Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதிரையின் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் - Episode 48

Advertisement

Aathirai

Well-known member
Member
Episode 48

மதுவும், அஞ்சலியும் செய்துகொண்டிருக்கும் பிராஜக்ட் இன்னும் ஒரு வாரத்தில் முடிந்து விடும். அதன் பிறகு, அவர்கள் திரும்பவும் சென்னை வந்தாக வேண்டும்.

மதுவுக்காக மட்டும் பிரவீனே கம்பெனியில் பேசி அங்கேயே அவளது வேலையைத் தொடர அனுமதி பெற்றான். ஆனாலும், மது முதலில் அஞ்சலியின் பிரச்சினையை தீர்த்து வைத்து விட்டு, பிறகு வந்து திரும்பவும் வேலையில் சேர்வேன் என்று சொல்லிவிட்டாள்.

அவனுக்கும் அதுவே சரியென்று பட்டது. இதோ நாளை இருவரும் கிளம்பியாக வேண்டும். அனைத்தையும் பேக் செய்வதில் மும்முரமாக இருந்த அஞ்சலியிடம் வந்தாள் மது.

“அஞ்சலி பேக் பண்ணிட்டியா எல்லாத்தையும்.?” என்றாள் மது.

“ம்ம்.. பண்ணிட்டே இருக்கேன் மது. இன்னும் கொஞ்ச நேரத்துல முடிஞ்சுடும்.” என்றாள்.

“டின்னர் ஓவர். பிரவீன் நமக்காக வெயிட்டிங். நீயும் வந்தா மூணு பேரும் சாப்பிடலாம்.” என்றாள்.

“ஹே.. எனக்காக ஏன் எப்பவும் வெயிட் பண்றீங்க.? நான் சாப்டுக்கறேன் மது. இன்னும் கொஞ்சம் டைம் ஆகும். நீங்க ரெண்டு பேரும் சாப்டுட்டு போய் தூங்குங்க.” என்றவளை அமைதியாய் பார்த்துக்கொண்டிருந்தாள் மது.

ஒரு நிமிடம் பேக் செயவதை நிறுத்திவிட்டு அவளிடம் பேசினாள் அஞ்சலி.

“ஏன் மது, அப்படிப் பார்க்கற.?” என்றாள்.

“இல்ல, நீ ரொம்பக் கஷ்டப்பட்டு உன்னுடைய ஃபீலிங்கஸ்ஸ கண்ட்ரோல் பண்ணிட்டிருக்க.” என்றாள்.

“எதைப் பத்தி சொல்ற.?” என்றாள் தெரியாதவளாய்.

“நான் எதைப் பத்தி சொல்றேன்னு உனக்கு நிஜமா தெரியலையா.?” என்றாள் மது.

“ம்ஹூம்ம்..” என்று தலையாட்டினாள் அஞ்சலி.

“உன் லவ்வப் பத்தி தான் சொல்லிட்டிருக்கேன் அஞ்சலி. நீ இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கப் போற.? நீ கேட்ட ஒரு வருஷம் முடியப் போகுது. நீ போனதும் உங்கப்பா நிரஞ்சனுக்கு கழுத்த நீட்டுன்னு சொல்வாரு. நீ என்ன பண்ணுவ.?” என்றாள் மது ஆவேசமாய்.

“கழுத்த நீட்டித்தான் ஆகணும் மது. நான் பலி கொடுக்கற ஆடு தானே. நீட்டித்தான் ஆகணும். என்னோட விதி அப்படித்தான் எழுதியிருக்கு.” என்றாள் அஞ்சலி விரக்தியான சிரிப்புடன்.

“விதிய மதியால வெல்லலாம்னு சொல்வாங்க அஞ்சலி. உன்னால முடியும்னு நினைச்சா முடியும்.” என்றாள் மது.

“இப்போ என்னை என்ன பண்ணச் சொல்ற.?” என்றாள் அஞ்சலி.

“ஊருக்குப் போனதும், முதல்ல உங்க வீட்டுல விஷயத்தை சொல்லு. உங்கப்பா தாம் தூம்னு குதிச்சாலும் பரவால்ல. இல்லன்னா உன் லைஃப் அந்த நிரஞ்சன் கூட, ச்சே.. நினைச்சுப் பார்க்கவே முடியல. வேண்டாம் அஞ்சலி. அது நல்லா இருக்காது.” என்றாள் மது.

“எங்கப்பா குதிச்சா மட்டும் பரவால்ல மது. நெஞ்சு வலிக்குதுன்னு சொல்லி ஹாஸ்பிடலுக்கு போக வேண்டிய சிச்சுவேஷன் வந்துடும். எங்க அக்காவால ஏற்பட்ட பிரச்சினைக்கு நானே முற்றுப்புள்ளியா இருந்துட்டுப் போறேன். விடு.” என்றாள் திரும்பவும்.

“ஏய்.. பைத்தியம் மாதிரி உளறாத. நீ என்ன பெரிய தியாகின்னு நினைப்பா.? எதுக்கெடுத்தாலும் உன்னோட மாமாகிட்ட சொல்லுவியே. இப்போ சொல்ல வேண்டியது தான.?” என்றாள் மது எரிச்சலுடன்.

“ஹூம்ம்.. அது அநாவசியம் மது. எதுக்காக இதெல்லாம் பண்ணனும்.? அப்போ நான் கேட்டேன்னா அது என்னோட படிப்பு சம்பந்தப்பட்ட விஷயம். எனக்கு ரொம்பப் புடிச்ச விஷயம். அதனால அவர்கிட்ட பேசச் சொன்னேன். ஆனா, இதை எப்படி என்னால சொல்ல முடியும்.?” என்றாள் அஞ்சலி.

“ம்ம்.. படிப்புக்காக எந்த வாயால கேட்டியோ, அதே வாயால தான்.” என்று மது சொல்ல, அஞ்சலி சிரித்து விட்டாள்.

“சிரிக்காத அஞ்சலி. எனக்குக் கோபமா வருது. படிப்பு கூட ஒரு கட்டத்துக்கு மேல முடிஞ்சிடும். ஆனா, இது உன்னோட வாழ்க்கை. இதுல காம்ப்ரமைஸ் பண்ணி ஒரு பிரயோஜனமும் இல்ல. அன்னைக்கு எல்லார் முன்னாடியும் தைரியமா ஒரு வருஷம் வேலைக்குப் போகணும்னு கேட்டியே. வேலைக்காக பேசும் போது மட்டும் எங்க இருந்து அந்த தைரியம் வந்துச்சு உனக்கு.? அதே மாதிரி இதையும் சொல்றதுக்கு என்ன.?” என்றாள்.

“அப்போ, அம்மா கொஞ்சம் சப்போர்ட் பண்ணாங்க. அவங்க கொடுத்த தைரியத்துல தான் கேட்டேன் மது. அப்போ கூட எங்கப்பாவைப் பார்த்து நான் எவ்ளோ பயந்தேன் தெரியுமா.?” என்றாள்.

“எதுக்கு அஞ்சலி, இப்படி பயந்து சாகற.? அப்படி என்ன பயம் உனக்கு.?”

“ஹூம்ம்.. பயம். அது தான் என்னோட வீக்னெஸ்ஸே. என்ன பண்றது மது.? அது என் கூடவே பொறந்துடுச்சு. என்னை விட்டுப் போக மாட்டிங்குது.” என்றாள்.

அவளை முறைத்த மது, “என்ன ரஜினி டயலாக்கா.? இந்த வேண்டா வெட்டிப் பேச்ச விடு. நீ உன் வீட்டுல சொல்லப் போறியா, இல்லையா.?” என்றாள் மது தீர்க்கமாக.

“என்ன சொல்லணும்னு சொல்ற.?” என்றாள்.

“சும்மா, சும்மா தெரியாத மாதிரியே கேட்காத அஞ்சலி. நீயும், அர்ஜூனும் லவ் பண்ற விஷயத்தைப் பத்திதான் சொல்றேன்.” என்று மது சொன்னதும்,

“மது, நான் ஏற்கனவே சொன்னதுதான். இதைப் பத்தி என்கிட்ட பேசாதன்னு சொல்லிருக்கேன். நீ திரும்பவும் இதைப் பத்தி பேசினாலும், என்னோட பதில் எப்பவும் இதுதான். என்னால எதுவும் பண்ண முடியாது. நீ விட்டுடு மது. என்னோட லைஃப்ப நினைச்சு நீ ஏன் இவ்ளோ ஃபீல் பண்ற. நானே இப்போவெல்லாம் அதைப் பத்தி யோசிக்கறதையே விட்டுட்டேன்.” என்றாள்.

“முட்டாள் மாதிரி பேசாத அஞ்சலி. உனக்காகப் பேச எல்லாருமே இருக்கோம். அப்பறமும் நீ ஏன் பயப்படற.?” என்றாள்.

“ஆமா மது. நான் முட்டாள் தான். தைரியமில்லாத முட்டாள். இந்த முட்டாளுக்காக யாரும் பரிஞ்சு பேச வேண்டாம். விதி வழியாவே நான் போய்க்கறேன். நீங்க யாரும் அதை மாத்த முயற்சி செய்ய வேண்டாம்.” என்றாள் அழுதுகொண்டே.

அவள் அழுவதைப் பார்த்ததும், மதுவுக்கு என்னவோ போல் ஆனது. அவளை அப்படியே அணைத்து சமாதானம் செய்தாள்.

“இங்க பாரு அஞ்சலி. நீ எந்த அளவுக்கு தைரியமா இருக்கியோ அந்த அளவுக்கு உன்னோட லைஃப் நல்லா இருக்கும். சரியா இருக்கும். நீ பயந்துட்டே இருந்தா எல்லாமே தப்பாயிடும். ப்ளீஸ் அஞ்சலி நீ உன் அம்மாகிட்டயாவது சொல்லிப் பாரு. அவங்க அப்பாகிட்ட பேசுவாங்க தான.?” என்றாள் மது.

“ஹூம்ம்.. இந்த விஷயம் அம்மாக்கு ஏற்கனவே தெரியும் மது. அதே மாதிரி அர்ஜூனையும் அம்மாக்கு ரொம்பப் புடிச்சுப் போச்சு. அவங்களுக்கும் அர்ஜூன் தான் என்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசை இருக்கு. ஆனா, அவங்களாலயும் எதுவும் பண்ண முடியாது. ஏன்னா, அம்மா சொன்னாலும் அப்பா இதுவரைக்கும் எதுவும் கேட்டதில்ல. இதை மட்டும் சரின்னு சொல்லிடுவாரா.?” என்றாள்.

“ப்ச்.. என்ன தான் வழி இதுக்கு.? உன்னோட வாழ்க்கை நல்லா இருக்கணும். அதுவும் அர்ஜூன் கூட, நீ சந்தோஷமா வாழணும்னு எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு அஞ்சலி. அவன் ரொம்ப நல்ல பையன். அவன் இப்போ வரைக்கும் உன்னையே தான் நினைச்சிட்டிருக்கான் அஞ்சலி.” என்றாள் மது கவலையாக.

“நீ ஆசைப்பட்டு என்ன பிரயோஜனம் மது.? கடவுள் ஆசைப்படணுமே.? அதுக்கும் மேல எங்கப்பா மனசு வைக்கணுமே.? இதையெல்லாம் தாண்டி நானும், அர்ஜூனும் சேர்ந்துட்டோம்னா இந்த உலகத்துல என்னை விட சந்தோஷமான பொண்ணு யாருமே இருக்க முடியாது.” என்றாள் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தவாறே.

அவளையே பார்த்துக்கொண்டிருந்த மது, கீழே பிரவீன் அழைக்க சென்று விட்டாள். அஞ்சலி இன்னும் அங்கேயே நின்று அழுதுகொண்டிருந்தாள்.

அடுத்த நாள் இருவரையும் ஏர்போர்ட்டில் செண்ட் ஆஃப் செய்துவிட்டு வந்தான் பிரவீன். ஃப்ளைட்டில் ஏறியதுமே அஞ்சலி, மதுவிடம் ஒரு விஷயம் கேட்டாள்.

“உன்கிட்ட நேத்து ஒரு விஷயம் கேட்க மறந்துட்டேன் மது. அர்ஜூன் இன்னும் என்னை நினைச்சுட்டுதான் இருக்கான்னு உனக்கெப்படித் தெரியும்.?” என்றாள்.

“நானும், அர்ஜூனும் எப்பவுமே நல்ல ஃப்ரெண்ட்ஸ். இப்போ வரைக்கும் நான் அவன் கூட காண்டாக்ட்ல தான் இருக்கேன். உன்னை எப்பவுமே விசாரிச்சுட்டே தான் இருப்பான்.” என்று அவள் சொன்னதும், தன்னையறியாமல் அவள் மனம் அர்ஜூனுக்காக ஏங்கியதை தெரிந்தும் கட்டுப்படுத்த முயன்றாள் அஞ்சலி.

அது தெரியாமல் இருக்க, மதுவின் தோள்கள் மேல் சாய்ந்தபடி கண்களை மூடினாள். ஆனால், அது மதுவுக்கும் தெரியும் என்பதை அஞ்சலி அறியவில்லை.

இருவரும் நல்லபடியாக சென்னை வந்து சேர்ந்தனர். வெங்கடேசனும், பத்மாவும் ஏர்போர்ட்டில் வந்து பிக்-அப் செய்து கொண்டனர் இருவரையும்.

போகும் போது, அவர்கள் மூவரும் ஒருவரையொருவர் நன்றாக சிரித்தபடி பேசிக்கொண்டு வர, அஞ்சலி மட்டும் உம்மென்று இருந்தாள்.

வீட்டிற்க்கு வந்தவர்களுக்கு அன்றைய நாள் நன்றாக ஓய்வெடுக்கவும், அடுத்த நாள் அவர்களின் கம்பெனிக்குச் செல்லவும் சரியாக இருந்தது.

இதற்கிடையில், மது அர்ஜூனுக்கு போன் செய்து நேரில் சந்திக்க நினைத்தாள். அர்ஜூனும் சரியென்று சொல்ல, இருவரும் செம்மொழிப் பூங்காவில் சந்தித்தனர்.

அர்ஜூன் முதலிலேயே சென்று காத்திருக்க, மதுவோ அதையும், இதையும் சொல்லி அஞ்சலியை சமாளித்து விட்டு வந்தாள்.

அவள் வந்ததும், இருவரும் புன்னகையுடன் ஒருவருக்கொருவர் கைகளைக் குலுக்கிக் கொண்டனர். “எப்படி இருக்க மது.?” என்றான் அர்ஜூன்.

“ம்ம்.. நல்லா இருக்கேன் அர்ஜூன். நீ எப்படி இருக்க.?” என்று இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொள்ள, சிறிது நேர நடைக்குப் பிறகு ஓரிடத்தில் அமர்ந்தனர்.

“நீ என்ன பண்ணப் போற அர்ஜூன்.? இன்னும் ஒன் வீக்ல அஞ்சலி பெங்களூர் கிளம்பிடுவா. அவளுக்கு எப்ப வேணும்னாலும் கல்யாண ஏற்பாடு பண்ண அவங்க அப்பா காத்துட்டிருக்கார்.” என்றாள்.

“என்ன பண்ண முடியும் மது.? நானும், நிறைய யோசிச்சுட்டேன். அஞ்சலிகிட்ட பேசியும் பார்த்துட்டேன். அவ பிடி கொடுக்கலன்னா நான் என்ன செய்ய முடியும்.?” என்றான்.

“அவளால எதுவும் பண்ண முடியாது அர்ஜூன். அவளோட அப்பாவ நினைச்சு அவ ரொம்ப பயந்துக்கறா. எங்க இவளால திரும்பவும் அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுமோன்னு பயப்படறா. ஆனா, அவளும் இன்னமும் உன்னைத்தான் மனசுல நினைச்சுட்டு இருக்கா. அது மட்டும் எனக்கு நல்லாவே தெரியும்.” என்றாள் மது உறுதியாய்.

“நானும், அம்மாகிட்ட இந்த விஷயமா பேசினேன் மது. அம்மாக்கும் அஞ்சலி மேல விருப்பம் தான். ஆனா, அவளுக்கு நிச்சயம் ஆயிடுச்சுன்னு சொன்னதும், “அதெப்படி நீ நிச்சய்ம் ஆன பொண்ண விரும்ப முடியும்.? அவங்க வசதிக்கு தகுந்த மாதிரிதான் மாப்பிள்ளை பார்த்திருப்பாங்க. அவங்க வீடு எப்படி இருந்துச்சு.? பங்களா மாதிரி. ஆனா, நம்மளைப் பாரு, இருந்த சொந்த வீட்டையும், சொந்த ஊரையும் விட்டுட்டு இங்க வந்து பொழப்பு நடத்திட்டிருக்கோம். நம்மளை மாதிரி உள்ளவங்களுக்கெல்லாம் அவங்க பொண்ணக் குடுப்பாங்களா.? அதையும் நீ யோசிக்கணும்”னு சொல்லி என் வாயை அடைச்சிட்டாங்க.” என்றான் அர்ஜூன் பாவமாக.

“ஹூம்ம்.. அம்மா அவங்க பக்கம் இருக்கற விஷங்களை யோசிச்சுத்தான் அப்படி சொல்லியிருக்காங்க அர்ஜூன். அது அவங்களோட தப்பு இல்ல. ஆனா, நாமளும் அப்படியே யோசிக்க முடியாது. நாம ஏதாவது பண்ணித்தான் ஆகணும்.” என்றாள்.

“வேற என்னதான் வழி இருக்கு.?” என்று அர்ஜூன் கேட்க, அவனைப் பார்த்து ரகசியமாய்ச் சிரித்தாள் மது.

(தொடரும்...)
 
Nirmala vandhachu ???
Late ahh update potta gap la story feel kammiyahuthu.
Nalla flow la read panna innum best ahh irrukum.
Try pannunga pa All the best
❤❤❤
 
Last edited:

kandippaa try panren maa.
vera sila kathaikalla concentrate panrathaala thaan
continous ah update kodukka mudiyala. anyway care panni sonnathukkum,
padichathukkum thanks maa.. ? ? ? ?
 
Top