Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இணையா துருவங்கள் - 1

Advertisement

Bookeluthaporen

Well-known member
Member
வணக்கம் தமிழ் நண்பர்களே...

கீழே விழ இருந்த பூ ஜாடியை சரியான நேரத்தில் பிடித்து விஷ்ணுவின் தலையில் அடித்தான் ஹரி.

"பாத்துப் போடா... பன்னாட..!!! சத்தம் கேட்டுச்சு செத்தோம்"

போதையில் இருந்த விஷ்ணு கண்ணை நன்றாக கசக்கி விழிகளை விரித்து நடக்க ஆரம்பித்தான் மீண்டும் படியில் இடறி விழ போகும் முன், "டேய் அண்ணா.. என்ன டா பண்றீங்க உங்க ரெண்டு பேரையும் வச்சுக்கிட்டு என் உயிரே போகுது" தள்ளாடியபடியே வந்த சகோதரர்களை பார்த்ததும் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை அப்படியே வைத்துவிட்டு பதறி ஓடி வந்தாள் திவ்யா.

"வந்துட்டடா என் தங்கச்சி, அடியேய்ய்ய்... என் ராசாத்திதிதி... எங்க அம்மா பெத்த தெய்வமே, அண்ணனை நல்ல நேரத்துல தான் மா வந்து காப்பாத்திருக்க. இங்க இருக்கான் பாரு இந்த திருட்டு பய அந்த பிள்ளையை எப்படி ஆச்சு இன்னைக்கு கரெக்ட் பண்ண ஹெல்ப் பண்றேனு சொன்னான் அவனையும் நம்பி...." அவன் குரல் சற்று உயர்த்தும் பதறி அவன் வாயை மூடினாள் திவ்யா.

"டேய் கத்தி கத்தி வீட்டையே எழுப்பிராத டா" ஹரி விஷ்ணுவை கெஞ்சியபடியே பின்னிருந்து அவனை படியில் தள்ளினான், "டேய் நான் என் தங்கச்சி கிட்ட பேசிட்டு இருக்கேன்டா, கொஞ்ச நேரம் பொறு டா" என்று படியிலேயே அமர்ந்து விட்டான்.

"இன்னைக்கு எனக்கு சங்கு கன்பார்ம்" ஹரி, போதையில் இருந்தாலும் விஷ்ணுவை விட எப்பொழுதும் தெளிவாகவே இருப்பான்.

"ராசாத்தி என்னமோ சொல்லிட்டு இருந்தேன்ல.... ஆ... அவனையும் நம்பி போனேன் டா நான். ஆனா அவன் அங்க என்ன பண்ணான் தெரியுமா...?"

வீட்டின் இருளில் தன் கூர்மையான பார்வையை படர விட்டு எவரும் இல்லை என்று உறுதி செய்த பின் அவன் கையில் நறுக்கென்று கிள்ளினாள் திவ்யா, "ராசாத்தி... ராசாத்தினு கூப்புடாதடா கேவலமா இருக்கு".

"ஆமா இப்ப இது தான் ரொம்ப முக்கியம் பாரு" ஹரி அவளை கடிந்தான்.

வலியில் துடித்தவன், "ஏன் டா ராசாத்தி அண்ணன கிள்ளுன?" கண்ணில் நீர் கோர்த்து கேட்டான் விஷ்ணு பாவமான முகத்துடன்.

"ஏன்டா எருமைகளா நீங்க ரெண்டுபேரும் மாசம் மாசம் இப்டி ஒருத்தி பின்னாடி சுத்திட்டு இருப்பீங்க அப்பறம் அடுத்த மாசமே இன்னொருத்திப் பின்னாடி சுத்துவீங்க. த்தூ..உங்க துருப்புடிச்சக் காதல் கதையெல்லாம் எனக்கு வேணாம் ஒழுங்கா ரூமுக்கு போய்டுங்க, அண்ணா முழிச்சுதா இருக்கு மாட்டுனா செத்தோம்" என கோபத்துடனும் பயத்துடனும் சுற்றுமுற்றும் பார்த்தபடியே கூறினாள் திவ்யா.

"அதெல்லாம் முடியாது நீ கதையை கேட்டே ஆகணும்" அடம் பிடித்தான் விஷ்ணு.

"டேய் உன்னோட ரூமுக்கு வந்து கூட கேக்குறேன் டா இப்ப தயவு பண்ணி போடா உன் ரூமுக்கு" கெஞ்சினாள் திவ்யா தன் சகோதரனிடம்.

"ஒகே அப்ப இப்போவே ரூமுக்கு போலாம் இவன் செஞ்சதை நான் சொல்றேன்"அடக்கி வைத்து இருந்த மூச்சை மெல்ல விட்டாள் நிம்மதியில்.

"அப்பறம் டா ராசாத்தி வரப்ப அப்பா ஸ்டடி ரூம்ல ஒரு பாட்டில் சரக்க எடுத்துட்டு வா"

பொறுமையை முற்றிலும் துறந்த ஹரி பின்னால் இருந்து அவனை ஒரே எத்து விட்டான், "நாயே ... அடிச்சிருக்க சரக்கு பத்தலயா இன்னும் கேக்குதாக்கும் மூடிட்டு தூங்குற வேலைய பாரு".

விஷ்ணு தலையில் ஏற்பட்ட காயம் கூட தெரியாமல் மீண்டும் பேச தொடங்கினான், கை தாங்கலாய் அவனை தோளில் கிடத்திய ஹரியைப் பார்த்து சிரித்தான் விஷ்ணு, "டேய் நீ பாக்குற பார்வையே சரி இல்ல"

"ஆமா டா ஹரி நீயு அழகா தா இருக்க" தன் பார்வையை ஹரியிடம் இருந்து அகற்றாமல் கூறினான் விஷ்ணு.

"கருமம் புடிச்சவிங்க" முகத்தை சுளித்தாள் திவ்யா, "டேய் அண்ணா என்ன நீங்க ரெண்டு பெரும் லவ் பண்றிங்களா?" வாயை மூடி சிரித்தாள் ஹரியின் முக பாவனையை பார்த்து.

"சீ இவனையா அதுக்கு நா செத்துரலாம்"

"அப்டி என்ன தான் டா நடந்துச்சு இவன் உன்ன வச்ச கண்ணு வாங்காம பாத்துக்குட்டே இருக்கான், எனக்கு என்னமோ உங்க ரெண்டு பேர் மேலயும் டவுட்டா இருக்கு"

"அது வந்து தங்கச்சி" என்று நெளிந்துக்கொண்டே ஆரம்பித்தான் ஹரி, "அந்த புள்ள சொன்னான்ல"

"ஹ்ம்ம்..." மேலும் கீழும் அவன் வெக்க படுவதை கண்டு சிரித்தாள்."அந்த புள்ள இவன விட நான் கலரா... ஹண்ட்சமா... ஹாட்டா... க்யூட்டா.. இருக்கேன்-னு சொல்லுச்சு" தலையை கீழே தொங்கவிட்டான் வெக்கத்தில்.

"அய்ய.. வழியிது தொடச்சிக்கோ" என்று கூறினாள்.

இதுவரை அமைதியாக இருந்த விஷ்ணு இப்பொழுது 'ஓ' வென ஒப்பாரி வைக்க தொடங்கினான்.

"பாத்தியா ராசாத்தி இவன் பண்ண வேலைய எனக்கு கரெக்ட் பண்ணி விட சொன்னா இவனுக்கு கரக்ட் பண்ணிட்டான். நான் ஒரு வாரமா அத சுத்தி சுத்தி அதுக்கு புடிச்சது எல்லாத்தையும் பாத்து பாத்து செஞ்சேன் ஆனா அது..." வராத அழுகையை வலுக்கட்டாயமாக வர வைத்து அழுதான்.

"அப்டி என்ன தான்டா இவன் பண்ணுனான்" கடுப்பில் ஹரியிடம் கேட்டாள் திவ்யா.

"நீங்க டயர்டா இருப்பிங்க நான் சொல்றேன் சார்"

அவ்வளவு தான். தன் அணைப்பில் அவ்வளவு நேரம் இருந்த விஷ்ணுவை பயத்தில் அந்த குரல் கேட்ட அடுத்த நொடி கீழே தள்ளினான் ஹரி, சுயம் அறியாது பொத்தென்று கீழ விழுந்தவன் வழியில் துடித்தபடியே, "வர வர நீ அண்ணனை மாறியே மிமிக்கிரி பண்ற மேன். ஆனா அண்ணா வாய்ஸ் மாறி இல்ல, பெட்டெர் லக் நெஸ்ட் டைம்" என்று ஹரியின் காலை தோளாய் நினைத்து தட்டி கொடுத்தான் விஷ்ணு.

"அட குடிகார நாயே பேசுனதே அவன் தான் டா" பதற்றத்தில் வாயிலேயே முணுமுத்தான் ஹரி. சகோதரனின் திடீர் வருகையால் திவ்யாவிற்கு கை கால் எல்லாம் உதறல் எடுத்தது.

அந்த மிடுக்கான குரலுக்கு சொந்தக்காரன் உதய் மாதவன். எதார்த்தமான பார்வையை அவர்கள் மீது பதித்தான். சாதாரண டீ ஷர்ட் டிராக் பாண்டில் இருந்தாலும் அவனுடைய ஆளுமை மட்டும் அவன் நிற்கும் தோற்றத்திலேயே தெரியும். 6 அடி 2 அங்குலம், எப்பொழுதும் சீராக கோதி இருக்கும் கேசம் இன்று சற்றே கலைந்தாலும் அழகாகவே இருந்தது அவனுக்கு, தீ போல் சுட்டு எரிக்கும் கண்கள், செதுக்கி வைத்தாற்போல் கூர் மூக்கு, அளவாய் பேசும் உதடுகள் சிகரெட்டை தீண்டாமல் இயற்கையாய் சிவந்தே இருக்கும்.

கோட் சூட்டில் இருக்கும் அந்த மிடுக்கான தோற்றம் இந்த சாதாரண டீ-ஷிர்டிலும் அச்சு பிசையாமல் இருந்தது அதே கம்பீரம், கண்களை ஊடுருவி பார்க்கும் கூறிய கண்களும் இரண்டு இளசுகளுக்கு நடுக்கத்தை மட்டுமே தந்தது. இரவின் இருளிலும் அவனுடைய தேகம் மினுமினுத்தது, இளசுகளை ஒரு நொடியில் அளவெடுத்தவன் நிதான நடையை அவர்கள் நோக்கி எடுத்து வைத்தான் எந்த உணர்ச்சியையும் வெளி காட்டாமல். அவன் எடுத்து வைத்த ஓவ்வொரு அடியும் விஷ்ணுவிற்கும் திவ்யாவிற்கு வயிறில் என்னென்னமோ செய்தது.

"என்ன டா எனக்கு எங்க பாத்தாலும் அண்ணனை மாதிரியே தெரியாது, உர்ர்ர்ர்ர்னு இருக்கான் டா போதைல பாத்தாலும், ஆங்கிரி பறவை" தன் கூற்றுக்கு தானே சிரித்துக்கொண்டான் விஷ்ணு .

"சனியனே கண்ண தொறந்து நல்ல பாரு நிக்கிறது அவன் தா"

கீழே இருத்தவனிடம் குனிந்து அவனை எழுப்பி விட்டான் ஹரி திட்டிக்கொண்டே, "ஆமாடா வர வர கண்ணு சரியா தெரிய மாட்டிக்கிது, இத சாக்கா சொல்லி ஒரு நாள் ஆபீஸ் போகாம கட் அடிச்சிரலா" தான் மாட்டிக்கொண்டது கூட அறியாமல் ஆனந்தத்தில் திளைத்து இருந்தான் விஷ்ணு.

"ம்ம்ம்ஹ்ம்ம்னு சுத்தம்" - ஹரி

வேறு வழி இல்லாமல் ஓடி சென்று திவ்யா ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்து ஹரியிடம் கொடுத்தாள் , வாங்கி அவன் மேல் பயத்தில் ஊற்றினான், "நாசமா போன்றவனே நீயு செத்து என்னைம் கொல்லாம விட மாட்ட, நிதானத்துக்கு வா டா தயவு செஞ்சு "

ஊற்றிய நீரில் சற்று கண் தெளிந்தவன், "அதுக்குள்ள என்ன குளிக்க வைக்காத டா போதை போய்டும்" கதறினான் விஷ்ணு.

"கண்ண நல்ல விரிச்சு பாரு உயிரே போயிரு" அவன் பின் முதுகில் ஓங்கி ஒரு குத்தினான் வலியில் கத்தியவன் விரித்த கண்களை கொண்டு முன் நின்றவனை பார்த்ததும் எச்சிலை முழுங்கி ஹரியின் அருகில் சென்று, "ஏண்டா எனக்கு இன்னும் போதை போகல அப்டி தான, எனக்கு என்னமோ அண்ணன் முன்னாடி இருக்கா மாறியே இருக்கு"

இவர்கள் செய்த குறும்பு தனத்தை பார்த்து ரசித்தவன் உள்ளுக்குள் சிரித்தாலும் வெளியில் காட்டாமல் வெற்று பார்வையை தெளித்து கொண்டே இருந்தான்.

திவ்யா பக்கம் திரும்பி, "சார் என்ன பண்ணார்-னு கேடல்ல? "

பே பே வென விழித்து கொண்டு நின்றவள்.

"கேட்டல்ல?" என்று உதய் மறுமுறை அழுத்தியதும், எல்லாப்பக்கமும் தலை அசைத்தாள்.

"ம்ம்ம்ம்... அவரு டெய்லி என்கிட்ட அட்டெண்டென்ஸ் போட்டுட்டு நேரா பைனான்ஸ் டிபார்ட்மென்ட் போய்டுவாரு, அங்க போயி அந்த பொண்ணு பேரு என்ன ஹரி?" தெரியாமல் கேட்பது போல் கேட்டான், "ப்ரியா" வேகமாக கூறிய ஹரியை முறைதான் விஷ்ணு.

"கரெக்ட் ப்ரியா. அந்த பொண்ணு கிட்ட போய் கரெக்ட்டா அந்த பொண்ணு கணக்கு சொல்ற வரைக்கும் சார் லைன் பய் லைன்னா கேள்வி கேட்டுட்டு தான் அடுத்த வேலையே பாப்பாரு, அதுவும் மொத்த கம்பெனியோட கணக்கையும் ஒரு மணி நேரத்துல கேட்ருவாரு, அவ்வளவுவு ... திறமை. இவ்வளோ வேலைக்கும் இடைல போய் பிட்சா, சாக்லேட் அதுவும் ஹார்ட் போட்ட சாக்லேட் வாங்கி குடுத்து, அந்த பொண்ணு வீட்டுக்கு போயி போய் கேட் தொறந்து உள்ள போகுற வரைக்கு ரெண்டு பேரும் இருந்து பாத்துட்டு பை சொல்லிட்டு தா வருவாங்க ப்பா.. சொல்ற எனக்கே எவளோ டயர்டா இருக்கே தம்பிக்கு எவ்ளோ டயர்டா இருக்கும்"என்றான் நக்கலாக.

"அது ஒன்னு இல்ல ண்ணா பத்திரமா வீடு போயி சேந்துட்டாங்களானு..." தலையை சொரிந்தபடியே ஆரமித்த விஷ்ணுவை காலில் ஒரு மிதி மிதித்தாள் திவ்யா, உடனே அமைதியானவன் தலையை கீழே மீண்டும் தொங்க விட்டு நின்றான்.

"ஓஹோ.. அவ்வளவு பொறுப்பு, பாராட்டி தான ஆகணும்? ஒகே டேக் யுவர் சீட்ஸ்" சோபாவை காட்டி மூவரையும் அமர சொன்னான்.

"இல்ல அண்ணா பரவால்ல இருக்கட்டும் நாங்க நிக்கிறோம்" ஹரி பதுங்கினான்.

"அட என்ன ஹரி நீ அவனுக்கு ஹெல்ப் பண்ணி பண்ணி கால் வலிக்கும் ஒக்காரு" கையை பிடித்து அவன் அருகிலே அமர வைத்தான் . ஏனோ அவனுடைய அமைதியான செயல்கள் மூவருக்கும் பயத்தை மேலும் அதிகரித்தது. தயங்கி தயங்கி விஷ்ணுவும் திவ்யாவும் எதிரில் உள்ள சோபாவில் அமர்ந்தனர்.

சிறிது நேரம் நிசப்தமாக கழிந்தது. இனி சரண்டர் ஆவதை தவிர வேறு வழி இல்லாமல் பேச தொடங்கினான் ஹரி, "அண்ணா சாரி...." பேச வந்தவனை இடைமறித்து கோவத்தை கொட்ட ஆரம்பித்தான்...

"ஆமாடா பண்றது எல்லாத்தையும் பண்ணுவிங்க, ஆபீஸ்ல ஒழுங்கா வேலை செய்றது கிடையாது, அடிக்கடி ஏதாச்சும் சாக்கு சொல்லி ஆபீஸ்லயே இருக்குறதில்ல, முக்கியமான மீட்டிங்னு வர சொன்னா கூட வந்து அட்டென்ட் பண்றது இல்ல. இப்டியே இருந்தா எப்படிடா தொழிலை கத்துக்குவிங்க? நானும் சொல்ல கூடாது அவங்களே புரிஞ்சுப்பாங்கனு விட்டு விட்டு பாத்தேன் ஆனா நீங்க உங்க இஷ்டத்துக்கு தான் ஆடிட்டு இருக்கீங்க, பத்தாததுக்கு வீட்டுக்கு தைரியமா தண்ணி அடிச்சிட்டு வந்துருக்கீங்க. ரெண்டு பொம்பள பிள்ளைங்க வீட்டுல இருக்குது-னு நெனப்பு கொஞ்சமாச்சும் இருக்குதா? எவன் எப்படி போன எனக்கு என்னனு இருக்கீங்க ரெண்டுபேரும். இது நாள் வரைக்கும் உங்க பக்கம் திரும்பி பாக்காம இருந்தேன். ஆனா இனிமேலும் அப்டியே உங்கள விட்டா உருப்புட மாட்டீங்க"

"அது என்ன டா ஒரு பொண்ணு பின்னாடி இப்டி சுத்துறீங்க . அசிங்கமா இல்ல? நாளைக்கு உன் தங்கச்சி பின்னாடி ஒருத்தன் சுத்துவான் அப்ப தான் புரியும். ரெண்டு பேரும் ஒண்ணா இருந்தா வேகமா தொழில கத்துக்குவீங்கன்னு நெனச்சு தான் அப்பா சொன்னப்ப சரினு விட்டேன். இனி என் வழில போயி தான் உங்களுக்கு தொழிலை கத்து குடுக்கணும் போல. இனி நீங்க ஒரு நிமிஷம் கூட மூச்சு வாங்க முடியாத அளவுக்கு வேலை குடுப்பேன், நான் அட்டென்ட் பண்ண போற மீட்டிங்ஸ் எல்லாத்துக்கும் எனக்கு முன்னாடி நீங்க அங்க இருக்கனும், நான் வீட்டை விட்டு போறதுக்குள்ள நீங்க ஆபீஸ்ல இருக்கனும். என்ன ப்ராஜெக்ட் எந்த ஸ்டேஜ்ல இருக்கு கிளைண்ட்ஸ் ஓட ரெகுயர்மென்ட் என்ன என்ன இது எல்லாம் நாளைக்கு தெரிஞ்சா தான் ஆஃபீஸ்க்குள்ள இருக்கனும். ஆபீஸ்ல இனி நீங்களும் என்னோட ஒரு ஸ்டாப் தான். உங்களுக்குனு எந்த தனி மரியாதையும் இருக்காது இனிமேல். இந்த ஜீன் பாண்ட், டீ-ஷர்ட் போட்டுட்டு வந்த அப்பறம் நான் மனுசனா இருக்க மாட்டேன் . கரெக்டா ஒன் மந்த்தா டைம் அதுக்கு அப்பறம் இதே மாறி ஏதாச்சு பண்ணி என் கண்ணுல சிக்குனீங்க..."

தான் என்ன தவறு செய்தலும் அண்ணனுக்கு தெரியாது என்று இருந்தவர்களுக்கு அவன் கூறுவது ஆச்சிரியத்தை மட்டுமே தந்தது, ஆனால் அவன் இவர்கள் ஆணிவேர் முதல் அலசி உள்ளான் என்று நினைக்கும் பொழுது இவர்களை பற்றி பல தெரிந்தும் தெரியாதது போல் இருந்தது சற்று ஆறுதலாகவே இருந்தது.

"ஐயோ சாத்தியமா பண்ண மாட்டோம், இனி இவன் யாருனே எனக்கு தெரியாது ஏன் இவன் பேர் கூட எனக்கு தெரியாது" பதறி கொண்டு பதில் அளித்தான் விஷ்ணு தலையை ஆட்டிக்கொண்டே 'மேல தான வருவா பத்துக்குறேன்டா உன்ன' பற்களை கடித்தான் ஹரி.

"ம்ம்ம் ஆமா நீ என்ன இன்னேரம் பண்ற?" என்று திவ்யாவை நோக்கி கேட்டான்.

"படிச்சிட்டு இருந்தேன் அண்ணா"

"12 மணிக்கு மேல என்ன படிப்பு வேண்டி கெடக்குது, போய் தூங்கு காலைல படிச்சுக்கலாம்" தலையை ஆட்டியவள் எழுந்திருக்கும் பொழுது மீண்டும் அவளை அழைத்தான் உதய், "இன்னும் நா பேசி முடிக்கலையே" இறுக்கமாக கண்களை மூடிக்கொண்டு மீண்டும் அமர்ந்தாள் தன் 2 சகோதரர்களை மானசீகமாய் திட்டிக்கொண்டே.

அவளை உற்று நோக்கியபடி, "உனக்கு அவங்கள காப்பாத்தணும்னு தோணுச்சுனா அவங்க இனி குடிக்காத மாதிரி ஏதாச்சு பண்ணியிருக்கணும் இல்லனா வீட்டுல இருக்கவங்கட்ட சொல்லிருக்கனும் அவங்க புத்தி சொல்லிருப்பாங்க. அத விட்டுட்டு தப்பு பண்ணா துணைக்கு போறது தான் அவங்கள காப்பாத்துறதுனு நெனெக்கிறது பெரிய தப்பு . எல்லா நேரமும் இதே மாறி காமெடி பண்ணிட்டே இருக்க மாட்டாங்க தண்ணி அடிச்சா. நாளைக்கு இவங்கள நம்பி வர போற பொண்ணுங்க இந்த நிலமைல பாத்தா நல்லாவா இருக்கும் தண்ணி அடிக்கிறது தப்புனு சொல்ல வரல, எப்ப ஆச்சும் அடிச்சா பரவால்ல ஆனா இந்த வாரத்துல இது மூணாவது நாள்"

தங்கையிடம் இருந்து சகோதர்களை நோக்கி சீறினான், "போங்க ரூம்க்கு, சொன்னது எல்லாம் நியாபகம் இருக்கட்டும்"

கட கடவென எழுந்து தங்கள் அறையை நோக்கி தெறித்து ஓடினர்.சென்றவர்களின் திசையை நோக்கி ஆழ்ந்த யோசனையில் இருத்தவனின் தோளில் ஒரு கை பட திரும்பி பார்த்தான் உதய், நின்றது அவன் தந்தை, ரகுநந்தன்.

ஒரு காலத்தில் சிறு கடை போட்டு மெக்கானிக் தொழில் தொடங்கியவர் தமையனின் உதவியுடன் சிறு சிறு படியாய் முன்னேறி காருக்கு பாகங்கள் தயாரிக்கும் கம்பெனியாய் உயர்த்தினர். அதற்கு ஆர் ஜே இண்டஸ்ட்ரீஸ் எனும் பெயர் சூட்டினர். வருடங்கள் ஏற ஏற அவர்களின் வளர்ச்சியும் ஏறிக்கொண்டே போனது. ரகுநந்தன் காயத்திரி எனும் பெண்ணை மணந்தார். காயத்திரி குணத்தில் தங்கம், கள்ளம்கபடமற்ற பேச்சு எப்பொழுதும் முகத்தில் அன்பும் சிரிப்பும் குடிகொண்டிருக்கும்.

மனைவியின் ஆதரவுடன் தொழிலை மேலும் மேலும் வளர்த்தார் தன் சகோதரனுடன் இணைந்து. உலகம் முழுவதும் கிளைகளை திறந்தனர் எதில் தொட்டாலும் வெற்றியே கிட்டியது அவர்களின் அறிவின் பலனால். பின்னர் பிறந்தான் உதய் மாதவன். ரகுநந்தன், கயாத்திரியின் மகனாய்.

2 வருடம் கழித்து தன் சகோதரன் ஜெய நனந்தனுக்கும் நளினி எனும் பெண்ணை திருமணம் செய்து வைத்தார், அவரும் காயத்திரியின் பண்புகளுக்கு சளைத்தவர் இல்லை என்பதை அனைவரும் அறிந்தனர்.

அடுத்த 10 மாதத்தில் காயத்திரி, நளினி இருவரும் ஒரு ஆண் பிள்ளையை பெற்றடுத்தனர் ஒரு வார இடைவெளியில். கயாத்திரியின் மகன் விஷ்ணு, நளினியின் மகன் ஹரி. பிறகு நளினிக்கு இரட்டையர்கள் பிறந்தனர் திவ்யா, பல்லவி. இது தான் இவர்கள் குடும்பத்தின் விபரம். அனைவரும் ஆலமரம் போல் விரிந்து இருக்கும் அந்த அரண்மனை போன்ற வீட்டில் தான் ஒன்றாக வசிக்கின்றனர். எப்பொழுதும் ஆனந்தம் மட்டுமே இருக்கும் அந்த வீட்டில் ஒலிக்கும்.

எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்தில் காயத்திரின் உயிர் பிரிந்தது, தன் தாயின் இழப்பை தாங்க இயலாத 16 வயது உதயனுக்கு உலகமே இருண்டது போல் ஆனது. அதனை மறைக்க படிப்பிலும், தந்தையுடன் வேலைக்கும் செல்ல ஆரம்பித்தான், பிறகு அவன் உலகமே அந்த வேலையானது. சகோதரர்களுடன் பழகுவதை குறைத்தான், குடும்பத்தை தூரத்தில் இருந்து மட்டுமே ரசிக்க ஆரம்பித்தான். பிறகு அதுவே அவன் வாழ்க்கையாக மாறியது, என்னேரமும் வேலை மட்டுமே செய்தான் ஆனால் குடும்பத்தினரின் ஒரு சிறிய அசைவு விடாமல் அனைத்தையும் கவனித்து கொண்டே இருப்பான். தன் தாயை இழந்தது போல் வேறு எவரையும் இனி இழக்க தயாராக இல்லை அவன் மனம்.

தந்தையும் சித்தப்பாவையும் இனி அலுவலகம் வர கூடாது என்று ஆணை இட்டு அணைத்து வேலையையும் தன் தலைமேல் போட்டுக்கொண்டான். ஒரே ஒரு துறையில் வெற்றி கண்ட ஆர் ஜே இண்டஸ்ட்ரீஸ் உதயின் தலையிட்டால் ஸ்டீல், ஷிப்பிங், டிசைனிங், காட்டன் இண்டஸ்ட்ரீஸ், கன்ஸ்டரக்கஷன், இண்டீரியர் ஒர்க்ஸ் என எட்ட முடியாத உச்சத்திற்கு செல்ல ஆரம்பித்தது, அவனுடைய முழு உழைப்பால் இன்று உலகின் பதினாறாவது கோடீஸ்வரர்கள் ஆகினர். இந்தியாவில் மூன்றாவது இடத்திலும் உள்ளார்.

அவன் சேர்த்து வைத்த பணத்தின் அளவை போலவே எதிரிகளையும் சம்பாதித்தான். அவன் அசரும் நொடிக்காக காத்திருக்கும் நரி கூட்டம் அவனை சுற்றி மொய்த்து கொண்டுதான் இருக்கின்றனர். தன் ஒரு பார்வைக்காக அச்சம் கொள்ளும் கூட்டத்தில் தன் குடும்பமும் இணைந்தது அவன் இதயத்தை கசக்கியது, ஆனாலும் குடும்பத்திற்காக அந்த பயத்தை வைத்து அவர்களை சரி செய்ய நினைத்தான். அதுவே நடந்தும் கொண்டு இருக்கிறது.

ஏதோ யோசனையில் இருந்தவனை "தூங்கலயா பா நீ?" தந்தையின் குரல் எழுப்பியது.

நடந்தவை அனைத்தையும் கவனித்தும் தன் மகன் அவர்களை பார்த்துக்கொள்வான் என்ற நம்பிகையில் அவர் ஒரு வார்த்தை கூட கேட்காமல் விட்டது தெரிந்தது உதய்க்கு.

"இல்ல பா ஒரு சின்ன வேலை இருந்துச்சு நீங்க போய் தூங்குங்க"

"ரொம்ப நேரம் முழிச்சு உடம்ப கெடுத்துக்காக உதயா தூங்கு நேரம் ஆச்சு" சரி என்று தலையை ஆட்டியவன் தன் அறைக்கு சென்று மடிக்கணினியை எடுத்து வேலை பார்க்க ஆரம்பித்தான்....
 
Last edited:
மாவிலை, தோரணங்கள், என்று அந்த வீட்டை இயற்கையே அம்சமாக விழாக்கோலத்தில் எடுத்து காட்டியது. பரபரப்பாக ஒடி கொண்டிருந்த பெரியவர்கள், சந்தோஷத்தில் தத்தளிக்கும் சிறு பிள்ளைகள், கண்ணாடி முன் நின்று நகர மறுக்கும் பெண்கள். அவ்வளவு அழகாக இருந்தது அந்த வீடு.

"அண்ணா மேக்கப் கரெக்ட்டா... இருக்கா?" முகத்தை திருப்பி திருப்பி கேட்டாள் தமிழ் தங்கை பவித்ரா.

நிமிர்ந்து பார்த்தவன், "இன்னும் கொஞ்சம் போட்டுக்கோ டா செல்லம் அண்ணனுக்கே உன்ன அடையாளம் தெரியாம போய்டும்" சிரித்து கொண்டே கூறினான் அவளை கேலி செய்ய.

"இப்டி எல்லாம் அண்ணிகிட்ட பேசுனா மவனே டைரக்ட்டா உனக்கு டிவோர்ஸ் தான். பொண்ணுங்க என்ன பண்ணாலும் சூப்பர்னு சொல்லி பழகு டா மாங்கா" சிலுப்பி கொண்டு வெளியே சென்றுவிட்டாள் பவி.

"எவனாச்சும் மாப்பிள்ளையை மதிக்கிறானா பாரு அது அது அதுவேலையா தான் பாக்குது" கண் வாசலிலேயே இருந்தது அவனுக்கு. வெளியே சென்றவள் மீண்டும் உள் வந்து "ஆமா எங்க ஆதி அண்ணாவ காணோம் ?"

பதறி சென்று அவள் வாயை மூடினான், "தெய்வமே தயவு செஞ்சு பேச்சுக்கு கூட அவன் பேர சொல்லிராதடா, அண்ணே பாவம்ல. அவனுக்கு பாம்பு காது எங்க இருந்தாலும் ஓடி வந்துருவான். அந்த நாய் மட்டும் வந்துச்சுனா என் கல்யாணம் கண்டிப்பா நடக்காது"

"இருடி.. அண்ணா வந்ததும் போட்டு குடுக்குறேன்" தன் சகோதரனை முறைத்து கொண்டே கூறினாள் .

"அவன் குடுக்குற அந்த இத்து போன சாக்லேட்காக என்ன அண்ணா பதவில இருந்து தூக்கிட்டியா நீ?" நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு பொய் கோபத்தோடு கேட்டான்.

"ஆமாடா போ போய் குளி இன்னைக்காச்சும் கப்பு தாங்கல" மூக்கை பொத்திக்கொண்டே காற்றில் விசிறினாள் தமிழின் தங்கை.

கொண்டு வந்த சட்டையை அவன் கட்டிலில் வைத்துவிட்டு வெளியே சென்றாள்.

'கடவுளே அவன் வரதுக்குள்ள எப்டியாச்சு நிச்சயம் நடந்துடனும்' வேண்டிக்கொண்டே குளிக்க சென்றான். சற்று நேரத்தில் பெண் வீட்டார் வந்து சேர்த்தனர். தமிழ் வீடு சற்று பெரியதாக இருப்பதால் நிச்சியத்தை அவர்கள் வீட்டிலே வைக்க திட்டமிட்டு இருந்தனர்.

சாஸ்திர சம்ரதாயங்கள் நடக்க கல்யாண பெண்ணை அழைத்து வர கூறினர், வெட்கத்துடன் குனிந்த தலை நிமிராமல் வந்து அமர்ந்தாள் மகிழி. தன்னை ஒருமுறை நிமிர்த்து பார்க்கமாட்டாளா என்று அவளின் கண்களை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டே இருந்தான் தமிழ். ஏனோ அந்த ப்ளூ கலர் பட்டு புடவை அவளை இன்னும் இன்னும் அழகாய் காட்டியது அவனுக்கு.

"டேய் மச்சா என்னடா பொண்ணுக்கு மூக்கு கோணாயா இருக்கு"

பதறி திரும்பி பார்த்தான் தமிழ், பின்னல் நின்றது ஆதி கேசவன் என்கின்ற ஆதி, ஆம் யார் வர கூடாது என்று வேண்டினானோ அவனே தான்.மெரூன் கலர் ஷர்ட் முழங்கை வரை மடித்து வேஷ்டி சட்டையில் அங்கு இருந்த இளம் பெண்களின் கண்களை தன் பக்கம் ஈர்த்து இருந்தான், கேசத்தை கோதிக்கொண்டே வீட்டை பார்வை இட்டவன் எவரேனும் சிக்குவார்களா என்று பார்த்தான்.

"நீ என்ன டா பண்ற இங்க?" ஆச்சிரியம் மாறாமல் கேட்டான் தமிழ்.

"அது இல்ல டா தா... நீ" ஆதியின் வாயை மூடினான் தமிழ், "டேய் தெய்வமே பேர முழுசா சொல்லு டா. பொண்ணு வீட்டுக்காரங்க எல்லா இருகாங்க"

"சரி மச்சி, நீ சந்தோசமா இருக்குற மாதிரி என்னமோ உள்ளுக்குள்ள உறுத்துச்சா அதான் ஓடி வந்துட்டேன்" ஆதி மீண்டும் கண்களை வீடு முழுக்க பரப்ப விட்டான்.

"மாப்பிள்ளை இங்க பாருங்கோ" ஐயர் தமிழை அழைத்து மோதிரத்தை கையில் கொடுத்தார்,

"டேய் இப்பயும் ஒன்னு கெட்டு போகல அவ மூக்கை பாருடா உன் மூக்கை விட ரொம்ப கோணி இருக்கு இப்டியே போச்சு அப்பறம் உன் பிள்ளையும் இதே மாறி தான் ஆகிடும். கோண மூக்கு குடும்பம்னு தான் எல்லாரு சொல்லுவாங்க பாத்துக்கோ" தன்னால் என்ன என்ன செய்ய முடியுமோ அதை அனைத்தையும் செய்தான் ஆதி.

"டேய் அவ மூஞ்சியே கோணி இருந்தாலு பரவால அவ தான் எனக்கு வேணும்" விடாமல் நின்றான் தமிழ்.

'பயபுள்ள கல்யாணம் பன்னிருவானோ?' மனதில் நினைத்த ஆதி, "சேரி அப்ப எனக்கு அவ தங்கச்சிய கரெக்ட் பண்ணி குடுக்குறியா?"

"டேய் நா உன் நண்பன் டா மாமா இல்ல"

"ஆனா அவளுக்கு நீ மாமா தான?"

"செருப்பாலேயே அடிப்பேன் நாயே சோறு திங்க தான வந்த தின்னுட்டு கிளம்பு" வெளியில் கோபமாக இருந்தாலும் உள்ளுக்குள் அழுதான்.

"டேய் தமிழு என்ன டா பண்ற மோதிரத்தை போட்டு விடு"தன் தந்தையின் குரல் கேட்டு திரும்பியவன் அப்பொழுது தான் உணர்ந்தான் அனைவரும் இவனை தான் பார்த்து கொண்டு இருந்தனர், "சாரி பா".

மகிழி கை நீட்ட அதை ஆசையாய் ஏந்தி மோதிரத்தை அவள் முகத்தை பார்த்து கொண்டே அணிவித்தான், அவளும் இவனுக்கு மோதிரம் போட சிரித்த முகத்துடன் வாங்கியவன் அருகில் மீண்டும் வந்து நின்றான் ஆதி, "வாழ்த்துக்கள்" மகிழியை நோக்கி கை நீட்டியவன் அவளுடன் கை குலுக்கிய பிறகு, "ஏங்க அது உங்க தங்கச்சி தான?" சாக்லேட் தட்டை பிடித்து விருந்திரனற்கு சாக்லேட் குடுத்து கொண்டு இருந்தால் ஒரு பெண்.

"ஆமா"

"அவுங்க பேர் என்ன"

ஆதி கையை பிடித்து இழுத்தான் தமிழ் அவனை கண்டு கொள்ளாதவன் மகிழியின் பதிலுக்காக காத்திருந்தான் அவளையே பார்த்து கொண்டு, "அவ பேரு வர்ஷினி. ஆனா அவ ஒரு பையன லவ் பண்ணுறா. எங்க கல்யாணம் முடிஞ்சதும் அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க பிளான் பன்னிருக்காங்க"

ஏனோ ஆதியையும் அவன் கேட்ட கேள்வியையும் பார்த்து அவளுக்கு கோபம் வர வில்லை, சிரிப்பு தான் வந்தது.

'ஐயையோ கண்ணுல பட்ட ஒன்னும் போச்சா, சேரி பேசி கெடுத்து விட பாப்போம்' என்று நினைத்தவன் மேலும் பேச தொடங்கினான்.

"அட என்னங்க நீங்க பொம்பள பிள்ளையை முன்ன பின்ன தெரியாதவங்களுக்கா கல்யாணம் பண்ணி வைப்பிங்க, நல்லா தெரிஞ்ச பையன பாத்து பண்ணுங்க, ஏன் சொல்றேன்னா உலகம் ரொம்ப கெட்டு போய் கெடக்குது, பாருங்க இப்ப நா இருக்கேன் நல்லா தெரிஞ்ச பையன் இந்தா இவன்ட்ட கூட கேட்டு பாருங்க"

தமிழிடம் திரும்பி, "என்னடா சொல்லு என்ன பத்தி" என்றான் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு."ஆமா பிச்சைக்காரனுக்கு கூட கல்யாணம் பண்ணி குடுத்துறலாம் இவனுக்கு கல்யாணம் பண்ணி குடுக்குறதுக்கு" வாய் விட்டு சிரித்தே விட்டாள் மகிழி.

"ஐயோ போதும் இருங்க, அவ லவ் பண்ணது எங்க அத்தை பையன் தான்"

"என்னடா ஆதி உனக்கு இன்னைக்கு நேரமே சேரி இல்ல போல" தமிழிடம் திரும்பி, "சரி சோறு என்ன போடுறீங்க"

"சாம்பார் தான்"முகம் உடனே வாடியது ஆதிக்கு, "ஏன்டா பொண்ணு தான் தர மாட்றீங்க கறி சோறு கூட போட மாட்டிங்களா?"

"டேய் உனக்கு வாய் ரொம்ப அதிகம் ஆகிடுச்சு இப்பலாம்"

"அண்ணா அவன் கெடக்குறான் நீங்க வாங்க அப்பா உங்களுக்கு வாங்கி வச்சிட்டாரு" ஆதியை பவித்ரா அழைத்தாள்.

"டேய் உன்ன விட உன் குடும்பம் எல்லாம் அறிவாளிடா"

"ஏய் அவனுக்கு சோறு போடாதடி அவன் என் கல்யாணத்த நிறுத்த பாத்தான் படுபாவி" தமிழ் கத்தினான் பவித்ராவிடம்.

"டேய் போடா போடா , நான் போய் பிரியாணி சாப்டுட்டு வரேன்" அவன் சொல்வதை எதையும் காதில் வாங்காமல் சென்று பவித்ரா குடுத்த பிரியாணி பார்ஸலை சாப்பிட ஆரம்பித்தான்.

"ஏன்னா அவன் தான் உங்கள நிச்சியத்துக்கு கூட கூப்புடலை அவன் நிச்சியத்துக்கு ஏன் வந்தீங்க ? ஆபீஸ் வரப்ப வச்சு செஞ்சிருக்கலாம்ல, அத விட்டுட்டு வந்துட்டீங்க" கோபத்துடன் கேட்டாள் நண்பனின் தங்கை .

"அட இல்லமா அவன் எனக்கு தெரியாம இன்விடேஷன் கார்டை தெரியாம போட்டு போற மாதிரி விட்டுட்டு போனான், ஆனா நா தான் அத பாத்துட்டேனே. இப்ப கூட இந்த பிரியாணியை அவன் தான் அப்பா கிட்ட வாங்கிட்டு வர சொல்லிருப்பான். நான் இல்லாம அவன் எதையும் செய்ய மாட்டான், அவன் இல்லாம நானும் எதையும் செய்ய மாட்டேன்".

அவளுக்கு இவர்கள் நட்பை பார்த்து கொஞ்சம் பொறாமையாகத்தான் இருந்தது, "சரி அந்த பிரியாணியை பேசிட்டே நீ சாப்டறலாம்னு நெனச்சியா" அவன் தலையில் அடித்து "ரெண்டும் லூசு" நண்பர்களை திட்டிக்கொண்டே பரிமாறினாள் அவனுக்கு.

ஆதி கேசவன். சிரிப்பை தவிர அவன் முகத்தில் ஒன்றும் இருக்காது, நண்பனுக்காக என்னவேனாலும் செய்வான் தயங்காமல், தந்தையை சிறு வயதிலேயே இழந்தான், தாயும் சிறிது காலத்தில் உயிரே பிரிய, சகோதரியின் விருப்பங்களை முகம் சுளிக்காமல் செய்து முடிப்பான். தமிழின் தந்தை தான் அவர்கள் படிப்பு செலவை ஏற்றார், ஆனால் கல்லூரி செல்ல ஆரம்பித்து பின்னர் தன் படிப்பு செலவை தானாக பார்த்து கொண்டவன் சிறுகச் சிறுகத் தன் தங்கைக்கும் பார்க்க ஆரம்பித்தான். அவனுக்கு பெரிதாக ஆசை ஒன்றும் இல்லை தங்கைக்கு ஒரு நல்ல வரன் பார்க்க வேண்டும், கிடைக்கிற வருமானத்தில் ஒரு சிறிய சொந்த வீடு.

"டேய் ஆதி பந்தில பரிமாற வாடா ஆள் இல்லையாம்"

"டேய் இப்ப தெரியுது ஏன் பிரியாணி வாங்கி குடுத்தீங்கன்னு" வாய் முழுதும் பேச முடியாத அளவு பிரியாணி.

வேக வேகமாக உண்டவன், "வரேன் பா" கூறிக்கொண்டே, "இன்னொரு பார்சல் ஒளிச்சு வை உன் அண்ணன்கிட்ட இருந்து. வந்து சாப்பிடுறேன்" சிரித்துக்கொண்டே அவன் உத்தரவை செய்தாள் பவித்ரா.


யாராவது இந்த சைட்ல கதை எழுதுறவங்க இருக்கீங்களா? ப்ளீஸ் என்னோட முகநூல் பக்கத்துல ஒரு ஹாய் செய்தி அனுப்புங்க... சில சந்தேகங்கள் இருக்கு


எப்படி இருக்கு மக்களே? கதை புடிச்சிருக்குனு நம்புறேன். ஷேர் பண்ணுங்க vote பண்ணுங்க.
 
Last edited:
Top