Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆழம் விழுதாக ஆசைகள் -26

Advertisement

sharanyaa satyanarayanan

Active member
Member
ஆலம் விழுதாக ஆசைகள் - 26

" இப்போ இல்லேன்னாலும் அவன் சீக்கிரமே செத்துருவான் " என்றதும் புருவம் சுருக்கி ரிஷியை பார்த்த ராக்கி , " என்னடா பெத்த அப்பாவ , இப்படி பேசுறேன்னு பாக்கறியா , நீ சொன்னியே கபூர் குழுமத்தின் எதிர்காலம் குடிச்சே கெட போகுது, எனக்கு தெரிஞ்ச விதத்துல நான் பழிவாங்கிட்டு இருந்தேன்... இப்போ நீயே அவரை பழிவாங்குறதுக்கு நல்ல யோசனை சொல்லிருக்க, எனக்கும் இந்த நரகத்துல இருந்து விடுபட்டு நிம்மதி கிடைச்சுரும் " என்றவனை அதிர்ச்சியோடு பார்த்தான் ராக்கி .

" வாழ்க்கைல நாம ஆசைப்பட்டது கிடைக்காதுனு அனுபவத்துல தெரிஞ்சுகிட்டேன், என்னடா பணக்கார வீட்டு பையனுக்கு அப்படி என்ன ஆசைன்னு கேட்குறியா ? , பாசம் .... அம்மா மடில படுக்கணும், அம்மா கையால சாப்புடனும் , அப்பா கூட இருக்கனும்... இதுபோல சாதாரண ஆசை தான் .... ஆனா ஒவ்வொரு வருஷம் போக போக தான் தெரிஞ்சது அம்மாக்கும் அப்பாக்கும் வாரிசுன்னு ஒருத்தன் தேவை , அதுக்கு மட்டும் தான் நான் " என்றவன் தன் வாழ்க்கையை திருப்பி போட்ட அந்தநாளை சொல்ல தொடங்கினான்.

"கல்லூரி சேர்ந்த புதிது, பணத்திற்கும் நண்பர்களுக்கும் பஞ்சமே இல்லை, ராமை தவிர அனைவரும் காக்காய் கூட்டம் தான் .என்னிடம் உள்ள பணத்திற்காக என்னை சுற்றுபவர்கள். ஆனால் அப்பொழுது அது எனக்கு தேவையாக இருந்தது, வீட்டில் எனக்கு கிடைக்காத கவனிப்பு இவர்களுடன் இருக்கும் போது தெரிவதில்லை "

ரிஷி வீட்டில் இருப்பதே அதிசயம், ஆனால் அன்று நண்பனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இரவு வர வெகுநேரம் ஆனதால் கல்லூரிக்கு விடுப்பு எடுத்துவிட்டு உறங்கி கொண்டிருந்தான். பிறைசூடனுக்கும் ஹேமாவதிக்கும் ரிஷி எப்போது வருவான் போவான் என்பது தெரியாது, தெரிந்துகொள்ள விரும்பவும் இல்லை. வெகுநேரம் கழித்து விழித்த ரிஷியின் காதுகளில் ஏதோ சத்தம் கேட்க , எழுந்து தன் அரை பால்கனி வழி எட்டி பார்த்தான்.

வெளியே வாட்ச்மேனிடம் ஒரு அம்மாவும் உடன் ஒரு சிறுவனும் ஏதோ விவாதித்து கொண்டிருந்தனர். இதை ரிஷி மட்டும் அல்ல பிறைசூடன் மற்றும் ஹேமாவதியும் பார்த்து கொண்டுதான் இருந்தனர்.

என்ன என்று விசாரிக்க செல்லலாம் என்று ரிஷியின் எண்ணத்தை தடை செய்தது ஹேமாவதியின் குரல்," அவங்கள உள்ள விடு " என்றதும் அவர்கள் மூவரும் ஹேமாவதியின் முன் நின்றனர்.

அந்த பெரியவர் ஹேமாவதியிடம் , " வணக்கம், என் பேரு ...." என்றவரை இடைமறித்த ஹேமாவதி ," காவேரி, சொந்த ஊரு மதுரை, ஒரு பையன் " என்றதும் குளிர்ந்து போனார் காவேரி,ஆனால் ஹேமாவதியின் குரலில் இருந்த எள்ளலை சிவா கவனித்து விட்டான்.

" உன் வரலாறை சொல்லிட்டேனா , இப்போ என் வரலாறை கேளு, நான் ஹேமாவதி, கபூர் குழுமத்தின் ஏக வாரிசு, ஆனா இது உனக்கு தேவை இல்லாதது , உனக்கு தெரியவேண்டியது என் புருஷன் யாருன்னு தான்"என்றபடி , உள்ளே பார்க்க... காவேரியும் அவர் பார்த்த திசையில் பார்க்க... அங்கு காவேரியை ஏளனத்துடன் பார்த்து கொண்டிருந்தான் பிறைசூடன்.

" எப்போ உனக்கு அறிவு வந்து நீ கண்டுபுடிப்பனு காத்துட்டு இருந்தேன், இத கண்டுபுடிக்கவே உனக்கு 20 வருஷம் ஆகிருக்கு" என்ற பிறைசூடனோடு ஹேமாவதியும் இனைந்து நகைத்தனர்.

" என்னடா வித்தியாசமா பேசுறேன்னு பாக்குறியா , இதான் நான், உண்மையான பிறைசூடன், வாழ்க்கைக்கு காதல் மட்டும் போதாது காவேரி,காசு வேணும், உன்ன காதலிக்குறதா சொன்னதே உன் சொத்துக்கு தான் , நீ ஏமாளி , ஆனா உன் அப்பன் கடைசிவரை என்ன நம்பாம, உன் புள்ளைக்கு சொத்தை எழுதி வெச்சுட்டான்" என்று தன் மனதை காவேரிக்கு காட்டிக்கொண்டிருந்தான் பிறைசூடன்.

" ஆனா பாரு, என் ஆசை என்ன இவளோ பெரிய சாம்ராஜ்யத்துக்கு சொந்தம் ஆக்கியிருக்கு , இவளோட சொத்து தான் இது, ஆனா இந்த சொத்தை இவளோ பெரிய சாம்ராஜ்யமா மாத்துனது நான் " என்று பெருமையாக கூறியவன் " எப்படினு பாக்குறியா , அதுவும் உன்னோட முட்டாள் தனத்தால தான், உங்கிட்ட வாங்குன பணமும்,என் மூளையும் , நொடிச்சு போக இருந்த, இந்த கம்பெனிய இவளோ பெருசா உருவாக்குனேன் " என்று கூறி சிரித்தான்.

காவேரி தன் முகத்தை நிமிர்த்தக்கூட முடியாமல் கூனி குறுகி போய் நின்றாள் . காதல் பாசம் என்று கண்மூடி தனமான அன்பு தன்னை இந்த நிலைக்கு கொண்டு வந்ததை நினைத்து நெஞ்சடைத்து நின்றாள்.

இருந்தும் அவளுக்கு தெரிய வேண்டியது ஒன்று இருந்தது,நேராக பிறைசூடனை பார்த்தவள்," எப்போ இது எல்லாம் நடந்தது?" என்று அவனின் துரோகத்தை சொல்லமுடியாமல் கேட்டாள் .

" ஓஹ் .... எப்போ எங்க கல்யாணம் ஆச்சுன்னு கேக்குறியா ?ஏன் நீ தான் முதல் மனைவின்னு கோர்ட்ல கேஸ் போட போறியா ?" என்று இளக்காரமாக கேட்டல் ஹேமாவதி.

" போடு போடு , உன் மகன் பிறந்துருக்கும் போது தான் எங்களுக்கு கல்யானமாச்சு , நீ கேஸ் போட்டாலும் ஒன்னும் ஆகாது , இதோ கூட ஒரு அநாதை கழுதைய வெச்சுருக்கியே, இது உனக்கு பிறந்ததுனு சாட்சியோட நிரூபிச்சு, எவனையாது புடிச்சு உன் கள்ளக்காதல்னு சொல்லி உன்ன நாறடிச்சுருவேன் " என்று பெண்குலத்துக்கே களங்கமாய் ஹேமாவதி நின்றாள்.

இதை எதையும் மேலும் கேட்கும் அளவிற்கு காவேரிக்கு திடம் இல்லாமல், தன் 20 வருட வாழ்க்கை வெறும் கானல் நீர் என்பது முகத்தில் அறைய, குனிந்த தசலையோடு வெளியேற முயன்றாள்.

அவளை தடுத்த பிறைசூடன், " உன் மகன வேணா என்கிட்ட வேளைக்கு அனுப்பு, வீட்டு வேலை செய்ய ஆள் வேணும், உனக்கும் சோத்துக்கு வழி கிடைச்ச மாதிரி இருக்கும் " என்றவனை கண்ணில் வெறியோடு ஏறிட்டாள் காவேரி.

அதை பார்த்த ஹேமாவதி," என்னடா மகன்னு பாசம் இல்லாம பேசுறாரேன்னு வறுத்த படாத காவேரி, பிறைசூடனுக்கும் இந்த கபூர் குழுமத்துக்கு ஒரே வாரிசு என் மூலமா இருக்கு, இது மாதிரி ஒருநாள் அவருக்கு முன்னாடி வந்து புள்ள பாசத்தை காட்டி நீ கூப்பிட்டு போயிரக்கூடாதுனு , விருப்பமே இல்லேன்னாலும் ஒரு வாரிசை உருவாக்கிக்கிட்டேன் " என்று ஏதோ தொழில் சம்மந்தமாக முடிவெடுப்பது போல் கூறினாள் ஹேமாவதி.

தன்னை அவமதித்ததை பொறுத்து கொண்ட காவேரியினால் தன் மகனை பேசும் போது பொறுக்க முடியாமல்," நான் முட்டாள் தான் , ஆனா என் பிள்ளையை உன்கிட்ட பிச்சை எடுக்க விடுற அளவுக்கு நான் மானங்கெட்டவ இல்ல, இன்னைக்கு இல்ல என்னைக்குமே நானோ என் பையனோ உன் திசை பக்கம் கூட வரமாட்டோம், என் வம்சத்துக்கே குடுத்து தான் பழக்கம் , உனக்கு நான் குடுத்த பணம் உனக்கு போட்ட பிச்சையா இருக்கட்டும்" என்ற சொல்லோடு வெளியேறிவிட்டால் காவேரி.

இவை அனைத்தையும் கேட்டு கொண்டிருந்த ரிஷிக்கு தன் வாழ்க்கை ஒரு அப்பாவி பெண்மணியின் வாழ்க்கையில் கட்டப்பட்ட பாவ கோட்டை என்பது புரிய வெறுத்துவிட்டான். தன் பிறப்பும் அந்த பாவத்தின் தொடர்ச்சி என்பதை நினைக்க நினைக்க மண்டை வெடிப்பதுபோல் வலிக்க தொடங்கியது. பிறகு என்ன நடந்தது எப்படி தன் அறைக்கு வந்தான் என்று அவனுக்கே தெரியாது.

தொடரும்......
 
மிகவும் அருமையான பதிவு,
ஷரண்யா சத்யநாராயணன்

அச்சோ
ரிஷி ரொம்ப பாவம்
பிறைசூடனை கண்டந்துண்டமா வெட்டணும்
கூடவே ஹேமாவதியையும் சேர்த்து வெட்டணும்
 
Last edited:
Top