Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதிரையின் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் - Episode 49

Advertisement

Aathirai

Well-known member
Member
Episode 49

மது சொன்னதைப் போலவே ஒரே வாரத்தில் ரகுராம் அஞ்சலியை வரச் சொன்னார். இன்னும் இரண்டு வாராங்களில் திருமணம் என்ற சேதியையும் சொல்லியே வரச் சொன்னார்.

அவர் எப்பொழுது போன் செய்தாலும், அதிர்ச்சியான செய்தியே கிடைக்கும். அதில் அவருடைய கட்டாயமும் சேர்ந்தே இருக்கும் எனும் போது, அஞ்சலி இப்போது அதில் ஊறிப் போயிருந்தாள்.

இதை எதிர்பார்த்ததுதான் என்று எந்த ஒரு சலனமும் இல்லாமல், அவள் கிளம்பத் தயாரானாள். மதுவிடம் சொன்னாள்.

“அப்போ எல்லாத்துக்கும் நீ தயாரா அஞ்சலி. இப்பவும் நீ உன் முடிவ மாத்திக்க மாட்ட இல்ல.?” என்று கோபமாய் கேட்க,

“நீ எவ்ளோ முறை கோபப்பட்டு கேட்டாலும், என்னோட பதில் இதுதான் மது. நான் என் மனச கல்லாக்கிட்டு தான் சிங்கப்பூர்ல இருந்து வந்தேன். அதே மனசோட தான் கல்யாணமும் பண்ணிக்கப் போறேன். எங்கப்பா போன் பண்ணிட்டாரு. இனி எல்லாமே முடியப் போகுது. நான் இன்விடேஷன் அனுப்பறேன். எல்லாரும் ஃபேமிலியா வந்துடுங்க.” என்று உணர்ச்சியே இல்லாத குரலில் சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

வெங்கடேசன், பத்மாவிடமும் சொல்லிவிட்டு கேபை வரவழைத்து லக்கேஜை ஏற்றிக்கொண்டு ஆம்னி பஸ் ஸ்டேண்டுக்கு விரைந்தாள். கண்கள் முழுவதும் குளமாக நின்றன.

பொது இடத்தில் அழ விரும்பவில்லை. பஸ் ஏறி பெங்களூர் வந்து சேர்ந்தாள். அவளை அழைத்துப் போக வழக்கம் போல் மகேஷ் வந்து சேர்ந்தார்.

ஒரு வருடம் கழித்து பார்த்த சந்தோஷத்தில் அவளை ஒரு தந்தை ஸ்தானத்தில் அணைத்து வரவேற்றார் மகேஷ். அதை அவள் ஏற்றுக் கொண்டாலும், மனம் எந்த சந்தோஷத்தையும் ஏற்கவில்லை. அதை அவளது முகமே காட்டிக் கொடுத்தது.

“அஞ்சலி மா. ஏன், எப்போ பெங்களூர் வந்தாலும், சோகமாவே இருக்க.? ஒரு வருஷம் கழிச்சுப் பார்க்கறோம், கொஞ்சமாவது சந்தோஷம் உன் முகத்துல இருக்கா பாரு. இன்னும் இரண்டு வாரத்துல கல்யாணம். ஆனா, உன் முகத்துல கல்யாணக் கலையே இல்ல. என்ன பிரச்சினை டா.?” என்று அக்கறையுடன் காரை ஓட்டிக் கொண்டே கேட்டார் மகேஷ்.

“எதுவும் இல்ல மாமா. பஸ்ல வந்த டயர்ட் அவ்ளோதான்.” என்று பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

“சரி, நீ எதுவும் சொல்ல வேண்டாம். நானே கண்டுபிடிப்பேன். ஆனா, உனக்கு ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். உனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்துட்டிருக்கு” என்று கண்ணைச் சிமிட்டினார்.

அவர் அப்படி சொன்னதும், உதட்டோரம் புன்முறுவல் பூத்தவாறே மனதில் “என்ன பெரிதாய் இன்ப அதிர்ச்சி இருந்துவிடப் போகிறது.?” என்று நினைத்து அமைதியாய் இருந்தாள்.

வீடு வந்து சேர்ந்தார்கள். அனைவரும் அவளை சந்தோஷமாய் வரவேற்றனர். ஆனால், அவள் எதற்க்குமே பெரிதாய் பாவனை செய்யவில்லை.

தனது அறைக்குச் சென்று கதவைச் சாத்தியவள் தான். அப்படியே பெட்டில் பொத்தென குப்புற விழுந்தாள். தலையணைக்குள் தன் முகத்தைப் புதைத்து தன்னால் முடிந்தவரை அழுதாள். அப்படியே தூங்கியும் போனாள்.

வீட்டில் உள்ளவர்களும் அவளைத் தொந்தரவு செய்யவில்லை. நன்றாக ஓய்வெடுக்கட்டும் என்று விட்டுவிட்டார்கள். மதியம் கண் விழிக்கவே சிரமமாக இருந்தது. வயிற்றில் எலி சடுகுடுவென்று ஓடுவது போல் இருந்தது.

வருத்தமோ, சோகமோ அது இந்த வயிற்றுக்கு மட்டும் விதி விலக்கு. நேரத்துக்கு ஏதாவது ஒன்று கண்டிப்பாக சென்றே ஆக வேண்டும். இல்லை என்றால், கிள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கும்.

பொறுக்க முடியாமல் கீழே சென்றாள். ஓய்வெடுத்து நிற்க முடியாமல் வந்து நின்றவளைப் பார்த்தார் பானுமதி.

“அப்பா, ஒரு வழியா வந்துட்டியா அஞ்சலி மா. பசி வயித்தக் கிள்ளுச்சோ. இரு ஒரே நிமிஷம்.” என்றவர், ஒரு தட்டில் சூடாக சாப்பாடு போட்டு, குழம்பை ஊற்றிப் பிசைந்து, கூடவே அவளுக்குப் பிடித்த உருளைக்கிழங்கு பொறியலும் வைத்து அவளுக்கு அதை ஊட்டியும் விட்டார்.

பசி வேறு வயிற்றைக் கிள்ள, ஊட்டி விட்டதை அவசரமாய் சாப்பிட்டாள் அஞ்சலி. அதுவும் பானுமதி கையால் சாப்பிடுவது என்பது அவளுக்கு மேலும் சுவையாய் இருக்கும் என்பதால், அதிகமாகவே சாப்பிட்டாள்.

“ம்ம்.. அவ்ளோ பசியாடா.? இவ்ளோ வேகமா சாப்பிடுற.?” என்றார் பானுமதி.

“ம்ஹூம்ம்... இல்ல மா, ஒரு வருஷமா நானும், மதுவும் சமைச்சு சமைச்சு போரடிச்சுடுச்சு. எப்போ உன் கையால சமைச்சுத் தரத சாப்பிடலாம்னு இருந்தது. பசியும் கூடவே சேர்ந்துடுச்சு. அதனால தான் வேகமா சாப்பிடறேன்.” என்றாள் அஞ்சலி.

“என்ன இருந்தாலும், அம்மா கையால சாப்பிடறது தனி டேஸ்ட் தான் இல்ல அஞ்சலி.?” என்றபடியே வந்தார் மீனா.

“ஆமா அத்த. சரி, வருணும், பூஜாவும் எங்க ஆளையே காணோம்.? அவங்க இல்லாம வீடு ரொம்ப அமைதியா இருக்கு.” என்று சொல்ல,

பானுமதியும், மீனாவும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். இவர்கள் எதற்க்கு இப்படி சிரிக்கிறார்கள் என்று தெரியாமல் அவள் விழித்துக்கொண்டு நின்றதைப் பார்த்து, மீனா சொன்னாள்.

“அண்ணி, பாவம் அஞ்சலி. நாம அவகிட்ட சொல்லிடலாம்.” என்று புதிராய் திரும்பவும் சிரித்தாள்.

“ம்ம்.. ம்ம்.. சொல்லு.” என்றார் பானுமதி.

“அஞ்சலி, நம்ம வீட்டுல ஒரு பெரிய அதிசயம் நடந்துச்சு. ஸ்வேதா நம்ம வீட்டுக்கு வந்தா.” என்றாள் மீனா.

அதைக் கேட்டு அதிர்ந்து தான் போனாள் அஞ்சலி. “அக்கா எப்படி வந்தா.? அப்பாவுக்குத் தெரியாம வந்துட்டுப் போனாளா.?” என்றாள் அதிர்ச்சி விலகாமல்.

“ம்ஹூம்ம்.. அதுதான் இல்ல. உங்க அப்பா தான் அவளை வரச் சொல்லியிருந்தார். உன்னோட கல்யாணத்துக்கு அவ இல்லாம எப்படி.? அதனால சும்மா ஒரு ரெண்டு நாள் முன்னாடி அவ ஃபேமிலி மெம்பர்ஸோட வந்திருந்தா. அவங்க பெரிய ஃபேமிலியா, நிறைய பசங்க இருந்தாங்க. அவங்கெல்லாம் வருணுக்கும், பூஜாவுக்கும் ஃப்ரெண்ட்ஸ் ஆயிட்டாங்க. கூடவே கூட்டிட்டுப் போறோம்னு சொல்லி கூட்டிட்டுப் போயிட்டாங்க. உன்னோட கல்யாணத்தப்போ வந்துடுவாங்க.” என்று கூலாய் சொல்லிக் கொண்டிருந்தார் மீனா.

“ம்மா... என்ன மா நடக்குது.? அப்பா எப்படி அக்காவக் கூப்பிட்டார்.? அதுக்குள்ள சமாதானம் ஆயிட்டாரா.? ஏன், என்கிட்ட யாரும் ஒரு வார்த்தை கூட சொல்லல.” என்றாள் அஞ்சலி கோபமாக.

“அப்படி இல்ல அஞ்சலி. இன்னும் ஒரு சந்தோஷமான விஷயம் தெரியுமா.? உங்க அக்கா இப்போ கன்சிவ்வா இருக்கா. ஆறு மாசம். உன்னோட கல்யாணம் முடிஞ்ச கையோட அவளுக்கு வளைகாப்பு பண்ணனும்.” என்றார் பானுமதி.

ஒருவேளை இந்தக் காரணம் தெரிந்துதான் அப்பா சமாதானம் ஆனாரோ.? என்ற கேள்வி அவள் மனதில் ஓடியது.

“ஏய்.. அஞ்சலி என்ன யோசிச்சிட்டு இருக்க.?” என்று மீனா அவளை உலுக்கினார்.

“இல்ல, எதுவுமே தெரிஞ்சுக்காமயே எப்பவும் இருக்கேனேன்னு தோணுச்சு. அக்கா, என்கிட்ட கூட எதுவுமே சொல்லல.” என்று சொன்னாள் சலிப்புடன்.

“அப்படி இல்ல அஞ்சலி. உனக்கு ஒரு சஸ்பென்ஸா இருக்கட்டுமேன்னு தான் நாங்க சொல்லல. இல்லன்னா, சொல்லாம இருப்போமா.? ஆனா, நீ சிங்கப்பூர்ல இருக்கும் போது உனக்கு ரெண்டு, மூணு தடவை கூப்பிட்டதா ஸ்வேதா சொன்னாளே.?” என்றார் மீனா.

“என்னோட வொர்க் டைம்ல கூப்பிட்டிருப்பான்னு நினைக்கிறேன். அதுக்கப்பறம் நானும், கூப்பிடாம விட்டுட்டேன்.” என்றாள்.

“ம்ம்.. அப்பறம் அது உன் தப்பு தானே.?” என்றார் பானுமதி.

“சரி, அது இருக்கட்டும். இந்த விஷயம் அப்பாக்கு எப்படி தெரிஞ்சது.?” என்றாள்.

“நான் தான் சொன்னேன். முதல்ல முரண்டு பிடிச்சார். அப்பறம் நான் தான், அவளைக் கூப்பிட்டே ஆகணும். அஞ்சலி கல்யாணத்துல ஸ்வேதா இல்லாம எப்படின்னு சொல்லி கொஞ்சம் சமாதானப்படுத்தி கூப்பிட சொன்னேன். எப்படியோ அந்த மனுஷன் மனசு இறங்கி வர மூணு மாசம் ஆயிடுச்சு. அதனால தான் அவ உங்கப்பா வந்தப்போ வந்துட்டுப் போனா.” என்றார் பானுமதி.

“சரி, எப்படியோ அக்கா நல்லபடியா நம்ம கூட இருந்தா அதுவும் சந்தோஷம் தான்.” என்று மகிழ்ச்சியே இல்லாமல் சொல்லிவிட்டுச் சென்றாள்.

அவள் போவதையே பார்த்துக் கொண்டு நின்றனர் பானுமதியும், மீனாவும்.

இரவு இளையராஜாவின் சோகப் பாடல்களை தன் அலைபேசியில் ஒலிக்க விட்டு கேட்டுக் கொண்டிருந்தாள் அஞ்சலி.

அவளுக்கு அதை அந்த நேரத்தில் ஏனோ கேட்க வேண்டும் போல் இருந்தது. அதே போல், ஏதோவொரு மன ஆறுதலைத் தருவது போல் இருந்தது.

“நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா!!

என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா!!

கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்..

என்னோடு நானே பாடுகின்றேன்...”

திரும்பவும் பாடும் குரலோடு சேர்ந்து வந்த குரலைக் கேட்டு திரும்பினாள் அஞ்சலி.

மகேஷ் தான் அதோடு சேர்ந்து பாடிக்கொண்டே வந்தார். அவள் பெரிதாய் ஒன்றும் சொல்லாமல் திரும்பி அமர்ந்தாள்.

“ஆஹா.. என்ன அஞ்சலி மா. ரொம்ப கோபமா இருக்கியா.? பார்த்ததும் திரும்பி உட்கார்ந்துட்ட.?” என்றார்.

“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல மாமா. சும்மா பாட்டு கேட்டுட்டிருந்தேன். அவ்ளோ தான்.” என்றாள்.

“ஏன் ரொம்ப சோகப் பாட்டா கேட்டுட்டிருக்க.? இப்போ தான் நீ நல்ல நல்ல சந்தோஷமான பாட்டுக்கள் எல்லாம் கேட்கணும்.” என்றார்.

“ம்ம்.. ஆமா, மாமா. ஸ்வேதா அக்காவுக்கு குழந்தை பிறக்கப் போறத நினைச்சு சந்தோஷப்பட்டு பாட்டு கேட்கலாம் தான். ஆனா, எனக்குத் தோணல.” என்றாள்.

“ஓ.. தெரிஞ்சிடுச்சா.? அதானே, பொம்பளைங்க வாய் சும்மா இருக்காதே!! ஆமா அஞ்சலி மா. ஸ்வேதாக்கு இன்னும் மூணு, நாலு மாசத்துல குழந்தை பிறந்திடும். அவ ரெண்டு நாளைக்கு முன்னாடி வீட்டுக்கு வந்துட்டும் போனா. உன்கிட்ட சொல்லலாம்னா நீ சென்னைல வொர்க் பிஸில இருந்த.” என்று சமாளித்தார்.

அவரை ஒரு பார்வை பார்த்தவள், “ஆமா மாமா. நான் ரொம்ப பிஸியா இருந்தேன். அதனால தான் நீங்க யாருமே சொல்லல.” என்று சலித்தபடி பேசினாள்.

“சரி விடு. கோவிச்சுக்காத. அதெல்லாம் இருக்கட்டும். உன்னோட கல்யாண இன்விடேஷன் வந்துடுச்சு. நீ பார்த்தியா, இல்லையா.?” என்றார்.

“ஹூம்ம்.. கல்யாணப் பத்திரிக்கை. கல்யாணமே பிடிக்கலையாம். இதுல கல்யாணப் பத்திரிக்கை தான் குறைச்சல்” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

“அஞ்சலி மா, உன்னைத்தான் கேட்டுட்டிருக்கேன். பத்திரிக்கை எவ்ளோ சூப்பரா இருக்கு தெரியுமா.? மார்க்கெட்ல நியூ டிசைன், உடனே ஓகே பண்ணிட்டோம்.” என்றார்.

“கல்யாண மாப்பிள்ளை மாதிரியே, கல்யாணப் பத்திரிக்கையும் உங்க இஷ்டத்துக்கு தானே செலக்ட் பண்ணியிருப்பீங்க.? அதுல நான் பார்த்து சொல்றதுக்கு என்ன இருக்கு.? எல்லாத்தையும் நீங்களே பார்த்துக்கோங்க. கல்யாணத்தப்ப கழுத்த நீட்ட மட்டும் நான் ரெடி.” என்றாள் விரக்தியாய்.

“அப்படியெல்லாம் கழுத்த நீட்டினா, கழுத்து சுழுக்கிக்கும் அஞ்சலி மா. மாப்பிள்ளையே வலிக்காம பார்த்து தாலி கட்டிடுவார்.” என்று கேலி பேச, அதை ரசிக்கும் மனநிலையில் இல்லை அவள்.

“சரி விடு. உனக்காக இல்லைன்னாலும், எனக்காகவாது இந்தப் பத்திரிக்கைய வாங்கிப் பாரேன்.” என்று கெஞ்சும் பாஷையில் பேச,

கோபத்தில், “இப்போ என்ன இந்தப் பத்திரிக்கைய வாங்கிப் பார்க்கணுமா, உங்களுக்கு.? கொடுங்க.” என்று அவர் நீட்டிய பத்திரிக்கையைப் பிடுங்கிப் பார்த்தவளுக்கு அதிர்ச்சி.

அவள் கண்களை அவளால் நம்பமுடியவில்லை. அதே அதிர்ச்சியான பார்வையுடன் கண்களை அகல விரித்தபடி மகேஷைப் பார்த்தாள்.

ஆனால், அவரோ முகம் முழுக்க சந்தோஷத்துடன் அவளைப் பார்த்து ரகசியமாய் சிரித்துக் கொண்டிருந்தார்.

பத்திரிக்கையில்,

மணமகள்: அஞ்சலி மணமகன்: அர்ஜூன்

என்று போடப்பட்டிருந்தது.

(தொடரும்...)
 
Nirmala vandhachu ???
 
Top