Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இணையா துருவங்கள் - 1

Advertisement

மாவிலை, தோரணங்கள், என்று அந்த வீட்டை இயற்கையே அம்சமாக விழாக்கோலத்தில் எடுத்து காட்டியது. பரபரப்பாக ஒடி கொண்டிருந்த பெரியவர்கள், சந்தோஷத்தில் தத்தளிக்கும் சிறு பிள்ளைகள், கண்ணாடி முன் நின்று நகர மறுக்கும் பெண்கள். அவ்வளவு அழகாக இருந்தது அந்த வீடு.

"அண்ணா மேக்கப் கரெக்ட்டா... இருக்கா?" முகத்தை திருப்பி திருப்பி கேட்டாள் தமிழ் தங்கை பவித்ரா.

நிமிர்ந்து பார்த்தவன், "இன்னும் கொஞ்சம் போட்டுக்கோ டா செல்லம் அண்ணனுக்கே உன்ன அடையாளம் தெரியாம போய்டும்" சிரித்து கொண்டே கூறினான் அவளை கேலி செய்ய.

"இப்டி எல்லாம் அண்ணிகிட்ட பேசுனா மவனே டைரக்ட்டா உனக்கு டிவோர்ஸ் தான். பொண்ணுங்க என்ன பண்ணாலும் சூப்பர்னு சொல்லி பழகு டா மாங்கா" சிலுப்பி கொண்டு வெளியே சென்றுவிட்டாள் பவி.

"எவனாச்சும் மாப்பிள்ளையை மதிக்கிறானா பாரு அது அது அதுவேலையா தான் பாக்குது" கண் வாசலிலேயே இருந்தது அவனுக்கு. வெளியே சென்றவள் மீண்டும் உள் வந்து "ஆமா எங்க ஆதி அண்ணாவ காணோம் ?"

பதறி சென்று அவள் வாயை மூடினான், "தெய்வமே தயவு செஞ்சு பேச்சுக்கு கூட அவன் பேர சொல்லிராதடா, அண்ணே பாவம்ல. அவனுக்கு பாம்பு காது எங்க இருந்தாலும் ஓடி வந்துருவான். அந்த நாய் மட்டும் வந்துச்சுனா என் கல்யாணம் கண்டிப்பா நடக்காது"

"இருடி.. அண்ணா வந்ததும் போட்டு குடுக்குறேன்" தன் சகோதரனை முறைத்து கொண்டே கூறினாள் .

"அவன் குடுக்குற அந்த இத்து போன சாக்லேட்காக என்ன அண்ணா பதவில இருந்து தூக்கிட்டியா நீ?" நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு பொய் கோபத்தோடு கேட்டான்.

"ஆமாடா போ போய் குளி இன்னைக்காச்சும் கப்பு தாங்கல" மூக்கை பொத்திக்கொண்டே காற்றில் விசிறினாள் தமிழின் தங்கை.

கொண்டு வந்த சட்டையை அவன் கட்டிலில் வைத்துவிட்டு வெளியே சென்றாள்.

'கடவுளே அவன் வரதுக்குள்ள எப்டியாச்சு நிச்சயம் நடந்துடனும்' வேண்டிக்கொண்டே குளிக்க சென்றான். சற்று நேரத்தில் பெண் வீட்டார் வந்து சேர்த்தனர். தமிழ் வீடு சற்று பெரியதாக இருப்பதால் நிச்சியத்தை அவர்கள் வீட்டிலே வைக்க திட்டமிட்டு இருந்தனர்.

சாஸ்திர சம்ரதாயங்கள் நடக்க கல்யாண பெண்ணை அழைத்து வர கூறினர், வெட்கத்துடன் குனிந்த தலை நிமிராமல் வந்து அமர்ந்தாள் மகிழி. தன்னை ஒருமுறை நிமிர்த்து பார்க்கமாட்டாளா என்று அவளின் கண்களை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டே இருந்தான் தமிழ். ஏனோ அந்த ப்ளூ கலர் பட்டு புடவை அவளை இன்னும் இன்னும் அழகாய் காட்டியது அவனுக்கு.

"டேய் மச்சா என்னடா பொண்ணுக்கு மூக்கு கோணாயா இருக்கு"

பதறி திரும்பி பார்த்தான் தமிழ், பின்னல் நின்றது ஆதி கேசவன் என்கின்ற ஆதி, ஆம் யார் வர கூடாது என்று வேண்டினானோ அவனே தான்.மெரூன் கலர் ஷர்ட் முழங்கை வரை மடித்து வேஷ்டி சட்டையில் அங்கு இருந்த இளம் பெண்களின் கண்களை தன் பக்கம் ஈர்த்து இருந்தான், கேசத்தை கோதிக்கொண்டே வீட்டை பார்வை இட்டவன் எவரேனும் சிக்குவார்களா என்று பார்த்தான்.

"நீ என்ன டா பண்ற இங்க?" ஆச்சிரியம் மாறாமல் கேட்டான் தமிழ்.

"அது இல்ல டா தா... நீ" ஆதியின் வாயை மூடினான் தமிழ், "டேய் தெய்வமே பேர முழுசா சொல்லு டா. பொண்ணு வீட்டுக்காரங்க எல்லா இருகாங்க"

"சரி மச்சி, நீ சந்தோசமா இருக்குற மாதிரி என்னமோ உள்ளுக்குள்ள உறுத்துச்சா அதான் ஓடி வந்துட்டேன்" ஆதி மீண்டும் கண்களை வீடு முழுக்க பரப்ப விட்டான்.

"மாப்பிள்ளை இங்க பாருங்கோ" ஐயர் தமிழை அழைத்து மோதிரத்தை கையில் கொடுத்தார்,

"டேய் இப்பயும் ஒன்னு கெட்டு போகல அவ மூக்கை பாருடா உன் மூக்கை விட ரொம்ப கோணி இருக்கு இப்டியே போச்சு அப்பறம் உன் பிள்ளையும் இதே மாறி தான் ஆகிடும். கோண மூக்கு குடும்பம்னு தான் எல்லாரு சொல்லுவாங்க பாத்துக்கோ" தன்னால் என்ன என்ன செய்ய முடியுமோ அதை அனைத்தையும் செய்தான் ஆதி.

"டேய் அவ மூஞ்சியே கோணி இருந்தாலு பரவால அவ தான் எனக்கு வேணும்" விடாமல் நின்றான் தமிழ்.

'பயபுள்ள கல்யாணம் பன்னிருவானோ?' மனதில் நினைத்த ஆதி, "சேரி அப்ப எனக்கு அவ தங்கச்சிய கரெக்ட் பண்ணி குடுக்குறியா?"

"டேய் நா உன் நண்பன் டா மாமா இல்ல"

"ஆனா அவளுக்கு நீ மாமா தான?"

"செருப்பாலேயே அடிப்பேன் நாயே சோறு திங்க தான வந்த தின்னுட்டு கிளம்பு" வெளியில் கோபமாக இருந்தாலும் உள்ளுக்குள் அழுதான்.

"டேய் தமிழு என்ன டா பண்ற மோதிரத்தை போட்டு விடு"தன் தந்தையின் குரல் கேட்டு திரும்பியவன் அப்பொழுது தான் உணர்ந்தான் அனைவரும் இவனை தான் பார்த்து கொண்டு இருந்தனர், "சாரி பா".

மகிழி கை நீட்ட அதை ஆசையாய் ஏந்தி மோதிரத்தை அவள் முகத்தை பார்த்து கொண்டே அணிவித்தான், அவளும் இவனுக்கு மோதிரம் போட சிரித்த முகத்துடன் வாங்கியவன் அருகில் மீண்டும் வந்து நின்றான் ஆதி, "வாழ்த்துக்கள்" மகிழியை நோக்கி கை நீட்டியவன் அவளுடன் கை குலுக்கிய பிறகு, "ஏங்க அது உங்க தங்கச்சி தான?" சாக்லேட் தட்டை பிடித்து விருந்திரனற்கு சாக்லேட் குடுத்து கொண்டு இருந்தால் ஒரு பெண்.

"ஆமா"

"அவுங்க பேர் என்ன"

ஆதி கையை பிடித்து இழுத்தான் தமிழ் அவனை கண்டு கொள்ளாதவன் மகிழியின் பதிலுக்காக காத்திருந்தான் அவளையே பார்த்து கொண்டு, "அவ பேரு வர்ஷினி. ஆனா அவ ஒரு பையன லவ் பண்ணுறா. எங்க கல்யாணம் முடிஞ்சதும் அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க பிளான் பன்னிருக்காங்க"

ஏனோ ஆதியையும் அவன் கேட்ட கேள்வியையும் பார்த்து அவளுக்கு கோபம் வர வில்லை, சிரிப்பு தான் வந்தது.

'ஐயையோ கண்ணுல பட்ட ஒன்னும் போச்சா, சேரி பேசி கெடுத்து விட பாப்போம்' என்று நினைத்தவன் மேலும் பேச தொடங்கினான்.

"அட என்னங்க நீங்க பொம்பள பிள்ளையை முன்ன பின்ன தெரியாதவங்களுக்கா கல்யாணம் பண்ணி வைப்பிங்க, நல்லா தெரிஞ்ச பையன பாத்து பண்ணுங்க, ஏன் சொல்றேன்னா உலகம் ரொம்ப கெட்டு போய் கெடக்குது, பாருங்க இப்ப நா இருக்கேன் நல்லா தெரிஞ்ச பையன் இந்தா இவன்ட்ட கூட கேட்டு பாருங்க"

தமிழிடம் திரும்பி, "என்னடா சொல்லு என்ன பத்தி" என்றான் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு."ஆமா பிச்சைக்காரனுக்கு கூட கல்யாணம் பண்ணி குடுத்துறலாம் இவனுக்கு கல்யாணம் பண்ணி குடுக்குறதுக்கு" வாய் விட்டு சிரித்தே விட்டாள் மகிழி.

"ஐயோ போதும் இருங்க, அவ லவ் பண்ணது எங்க அத்தை பையன் தான்"

"என்னடா ஆதி உனக்கு இன்னைக்கு நேரமே சேரி இல்ல போல" தமிழிடம் திரும்பி, "சரி சோறு என்ன போடுறீங்க"

"சாம்பார் தான்"முகம் உடனே வாடியது ஆதிக்கு, "ஏன்டா பொண்ணு தான் தர மாட்றீங்க கறி சோறு கூட போட மாட்டிங்களா?"

"டேய் உனக்கு வாய் ரொம்ப அதிகம் ஆகிடுச்சு இப்பலாம்"

"அண்ணா அவன் கெடக்குறான் நீங்க வாங்க அப்பா உங்களுக்கு வாங்கி வச்சிட்டாரு" ஆதியை பவித்ரா அழைத்தாள்.

"டேய் உன்ன விட உன் குடும்பம் எல்லாம் அறிவாளிடா"

"ஏய் அவனுக்கு சோறு போடாதடி அவன் என் கல்யாணத்த நிறுத்த பாத்தான் படுபாவி" தமிழ் கத்தினான் பவித்ராவிடம்.

"டேய் போடா போடா , நான் போய் பிரியாணி சாப்டுட்டு வரேன்" அவன் சொல்வதை எதையும் காதில் வாங்காமல் சென்று பவித்ரா குடுத்த பிரியாணி பார்ஸலை சாப்பிட ஆரம்பித்தான்.

"ஏன்னா அவன் தான் உங்கள நிச்சியத்துக்கு கூட கூப்புடலை அவன் நிச்சியத்துக்கு ஏன் வந்தீங்க ? ஆபீஸ் வரப்ப வச்சு செஞ்சிருக்கலாம்ல, அத விட்டுட்டு வந்துட்டீங்க" கோபத்துடன் கேட்டாள் நண்பனின் தங்கை .

"அட இல்லமா அவன் எனக்கு தெரியாம இன்விடேஷன் கார்டை தெரியாம போட்டு போற மாதிரி விட்டுட்டு போனான், ஆனா நா தான் அத பாத்துட்டேனே. இப்ப கூட இந்த பிரியாணியை அவன் தான் அப்பா கிட்ட வாங்கிட்டு வர சொல்லிருப்பான். நான் இல்லாம அவன் எதையும் செய்ய மாட்டான், அவன் இல்லாம நானும் எதையும் செய்ய மாட்டேன்".

அவளுக்கு இவர்கள் நட்பை பார்த்து கொஞ்சம் பொறாமையாகத்தான் இருந்தது, "சரி அந்த பிரியாணியை பேசிட்டே நீ சாப்டறலாம்னு நெனச்சியா" அவன் தலையில் அடித்து "ரெண்டும் லூசு" நண்பர்களை திட்டிக்கொண்டே பரிமாறினாள் அவனுக்கு.

ஆதி கேசவன். சிரிப்பை தவிர அவன் முகத்தில் ஒன்றும் இருக்காது, நண்பனுக்காக என்னவேனாலும் செய்வான் தயங்காமல், தந்தையை சிறு வயதிலேயே இழந்தான், தாயும் சிறிது காலத்தில் உயிரே பிரிய, சகோதரியின் விருப்பங்களை முகம் சுளிக்காமல் செய்து முடிப்பான். தமிழின் தந்தை தான் அவர்கள் படிப்பு செலவை ஏற்றார், ஆனால் கல்லூரி செல்ல ஆரம்பித்து பின்னர் தன் படிப்பு செலவை தானாக பார்த்து கொண்டவன் சிறுகச் சிறுகத் தன் தங்கைக்கும் பார்க்க ஆரம்பித்தான். அவனுக்கு பெரிதாக ஆசை ஒன்றும் இல்லை தங்கைக்கு ஒரு நல்ல வரன் பார்க்க வேண்டும், கிடைக்கிற வருமானத்தில் ஒரு சிறிய சொந்த வீடு.

"டேய் ஆதி பந்தில பரிமாற வாடா ஆள் இல்லையாம்"

"டேய் இப்ப தெரியுது ஏன் பிரியாணி வாங்கி குடுத்தீங்கன்னு" வாய் முழுதும் பேச முடியாத அளவு பிரியாணி.

வேக வேகமாக உண்டவன், "வரேன் பா" கூறிக்கொண்டே, "இன்னொரு பார்சல் ஒளிச்சு வை உன் அண்ணன்கிட்ட இருந்து. வந்து சாப்பிடுறேன்" சிரித்துக்கொண்டே அவன் உத்தரவை செய்தாள் பவித்ரா.


யாராவது இந்த சைட்ல கதை எழுதுறவங்க இருக்கீங்களா? ப்ளீஸ் என்னோட முகநூல் பக்கத்துல ஒரு ஹாய் செய்தி அனுப்புங்க... சில சந்தேகங்கள் இருக்கு


எப்படி இருக்கு மக்களே? கதை புடிச்சிருக்குனு நம்புறேன். ஷேர் பண்ணுங்க vote பண்ணுங்க.
Super semma starting smile oda padikkren
 
Top