Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இசையின்றி என்னாவேன் 12

TNWContestWriter099

Well-known member
Member
Thanks for your love and support ❤ ✨.. Share your thoughts in comments section and here is the next episode..


இசையின்றி என்னாவேன் 12

காலேஜ் மரத்தடியில் இருந்த பெஞ்சில் உட்கார்ந்து எழில் போனை நோண்டிக் கொண்டிருக்க அவன் அருகே புத்தகத்தை திறந்தபடி உட்கார்ந்திருந்த தமிழோ அவன் எதிரே ஜோடி ஜோடியாக உற்கார்ந்திருந்த காதலர்களை கடுப்பாக பார்த்துக் கொண்டிருந்தான்.


"ஹம்.. எல்லாரும் எப்படி ஜோடி ஜோடியா உட்கார்ந்திருக்கானுங்க பாரு.. என் நேரம் நான் உங்கூட உட்கார்ந்திட்டிருக்கேன்.." என தமிழ் சலிப்பாக புலம்ப கடுப்பான எழிலோ, "இத பாரு நாயே.. எனக்கு மட்டும் என்ன ஆசையா உன்கூட உட்கார்திருக்கனும் னு?.. ஒழுங்கா படிக்கிற வேலைய பாரு டா" என்றான்.

"டேய் மச்சி எனக்கும் ரொம்ப நாளா ஒரு சந்தேகம்.. " என தமிழ் இழுக்க அவனை என்ன என்பதாக பார்த்தான் எழில்.

"அது.. நம்ம விஜய் தேவர்கொண்டா.. அதர்வா ரேஞ்சுக்கு இல்லாட்டியும் .. ஏதோ நம்மளும் ஒரு மாறி சுமாரா அட்லீஸ்ட் பாக்குற மாதிரி தானே இருக்கோம்.. நம்மள ஏன் டா ஒரு புள்ளையும் க்ரஷ்னு சொல்ல மாட்டிங்கிது..?"

"அது சோ சிம்பிள் டா.. இப்போ நீ ஒரு பொண்ணா இருக்கனு வெச்சுக்கோயேன்... நீ உன்ன மாதிரி ஒரு பையன லவ் பண்ணுவியா? " என எழில் கேட்க உடனே முகத்தை சுழித்தவன், "ம்ம் ச்சீ ச்சீ மாட்டேன்.. மாட்டேன்.. அந்த தப்ப மட்டும் பண்ணவே மாட்டேன்" என்றான் அவசரமாக.

"ம்ம்.. அவ்ளோ தான். அப்பறம் நீ எப்படி மத்த பொண்ணுங்க நம்மள க்ரஷ்னு சொல்லலனு ஃபீல் பண்ணலாம்?"

"ம்ம் கரெக்ட் தான்.. " என்றவன் "அதான் இந்த இசைக்கு நம்ம மேல எல்லாம் க்ரஷ் வர மாட்டிங்கிதோ.."என மனதில் நினைத்தான்.

"டேய் எரும.. ஏதோ இந்த செம்லயே எல்லா பேப்பரையும் கிளியர் பண்ண போறேன்.. கேம்பஸ் ல பிளேஸ் ஆக போறேன்னு வாய் பேசுன.. இப்போ என்னடான்னா இங்க ஜோடியா உட்காந்திருக்கிறவங்கள பார்த்து புலம்பீட்டு இருக்கே?.." என்ற எழிலின் கேள்விக்கு பதில் சொல்லாதவன்,
"அது .. அது.. இங்க ஓரே டிஸ்டர்பன்ஸா இருக்கு.. நான் வேற இடத்தில போய் படிக்கிறேன்" என்று புக்கை தூக்கிக் கொண்டு கேண்டீனுக்கு சென்றான்.

"படிக்கிறேன் படிக்கிறேன்னு நாய் எங்க போகுது பாரு.." என்ற எழிலும் தமிழின் பின்னே கேண்டீனுக்கு‌ சென்றான்.

கேண்டீனில் ஆள் நடமாட்டம் இல்லாத ஓரமாக சென்று அமரந்தவன் படிக்க தொடங்க படிப்பு ஏறவில்லை மாறாக பசி தான் வந்தது. முயன்று தன்னை கட்டுப்பத்திக் கொண்டு புத்தகத்தில் கவனத்தை செலுத்தினான் ஆனால் ஒன்றும் புரிந்த பாடு இல்லை. எப்படி புரியும்? ஃபர்ஸ்ட் செமஸ்டர் பேப்பரை அஞ்சாவது செமஸ்டர்ல படிச்சா எப்படி புரியும்?

புத்தகத்தை திறந்தபடி உட்கார்ந்திருந்தவன் எதிரே ஆள் நடமாட்டத்தில் நிமிர்ந்து பார்க்க இசை தான் கையில் இரண்டு ஜூஸ் உடன் நின்றிருந்தாள்.

தமிழ் அவளை பார்த்து புன்னகைக்க பதிலுக்கு புன்னகைத்தவள் ஒரு ஜூஸை அவன் கையில் கொடுத்துவிட்டு, "என்ன சீனியர் பிரேக் டைம்ல லாம் படிக்கிறீங்க?" என்றபடி அவன் எதிரே அமரந்தாள்.

"அது அடுத்த மாசம் செமஸ்டர் வருதுல இசை.. அதான் அரியர்லாம் கிளியர் பண்ணனும். இல்ல கேம்பஸ் இன்ரெட்வியூவ் அன்டென்ட் பண்ண முடியாது..".

"ஓஓ சரி சீனியர்.. நீங்க படிங்க.." என்றவள் அவனை தொந்தரவு செய்யாமல் போனை நோண்டிக் கொண்டிருக்க, "மலர் எங்க?" என கேட்டான் தமிழ்.

"அவ கட்லெட் தான் வாங்கியே தீருவேன்னு.. அங்க கவுண்டர்லயே நின்னுட்டு இருக்கா.." என்றவள் "நீங்க வெட்டி கதை பேசாம படிங்க சீனியர்.." என அவனை அதட்ட, "இவ எங்க அப்பன விட படி படினு டார்ச்சர் விடுறாளே" என மனதில் நினைத்தவன் "அட இரு மா.. ஜூஸ் குடிச்சிக்கிறேன்" என அவள் குடுத்த ஜூஸை குடித்தான்.

கேண்டீன் வந்த எழில், "இது தான் நீ படிக்கிற லட்சணமா..?" என்றவன் தமிழ் மிச்சம் வச்சிருந்த ஜூஸை பிடிங்க குடிக்க தமிழ் அவனை முறைத்தான்.

"ரொம்ப முறைக்காத படி..படிச்சு அரியர கிளியர் பண்ற வழிய பாரு.." என்றவன் இசையுடன் பேசிக் கொண்டே இருக்க அது பொருக்காதவனோ... "இப்படி இரண்டு பேரும் பேசீட்டே இருந்தா நான் எப்படி படிக்கிறதாம்..?" என கேட்க இருவரும் அமைதியாகினர்.

தமிழ் மீண்டும் பாடத்தில் கவனம் செலுத்தி படிக்க முயல ஒன்றுமே புரியாதவன் தலையில் கை வைத்தபடி அமர்ந்து விட்டான்.

அவன் தலையில் கை வைத்து அமரந்திருப்பதை பார்த்தவள், "என்னாச்சு சீனியர்? ஏன் இப்படி உட்கார்ந்திருக்கீங்க?" என கேட்க "ஒன்னுமே புரியல இசை.." என்றான் சலிப்பாக.

"எழில் அண்ணா அப்போ நீங்க சொல்லி தர வேண்டியது தானே.." என்ற இசையை அதிர்ச்சியாக பார்த்தவன், "ஹே இசை.. அது ஃபர்ஸ்ட் செமஸ்டர் பேப்பர்.. இப்போ அது ஒன்னுமே எனக்கு நியாபகம் இருக்காது" என்றான்.

இசைக்கு தமிழை பார்க்க கஷ்டமாக இருந்தது.

"சீனியர் நீங்க வேணா வேற ஃபிரண்ட்ஸ் யாருகிட்டயாவது கேட்டுப் பாக்கலாம்ல?"

"ம்ச்.. இல்ல இசை இவன தவர யாரும் அவ்ளோ கிளோஸ் இல்ல.. இந்த டாப்பர் பசங்க நம்ம கூட பேசவே மாட்டானுங்க.. மத்தவனுங்க நம்மல மாதிரி தான் எக்கச்சக்க அரியர் வச்சிருப்பானுங்க .."

"ஓஓ.. அப்போ கேர்ள்ஸ் கிட்ட கேளுங்க.."

"ம்ச் நான் பசங்களே மதிக்க மாட்டானுங்கனு சொல்றேன் இதுல பொண்ணுங்க வேறையா.. " என்றான் அலுப்பாக

"இல்ல சீனியர்.. நீங்க நல்லா யோசிச்சு பாருங்க.. யாராவது இருப்பாங்க.. படிக்கிறதுக்கு யாராவது ஹெல்ப் பண்ணாம இருப்பாங்களா?.." என இவள் கேட்க அவன் பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.
அதுவே இதில் அவனுக்கு உடன்பாடு இல்லை என காட்ட, "ஏன் சீனியர் அவங்கெல்லாம் உங்கள குறைவா நினைப்பாங்கனு யோசிக்கிறீங்களா.?" என அவனை சரியாக கணித்து கேட்டாள் இசை.

அவள் சரியாக கணித்ததை நினைத்து மனதில் ஆச்சிரியப்பட்டவன் பதில் ஏதும் சொல்லவில்லை. அதை வைத்தே அவன் மனதில் இருப்பதை அறிந்து கொண்டவள், "அப்போ நீங்க அவங்கெல்லாம் உங்கள குறைவா நினைப்பாங்கனு தான் அவங்க கிட்ட கேட்க கூச்சப் படுறீங்க.. தயக்கப்படுறீங்க.. கரெக்ட்டா.." என இசை அவன் முகம் பார்க்க இம்முறை ஆமோதிப்பாய் தலையை மட்டும் ஆட்டினான்.

"சீனியர் இங்க எல்லாருக்கும் எல்லாமே தெரியும் எல்லாமே வரும்னு சொல்ல முடியாது.. அது தெரியனும்ங்கிற அவசியம் கூட இல்ல. அதே மாதிரி எல்லாரும் உங்கள குறைவா நினைக்க போறது இல்ல.. சோ நல்லா யோசிச்சு பாருங்க கண்டிப்பா அப்படி நினைக்காதவங்க யாராவது இருப்பாங்க.." என்று இசை சொல்ல சரியாக பெல் அடித்தது. இருக்கையில் இருந்து எழுந்தவள், "நமக்கு தெரியாதத தெரிஞ்சுக்க நினைக்கிறது ஒன்னும் அவ்வளவு கூச்சப்பட வேண்டிய விஷயம் இல்ல சீனியர்.. சோ மத்தவங்க கிட்ட கேட்கிறதுக்கு தயக்கப் படாதீங்க" என தமிழிடம் சொன்னவள், "பாய் எழில் அண்ணா.." என அவனிடமும் சொல்லிக் கொண்டு கிளாசிக்கு சென்றுவிட்டாள்.

அவன் வகுப்பிற்கு வந்த தமிழோ இசை சொன்னதையே யோசித்துக் கொண்டிருந்தான். தமிழுக்கு இன்னும் ஆறு மாதத்தில் கல்லூரி முடிந்ததும் எடுத்து என்ன செய்வது என்ற பயம் இப்போதே வந்துவிட்டது. எப்படியாவது முடிந்த அளவிற்கு இந்த முறையே எல்லா அரியரையும் கிளியர் பண்ண வேண்டும் என நினைத்தான். அப்போது தான் கேம்பஸ் இன்ரெட்வியூவிற்கான வாய்ப்பு கிடைக்கும். இசை சொன்னது போல தயக்கப்பட்டுக்கொண்டே இருந்தால் ஒன்னும் பண்ண முடியாது. எனவே யாருடைய உதவியுடனாவது படிக்க வேண்டும் ஆனால் யாரிடம் கேட்பது என தெரியவில்லை அவனுக்கு.

கிளாசில் ஒவ்வொருவராக செமினார் எடுக்க தமிழ் இந்த சிந்தனையில் இருந்தான். அடுத்ததாக கயல்விழி வந்து செமினார் எடுத்தாள். அவளை பார்த்ததும் தான் தமிழ் மனதில் அந்த சிந்தனை உதித்தது. கயல்விழி அவன் கிளாஸ் டாப்பர். ஒரு வாயில்லா பூச்சி. பெரியதாக அவளுக்கு நண்பர்கள் என சொல்லிக் கொள்ளும் படி யாருமே இல்லை. அவளுண்டு அவள் வேலையுடன் என இருப்பவள்.

பேசாமல் கயல்வழியிடம் கேட்டால் என்ன?.. என யோசித்தவனுக்கு கயல்விழி தான் அவனுக்கு உதவ சரியான ஆள் என தோன்ற அவளிடம் உதவி கேட்கலாம் என முடிவெடுத்து விட்டான்.

கயல் செமினார் எடுப்பதை கவனித்தவனுக்கு ஏதோ ஓர் அளவிற்கு புரிவதை போல் இருந்தது. சரி அவளிடமே உதவி கேட்கலாம் என நினைத்தவன் வகுப்பு முடிவதற்காக காத்துக் கொண்டிருந்தான்.

செமினார் எடுத்து முடித்த கயல் அவள் இடத்திற்கு வந்த உட்கார்ந்தவள் எதேர்ச்சியாக திரும்ப தமிழ் அவளை பார்த்து புன்னகைத்தான். அவனை பார்த்தவள் எப்படி எதிர்வினையாற்றுவது என தெரியாமல் பயத்தில் குனிந்து கொண்டாள்.

"என்ன டா இவ.. ஸ்மைல் பண்ணா கீழ குனிச்சிருக்கிறா" என தமிழ்
எழிலிடம் கேட்க அவனை பார்த்து கிண்டலாக சிரித்தவன், "டேய் நல்லா ஃப்ரெண்ட்லியா ஸ்மைல் பண்ணனும் டா.. நீ ஏதோ கந்துவட்டி காரன் மாதிரி பாத்தா.. பாவம் அந்த புள்ள பயந்து போயிருக்கும். இப்போ நான் பண்றேன் என்ன பாத்து கத்துக்கோ " என்றவன் கயல் மீண்டும் இவர்களின் புறம் திரும்ப அவளை பார்த்து சிரித்தான். தமிழ் புன்னகைத்த போது கூட அவனை ஒரு நிமிடம் பார்த்தாள், எழிலை பார்த்தவள் அடுத்த நொடி திரும்பிவிட்டாள் அதன் பிறகு இவர்களின் பக்கமே திரும்பவில்லை. இம்முறை தமிழ் எழிலை பார்த்து கிண்டலாக சிரிக்க, "சரி.. சரி.. அதுக்கு இது சரியா போச்சு விடு" என தமிழின் வாயை அடைத்தான் எழில்.

கிளாஸ் முடிந்ததும் எல்லோரும் வீட்டிற்கு கிளம்ப கயல்விழி முதல் ஆளாக பேகை எடுத்துக் கொண்டு ஹாஸ்டலுக்கு ஓடினாள். அவள் அவசரமா போவதை பார்த்த தமிழ், "டேய்.. ஓடுறா பாரு ஓடுறா பாரு சீக்கிரம் அவள புடி.." என எழிலிடம் சொல்ல இருவரும் அவள் பின்னே ஓடினர்.

வேகமாக ஓடியவர்கள் அவள் முன் சென்று வழி மறித்து நின்றனர். இருவரையும் பார்த்து மிரண்டு போய் விழித்தவள், "எ.. எதுக்கு வழியில நிக்கிறீங்க.. தள்ளுங்க ஹாஸ்டல்க்கு லேட் ஆச்சு" என திக்கித் திணறி கூறியவள் அங்கிருந்து நகர பார்க்க மீண்டும் வழி மறித்தவர்கள், "கயல்.. கயல்.. பிளீஸ் ஒரு நிமிஷம்.. " என்க "லேட் ஆகிரும்.. ஹாஸ்டல் கேட் பூட்டீருவாங்க" என சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தாள்.

அதில் கடுப்பான எழில், "இத பாரு மா.. நாங்க என்ன உன்ன கடத்தீட்டா போகப் போறோம் இப்படி பயப்படுற.. சும்மா சொன்னதையே சொல்லாம அவன் என்ன சொல்ல வரான்னு கொஞ்சம் காது குடுத்து கேளு" என்றான் எரிச்சலாக.

அவன் திட்டியதில் அவள் மீண்டும் பயந்து போய் விழிக்க, "டேய் கொஞ்சம் சும்மா இருடா.. அந்த புள்ளைய இன்னும் பயமுறுத்தாத.." என எழிலை திட்டியவன், "சாரி கயல்.. அவன் அப்படி தான்.." என அவளை அமைதி படுத்தினான்.

"என்ன விஷயம் சீக்கிரம் சொல்லுங்க.. எனக்கு டைம் ஆச்சு..?"
"அது கயல் நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும் பிளீஸ் மாட்டேன்னு மட்டும் சொல்லீறாத.."
"நானா?.."
"ஆமா நீ தான்.. பிளீஸ் முடியாதுனு மட்டும் சொல்லாதா.."

"சரி என்ன ஹெல்ப்??.."
"அது..அது.." என இழுத்தவனுக்கு இவளும் தன்னை குறைவாக நினைப்பாளோ என்ற பயம், இருந்தாலும் அவள் அப்படியெல்லாம் நினைப்பவள் இல்லை என மனம் சொல்ல, "அது.. உனக்கே தெரியும் எனக்கு நிறைய அரியர் இருக்குனு.. எனக்கு அதெல்லாம் கிளியர் பண்ணனும்.. எனக்கு அதுக்கு ஹெல்ப் பண்ணுவியா.. எனக்கு சொல்லி தர முடியுமா பிளீஸ் " என அவளிடம் கேட்டான்.

"ஓஓ.. இது தானா" என ஆசுவாம் அடைந்தவள், "ம்ம் கண்டிப்பா சொல்லி தரேன் தமிழ்" என அடுத்த நிமிடமே ஒத்துக் கொண்டாள்.

அவளை பார்த்து புன்னகைத்தவன், "ரொம்ப தேங்க்ஸ் கயல்.. அப்போ நாளையில இருந்து படிக்க ஆரம்பிக்கலாமா?" என கேட்க சரி என தலையாட்டியவள், "லேட் ஆச்சு நான் போகட்டா.." என இழுத்தாள். தமிழ் சரி என தலையாட்டிதும் விட்டால் போதும் என ஓடிவிட்டாள்.

அடுத்தடுத்து வந்த நாட்களில் தமிழ் கயலின் உதவியுடன் படிக்க தொடங்கியிருந்தான். ஆரம்பத்தில் கயல் இருவருடனும் அவ்வளவாக ஒன்றவில்லை, முதல் ஒரு வாரம் அவன் கேட்பதை மட்டும் விளக்குவாள், முக்கியமான வினாக்களை சொல்லிக் கொடுப்பாள் அவ்வளவு தான் அதற்கு மேல் அவள் பேச்சுகள் இருக்காது.

ஒரு கட்டத்திற்கு மேல் தமிழுக்கு பாடங்கள் சலிப்பெடுக்க, "பிளீஸ் நீ இப்படி உர் னு இருக்காத கயல்.. எனக்கு ஏதோ டியூஷன் டீச்சர் கிட்ட படிக்கிற ஃபீல் வருது" என்றான்.
"அது நான் அப்படி தான் எனக்கு மிங்கிள் ஆக கொஞ்சம் டைம் எடுக்கும்.. போக போக சரி ஆகிருவேன்.. " என்பதோடு பேச்சை முடித்துக் கொண்டாள்.

நாட்கள் செல்ல செல்ல கயல் இருவரிடமும் சகஜமாக பேசி பழக தொடங்கியிருந்தாள். தமிழும் எழிலும் அவளை அப்படி பேச வைத்தனர். இந்த இடைப்பட்ட நாட்களில் இருவருடனும் கயலுக்கு நல்ல நட்பு மலர்ந்ததிருந்தது. எப்போதும் அவள் தனியே இருப்பதை பார்த்தவர்கள் அவளை தனியே விடமாட்டார்கள் எங்கே சென்றாலும் அவளையும் வற்புறுத்தி அழைத்து செல்வார்கள். இசை மலரிடம் கூட அவளை அறிமுகப் படுத்தி அவர்களுக்குள்ளும் நட்பு மலர செய்திருந்தனர்.

அன்று அந்த செமஸ்டரின் கடைசி நாள் மூவரும் கேண்டீனில் அமர்ந்திருந்தனர். எழில் சமோசாவை சாப்பிட்டு கொண்டிருக்க, கயல் தமிழுக்கு ஒரு முக்கியமான கேள்வியை கடந்த ஒரு மணி நேரமாக விளக்கிக் கொண்டிருந்தாள். பாவம் அவனுக்கு தான் ஒன்றுமே புரியவில்லை.

ஒரு கட்டத்திற்கு மேல் கயலுக்கு மண்டை காய, "டேய் நீ எல்லாம் எப்படி தான் டுவெல்த் பாஸ் பண்ண?" என கடுப்பாக கேட்டாள்.
"அது எனக்கே இப்போ வர பெரிய ஆச்சிரியம் தான்.. "என்றவன், "என்ன பாஸ் பண்ணிவிட்ட புன்னியவான் எங்க இருந்தாலும் நல்லா இருக்கனும்" என அவரை வாழ்த்தினான்.

படித்து படித்து மூவருக்கும் ஒரு கட்டத்திற்கு மேல் போர் அடிக்க மூவரும் கதையளக்க தொடங்கினர்.

உணவு இடைவேளை விட்டதும் இசையும் மலரும் கேண்டீன் வர அவர்களுடன் இலவச இணைப்பாக ஒட்டிக் கொண்டே வந்தான் அரவிந்த்.அரவிந்தை பார்த்ததும் எரிச்சலா தமிழ்
"டேய் இவன் ஏன்டா எப்போ பாரு ஏதோ ரப்பர் வைச்ச பென்சில் மாதிரி இவளுங்க பிண்ணாடியே சுத்தீட்டு இருக்கான்" என்றான் எழிலிடம் கடுப்பாக.

"நீ ஏன் டா இவ்ளோ காண்டு ஆகுற?.."

"ம்ச் தெரியல எனக்கு என்னமோ அவன் மூஞ்சிய பார்த்தாலே ஒரு மாதிரி இரிட்டேடிங்கா இருக்கு.."

"சரி.. சரி.. பக்கத்துல வந்துட்டாங்க கொஞ்சம் வாய மூடு" என எழில் சொல்ல தமிழ் ‌அவன் பேச்சை நிறுத்திக் கொண்டான்.

தமிழின் அருகே உட்கார்ந்த அரவிந்த் அவனிடம் பேசிக்கொண்டே இருக்க தமிழும் எதுவும் நடவாததை போல் அவனுடன் சகஜமாக பேசிக் கொண்டே இருந்தான்.

"இருந்தாலும் இது உலக மாகா நடிப்பு டா.. என்ன உன் பெஸ்ட் ஃப்ரெண்டோட ரொம்ப ஜாலியா பேசீட்டு இருக்க போல" என எழில் தமிழின் காதில் கிசுகிசுக்க, "ஏய் அவன எல்லாம் என் பெஸ்ட் ஃபிரண்டுனு சொன்ன பல்ல ஒடச்சிடுவேன் நாயே.." என எழிலின் காலை மிதிக்க, "ஏ சனியனே..ஏன் டா மிதிச்ச?" என எழில் தமிழின் காலை மதிக்க, இருவரும் மாறி மாறி காலை மதித்து சண்டை போட்டுக் கொண்டனர்.

இவர்கள் இருவரும் தங்களுக்குள் பேசிக் கொள்வதை பார்த்த அரவிந்த், "ஏன் டா என்னாச்சு? எனி ப்ராப்ளம்?" என கேட்க இருவரும் ஒன்றுமில்லை என தலையாட்டி சிரித்து அவனிடம் சமாளித்தனர்.

கயல் மதிய உணவிற்கு ஹாஸ்டல் போக எழ இசை, "அக்கா.. பிளீஸ் இன்னிக்கு தான கடைசி நாள். இன்னிக்கு ஒரு நாள் மட்டும் எங்களோட உட்கார்ந்து சாப்பிடுங்களேன்" என கேட்க என்ன சொல்வதென தெரியாமல் எழிலையும் தமிழையும் பார்த்தாள் கயல்விழி.

அவள் பார்வை புரிந்த மலர், "அதென்ன எல்லாமே உங்க ஃப்ரண்ட்ஸ கேட்டு தான் பண்ணுவீங்களோ.." என கேட்க
"ஐயோ அப்படி எல்லாம் இல்ல.. " என உடனே மறுத்தாள் கயல்.

"அப்போ நீங்க இன்னிக்கு எங்க கூட தான் சாப்பிடனும்.." என வம்பாக அவளை பிடித்து உட்கார வைக்க கயல் ஏதோ மறுப்பாக சொல்ல வந்தாள். அவள் வாய் மீது கை வைத்து மூடிய மலர், "ஷ்ஷ்.. மலர் பேச்சுக்கு மறு பேச்சு இல்ல" என அவள் வாயை அடைத்தாள்.

பின் ஆறு பேரும் ஒன்றாக உற்கார்ந்து சாப்பிட்டனர். சாப்பாட்டிற்கு நடுவே , "இருங்க நான் போய் ஜூஸ் வாங்கிட்டு வரேன்" என மலர் எழுந்து செல்ல அவள் நடையில் இருந்து வித்தியாசத்தை வைத்து, "என்னாச்சு மலர் கால்ல ஏதாவது அடிபட்டு இருக்கா?" என கேட்டான் தமிழ்.

தமிழ் அப்படி கேட்டதும் இசையும் அரவிந்தும் சத்தமாக சிரிக்க அவர்களை முறைத்த மலர், "அதெல்லாம் இல்லை சீனியர்.." என்க அவளை தடுத்த இசை "இருங்க சீனியர் நான் சொல்றேன்.. நான் சொல்றேன்.. " என்றவள் "சீனியர் அவ புதுசா ஒரு ஹீல்ஸ் வாங்கியிக்கா.. அத போட்டுட்டு நடக்க தெரியாம இப்படி நடந்துட்டு சுத்துரா.." என சிரிக்க அவளை முறைத்த மலர், "எல்லா எங்களுக்கு தெரியும்.." என வேகமாக நடக்க பேலன்ஸ் இல்லாமல் விழுகப் போனவள் அருகே இருந்த டேபிளை பிடித்து கீழே விழுகாமல் நின்றாள்.

அதை பார்த்த அவர்கள் அனைவரும் சத்தமாக சிரிக்க டென்ஷன் ஆனவளே "நீங்க யாரு என்கிட்ட பேசாதீங்க போங்க.." என முகத்தை திருப்பி கொண்டு ஜூஸ் வாங்க சென்றாள்.


ஜூஸை வாங்கிக் கொண்டு நடக்க முடியாமல் நடந்து வந்தவள் ஒரு கட்டத்தில் பேலன்ஸ் தவறி அவளுக்கு எதிரே இருந்து எழிலின் வெள்ளை சட்டையில் மொத்த ஜூஸையும் கொட்டினாள்.
 




TNWContestWriter099

Well-known member
Member
பரவாயில்லையே பயபுள்ளக்கு அரியர் கிளியர் பண்ணனுங்கிற அறிவுக்கண்திறந்திருச்சே. ஹ்ஹா ஹாஹா எழிலுக்கு அபிஷேகம்.
Thank you 🤩✨.. apo thana vaazhkaiyila seekram adutha kattam noki poga mudiyum
 




Narmadha mf

Well-known member
Member
தமிழ் உன்னோட குணம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அரியர் எல்லாம் க்ளியர் செய்து அடுத்த கட்ட முன்னேற்ற பாதையை அடைய இசை பேச்சைக் கேட்டு கயலிடம் உதவி கேட்டது எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்தது. குட் பாய் டா நீ 🥰🥰🥰🥰🥰

மலர் உனக்கு எதுக்கு இந்த ஸ்டூல் மேல நடக்குற வேலை ஆனால் கரெக்டா பழி வாங்கிட்ட🤣🤣🤣🤣🤣🤣.
 




TNWContestWriter099

Well-known member
Member
தமிழ் உன்னோட குணம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அரியர் எல்லாம் க்ளியர் செய்து அடுத்த கட்ட முன்னேற்ற பாதையை அடைய இசை பேச்சைக் கேட்டு கயலிடம் உதவி கேட்டது எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்தது. குட் பாய் டா நீ 🥰🥰🥰🥰🥰

மலர் உனக்கு எதுக்கு இந்த ஸ்டூல் மேல நடக்குற வேலை ஆனால் கரெக்டா பழி வாங்கிட்ட🤣🤣🤣🤣🤣🤣.
🤩🤩 Thank you..நான் தான் ஆல்ரெடி சொன்னேன்னே... He's a gooooood boyyy nu 🥰
எல்லா எழிலோட புதுசா இன்னோரு சண்டைய போட தான் 😂
 








Advertisement

Advertisement

Top