Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இணையே என் உயிர்த்துணையே! -1-

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -1
அந்த வெடிப்புச்சத்தம் பலமாக கேட்டது.

அதில் திடுக்கிட்டு கண்விழித்தாள் மெல்லினி. அருகில் கயல்விழி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அவளைப் பார்த்ததும் மெல்லினிக்கு ஆச்சர்யமாய் இருந்தது.

'இவ்வளவு பெரிய சத்தம் கேக்குது. அது கூட கேட்காம தூங்குறா.. ஆமா என்ன சத்தம்...?' என்று அவசரமாய் போர்வையை விலக்கிவிட்டு எழும்பினாள். சுற்றும் முற்றும் பார்த்தாள். சத்தம் நிச்சயமாய் வீட்டிற்குள் இருந்து தான் கேட்டது என்று தீர்மானித்து அறைக்கு வெளியே வந்தாள்.

ஹாலின் மேஜை மீது எதுவோ தீப்பற்றி எரிந்துக்கொண்டிருந்தது. அதை பயத்தோடு உற்றுப் பார்த்தாள். கயல்விழியின் செல்போன். என்ன செய்வது என்று தெரியாமல், அவசரமாய் ஜக்கில் இருந்த தண்ணீரை அதன்மீது கவிழ்த்தாள். ப்ளக்கை பிடுங்கிவிட்டாள். நல்லவேளையாக ஷாக் எதுவும் அடித்து தொலையாமல், நெருப்பு அணைந்தது. எப்படி தீப்பற்றி வெடித்தது என்று யோசித்தாள். அப்போது தான் பொறி தட்டியது. செல்போனை சார்ஜ்க்கு போட்டுவிட்டு உறங்கியிருக்கிறாள் கயல்விழி. மெல்லினிக்கு அவள் மீது கோபம் கோபமாக வந்தது.

'லூசுப்பொண்ணு. எத்தனை தடவை சொன்னாலும் கேட்காம சார்ஜ்லயே விட்டுட்டு தூங்கிடுறா...' என்று திட்டிக்கொண்டே டவலோடு குளிக்க கிளம்பினாள். நின்றாள். மறுபடியும் திரும்பிப்பார்த்து அது முற்றிலுமாக அணைந்துவிட்டதை உறுதிசெய்து கொண்டு குளிக்கப்போனாள்.

'செல்போன் கதியை அவளே வந்து பார்க்கட்டும்.'

மெல்லினி குளித்துவிட்டு வந்ததும் கயல்விழி கண்களை கசக்கிச்கொண்டே எழும்பி வந்தாள்.

"ஹா.... என்னோட போன் எ.. ங்..கடி....?" என்று கொட்டாவியை கலந்து பேசினாள்.

"அதோ பார் இருக்கு..." என்று அவள் கைகாட்டிய இடத்தில் எதுவோ கருகிக்கிடந்தது.

"என்னது அது..." என்று உற்றுப்பார்த்தாள் கயல்வாழி. அடுத்து அலறினாள்.

"ஐயையோ.. அது என் போன் தானே.....?"

"உன் போன் தான்.. "

"அது ஏன் இப்படி இருக்கு..?" என்று அதை நெருங்கினாள்.

"ம்.. விடிய விடிய சார்ஜில இருந்தா இப்படித்தான் வெடிக்கும். உனக்கு எத்தனை தடவை சொல்றது, சார்ஜ்க்கு போட்டுட்டு தூங்காதனு. ஒன்னு என்னோட டைம்மிங் சார்ஜர்ல போடு. இல்லனா நீ கழற்ற வேண்டிய டைம்மிங்கை கெஸ் பண்ணி ஒரு அலாரம் சரி வை. அப்போ ஞாபகமா கழற்றலாம்."

கயழ்விழிக்கு அழுகை அழுகையாக வந்தது.

"என்னோட போன்.. நான் எப்படி ரகுவோடு பேசுவேன்.... "

"சரி சரி அழுகாத.. எனக்கு லாஸ்டா ஒரு கிப்ட் வவுச்சர் கிடைச்சிச்சு. அதுக்கு ஒரு போன் வாங்கலாம்." என்றாள் மெல்லினி.

"இல்ல வேணாம். நானே வாங்கிக்கிறேன்."

"ரொம்ப பண்ணாத.. போ! போய் குளி. சாப்பிட்டு நாம வெளிய போகலாம்.." என்று சொல்லிவிட்டு சமையலறைக்குள் புகுந்தாள்.

மெல்லினியும் கயல்விழியும் கொழும்பில் ஒரு சிறிய வீட்டில் ஒன்றாக வசிக்கும் தோழிகள். வேலை மட்டும் வேறுவேறு இடத்தில். கயல்விழி ஒரு வார நாளிதழிலும், மெல்லினி ஒரு பாங்கிலும் வேலை செய்கின்றனர். இருவரும் வேலை நிமித்தமாக தங்குவதற்கு இடம் தேடிக்கொண்டிருந்த போது தெரிந்தவர் மூலமாக இந்த வீடு கிடைத்தது. இருவரும் வீட்டின் வாடகையை பகிர்ந்து கொண்டு இரண்டு வருடங்களாக அந்த வீட்டில் வசிக்கின்றனர். அதனால் செலவீனங்களை சமாளிக்க ஏதுவாய் இருந்தது. இரண்டு படுக்கையறைகளும், சமையலறை, குளியலறை, ஹாலுமாய் இருவருக்கும் போதுமானதாய் இருந்தது அந்த குட்டி வீடு.

அந்த ஷாப்பிங் சென்டரில் கூட்டம் அள்ளியது. அன்று ஞாயிற்றுகிழமை என்பதால் பலரும் ஷாப்பிங் சென்டரின் காஷ்கவுண்ட்டருக்கு வேலை வைத்துக்கொண்டு இருந்தனர். தோழிகள் இருவரும் அந்த செல்போன் கடைக்குள் நுழைந்து கயலின் விருப்பத்துக்கு தகுந்தாற்போல ஒரு செல்போனை வாங்கிக்கொண்டு, அடுத்து இருந்த கிப்ட் ஷாப்புக்குள் நுழைந்தனர்.

"என்ன வாங்க வந்திருக்கோம் மெல்லினி?" என்றாள் கயல்விழி.

"ஹூம்.. தெரியல... "

"அப்ப நீ சுத்தி சுத்தி பார்த்துக்கிட்டு இரு. நான் ரகுவோட கொஞ்சம் பேசிட்டு வாரேன். காலையில இருந்து பேசாம தலையே வெடிச்சிடும் போல இருக்கு..." என்று மெல்லினியை கழற்றிவிட்டு அவள் ஒருபுறமாய் நகர்ந்துவிட்டாள்.

அப்படியே சுற்றிபார்த்துக்கொண்டு வந்த மெல்லினியின் கண்களில் அந்த கண்ணாடியிலான விநாயகர் சிலை பட்டது. அவள் அதை ஆவலோடு எடுக்க கைநீட்டிய போது, இன்னொரு கையும் அதை நோக்கி நீண்டு, அந்த சொற்ப நொடிகளில் அந்த சிலை கீழே விழுந்திடத் தொடங்கியது. அதை பிடித்திட அவள் கீழே குனியும் போதே, நல்லவேளையாக அந்த இன்னொரு கரம் அதை தாங்கிப்பிடித்தது. மெல்லினியின் கரங்களோ அவள் மான்விழிகளை மூடிக்கொண்டிருந்தது.

எந்த சத்தமும் கேட்காததால் மெல்லக்கண்களைத் திறந்தவள் விழிகள், எதிரே இருந்த விழிகளோடு கலந்தன. அந்த கணத்தில் அவள் தன்னையும் மறந்தாள். அவள் உடல் அந்தரத்தில் பறப்பது போன்றதொரு பிரமை தட்டியது. ஒருசில நொடிகளில் தன்னை சுதாகரித்துக்கொண்டவள் விழிகள், மருள மருள விழித்தன.

எதிரே இருந்தவன் இதழ்களின் கடைகோடியில் புன்னகையொன்று அரும்பி, அவனது கண்கள் சிரித்துக்கொண்டிருக்கையிலேயே அவன் அவளைத் தாண்டி நகர்ந்தான். மெல்லினியோ அவளையும் அறியாமல் அவனை திரும்பிப்பார்த்தாள். அப்போது சடுதியாக அவனும் திரும்பிப்பார்த்துவிட இவள் அவசரமாய் திரும்பிக்கொண்டாள். சிறிதுநேரம் அவள் அந்த இடத்திலேயே தன்னை மறந்து நின்றுக்கொண்டிருந்தாள்.

" மெல்லினி! வாங்கிட்டியா? போகலாமா..?" என்றவாறு வந்தாள் கயல்விழி.

"ம்..."

"என்னடி பிடிச்சுவச்ச பிள்ளையாராட்டம் நிற்கிற... என்ன ஆச்சு..?"

"ஒ..ஒன்னுமில்ல... வா போகலாம்.. " என்று தோழியை இழுத்துக்கொண்டு நகர்ந்தாள். அவள் வாழ்க்கை வேறுவிதமாய் நகரப்போவது தெரியாமல்.
 
Attachments

  • IMG_20220920_093022.jpg
    IMG_20220920_093022.jpg
    222.9 KB · Views: 1
Last edited:

Nirmala vandhachu ???
Best wishes for your story ma ???
Nalla irrukku ma
 
Top