் மது.

அடுத்து, ஷாலினியின் திருமணம் ஜூன் மாதம் முதல் வாரத்திலேயே. அதாவது, மதுவின் திருமணம் முடிந்த அடுத்த வாரத்தில். இதை இருவரும் எதிர்பார்க்கவில்லை. ஷாலினிக்கு மதுவின் திருமணத்தில் கலந்துகொள்ள முடியாதே என்று வருத்தப்பட்டாள்.

மது, திருமணம் முடிந்த கையோடு முதல் விஷேஷமாக ஷாலினியின் திருமணத்திற்க்கு செல்வதாய் திட்டமிட்டாள். ப்ரவீனோ ஒரு படி மேலே போய், தேனிலவுக்கு அங்கேயே போகலாம் என்று முடிவெடுத்தான். அவளுக்கும் அது சரி என்றே தோன்றியது.

ரூபாவின் திருமணமோ, அதற்க்கு அடுத்த வாரம். அவள் இவர்கள் இருவரின் திருமணத்திலும் கலந்து கொள்ள முடியாத நிலை உருவானது. ஆனால், ஒரு வகையில் ரூபா, அவர்களின் திருமணத்திற்க்குச் செல்லாமல் இருப்பதே நல்லது என்று கடவுள் நினைத்து விட்டார் போலும்.

இப்படியாக இவர்கள் நாட்கள் சந்தோஷத்தில் செல்ல, அஞ்சலிக்கு தான் நரக வேதனையாய் இருந்தது. மனதில் இன்னொருவன், நிச்சயமோ வேறொருவனுடன் நடந்ததை நினைத்து எரிச்சலாய் இருந்தது.

இன்று வரை இருவரும் காதலைச் சொல்லிக்கொள்ளாத நிலையில், இப்போது நிச்சயம் ஆன பிறகு எப்படி அவனிடம் தான் பேசுவது, தன் ஏக்கத்தைக் கொட்டித் தீர்ப்பது என்று அவளுக்கு மிகவும் சங்கடமாய் இருந்தது. முடிவே இல்லாமல் போகும் இதற்க்கு எப்பொழுது தான் முடிவு கிடைக்குமோ என்று தோன்றியது.

கடைசி வைவா நாள். அனைவரும் கல்லூரியில் கடைசியாக கூடியிருந்த நாள். கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது. அதற்க்குள் இந்த இரண்டு வருடங்கள் எப்படி முடிந்தது என்று தெரியவே இல்லை. நண்பர்கள் அனைவரும் பிரியும் நிலை.

ஒட்டுமொத்தமாக மது, ஷாலினி, ரூபா மூவரும் அனைவருக்கும் பத்திரிக்கை கொடுப்பதில் பிசியாக இருந்தனர். அனைவருக்கும் ஒரே ஆச்சர்யம். அர்ஜூனிடமும், ரவியிடமும் மூவரும் ஒரே நேரத்தில் பத்திரிக்கையை நீட்ட, அவர்கள் எதை முதலில் வாங்குவது என்ற நிலை உருவானது.

“ஏம்மா.. கண்ணுகளா.. இப்படி மூணு பேரும் ஒண்ணா பத்திரிக்கைய நீட்டினா, யாரோட பத்திரிக்கைய முதல்ல வாங்குறது.?” என்று திணறியபடி சொன்னான் ரவி.

“எல்லாத்தையும் சேர்த்து வாங்கு..” என்று ரூபா சொல்ல, அவனும் அதே போல் மூன்றையும் ஒன்றாக வாங்கி ஒவ்வொன்றாய் படித்துக்கொண்டிருந்தான்.

அர்ஜூனும் பத்திரிக்கையை வாங்கியபடி, “ம்ம்.. முதல்ல மூணு பேருக்கும் கங்க்ராட்ஸ்.. ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனா, ஒரே நேரத்துல நாங்க மூணு இட்த்துக்கு தொடர்ந்து ரவுண்ட் அடிக்கணும்னு நினைச்சா தான் தலை சுத்துது.” என்றான் அர்ஜூன்.

“அதெல்லாம் தெரியாது. கண்டிப்பா எல்லாருடைய மேரேஜ்க்கும் ஆப்செண்ட் ஆகாம அட்டண்டன்ஸ் போடனும்.” என்றாள் மது.

அர்ஜூனும், சிரித்துக்கொண்டே..“ஓகே. ஓகே.. கண்டிப்பா வந்துடுவோம்..” என்றான்.

அடுத்த நாள் அவர்களுக்கு கல்லூரியின் சார்பில் ஃபேர்வெல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது கூட, அர்ஜூன் அஞ்சலியிடம் பேசவில்லை. ஏனோ, அது அஞ்சலிக்கு மிகவும் வருத்தத்தை அளித்தது.

அனைவரும் மேடையேறி அவரவர் விருப்பங்கள், நடனங்கள், பாட்டு, பேச்சு என்று திறமையைக் காட்டிக்கொண்டிருந்தனர்.

எதுவுமே அஞ்சலியின் கண்களுக்குத் தெரியவில்லை. அர்ஜூனைத் தவிர. இவையெல்லாம் அர்ஜூனுக்குத் தெரியாமல் இல்லை. ஆனாலும், அவன் மனதை அடக்கிக் கொண்டே அனைத்தையும் செய்தான். அதைப் புரிந்து கொள்ளா அப்பேதை மனமோ அவனுக்காக ஏங்கியது.


(தொடரும்...)
 
Very nice epi dear.
Train all of a sudden veegam pidichu poguthey. Viruvirupa nalla poguthu kathayum.super.
 
Top