Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதிரையின் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் - Episode 44

Advertisement

Aathirai

Well-known member
Member
Episode 44
காலை 6 மணிக்கு பாலக்காடு வந்து சேர்ந்தனர். வந்ததுமே, ஷாலினி சொல்லியிருந்த அவரது உறவினர் அவர்களை அழைத்துப் போக வந்திருந்தார். தன் நண்பர்கள் அனைவரும் தங்க பாலக்காட்டில் உள்ள ஒரு சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்டை அவள் புக் செய்திருந்தாள்.

அங்கே அவர் அழைத்துச் சென்றார். அஞ்சலி அவரிடம் சிறிது மலையாளத்தில் பேசி சற்று சமாளித்துக் கொண்டிருந்தாள். இத்தனை வருட பழக்கத்தில் ஷாலினியிடம் உருப்படியாகக் கற்ற மொழி, இப்போது நன்றாகவே பயன்பட்டது என்று எண்ணினாள்.

அர்ஜூனும், ரவியும் பேந்தப் பேந்த விழித்தனர். ஒன்றும் புரியவில்லை அவர்களுக்கு. இருந்தாலும், தலையை மட்டும் அவ்வப்போது ஆட்டி வைத்தனர். சிறிது நேரத்தில் அந்த சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் வந்தது.

அங்கே சென்று இறங்கும் போதே, பிரவீனின் கார் இருப்பதைப் பார்த்தார்கள். மதுவும், பிரவீனும் முன்னரே வந்துவிட்டதை அறிந்துகொண்டார்கள். உள்ளே சென்று செக்-இன் செய்து விட்டு மூவரும் முதல் தளத்திற்க்குச் சென்றனர்.

அவள் செல்லும் போதே, தனது மாமாவிற்க்கு போன் செய்து தாங்கள் வந்து சேர்ந்துவிட்டதை தெரிவித்து விட்டாள் அஞ்சலி. கீழே ரிஷப்ஷனில் கேட்ட போது, மது, பிரவீன் தங்கியிருக்கும் ரூமின் நம்பரையும் கேட்டுவிட்டு அங்கே வந்து காலிங்க் பெல்லை அழுத்தினர்.

ஒரே ஃப்ளாட்டில் இரண்டு படுக்கையறை கொண்ட அறைகள் இருந்ததால் அவர்களுக்கு அதுவே போதுமானதாக சொல்லி விட்டனர். ஒரு நிமிடம் கழித்து கதவைத் திறந்தாள் மது.

“ஏய்ய்... எல்லாரும் வந்தாச்சா.? பிரவீன் எல்லாரும் வந்துட்டாங்க..” என்று உள்ளே அவனுக்குக் குரல் கொடுத்தவள், ஓடிப்போய் அஞ்சலியைக் கட்டிக்கொண்டாள்.

“அஞ்சலி, உன்ன எவ்ளோ மிஸ் பண்றேன் தெரியுமா.? நான் சென்னை போனதும் நாம இருந்த வீட்டில தான் நானும், பிரவீனும் இருந்தோம். அப்போவெல்லாம் எனக்கு உங்க எல்லாருடைய நியாபகமாகவே தான் இருந்துச்சு.” என்று அஞ்சலி வந்தவுடனேயே அவளிடம் அனைத்தையும் சொல்லிக்கொண்டிருந்தாள் மது.

ஒரு அறையிலிருந்து வெளியே வந்த பிரவீன், அர்ஜூனையும், ரவியையும் பார்த்து சிரித்த முகத்தோடு பேசியவன், மதுவிடம் திரும்பி, “மது, அவங்க இப்போதான் ட்ராவல் பண்ணி வந்திருக்காங்க. வந்ததும் அவங்கள ரூமுக்குப் போக விடாம நீ பாட்டுக்கு பேசிட்டிருக்க.?” என்றான்.

“ஓ.. சாரி அஞ்சலி. உன்னைப் பார்த்த்தும் நம்மோட பழைய நியாபகம் வந்துடுச்சு. அதனால தான், அப்படியே பேசிட்டு இருந்தேன். வா, நாம ரெண்டு பேரும் இந்த ரூம்ல இருக்கலாம். அவங்க மூணு பேரும் அந்தப் பெரிய ரூம்ல இருக்கட்டும்.” என்றபடி அவளை அந்த அறைக்கு அழைத்துப் போனாள் மது.

அனைவரும் தயாராகினர். திருமணம் காலை 9 மணிக்கு என்பதால் சற்று நிதானமாய்த் தயாராகினர். ஆண்கள் சட்டென்று ரெடியாகி வெளியே வர,

“இந்தப் பொண்ணுங்க ரெடியாகறது மட்டும் ஏன் எப்பவும் லேட் ஆகுது.? அப்படி என்னதான் பண்ணுவாங்க.?” என்று சலித்துக்கொண்டான் ரவி.

“அவங்க சாரி செலக்‌ஷன் பண்றதுக்கே லேட் ஆகும். அதுக்கப்பறம் இதுதான் கட்டணும்னு டிசைட் பண்ணி அதைக் கட்டிட்டு வரதுக்குள்ள தான் அவ்ளோ டைம் ஆகுது.” என்றான் பிரவீன்.

“பரவால்ல புது மாப்பிள்ளை ஒரு வாரத்துலயே கொஞ்சம் அவங்களைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டீங்க போலிருக்கு.?” என்று கேலியாக ரவி கேட்டதும் சிரித்தான் பிரவீன். இப்படியாக மூவரும் பேசிக்கொண்டே அவர்கள் இருவரும் வெளியே வரும் வரை காத்திருந்தனர்.

உள்ளே அறையிலோ, மது அஞ்சலியிடம் சொல்லிக்கொண்டிருந்தாள், “அஞ்சலி இந்த டைம் நாம கேரளா சாரி கட்டலாம். ஷாலினி கூட சொன்னா. நீங்க என்னோட மேரேஜ்க்கு கட்டிட்டு வாங்கன்னு.”

அவள் சொன்னதும் விழித்த அஞ்சலி, “ஆனா, நம்மகிட்ட அந்த சாரி இல்லையே மது. ஷாலினிதான் ஒவ்வொரு ஓணத்துக்கும் கட்டுவா. இப்போ அந்த சாரிக்கு எங்க போறது.? நான் சும்மா டிசைனர் சாரிதான் எடுத்துட்டு வந்தேன்.” என்றாள் அஞ்சலி.

“ஹூம்ம்.. நான் கேரளா சாரி ஒண்ணு புதுசா எடுத்தேன் அஞ்சலி. அப்போதான், நாம ஷாலினி கல்யாணத்துக்கு போகும் போது கட்டலாம்னு தோணுச்சு. அப்பறம் உனக்கும் சேர்த்து தான் எடுத்தேன். பார்டர் கலர் மட்டும் வேற. எனக்கு பிங்க் கலர் பிடிச்சிருந்த்து. அதனால அது எடுத்துட்டேன். ஆனா, உனக்கு ஒரிஜினல் கோல்டர் பார்டர் வைச்ச கேரளா சாரியே எடுத்துட்டேன்.” என்று தனது சூட்கேஸிலிருந்த கேரளா சாரியை எடுத்துக் காண்பித்தாள் மது.

அந்த சாரி அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. “எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு மது. எனக்காக வாங்கினதுக்கு ரொம்பத் தேங்க்ஸ்.” என்று சொன்னாள் அஞ்சலி.

ஒரு அரைமணி நேரத்தில் இருவரும் சாரி மாற்றிக்கொண்டு, லைட்டான மேக்-அப்பில், தலை நிறைய பூ வைத்தபடி வெளியே வர, மதுவை எப்போதும் காணாத ஒரு தோற்றத்தில் பார்த்ததைப் போல் பார்த்தான் பிரவீன்.

அந்தக் கேரளா சாரியைத் தற்போதுதான் அவளுக்காக எடுத்துக் கொடுத்தான் பிரவீன். அந்த பிங்க் நிற கேரளா சாரி அவளுக்கு மிகப் பொருத்தமாகவே இருந்தது. அவன் கண்களாலேயே “சூப்பர்” என்பதைப் போல் கண் சிமிட்டிச் சொல்ல, வெட்கத்தில் கன்னம் சிவந்தாள் மது.

இது ஒருபுறம் என்றால், மறுபுறம் கேரளாவிலேயே பிறந்து, வளர்ந்த மயிலாய்த் தெரிந்தாள் அஞ்சலி. அந்த சாரியுடன் அவளது ஹேர்ஸ்டைலும், ஒப்பனையும் மலையாளத்துப் பெண்களைப் போலவே இருந்தது. அர்ஜூனோ அவளைக் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

மதுவின் திருமணத்தில் பட்டு சேலையில் பார்த்த போதே அவளைப் பார்த்துக்கொண்டிருந்தவன், இப்போது அழகே உருவாய் தன் கண் முன்னே நிற்கும் அவளைப் பார்த்த போது அவனுக்கு ஓடிச் சென்று அவளைப் பிடித்து “ரொம்ப அழகா இருக்கடி செல்லம்..” என்று அவளிடம் சொல்ல வேண்டும் போல் தோன்றியது.
அர்ஜூன் தன்னை விழுங்கும் படி பார்ப்பதை அஞ்சலி பார்த்தாலும், அதைக் காட்டிக்கொள்ளாமல் இருந்தாள். இவர்கள் இருவரும் அவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டிருக்க, ரவிக்கோ கடுப்பானது.

“டேய்.. இது எல்லாம் ரொம்ப ஓவர் டா. ஒரு பேச்சிலர வைச்சுட்டு நீங்க ரெண்டு பேரும் உங்க ஆளுங்கள ரசிக்கறது கொஞ்சம் அதிகமா இருக்கு.” என்று அர்ஜூனின் காதில் கிசுகிசுத்தான் ரவி.

அவனைப் பார்த்து முறைத்தவன், அடங்கி இரு என்பதைப் போல் செய்கை காட்டினான். அனைவரும் அந்த ஃப்ளாட்டைப் பூட்டி விட்டு சாவியை ரிஷப்ஷனில் கொடுத்துவிட்டு பிரவீனின் காரிலேயே செல்லலாம் என்று வந்தனர்.

பிரவீன் தனது டிரைவர் சீட்டில் அமர்ந்து கொள்ள, முன்னரே மது ஓடிச்சென்று முன் இருக்கையில் அமர்ந்து கொண்டாள். இப்போது அஞ்சலிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. எப்படி இருந்தாலும் தான் அர்ஜூன் பக்கத்தில் உட்கார்ந்தே ஆக வேண்டும் என்று மெல்ல காரின் அருகே தயங்கித் தயங்கி வந்து நின்றவளை,

மது, “ஏய்.. அஞ்சலி. ஏன் நிக்கற உள்ள வந்து உட்காரு. கிளம்பலாம்.” என்று சொல்ல, உள்ளே ஒரு ஜன்னல் ஓரமாய் அமர்ந்தாள் அஞ்சலி.

அதைப் பார்த்துக்கொண்டே வந்த அர்ஜூனும் தயங்கியவாறே நின்று கொண்டிருக்க, மது உள்ளே அமர்ந்துகொண்டே ரவியிடம் சைகை காட்டினாள். அப்போதே ரவி,

“டேய்.. ஏறுடா. டைம் ஆகுது. நீ உட்கார்றதுக்குள்ள, அங்க மேரேஜே முடிஞ்சிடும் போல இருக்கு.” என்று அவனை அதட்டியபடி உள்ளே தள்ள வேறு வழியில்லாமல் அவன் அஞ்சலியின் பக்கத்திலேயே உட்காரும்படி ஆனது.

நடுவில் உட்கார்ந்தாலும், சற்று தள்ளியே அமர்ந்தான் அர்ஜூன். அதைப் புரிந்தவளாய் அவளும் ஜன்னலின் ஓரமாய் அமர்ந்திருக்க, அதைப் பார்த்த ரவி வேண்டுமென்றே உள்ளே அமர்ந்தபடி,

“டேய்.. இது மூணு பேர் உட்கார்ற சீட் தானே, ஏன் இப்படி ஓரமா வந்து உட்கார்ந்திருக்க.? தள்ளி உட்காருடா. நான் உட்கார வேண்டாமா.?” என்று அவனை வேண்டுமென்றே தள்ள, அவன் அஞ்சலியின் பக்கமாய் சாய்ந்து விட்டான்.

இருவருக்கும் ஏதோ ஒரு மாதிரி ஆக, விலகினர். புடவையின் வாசமும், அவள் தலையில் வைத்திருக்கும் பூவின் வாசமும் மொத்தமாய் சேர்ந்துகொண்டு அர்ஜூனை மயக்கியது.
ரவி வேண்டுமென்றே பிடித்துத் தள்ளி விட்டாலும், அவளிடம் சாயும் போது ஏற்பட்ட நிகழ்வை இன்னொரு முறை வேண்டுமென்றே கேட்டது அவன் மனம். கிட்டத்தட்ட அஞ்சலிக்கும் அப்படித்தான்.

பேருந்தில் பயணம் செய்யும் போதாகட்டும், இப்போது காரில் செல்லும் போதாகட்டும் அவனுடைய நெருக்கம் அவளுக்கு ஏதோவொரு பாதுகாப்பான உணர்வையும், அதே போல் ஒரு மயக்க உணர்வையும் ஏற்படுத்தியதே உண்மை.

பின்னால் இவர்கள் செய்துகொண்டிருந்த கூத்தை முன்னே அமர்ந்தவாறு ரசித்தபடி சிரித்துக்கொண்டிருந்தார்கள் மதுவும், பிரவீனும். மது இவர்கள் இருவருக்கும் நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டத்தை ஏற்கனவே பிரவீனிடம் விளக்கியிருந்ததால் அவனும் அதை கண்டுகொள்ளாதது போலவே இருந்தான்.

கார் செல்லும் வழி மிகவும் மோசமானதாகவே இருந்தது. அனைத்தும் மண் சாலைகளாய் இருந்தன. கார் குலுங்கிக் குலுங்கி ரோட்டில் செல்ல அனைவரும் காரில் குலுங்கிக் கொண்டிருந்தனர்.

“என்னப்பா இது, வண்டி இந்தக் குலுங்கு குலுங்குது. இப்படி இருக்கு ரோடு.? இப்படியே குலுங்கிட்டே போனா நாம நாளைக்குத்தான் மேரேஜ்க்கே போவோம் போலிருக்கே.?” என்று அந்த நேரத்திலும் ரவி கேலியாகப் பேசிக்கொண்டிருக்க அனைவரும் சிரித்தனர்.

“இல்ல, இங்க ரோடு கொஞ்சம் மோசமானதா தான் இருக்கும். இங்க எதுவும் தார் ரோடு கிடையாது. மண் ரோடுதான். மழை வந்தா அப்படியே உள்ள இழுத்துக்கும். அதனால தான் அப்படியே விட்டிருக்காங்க. இதுவே மெயின் ரோட்டுக்குப் போனா, தார் ரோடா இருக்கும்.” என்றான் பிரவீன்.

இதில் பாவம், அர்ஜூன் மற்றும் அஞ்சலியின் நிலைமை தான் கொஞ்சம் மோசமாய் இருந்தது. ஒவ்வொரு முறை வண்டி குலுங்கும் போது, அஞ்சலி அர்ஜூனின் தொடையைப் பிடித்துக்கொண்டாள்.

குலுங்குவது நின்றதும் சட்டென்று கையை எடுத்துக்கொண்டாள். அதை அர்ஜூன் தவறாக நினைக்கவில்லை. மாறாக சந்தோஷப்பட்டான். ஒருமுறை எடுக்க நினைத்த கையைக் கூட அப்படியே பிடித்துக்கொண்டான்.

அவனிடமிருந்து தன் கைகளை விடுவிக்க நினைக்கும் போது, அவளை எடுக்க விடாமல் உடும்பாய் பிடித்தபடி இருந்தான் அர்ஜூன். இதை எதிர்பாராதவளாய் அஞ்சலி அர்ஜூனைப் பார்க்க, அவனோ முன்னே சாலையைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.

முன்பை விட அர்ஜூன் இப்போது சற்று நெருக்கமாய் அவளிடம் வந்து அமர்ந்துகொண்டதைப் போலொரு உணர்வில் என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே அமர்ந்திருந்தாள் அஞ்சலி.

முதலில், கைகளை விலக்க முயற்சித்தவள் பின் மெல்ல அப்படியே அவன் கைகளிடம் தன் கைகளை சரணடைத்தாள். அவனின் நெருக்கத்தையும் அவள் விலக்கவில்லை.
புதிதாய் இருந்தாலும், வேண்டும் என்று நினைத்த உணர்வை அடக்காமல் இருவரும் ஷாலினியின் திருமணம் நடக்கவிருக்கும் இடத்தை நோக்கி பயணித்தனர்.

(தொடரும்...)
 
Top