Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆலம் விழுதாக ஆசைகள் - 24

Advertisement

sharanyaa satyanarayanan

Active member
Member
ஆலம் விழுதாக ஆசைகள் - 24

பட்டாளத்திற்கு வேலைக்கு சென்ற பிறைசூடனின் கண்ணில் புலப்பட்டவர் தான் ராகவன். ராகவன் முன்னாள் ராணுவ வீரர் , இப்பொழுது கபூர் குரூப்ஸில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அவரின் நட்பை கொண்டு தானும் பட்டாளத்தை விட்டு வேறு வேலையில் சேர்ந்திட திட்டம் கொண்டார் பிறைசூடன்.

ராஜ் கபூர், கபூர் குழுமத்தின் எஜமானன். அவரது பாதுகாவலன் மற்றும் டிரைவர் தான் ராகவன். ராஜ் கபூரின் நம்பிக்கைக்கு பத்திரமானவன். ராகவன் பிறைசூடனை தனது முதலாளிக்கு பாதுகாவலன் வேலையில் சேர்த்துவிட்டான்.

கபூரின் போட்டி கம்பெனியான 'விவேக் குரூப்ஸ் ', சகோதரர்களான விவேக் ராம் மற்றும் விவேக் லக்ஷ்மன் , இருவரையும் சொத்து பிரச்சனை ஏற்படுத்தி பிரித்த ராஜ் கபூர், வீழ்ந்து கொண்டிருக்கும் தனது தொழிலை காப்பாற்ற விவேக் லக்ஷ்மணை தன்னுடன் பார்ட்னராக இணைத்து கொண்டார்.

வாரிசு இல்லாத விவேக் லக்ஷ்மன் , தனக்கு பிறகு தன் சொத்துக்களை, தனது நண்பன் ராஜ் கபூர் கவனித்து கொள்ள வேண்டும் என்று உயில் எழுத, அதே போல் ராஜ் கபூரும் தனக்கு பின் தனது சொத்துக்களை பராமரிக்கும் பொறுப்பை விவேக் லக்ஷ்மன் கவனித்து கொள்வார் என்று உயில் எழுதி கொண்டனர் .

அன்றும் அதே போல் , ராஜ் கபூர் தனது பாதுகாவலர்களுடன் , விவேக் சகோதரர்களின் முக்கிய பங்கு வகிக்கும், கட்டுமான தொழிலை சரி பங்காக பிரிக்க ரெஜிஸ்டர் அலுவலகம் வந்தார். வந்த இடத்தில அண்ணன் தம்பி இருவருக்கும் வாய் பேச்சு , கைகலப்பாக மாறியது.

அந்த கைகலப்பில் விவேக் ராமின் மகன், தன் சித்தப்பனை கத்தியால் குத்த வர, அவனை தடுத்து , அனைவரையும் அமைதிப்படுத்தி, விவேக் ராமின் மகனை கண்டித்து அனுப்பிவைத்தனர் காவல் துறையினர் .

இந்த சம்பவத்துக்கு பிறகு, ராஜ் கபூரின் ஆலோசனை படி , கமிஷனர் அலுவலகத்தில்,' தன் உயிருக்கு ஆபத்து தன் சகோதரன் மற்றும் அவர் குடும்பத்தால் வரும் என்றும், ஒரு வேலை தான் இறந்துவிட்டால், அதற்கு காரணம் தன சகோதரன் குடும்பம்' என்று எழுதி குடுத்துவிட்டு சென்றான்.

கமிஷனர் அலுவலகத்தை விட்டு வெளியேறிய விவேக் லக்ஷ்மன், தன்னுடைய குடவுன் செல்ல , அங்கு அவருக்காக காத்து கொண்டிருந்தார் ராஜ் கபூர்.

" பய்யா , நீ எப்போ வந்த , நான் காமிஸ்ஸின்ர் ஆபிஸ் போயிருந்தேன்" என்று தான் அங்கு சென்ற விவரங்களை சொன்னான்.

அனைத்தையும் கேட்ட ராஜ் கபூர்," முஜே மாஃப் கீஜியே பாய் ... நீ இருந்த உன் சொத்து என் கைக்கு வராது , என்னால என் தொழிலை இழக்க முடியாது... எனக்கு வேற வழி தெரியல " என்றவாறு விவேக் லக்ஷ்மணை கத்தியால் குத்தினான் ராஜ் கபூர் .

அதே நேரம் அங்கு உள்ளே வந்த ராகவன் அந்த கொலையை சற்றும் எதிர் பார்க்காமல் நிற்க , அவனை பார்த்த ராஜ் கபூர் , " என்ன டா அப்படி பாக்குற, பணக்காரங்க வாழ்க்கைல இதுலாம் சாதாரணம் ... இவன இப்போ இவன் அண்ணன் கொன்னுட்டதா மாத்திவிட்டு விவேக் குரூப்ஸ் முடக்கிருவேன் " என்று பேசிக்கொண்டே வந்தவன், " என் மேல சந்தேகம் வராம இருக்கணும்னா, நீ உயிர் தியாகம் பண்ணனும் " என்றபடி அவனை கொல்ல நெருங்கினான் ராஜ் கபூர், ராகவனுக்கு பின்புறம் பிறைசூடன் நிற்பதை பார்த்து ராஜ் கபூர் தயங்க... அவர் தயக்கம் தனக்கு இல்லை என்பதை போல் ராகவனை கத்தியால் குத்தி இருந்தான் பிறைசூடன்.

அவனை அதிர்ச்சியாக பார்த்த ராஜ் கபூரிடம்,பிறைசூடன்," சாப் இந்த கொலையும் நீங்கதான் பன்னீங்கன்னு போலீஸ்ல சொன்னா என்ன நடக்கும்னு தெரியுமா " என்றவன்... தன்னுடைய அலைபேசியில் அனைத்தையும் வீடியோ எடுத்திருந்தான் .

" இப்போ உனக்கு என்ன வேணும் " ராஜ் கபூர் .
" பெருசா என்ன கேக்க போறேன், வசதியான வழக்கை , நல்ல வேலை, நெறய சம்பளம் .... சும்மா வேணாம் என் மூளைய வெச்சு உன் தொழிலை யாரும் தொட முடியாத உயரத்துக்கு கொண்டு போறேன் " என்றவன் அன்றிலிருந்து ராஜ் கபூரின் நிழல் ஆகிப்போனான்.

இங்கு நடப்பதை அனைத்தையும் அணைக்க படாத அலைபேசி வழியாக கேட்டு கொண்டிருந்தாள் பத்மாவதி , ராகவனின் மனைவி.
---------------

ராஜ் கபூர் என்ற பெயர் தொழில் வட்டாரங்களில் மிகுதியாக பேசப்பட்டது, அதற்கு கரணம் பிறைசூடன் , அவனின் புத்திக்கூர்மையும், தந்திரத்தாலும் கபூர் குழுமத்தை உச்சிக்கு கொண்டு சென்றான். பல தொழில் அதிபர்கள் பிறைசூடனை விலைக்கு வாங்க முயல, அதை தடுக்க ராஜ் கபூர் தன் ஒரே மகள் ஹேமவதியை பிறைசூடனிற்கு மணமுடித்து பிறைசூடனை தக்கவைத்து கொண்டார்.
-----------

சிவா பிறந்து ஒருவருடம் சென்று பார்க்க வந்த பிறைசூடன் , அதன் பிறகு பணம் தேவை படும் போது மட்டுமே மகனையும் மனைவியையும் பார்க்க வந்தான். பிறகு விபத்தில் பலியான காவேரியின் தாய் தந்தையரின் இறுதி சடங்கிற்கு வந்தவன் சொத்துக்களின் விவரத்தை அறிந்து கொண்டு காவேரியின் பெயரில் உள்ளதை தன் பெயரில் மாற்றிக்கொண்டான்.

இவனை பற்றி அறிந்திருந்த பெரியவர்.. சில சொத்துக்களை தவிர்த்து அனைத்தையும் பேரனின் பெயரில் எழுதி வைத்திருந்தார். அதில் ஆத்திரம் கொண்ட பிறைசூடன் காவேரியிடம் சண்டையிட்டு சென்றவன் திரும்பவே இல்லை.
--------------////

தனது கணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அனைத்து காவல் துறையிலும் கம்பளைண்ட் எழுதி கொடுத்து பத்மாவதிக்கு வருடம் ஓடியதே தவிர, நீதி கிடைக்கவில்லை.

பொறுத்து பொறுத்து பார்த்த ராஜ் கபூர் , பிறைசூடனை அனுப்பி பத்மாவதியை கொலை செய்ய சொன்னான். வெளியே சென்று வீடு திரும்பிய பத்மாவதி வீடு திறந்திருப்பதை பார்த்து பெரிய மகன் ரூபன் தான் வந்துவிட்டான் என்று உள்ளே நுழைய அங்கு பிறைசூடனை எதிர் பார்க்கவில்லை.

" நீயா? ... நீ ஏன் இங்க வந்த?" பத்மாவதி .

" ம்ம்ம் உன் புருஷன் மேல உயிரா இருக்குறியாமே , அதான் அந்த உயிரை எடுத்துட்டு , அவன் கூட உன்ன சேர்த்து வெச்சுரலாம்னு வந்தேன் " பிறைசூடன் அவனது கைகளால் பத்மாதியை நெரித்தான்.

தூக்கில் மாட்ட கயிறை தேடியவன், வெளியே சத்தம் கேட்க அதை பார்க்க சென்றான், அவன் வெளியேறியதும் ஒரு காகிதத்தில் மூன்றே வார்த்தை எழுதி வைத்தாள் பத்மாவதி.

உள்ளே வந்த பிறைசூடன் பத்மாவதியின் கழுத்தில் கயிறை இருக்கி , துடிக்க துடிக்க கொன்று , அதை தற்கொலை போல் சித்தரித்து விட்டான்.

ஊரே தன் வீட்டில் கூடியிருப்பதை பார்த்த ரூபன் தன் தம்பியுடன் வீட்டிற்குள் நுழைய அங்கு தன் தாயின் நிலையை பார்த்து கதறி துடித்தான். அவள் அன்னையின் கைகளை பிடித்து அழுது கொண்டிருந்தவன் கைகளில் சிக்கிய அந்த காகிதத்தை பத்திரப்படுத்தி கொண்டான்.

----/------------------

காவேரி தன் கணவனின் செய்கைகளை புரிந்து கொள்ள முடியாமல் குழம்பி கொண்டிருந்தாள். பத்மாவதி ராகவன் இருவரையும் பிறைசூடன் முன்பு அறிமுக படுத்தி இருந்தான். ராகவன் இறப்பிற்கு பின் தன்னிடம் முகம் கொடுத்து பேசாத பத்மாவதி , நேற்று காய்கறி சந்தையில் வைத்து பேசும் போது ," சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத காவேரி, இவ்வளோ வெகுளியா இருந்தா , உன் புருஷன் உன் சொத்தோட சேத்து உன்னையும் முழுங்கிருவான் " என்றதோடு சென்றுவிட்டாள்.

கணவனிடம் விசாரிக்க வீடுவந்தவளிடம் சொத்து பேச்சை எடுத்து , சண்டை போட்டு மும்பை கிளம்பிவிட்டான் பிறைசூடான்.

மகன் பள்ளியில் இருந்து திரும்புவதற்குள் பத்மாவதியை பார்த்துவர கிளம்பிய காவேரிக்கு அதிர்ச்சியாக அவள் இறந்த செய்தியே கிடைத்தது.

உள்ளே சென்றவள் பார்த்தது, பத்மாவதியின் படத்திற்க்கு எதிரே வெறித்தபடி அமர்ந்திருக்கும் இளைஞனையும் , அவன் மடியில் அம்மா அம்மா என்று தூக்கத்தில் பிதற்றும் 5 வயது குழந்தையையும் தான்.

ரூபனை உலுக்கிய காவேரி, " சாப்பிட்டியா தம்பி " என்று கேட்டதும் , அதுவரை வெறித்து பார்த்தவன் தன் தம்பியை கட்டிக்கொண்டு கதறி துடித்தான்.

" அவனை சும்மா விடமாட்டேன்" என்ற வார்த்தையையே சொல்லிச்சொல்லி அழும் , அவனை கண்டு காவேரியின் கண்கள் கலங்கியது.

பிறகு மெல்ல சுயத்திற்கு வந்த ரூபன்," என் தம்பிய எதாவது ஆஸ்ரமத்துல சேத்து விடுறீங்களா?" என்றான்.

" ஏன் பா , நீ இருக்கியே , உன் தம்பிக்கு அம்மா தான் இல்ல அண்ணனாவது இருக்கட்டுமே " என்றார் காவேரி.

" அவன் என் கூட இருந்தா , எங்க அம்மாவோட கடைசி வாக்கை காப்பாத்த முடியாது " என்று கையில் இருக்கும் காகிதத்தை பார்த்தபடி கூறினான்.

அதை பார்த்த காவேரி கேள்வியாக ரூபனை பார்க்க, அந்த காகிதத்தில் " பிறைசூடன்... சும்மா விடாத - அம்மா " என்று எழுதி இருந்ததை பார்த்து அதிர்ந்து போனாள் காவேரி .

தொடரும்.....
 
அடப்பாவிங்களா?
ராஜ் கபூர், பிறைசூடன் இரண்டு பேரும் என்ன ஜென்மங்களோ?
பணம் சொத்துக்காக இன்னும் எத்தனை பேரை கொலை செய்வாங்களோ?
 
Last edited:
Top