Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதிரையின் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் - Episode 40

Advertisement

Aathirai

Well-known member
Member
Episode 40

அஞ்சலியின் பேச்சால் சிறிது கொஞ்சம் கவலையாகத்தான் இருந்தான். அவள் என்ன நினைத்திருப்பாள் என்ற எண்ணம் அர்ஜூனின் மனதில் ஓடிக்கொண்டே தான் இருந்தது.

திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்த சந்தோஷத்தில் இரு வீட்டாரும், மண்டபத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அன்று இரவு சாந்தி முகூர்த்தத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

மதுவுக்கு அலங்காரம் செய்ய, அஞ்சலியும் உதவிக்கொண்டிருந்தாள். அதே போல் அழகாய்த் தெரிந்த அவளைக் கிண்டலும் செய்தாள். மதுவுக்கு ஒருவித படபடப்பு உருவானது. அவளை பலவித மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட அறைக்குள் தள்ளினர்.

அங்கே, பிரவீன் அவளுக்காகக் காத்திருந்தான். பால், பழங்கள், வாசனை திரவியங்கள் நிறைந்த அந்த அறை ஒருவித மயக்கத்தையே ஏற்படுத்தும் விதமாக இருந்தது.

மது, பிரவீனின் முகத்தைப் பார்க்கக் கூட முடியாமல் கொஞ்சம் பதட்டத்திலேயே இருந்தாள். அதைப் புரிந்து கொண்ட பிரவீன், “மது.. என்னாச்சு உனக்கு.? ஏன் ரொம்ப டென்ஷனா இருக்க.?” என்றான்.

“ஒன்னும் இல்ல பிரவீன். புதுசா இருக்கு இந்த ஃபீலிங். ஐ மீன், இப்படி ஒருத்தர் கூட ஒரே ரூம்ல ஃபர்ஸ்ட் டைம் தனியா இருக்கும் போது ஒரு மாதிரி இருக்கு. அதான் கொஞ்சம் நெர்வஸ்ஸா இருக்கு.” என்று அவள் இன்னும் படபடத்தாள்.

“ஹே.. கூல், கூல் மது. நீ தயவு செய்து ரிலாக்ஸா இரு. நீ பயப்படற அளவுக்கு நான் ஒண்ணும் உன்னை செய்துட மாட்டேன். எனக்கு உன்கிட்ட கொஞ்சம் பேசணும். அதுக்கப்பறம் நீ கண்டிப்பா ரிலாக்ஸா ஃபீல் பண்ணுவ பாரு.” என்றான்.

“என்ன பேசணும் பிரவீன்.? இதுவரைக்கும் நாம போன்ல நிறைய விஷயங்கள பேசிருக்கோமே.? அப்பறம் என்ன புதுசா பேசப்போறீங்க.?” என்றாள் மது.

“அதெல்லாம் சும்மா, அப்போதைக்கு நடக்கற விஷயங்களைப் பத்தி பேசற விஷயம் மது. அது நம்ம அண்டர்ஸ்டேண்டிங்க்கு பத்தாது. இனிமேல் நாம ரெண்டு பேரும் வாழப்போற வாழ்க்கைல தான் நிறைய இருக்கு. ஃபர்ஸ்ட் நம்ம ரெண்டு பேருக்கும் உள்ள ஒரு மியூட்சுவல் அண்டர்ஸ்டேண்டிங்க் இருக்கணும். அது இல்லாம நமக்குள்ள எந்த பிஸிக்கல் ரிலேஷன்ஷிப்பும் வேண்டாம்னு என்னோட தாட். முதல்ல நாம, நல்ல ஃப்ரெண்ட்ஸா இருந்தோம். அதுக்குள்ள நமக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆயிடுச்சு. சோ, நாம லவ் பண்ண டைமே கிடைக்கல. நம்ம ரெண்டு பேருக்கும் நம்மளைப் பிடிக்கும். பட், ரெண்டு பேருக்கும் இடையில லவ் இன்னும் வரலயோன்னு ஃபீல் பண்றேன். சோ, இந்த ஒன் இயர் டைம்ல நாம நல்லா லவ் பண்ணுவோம். உனக்கு ஜாப் கிடைச்சிருக்கு. நீ தாராளமா போ. அப்பறம், ஆட்டோமேட்டிக்கா நமக்குள்ள எல்லாமே நடக்கட்டும். இப்போதைக்கு எதுவும் வேண்டாம். நான் என்னோட மனசில என்ன இருக்கோ, அதை சொல்லிட்டேன். பட், நீ என்ன நினைக்கறன்னு என்கிட்ட சொல்லு.” என்றான் பிரவீன்.

“தேங்க் காட். எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல பிரவீன். ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் என்ன நினைச்சேனோ, அதைத்தான் நீங்களும் சொல்லிருக்கீங்க. எனக்கும் அதே ஃபீல் தான். எப்படி ஒருத்தர் கூட சடர்ன்னா அந்த மாதிரி ஒரு ரிலேஷன்ஷிப் வைச்சுக்க முடியும்னு தோணும். பட், அதுல எனக்கும் நம்பிக்கை இல்ல. லவ் இல்லாம எந்த ஒரு ரிலேஷன்ஷிப்பும் இருக்கக் கூடாதுன்னு நீங்க சொல்றது ஹன்ரட் பெர்சண்ட் கரெக்ட். நீங்க சொன்னத நான் அக்சப்ட் பண்ணிக்கறேன். இப்போதான் என்னுடைய டென்ஷன் கொஞ்சம் குறைஞ்ச மாதிரி இருக்கு.” என்றபடி அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள்.

அவனும் அவளின் தலையை வருடி விட்டான். இருவரும் எந்தவித படபடப்பும், கூச்சமும் இல்லாமல் நிம்மதியாக உறங்கினர். அன்றைய இரவு அவர்களின் காதலுக்கு முதல் அடியாக இருந்தது.

அடுத்த நாள், சென்னையில் இருந்து வெங்கடேசன் குடும்பத்தினரின் உறவினர்கள் வந்த பேருந்து கிளம்ப ஆயத்தமாக இருந்தது. அவர்கள் அனைவரும் கிளம்பிவிட்டனர்.

அதே போல், அன்று இரவு பேருந்துக்கு அஞ்சலி டிக்கட் புக் செய்திருந்தாள். அதனால், அனைத்தையும் பேக் செய்து கொண்டிருந்தாள். ஒருமுறை ஹேண்ட்பேகில் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டாள். அனைத்தும் இருந்தன. அதற்க்குள் மதுவின் அம்மா அழைக்கும் சத்தம் கேட்டுச் சென்றாள்.

அவள் சென்ற மறுநிமிடம் அவளின் ஹேண்ட்பேகை யாரோ எடுத்து, அவருக்கு வேண்டிய பொருளை எடுத்துவிட்டு அதே இடத்தில் வைத்து விட்டுச் சென்றனர்.

சென்றவள், திரும்பி வந்த போது எந்த ஒரு தடயமும் இல்லாமல் அனைத்தும் அப்படியே இருந்ததால் அவளுக்கு எதுவும் சந்தேகம் வரவில்லை.

மதுவும், பிரவீனும் கிளம்புவதற்க்கு முன் அர்ஜூனிடம் பிரவீன் கேட்டான்.

“நீங்களும் சென்னை போறீங்கன்னா எங்ககூடவே வாங்க.” என்றான்.

“இல்ல ப்ரோ. நானும், ரவியும் பெங்களூர் போறோம். அங்க எங்க ஃப்ரெண்ட் ரமேஷ் வீட்டுக்குப் போகணும். ஆறு மாசத்துக்கு ஒரு தடவை அவங்க வீட்டுக்குப் போகலன்னா அவன் என்னை தொலைச்சிடுவான். இந்த டைம் ரவியும் கூட வரான். அதுவும், இல்லாம ஷாலினி மேரேஜ்க்கு நாங்க அப்படியே வந்துடுவோம். நீங்க எப்போ வரீங்க.?” என்று கேட்டுக்கொண்டிருந்தான்.

“நாங்க இன்னும் த்ரீ டேஸ்ல வந்துடுவோம். அப்போதான் ஷாலினி மேரேஜ்க்கு வரதுக்கு சரியா இருக்கும்.” என்றாள் மது.

“ஓ.. சரி, சரி..” என்றான் அர்ஜூன்.

இவர்களின் உரையாடலின் போதுதான் அஞ்சலிக்கு அவர்கள் இருவரும் பெங்களூர் செல்வது தெரிந்தது.

“நீங்க பெங்களூர் தான் போறீங்கன்னா, அஞ்சலியும் இன்னைக்கு நைட் பஸ் புக் பண்ணிருக்கா. 10 ஓ கிளாக், கே.பி.என் பஸ். இல்ல அஞ்சலி.?” என்று அவள் கேட்க, அவளும் ஆமாம் என்று தலையாட்டினாள்.

“ஆங்க். அப்போ, நீங்க கிளம்பும் போது இவளையும் உங்க கூட கூட்டிட்டுப் போய் கொஞ்சம் கரெக்டா பஸ் பாத்து ஏத்தி விட்டுடுங்க.” என்றாள்.

“ம்ம்.. கண்டிப்பா மது, நீ கேட்டு நாங்க பண்ணாம இருப்போமா.?” என்றான் ரவி. அர்ஜூன் ஏனோ அமைதியாய் தான் இருந்தான். அஞ்சலிக்கு அதைப் பார்த்து எரிச்சலாய் வந்தது.

“மது, நான் ஒண்ணும் சின்னக் குழந்தை இல்ல. நான் இதுக்கு முன்னாடி இந்த மாதிரி பஸ்ல போனதே இல்லையா. எப்பவும் போறது தானே.? நான் போய்க்கிறேன். நீ நல்லபடியா சென்னை போயிட்டு வா.” என்று சொல்லி அவளை ஆரத் தழுவிக் கொண்டாள்.

அவள் பேசியதிலேயே தன் மேல் கோபமாய் இருக்கிறாள் என்று தெரிந்து கொண்டான் அர்ஜூன். ஆனாலும், எதுவும் பேசாமல் இருந்தான்.

மது, பிரவீன் மற்றும் பிரவீனின் அக்கா முறை ஒருவரும் காரில் சென்னைக்குக் கிளம்பி விட்டனர். அவள் சென்றதும், அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சில மணி நேரங்கள் சத்தமில்லாமல் அழுதுகொண்டிருந்தனர்.

அஞ்சலிக்கு அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிந்தது. மதுவின் அம்மாவை, தம்பியை கொஞ்சம் சமாதானப்படுத்தினாள். அங்கே இருந்தவரை அவர்கள் அனைவருமே அவளுக்கு மிக நெருக்கமானவர்களாக மாறி விட்டிருந்தனர்.

இரவு அவள் கிளம்பும் போது கூட, அவளுக்கு நிறைய பதார்த்தங்களை எல்லாம் பேக் செய்து கொடுத்து விட்டார் மதுவின் அம்மா. அனைவரையும் பிரிய மனமில்லாமல் இரவு கிளம்பி நின்றாள். அதே போல், அர்ஜூனும், ரவியும் நின்றனர்.

ரவிதான் கேட்டான். “என்ன அஞ்சலி கிளம்பலாமா.?” என்று.

“நான் போய்க்கிறேன் ரவி. நீங்க பார்த்துப் போய்ட்டு வாங்க.” என்றபடி கிளம்ப எத்தனித்தவளை அழைத்தான் மதுவின் தம்பி விஜி.

“அக்கா, இருங்க. நான் உங்க மூணு பேரையும் நானே வண்டில பஸ் ஸ்டாண்டல ட்ராப் பண்ணிடறேன்.” என்று தன் கார் கீயை எடுத்துக்கொண்டு வந்து ஸ்டார்ட் செய்தான். ரவி எதையோ நினைத்தவாறு, அவசரமாய்ச் சென்று முன் சீட்டில் அமர்ந்தவாறே,

“ஏய்.. ரெண்டு பேரும் என்ன யோசிச்சிட்டு இருக்கீங்க.? ஏறுங்க பஸ்ஸூக்கு டைம் ஆகுது.” என்று சொல்ல, இருவரும் வேறு வழியில்லாமல் தங்கள் லக்கேஜை டிக்கியில் வைத்து விட்டு ஏறினார்கள்.

அர்ஜூன் அந்த மூலையில் என்றால், அஞ்சலி இந்த மூலையில் இருவரும் தங்கள் பார்வையை ஜன்னல் வழியே பதியவைத்தபடி இருந்தனர். இருவரும் பேருந்து நிலையம் வரும் வரை பார்த்துக்கொள்ளவும் இல்லை. பேசிக்கொள்ளவும் இல்லை.

மூவரும் இறங்கிக்கொள்ள, விஜி அவர்களிடமிருந்து விடை பெற்றான். மூவரும் ஆம்னி பேருந்து நின்றிருக்கும் இடத்திற்க்கு விரைந்தனர். அஞ்சலியால் ஒரு பேகையும், அதே போல் துணிகள் நிறைந்த மற்றொரு பேகையும் எடுத்துக்கொண்டு அவசரமாய் நடக்க முடியவில்லை.

அதை அறிந்த அர்ஜூன், அவளின் அனுமதி எதுவும் இன்றி அவளின் கையிலிருந்து அந்தப் பேகை வாங்கிக்கொண்டு நடந்தான். அவன் அப்படிச் செய்ததும் என்ன செய்வதென்று தெரியாமல், அவன் பின்னாலேயே தொடர்ந்தாள்.

முதலில் அவளை பஸ்ஸில் ஏற்றிவிட்டு பிறகு இருவரும் கிளம்ப இருந்தனர். அவளது டிக்கட்டை சரிபார்க்க அந்த பஸ்ஸின் கண்டக்டர் கேட்ட போதுதான், அவள் தன் ஹேண்ட்பேகைத் திறந்தாள். அவளது டிக்கட்டைக் காணவில்லை. பேகை கொட்டியே பார்த்து விட்டாள் காணவில்லை. அவளுக்கு ஒரு மாதிரியாக ஆனது.

“என்னாச்சு அஞ்சலி.? டிக்கட் எடுத்த தானே.? அப்பறம் எப்படி காணாமப் போச்சு.?” என்றான் ரவி.

“தெரியல ரவி. நான் பத்திரமா என்னோட ஹேண்ட்பேக்ல தான் வைச்சிருந்தேன். இப்போ காணோம்.” என்றாள் பதட்டத்துடன்.

“சரி இல்லன்னா, மெசேஜாவது இருக்கா.?” என்று கண்டக்டர் கேட்க, “இல்ல, மேசேஜ் மாமாகிட்ட தான் இருக்கும். அவர்தான் எனக்கு டிக்கட் எடுத்துக் கொடுத்தார். அந்த மெசேஜ் அவர்கிட்ட தான் இருக்கணும். நான் அவருக்கு கால் பண்ணிக் கேட்கிறேன்.” என்று மகேஷூக்கு போன் செய்யச் சென்றாள் அஞ்சலி.

“........”

ரிங்க் போய்க்கொண்டிருந்ததே தவிர அவர் எடுக்கவே இல்லை. அவளோ என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தாள். பஸ் கண்டக்டரோ அனைவரையும் செக் செய்து ஏற்றி விட்டார். பத்து மணியும் ஆகிவிட்டது.

“ஏம்மா, என்னாச்சு மெசேஜ் அனுப்பினாரா, இல்லையா.?” என்று கண்டக்டர் கேட்க, அவள் விழித்துக்கொண்டு நின்றாள்.

அப்போது அர்ஜூன் ரவியிடம் சொன்னான். “ரவி, நீ அஞ்சலியைக் கூட்டிட்டுப் போய் பெங்களூர்ல விட்ரு. நம்ம டிக்கட்ல நீங்க போயிடுங்க. நான் வேற பஸ்ல வந்திடறேன்.” என்றான்.

ரவிக்கு திக்கென்றது. அஞ்சலியோ எரிச்சலோடு பார்த்தாள். “டேய்.. இங்க பாரு. நீ வேணும்னா போடா. நான் சேலம் போறேன். எனக்கு வேற வேலை இருக்கு. எனக்கு பெங்களூர் வந்தே ஆகணும்னு ஒண்ணும் கட்டாயம் இல்ல. நீ அவளைக் கூட்டிட்டுப் போய் பெங்களூர்ல விட்டுட்டு ரமேஷ் வீட்டுக்குக் போ.” என்றான் ரவி.

“டேய். சொன்னா புரிஞ்சுக்கோ. என்ன சங்கடப்படுத்தாத டா.” என்று ரவியிடம் கிட்டத்தட்ட கெஞ்சினான் அர்ஜூன்.

இவர்களது உரையாடலுக்கு நடுவே பஸ் கிளம்பியே விட்டது. அதே போல், அஞ்சலி அவர்களிடம் வந்தாள்.

“ரவி, நீங்க யாரும் என்கூட வர வேண்டாம். நானே ஏதாவது பஸ் புடிச்சு போய்க்கிறேன்.” என்று பேகைத் தூக்கிக் கொண்டு கிளம்பினாள் அஞ்சலி.

அவர்களுக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. ரவியோ, “டேய்.. போடா. அவ போறா பாரு. நீ ஏன் இப்படிப் பண்ற.?” என்று கேட்டுக்கொண்டிருக்க, அவனை முறைத்து விட்டு, அவளது பின்னாடியே ஓடினான் அர்ஜூன்.

“அஞ்சலி.. அஞ்சலி.. நில்லு..” என்று அவன் பின்னாலேயே வர, அவளோ கோபத்தில் வேகமாக நடந்தாள்.

“அஞ்சலி.. நில்லுன்னு சொல்றேன்ல..” என்று அவளின் பேகை வாங்க முயன்றான்.

“அர்ஜூன் போதும்.. விடு. தயவுசெய்து வராத. நீ எதுவும் சொல்ல வேண்டாம். என் கூட வரவும் வேண்டாம். உன்னை இப்போதான் முழுசா புரிஞ்சுக்கிட்டேன்.” என்று அவள் அவளது பேகை அவனிடமிருந்து பிடுங்க முயன்றாள்.

“நான் சொல்றதக் கேளு அஞ்சலி.. சரி, நான் செஞ்சது தப்புதான். எனக்கு ஒரு மாதிரி சங்கடமா இருக்கு. அதை எப்படி உன்கிட்ட சொல்றதுன்னு தெரியல.” என்றான் அர்ஜூன்.

“நீ எதுவும் சொல்ல வேண்டாம் அர்ஜூன். என்னை விட்டாப் போதும். நானே போய்க்கிறேன். என் பேகைக் குடு. இனிமேல் உன்ன நான் பார்க்கவும் மாட்டேன்’ பேசவும் மாட்டேன். அப்போ உனக்கு சங்கடமா இருக்காதில்ல.?” என்று சொன்னாள் அஞ்சலி. இருவரும் பேருந்து நிலையம் என்று கூட பார்க்காமல் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.

அவனுக்கு இதற்க்கு மேல் அவளிடம் பேச தைரியம் இல்லை. என்ன பேசுவதென்று தெரியாமல் நின்று கொண்டிருந்தான். ரவி பின்னாலேயே வந்து, திட்டியபடி அஞ்சலியிடம் சொன்னான்.

“அஞ்சலி, நான் உன்னை பஸ் ஏத்தி விடறேன். நீ போயிட்டு வா. இவனுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல. இதுக்கு மேல இங்க ரெண்டு பேரும் சண்டை போடாதீங்க. எல்லாரும் ஒரு மாதிரியா பார்க்கறாங்க.” என்றபடி, அவளைக் கூட்டிக்கொண்டு சென்று பெங்களூர் செல்லும் வேறொரு பஸ்ஸில் ஏற்றி விட்டு வந்தான்.

அர்ஜூனுக்கு முதன்முறை தன்னை நினைத்து வெட்கமாகவும், அவமானமாகவும் இருந்தது. ஒரு பெண்ணிடம் மனதைப் பறிகொடுத்து, அதே போல் அவளிடம் அவமானப்பட்டதை நினைத்து மனது இறுகிப் போனது. நிலைகுலைந்து நின்றான் அந்த பேருந்து நிலையத்தில்.


(தொடரும்...)
 
Top