Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆழம் விழுதாக ஆசைகள் -12

Advertisement

sharanyaa satyanarayanan

Active member
Member
ஆலம் விழுதாக ஆசைகள் - 12

ஆயிற்று,இன்றோடு ஊர் திருவிழா முடிந்து நான்கு மாதங்கள். விஷ்வாவும் , அணைத்து பெற்றோரும் தேடி தேடி அலைந்து பெண்களின் விருப்பம்போல் வரனும் முடிவு செய்தாயிற்று. நிச்சயத்திற்கான நாள் குறித்துவிட்டு , தங்கைகளை ஊருக்கு அழைக்க சென்னை வந்தான் விஷ்வா.

தங்கைகளின் இருப்பிடம் அடைந்தவன் , கதவை தட்ட, " இந்த நேரத்துல யாராக இருக்கும்?" என்று தானாக பேசியபடி கதவை திறந்த சாந்தினி, விஷ்வாவை எதிர் பார்க்கவில்லை. " அண்ணா, உள்ள வாங்க" என்றவளின் சத்தத்தில் வரவேற்பரை வந்தனர் தோழிகள். விஷ்வாவை பார்த்த துர்வா " என்ன திடிர்னு வந்துருக்க, வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?" என்று பதட்டப்பட, அதை தடுத்தவன் " எல்லாரும் நல்லா இருகாங்க , எப்படி நல்ல இல்லாம போவாங்க சொல்லு , அவங்க பொண்ணுங்களுக்கு கல்யாணம் நிச்சயம் அகா போகுதுல , அந்த குதூகலத்துல இருகாங்க " என்று சத்தமில்லாமல் குண்டை போட்டான் விஷ்வா.

அதைக்கேட்ட மூவரும் அதிர்ச்சியாக, முதலில் தெளிந்த சாரா சாந்தினியை தான் பார்த்தாள் . இதை கவனிக்காத விஷ்வா " அத சொல்லி உங்களையும் கையோட கூப்பிட்டு போக தான் நான் வந்தேன் , அப்படியே இங்க எல்லாருக்கும் சொல்ல வேண்டியிருக்குல , அதையும் முடிச்சுரலாம்னு வந்தேன்" என்றவன் பெண்களிடம் பதில் இல்லாமல் போக , அவர்களை பார்த்தான். அதை உணர்ந்த சாரா, " என்ன அண்ணா திடிர்னு சொல்லறீங்க ?" என்றவளுக்கு " நீங்க சொன்ன நிபந்தனைகளோட மாப்பிள்ள பார்த்தா சம்மதம்னு தான சொன்னிங்க " என்று கூர்மையாக கேட்டவனுக்கு ஆம் என்ற தலை உருட்டலே பதிலாக வந்தது.

அவர்களின் அமைதியை திடீர் முடிவால் வந்த அதிர்ச்சி என்று தவறாக எண்ணியவன் " இன்னைல இருந்து காலேஜ்க்கு ஒரு வாரம் லீவு சொல்லிடுங்க, இன்னைக்கு நயிட் ட்ரைன்ல டிக்கெட் போட்ருக்கேன் " என்றவன் கிளம்ப , அவனை தடுத்த சாரா " எங்க அண்ணா கிளம்பிட்டீங்க?". விஷ்வா " இல்லை மா , நான் என் ப்ரெண்ட்ஸா பாத்துட்டு அப்படியே, சொல்றவங்களுக்கு சொல்லிட்டு , நயிட் நேரா ஸ்டேஷன் வந்துடறேன் , நீங்களும் வந்துருங்க " என்று கூறிவிட்டு சென்றான்.

அவன் சென்றதும் தோழிகளை பார்த்த சாரா , துர்வாவிடம் காலேஜ்க்கு கால் பண்ணி சொல்ல சொன்னாள் . பின் சாந்தினியின் அருகில் அமர்ந்து அவள் தோலை தொட,விழுக்கென்று நிமிர்ந்தவள் கலங்கிய கண்களை மறைத்து, " எல்லாத்தையும் நீங்களே பேக் பண்ணிடுங்க லே, எனக்கு தல வழியா இருக்கு, நான் கொஞ்சம் படுக்கறேன் " என்று உள்ளே சென்றுவிட்டாள்.

சாராவை நோக்கி வந்த துர்வா , " அவ இப்படி இருக்குறதுக்கு நான் தான லே காரணம் ?" என்று கேட்க. " ச்சே லூசு , அதுலாம் இல்ல அவ வேற எதையோ யோசிச்சு கொழப்பிக்குறா " என்றபடி துர்வாவுடன் இன்றைய பயணத்திற்கு ஆயத்தமாக சென்றாள் .

விஷ்வாவோ நேரே சிவாவின் இல்லம் நோக்கி சென்றவனை வாசலிலே வரவேற்றான் ஆதி. " ஜி எப்போ ஊர்ல இருந்து வந்திங்க?" என்றவனிடம் " இப்போ தான் பாஸ் வரேன், சிஸ்டர்ஸ் பார்த்துட்டு நேரா இங்கே தான் வரேன் பேசியபடி உள்ளே சென்றனர் இருவரும்.

வீட்டிற்குள் வந்த ஆதி மற்றும் விஷ்வாவை பார்த்த சிவா, " மாப்ள எப்போடா வந்த? " ஆதியிடம் " நீ இவனை எங்கடா புடிச்ச ?" என்ற கேள்வியுடன் விஷ்வாவை அனைத்திருந்தான். " அம்மா யாரு வந்துருக்கானு பாருங்க?" என்று சத்தமிட்டபடி விஷ்வாவை அமர சொன்னான். காவேரியும் ருத்ரனும் வர நல விசாரிப்புகளுக்கு பின் விஷ்வா " அத்தை , தங்கச்சி மூணு பேருக்கும் நிச்சயம் வச்சுருகோம், கண்டிப்பா எல்லாரும் குடும்பத்தோட வரணும் " . இதை கேட்ட ஆதிக்கு அதிர்ச்சியில் நிற்க , சிவா பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தான்.

இதை பார்த்த காவேரி," அதுக்கென்ன சாமி நம்ம வீட்டு விஷேசம், நிச்சயமா வந்துருவோம், இருந்து சாப்பிட்டு போ கண்ணு " என்றவாறு சமையலறை நோக்கி சென்றார். அவர் சென்றதும் ஆதியை பார்த்த விஷ்வா " உங்க மூனு குடும்பத்தையும் கூப்பிட தான் வந்தேன், வீட்ல பெரியவங்க இருக்காங்களா ஜி ?" என்றவனை புரியாமல் பார்த்தான்.

சிவாவே " வாடா அப்பா பார்க்ல நடந்துட்டு இருப்பாங்க , அப்டியே அம்மா ஹரியையும் பாத்துரலாம் " என்று அழைத்து சென்றான்.
இதை எதையும் கவனிக்காத ஆதி 'தன்னை அவள் விரும்பவில்லையோ , என்னை மறந்து விட்டலா , தேவை இல்லாமல் காதலை வளர்த்து கொண்டேனா ' என்று தன்னையே நொந்து கொண்டிருந்தான்.

ஹரியையும் மற்றவர்களையும் அழைப்பு விடுத்த விஷ்வா , மற்ற சொந்தங்களுக்கு அழைப்பு விடுப்பதற்காக கிளம்ப, காவேரி சிவாவையும் உடன் போக சொன்னார். ஹரியும் ஆதியும் வேலையை தாங்கள் பார்த்து கொள்வதாக சொல்ல , விஷ்வாவுடன் கிளம்பினான் சிவா.

------------------

பிறைசூடன் தன் மகனின் பிடிவாதத்தால் பொறுமை இழந்து கொண்டிருந்தார். ரிஷி அதை எல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை , ராக்கிக்கு அழைத்து " பய்யா , ராம் கிட்ட பேசிட்டிங்களா , எல்லா பிளானும் பக்கா தானே?"
என்றவனுக்கு கிடைத்த பதிலில் உற்சாகமடைந்தவன் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

பல வருடங்களுக்கு பிறகு தமிழகம் செல்ல போகும் சந்தோஷம் கொஞ்சமும் இல்லாமல்," ஹேமா நீ அவன்ட கேட்க கூடாதா, என் பேச்சை அவன் கேட்கவே மாட்டேங்கறான் " என்று ஹிந்தியில் கர்ஜித்த பிறைசூடனிடம் ஹேமாவதி, " அவன் என்னிடம் முகம் கொடுத்து பேசுவது கூட இல்லை , நான் சொல்ல ஒன்றும் இல்லை " என்று முடித்து கொண்டார்.

ராக்கி ராமிடம்," என்ன பத்தி, ரிஷி பத்தி எல்லாம் சொல்லிட்டியா , எல்லாம் கரெக்டா நடக்கும்ல ?".
" நீங்களுமா எல்லாம் நல்லபடியா நடக்கும் , கவலை படாதீங்க, ஆனா எதுக்கும் ரெண்டு தடவ நல்லா யோசிச்சுகோங்க " என்றவனிடம் " ரிஷி சொன்ன நடத்தி காட்டுவான்னு உனக்கு தெரியாதா " என்ற சொல்லுடன் பேச்சை முடித்தான் ராக்கி.

இது எதுவும் அறியாது தங்கைகளுடன் மதுரை நோக்கி பயணம் மேற்கொண்டிருந்தான் விஷ்வா.
தோழிகள் தங்கள் கவலையில் மூழ்க, ஆதியோ ரணமாய் வலிக்கும் இதயத்தை மது கொண்டு ஆற்றி கொண்டிருந்தான். அவனை இழுத்து அறைந்த ஹரி " இப்போ குடிச்சு என்ன ஆக போகுது, அவங்கள்ட பேசினதும் விஷ்வாகிட்ட பொண்ணு கேட்க வேண்டியது தான ".
ஆதி," நிபந்தனை அது இதுன்னு கொலம்பிகிட்டே இருந்துட்டேன் " என்றவனிடம் சிவா " நிச்சயம் தான மச்சி , நடக்கட்டும்.... ஆனா கல்யாணம் நடக்காது, நடக்க விடமாட்டேன் " என்றவனை அதிர்ச்சியாய் பார்த்தனர் ஹரியும் ஆதியும்.

ஆதியின் காதல் கைகூடுமா? ரிஷியின் திட்டம் நிறைவேறுமா? சிவாவால் திருமணம் தடை படுமா??

தொடரும்.......
 
Nice
 
Top