Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆலம் விழுதாக ஆசைகள் - 13

Advertisement

sharanyaa satyanarayanan

Active member
Member
ஆலம் விழுதாக ஆசைகள் - 13

நிச்சயதார்த்தம் அன்று காலை,வீடே பரபரப்பாக இருக்க, சாந்தினி மட்டும் விட்டத்தை வெறித்து கொண்டிருந்தாள். அனைவரும் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை செய்து கொண்டிருக்க, சாந்தினி, துர்வா ,சாரா மூவரும் ஒருவரை நினைத்து மற்றவர் கவலையில் மூழ்கி இருந்தனர்.

சாந்தினி அறைக்கு வந்த கண்ணன் " அக்கா மூணு பேரையும் விஷ்வா அண்ணா கூப்புடுறாங்க ".
மூவரும் எதுவும் பேசிக்கொள்ளாமலே விஷ்வாவின் அறைக்கு சென்றனர். அவர்களை பார்த்த விஷ்வா " வந்ததுல இருந்து யார் மாப்பிளனு கேப்பிங்கனு பார்த்தேன், இந்த மூணு நாளும் உங்க முகமே சார் இல்ல, உங்களுக்கு என்ன பிரச்சனை ?".
சாரா," அண்ணா நீங்க இவ்வளோ அவசரமா எல்லாம் ஏற்பாடு பண்ணுவீங்கன்னு எதிர் பார்க்கல...." என்று இழுத்தவள் சாந்தினியை பார்க்க , அதை கவனித்த விஷ்வா " என்ன சாந்தினி நீ ஒன்னும் பேசமாட்டேங்குற?".
" ஒன்னும் இல்ல அண்ணா, நீங்க எது செஞ்சாலும் நல்லதுக்கு தான் இருக்கும் "என்றவளிடம் விஷ்வா " அப்பறம் ஏன் மாப்பிளையை பத்தி மூணு பேரும் கேட்கவே இல்லை?".
துர்வா ," இப்போ உனக்கு என்னடா பிரச்சனை ,நானும் பார்த்துகிட்டே இருக்கேன் சும்மா எங்களை எதாவது சொல்லிகிட்டே இருக்குற,மாப்பிள பார்த்துட்டேன், உங்களுக்கு நிச்சயம்னு தான சொன்ன, மாப்பிள்ளை புடிச்சுருக்கானா கேட்ட, இல்ல பிடிக்கலேன்னா கல்யாணத்த நிறுத்திருவியா ?" என்றவள் கேள்வி தன்னை சுட, அமைதியாகி போனான் விஷ்வா.
இதை கேட்ட மூன்று அன்னையரும் ," இது நல்ல இருக்கே நீங்க கேட்ட மாதிரி மாப்பிள்ளை அமைஞ்சா , கல்யாணம் பண்ணிக்கறோம்னு நீங்க தான சொன்னிங்க, இப்போ அவனை குத்தம் சொன்னா என்ன அர்த்தம்" என்றவர்கள் ஆளுக்கு ஒரு கவரை நீட்டி," இதுல மாப்பிள்ளையோட டீடைல்ஸ் இருக்கு பார்த்துக்கோங்க " என்றதோடு விஷ்வாவையும் அழைத்து சென்றுவிட்டனர்.

மாலை நெருங்கியதும் அனைவரும் தயாராக, மாப்பிள்ளை வீட்டில் இருந்து ஆட்கள் வர, அவர்களை வரவேற்று உபசரித்தனர் மூன்று குடும்பங்களும். அறையில் தயாராக இருந்த தோழிகள் தங்கள் அன்னையர் கொடுத்து சென்ற கவரை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.சாரா " இனியும் இப்படி உக்காந்து இருக்குறதுல ஒரு பிரோயோஜனமும் இல்ல, ஒன்னு கல்யாணம் வேண்டாம்னு சொல்லுங்க, இல்ல இதை ஏத்துக்க பழகிக்கோங்க ". துர்வா ," என்னால தான் லே எல்லாம்..." என்றவளை முறைத்த சாரா, சாந்தினியிடம் ," உன் முடிவு என்ன சாண்டி ?" என்றவளை தீர்க்கமாக பார்த்த சாந்தினி, அனைவருக்கு முன்னாள் வரவேற்பறை நோக்கி சென்றாள் , அவளை பின் தொடந்தனர் தோழிகள்.

வீட்டை நோட்டம் விட்டு கொண்டிருந்த பிறைசூடன் மனதில்," இவனுக்கு அறிவு புள்ள திங்க போய்டுச்சுபோல, அங்க அத்தனை சொத்துக்கும் ஒரே வாரிசு, கோடிஸ்வரனுங்க எல்லாம் போட்டி போட்டு பொண்ண குடுக்க தயாரா இருகாங்க, இவன் என்னடான்ன கூட இருக்குறவனுக்காக ஏதோ ஒரு கிராமத்துல இருக்குற பொண்ண கல்யாணம் பண்ண போறானாம் , எனக்குன்னு இப்படி ஒரு பிள்ளை " என்று மானசீகமாக தலையில் அடித்து கொண்டார் என்றாள் , ஹேமாவதியோ , " இந்த பிச்சைக்கார குடும்பத்துலயா பொண்ணு கட்டணும் , லேடீஸ் கிளப்பில் இனி தனக்கு எந்த மாதிரி அவமானம் ஏற்படுமோ " என்ற கவலையில் இருந்தார்.

தோழிகள் மூவரும் வர, அவர்களை பார்த்த தேவேந்திரன் , அனைவர்க்கும் அறிமுகம் செய்து வைத்தார். மூன்று தோழிகளும் நிமிராமல் அமர்ந்திருக்க, அங்கு அனைத்தையும் கூர்மையாக நோட்டம் விட்டு கொண்டிருந்தான் ரிஷ்வந். யாரையோ எதிர் பார்த்தவன்முகம் நேரம் செல்லவும் யோசனையாய் ராக்கி மற்றும் ராமை நோக்கினான். பின்னர் ஒரு முடிவு எடுத்தவனாக ,"எங்களுக்கு இந்த கல்யாணத்துல பரிபூரண சம்மதம் , மேற்கொண்டு பேசவேண்டியத நீங்க தான் சொல்லணும் " என்றவனை முறைத்த பிறைசூடன் " எங்களுக்கு பிசினஸ் பழக்கம் ஜாஸ்தி , இந்த மாதிரி சின்ன கிராமத்துல பொண்ணு எடுத்ததே எங்க லெவெலுக்கு கம்மி, அதனால கல்யாணத்த சென்னை மாதிரி பெரிய சிட்டில வைக்கணும், அதும் சீக்கிரமா வைக்கணும், எனக்கு இந்த மாதிரி சடங்குகளை விட, முக்கியமான வேலை இருக்கு, எல்லா வேலையும் நீங்களே பாத்துக்கோங்க, மேரேஜ் அன்னைக்கு நாங்க வந்துருவோம் " என்று திமிராய் பேசியவரை அங்கிருந்த விஷ்வா முதல் ராக்கி , ரிஷியும் வெறித்து பார்த்தனர். ஹேமாவதி தனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்றவாறு வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்.

விஷ்வா எதையோ பேச வாய் திறக்க, அதை உணர்ந்த ரிஷி," மன்னிச்சுருங்க , எங்க அப்பாக்கு கொஞ்சம் பிசினஸ் டென்ஷன், அவரும் அம்மாவும் மட்டும் மேரேஜ் அன்னைக்கு வருவாங்க , பட் நானும் என் நண்பர்களும் எங்க பக்கத்து வேலைகளை பார்த்துக்கறோம் " என்றவன் தன்னை பற்றியும் ராக்கி பற்றியும் அவர்களுக்கு அறிமுக படுத்தி கொண்டு , ராமின் பெற்றோரை காட்டி " ராமும் அவனோட பெற்றோரும் தான் தமிழ் வழக்கம் தெரிஞ்சவங்க, உங்க பக்கத்துக்கு ஊர்னு உங்களுக்கு தெரியும், நாங்க மூணு பேரும் சேந்து எங்க அப்பா கம்பெனி அண்ட் சென்னைல புது கான்ஸ்ட்ருக்ஷன் கம்பெனி ஓபன் பண்ணி , அதையும் பார்த்துக்க போறோம் " என்றவன் எல்லா விவரங்களையும் ராமின் பெற்றோரிடம் பேசி கொள்ளுமாறு கேட்டுக்கொண்டான்.

இந்த அணைத்து பேச்சுகளிலும் கவனம் கொள்ளாத மூவர் சாந்தினி & கோ . வேகமாக வெளியே வந்த சாந்தினியின் நடை எதிரே வந்த விசாலாட்சியை பார்த்ததும் தடை பட்டது," உங்கள தான் டா கூப்பிட வந்தேன், நீங்களே வந்துடீங்க " என்றவாறு மூவரையும் அழைத்து சென்றார் . அதை பற்றி யோசனையுடன் மூவரும் அமர்ந்திருந்தனர். சாந்தினி எதையோ பறிகொடுத்தது போல் , சாரா சாந்தினியை பற்றிய கவலையில். துர்வா மட்டுமே அனைத்தையும் கவனித்து கொண்டிருந்தாள்.

அணைத்து பேச்சு வார்த்தைகளும் முடிய, நிச்சய பத்திரிகை வாசித்து முடித்தனர். திருமணம் இன்னும் ஒரு மாதத்தில் முடிவு செய்திருந்தனர். பிறைசூடன் மண்டை வெடித்து விடும் அளவுக்கு கோவத்தை அடக்கி அமர்ந்திருந்தார். தான் இங்கு வந்த கதையை யோசித்தபடி நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.

பெண்கள் மாப்பிளைகளை கவனிக்கவில்லை என்பதை வெக்கம் என்று நினைத்த குடும்பத்தினர், மாப்பிளைகளும் பெண்களை பார்க்கவில்லை என்பதை கவனிக்க தவறினர். இதை அனைத்தையும் ஒரு ஏளன புன்னைகையுடன் பார்த்து கொண்டிருந்தாள் ராகவி.

ராகவியின் புன்னகைக்கு காரணம் என்ன? பிறைசூடனின் எண்ணம் நிறைவேறுமா இல்லை ரிஷியின் திட்டம் நிறைவேறுமா?

தொடரும்.......
 
Top