Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இணையே என் உயிர்த்துணையே!-10-

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -10

"மெல்லினி! சாப்பிட வா..."

"எனக்கு வேண்டாம் முகில். என்னைக் கண்டாளே உங்க அம்மா சாப்பிடாம எழுந்து போயிடுவாங்க.. நான் வரல..."

"நான் தான் இருக்கேனே..." முகிலன் அவளை கட்டாடப்படுத்தி சாப்பிட அழைத்துச்சென்றான்.

சமையலறையிலிருந்து தண்ணீர் கப்பை எடுத்துக்கொண்டு வந்த பாரிஜாதம் அதை மேஜையில் டக்கென்று வைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டார். மெல்லினி செய்வதறியாது விக்கித்து நின்றுவிட்டாள்.

முகிலன் அவளை அமர வைத்தான். தன் கையாலேயே உணவு பறிமாறினான். பூமிநாதன் அங்கு எதுவுமே நடக்காதது போல தட்டை மட்டும் பார்த்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்.

முகிலன் சாப்பாட்டு தட்டோடு பாரிஜாதத்தின் அறைக்கு சென்று தட்டினான். நெடுநேரமாய் தட்டிக்கொண்டே இருந்தான். அவர் கடைசிவரை கதவை திறக்கவேயில்லை.

" அவளை விட்டுடு முகிலா... போ! போய் நீயும் சாப்பிடு. அந்த பொண்ணு சாப்பிடாம உட்கார்ந்து இருக்கு.." பூமிநாதன் சொல்லிவிட்டு வாசல் பக்கமாய் சென்றுவிட்டார்.

அப்பா தான் அதிகபடியான வெறுப்பை காட்டுவார் என எதிர்பார்த்திருந்த முகிலனுக்கு பூமிநாதனின் அணுகுமுறை அதிசயமாய் இருந்தது. அம்மாவை சமாதானம் செய்து கொள்ளலாம் என்று வந்த முகிலன் அவரது தாக்குதல் புரியாமல் கலங்கினான்.

மெல்லினியின் கண்களில் துளிர்த்த நீர் அவளின் தட்டில் வந்து விழுந்தது. முகிலனுக்கு அவளைப் பார்க்க கஷ்டமாக இருந்தது.

அவளை காப்பாற்றுவதாக நினைத்துக்கொண்டு இன்னொரு படுகுழியில் தள்ளிவிட்டதாக நினைத்து வருந்தினான்.

மெல்லினி கட்டிலின் ஓரத்தில் அமர்ந்து கண்ணீரில் கரைந்துக்கொண்டு இருந்தாள்.

"மெல்லினி! என்னை மன்னிச்சிடு... உனக்கு பாதுகாப்பும், அன்பும், அரவணைப்பும் இந்த சமயத்தில உனக்கு தேவைனு தான் இங்க கூட்டிக்கிட்டு வந்தேன். அம்மா இப்படி நடந்துக்குவாங்கனு நான் எதிர்பார்த்தது தான்.. ஆனா அதனால நீ ரொம்ப காயப்படுறனு நினைக்கும் போது ரொம்ப வருத்தமா இருக்கு...."

" நீங்க சொல்றதை கேட்டுக்கிட்டு நான் இங்க வந்திருக்கவே கூடாது. பெரிய தப்பு செஞ்சிட்டேன்...."

இதற்கு பதில் சொல்லத்தெரியாமல் அவன் உள்ளுக்குள் குமுறினான்.

மெல்லினி கட்டிலில் சுருண்டு படுத்துக்கொண்டாள். முகிலன் அவனது அறையில் இருந்த சோபாவில் படுத்துக்கொண்டு அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான். இருவரும் ஒரே அறையில் வாழ்கிறார்கள். ஆனால் தனித்தனியே. மெல்லினியின் கன்னங்களில் கண்ணீர் வழிந்துக்கொண்டே இருந்தது. இந்த பத்து நாட்களாக அவன் பார்த்துக்கொண்டு இருப்பது தான்.

அன்று அவர்களைக் கண்டதும் மயங்கிச் சரிந்த பாரிஜாதம், கண்விழித்ததும் முகிலன் ஒன்றே ஒன்றுத்தான் சொன்னான்.

"அம்மா... இது மெல்லினி ..நாங்க காதலிக்கிறோம். இனிமே இவ என் கூடத்தான் இருக்கப்போறா.. "

அவன் பேசியதே கேட்காதது போல திரும்பிக்கொண்ட பாரிஜாதம் அதற்கு பிறகு அவன் முகத்தையே பார்க்கவில்லை. அவள் யார்? குலம் என்ன? கோத்திரம் என்ன எதுவும் கேட்கவில்லை. முகிலனோடு அவள் ஒரே அறையில் இருப்பதை பற்றியும் அலட்டிக்கொள்ளவில்லை. அவளைக்கண்ணால் பார்க்கக்கூடாது என்று பாரிஜாதம் அறையை விட்டு வெளியிலேயே வருவதில்லை. லிவிங் டூ கெதர் கலாசாரம் பற்றி பெயரளவில் கேட்டிருந்த பூமிநாதன்- பாரிஜாதம், பொத்தி பொத்தி வளர்த்த மகன் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஒரு பெண்ணோடு வீட்டில் கண்முன்னே இருப்பதை சகித்துக்கொள்ளவும் முடியாமல் தவித்தனர். ஊர் வாயை மூட முடியாத பூமிநாதன் மகனிடம் எதுவும் கேட்கவில்லை. ஆனால் அவனைக்கூப்பிட்டு ஒன்றை மட்டும் சொன்னார்.

"முகிலா! நீ ஏன் இப்படி செய்யிறனு நான் கேட்கப்போறதில்ல... அந்த பொண்ணு நம்ம கெஸ்ட் அவுசில ஒரு வாரமா இருந்ததை வாட்ச்மேன் சொல்ல நான் தெரிஞ்சிக்கிட்டேன். நீ காரணம் இல்லாம எதையும் செய்ய மாட்டனு நம்புறேன். இருந்தாலும் என்னாலயும் இதை ஏற்றுக்க முடியல... உன் அம்மாவாலயும் முடியல... ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கா... அவளுக்கு கொஞ்சம் அவகாசம் கொடு..." இவ்வளவு தான் சொன்னார்.

முகிலன் நடந்ததையே நினைத்துக்கொண்டிருக்கையில் தான் மெல்லினி அலறத்தொடங்கினாள்.

"வேணா.. வேணாம்... என்ன... அம்மா... அம்மா... முகி....." முகிலன் பாய்ந்து எழுந்து அவளை தட்டிக்கொடுத்தான்.

"ஒன்னுமில்ல.. மெல்லினி .. நான் பக்கத்துல தான் இருக்கேன்... பயப்படாத... ஒன்னுமில்ல... ஒன்னுமில்ல ... தூங்குமா..."

அவள் அவன் மடியிலேயே அசந்து தூங்கத்தொடங்கினாள்.

இது கடந்த பதினெட்டு நாட்களில் ஆறாவது தடவையாக நடப்பது தான். தூக்கத்தில் அரைகுறையாக விழித்து அவ்வப்போது கத்துகிறாள். உடலை பரபரவென தேய்த்துக்கொள்கிறாள். திடீரென விழித்துக்கொண்டு யாரோ அருகில் இருப்பது போல ஒரு பிரமையை அவளே ஏற்படுத்திக்கொண்டு பதறி கத்துகிறாள். காலையில் நடந்த எதுவுமே அவளுக்கு தெரிவதில்லை. இதையெல்லாம் பார்த்துக்கொண்டு முகிலன் தான் உடைந்து போகிறான்.

'அவள் மனதுக்குள் எத்தனை வலிகளும் ரணமும் இருந்தால் இப்படி தூக்கத்திலும் நிம்மதியை தொலைத்துவிட்டு இருப்பாள். இவளை நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும்..' முகிலன் இப்படியாக ஒரு முடிவெடுத்தான். பெரும்பாலும் வீட்டிலேயே இருந்தான். அவனது இந்த தீடீர் காதலைப்பற்றி கேள்வி கேட்டவர்கள் வாயை ஒரு சிறு புன்னகையால் சமாளித்தான். ஆனால் தன் தாயை சமாளிக்கும் வழி மட்டும் தெரியாமல் தவித்தான். அவனுக்கு வழியும் சொல்லத்தெரியாமல் இருள் சூழ்ந்த இரவும் மௌனமாய் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது.

மெல்லினிக்கு முகிலனோடு இருப்பது ஆறுதலாய் இருந்தாலும் அவளது வருகையால் ஏற்பட்ட குழப்பத்தில் அந்த குடும்பம் எப்படி நிலைகுலைந்திருக்கும் என அறிந்தே இருந்தாள். சமூகத்தில் உயர் நிலையில் இருக்கும் ஒரு குடும்பத்தின் ஒரே மகன் யாரோ ஒரு பெண்ணை திடீரென கொண்டு வந்து நிறுத்தி இவள் தான் என் காதலி என்றால் யார் தான் ஏற்றுக்கொள்வார்கள். மெல்லினியால் இதை சகித்துக்கொள்ளவே முடியவில்லை. அவளது மனம் பட்ட வேதனையிலிருந்தும் மீள முடியாமல் முகிலனது வார்த்தைகளிலிருந்தும் மீள முடியாமல் தவித்தாள். அவளுக்கு அன்று நுவரெலியாவிலிருந்து திரும்பும் போது நடந்த சம்வங்கள் நினைவுக்கு வந்தது.

நீண்டதூரம் வண்டியை ஓட்டிக்கொண்டு வந்ததில் கலைப்படைந்த முகிலன் சிறிது நேரம் ஜீப்பை நிறுத்திவிட்டு அங்கிருந்த ரெஸ்டூரன்டில் தேநீர் குடிக்கலாமென மெல்லினியை அழைத்தான். அவள் வெளியில் இறங்கவே மறுத்துவிட்டாள்.

"என்னாச்சு மெல்லினி? "

"ஒ..ஒன்னுமில்ல.... நான் வரல முகில்... என்னால யாரையும் பார்க்கவே முடியல... எல்லாரும் என்னையே குறுகுறுனு பார்க்கிற மாதிரி ஒரு உணர்வு வருது.. "

"நீ இப்படில்லாம் பேசக்கூடாது மெல்லினி. இப்படீ இருந்தா நீ எப்படி வேலைக்கு போகமுடியும்.. "

"வேலை.. வேலைக்கா... நா.. அதை பத்தி ..யோசிக்கவேயில்ல... இல்ல முகில்! என்னால முடியாது.. எனக்கு யாரையும் பார்க்க பிடிக்கல.. யாரோடவும் பேச பிடிக்கல... நான் தனியா இருக்கனும்..."

"என்னை கூட பார்க்க பிடிக்கலயா மெல்லினி? " அவனது கேள்வியில் தவித்துவிட்டாள்.

"நீங்களும் உங்க அருகாமையும் இல்லனா இன்னேரம் நான் செத்திருப்பேன் முகில்... " என கைகளுக்குள் முகத்தை புதைத்து அழத்தொடங்கினாள்.

"இன்னொரு தடவை சாவை பத்தி நீ பேசக்கூடாது.. நான் என்னைக்கும் உன் கூடத்தான் இருப்பேன். நீயே போக சொன்னாலும் நான் உன்கூடத்தான் இருப்பேன்..."

"இல்ல முகில். உங்க நட்புக்கு நான் அருகதையற்றவள். "

"மெல்லினி! நான் உன்னை காதலிக்கிறேன்..."

"நோ!!! " அதிர்ச்சியில் அவள் கத்திவிட்டாள். அவள் கத்தலை பொருட்பபடுத்தாமல் அவன் பேசத்துவங்கினான்.

"கண்டதும் காதல்னு சொல்ல மாட்டேன். ஆனா உன்னை முதன் முதலா பார்த்தப்பவே நீ எனக்குள்ள ஒரு தாக்கத்தை ஏற்படுத்திட்ட... உன்னை எங்க தேடிப்பிடிக்கிறதுனு இருந்தப்பதான் ரகுவோட கல்யாணத்துல பார்க்கவும் பழகவும் வாய்ப்பு கிடைச்சது. உன் மேல இருந்தது நேசம் எந்த கட்டத்துல காதலா மாறிச்சினு சத்தியமா எனக்குத் தெரியல.. ஆனா.. நான் உன்னை சீரியஸா லவ் பண்றது நிஜம்... என் காதலை ஏத்துக்க மெல்லினி ..."

"நீங்க பேசுறது சுத்த பைத்தியக்காரத்தனம் முகிலன் "

"எது பைத்தியக்காரத்தனம்? நான் உன்னை லவ் பண்றதா? உன் மனசை தொட்டு சொல்லு.. நீ என்னை காதலிக்கலனு...."

அவள் தடுமாறினாள்.

"அ...அது... வந்து..."

"உன்னால இல்லனு சொல்ல முடியாது.. ஏன்னா நீயும் என்னை லவ் பண்ற.. அது எனக்குத் தெரியும்..."

"ஆமா.. விரும்புறேன் தான்.. ஆனா இனிமே அதுக்கு வாய்ப்பில்ல.. எனக்கு என்ன நடந்திச்சினு தெரிஞ்சுமா என்னை லவ் பண்றேனு சொல்றிங்க... "

"தெரிஞ்சதால தான் உன்னை இன்னும் அதிகமா காதலிக்கிறேன்.. உன்னை எந்த நிலையிலும் கைவிட நான் தயாரா இல்ல..."

"எனக்கு வாழ்கை கொடுக்கிறிங்களா முகில்?"

"அப்படி நீ நினைச்சா அந்த நினைப்பை இன்னையோட மாத்திக்க.. என் வாழ்கையை உன்னோட ஷேர் பண்ணிக்கனும்னு நினைக்கிறேன்... "

"முகில்! நீங்க பேசுறதெல்லாம் சரி.. ஆனா.. எனக்கு இப்படி ஆனது.. என்னால உங்களுக்கு உடலளவிலும்.... மனசளவிலும்.. எந்தவித சந்தோஷத்தையும் கொடுக்க முடியும்னு எனக்குத்தோனல..." அதை சொல்லி முடிப்பதற்குள் பெரும்பாடு பட்டு போனாள்.

அவள் சொல்ல வந்ததை அவன் உணர்ந்துக் கொண்டான்.

"மெல்லினி! நான் நேசிக்கிறது உன் உடம்பை இல்லை... அத்தனை கீழ்த்தரமானவனா நான்.... "

"அது..இல்ல.. முகில்.."

"நான் நேசிக்கிறது உன்னோட கள்ளம் கபடம் இல்லாத மனசை.. மத்தவங்களுக்கு உதவி செய்யனும்னு நினைக்கிற மனசை..
சின்ன சின்ன விஷயங்களில சந்தோஷத்தை தேடுற உன் மனசை... யாருக்கும் கெடுதல் நினைக்காத உன் மனசைத்தான்... "

"யதார்த்தமா பேசுங்க முகில். எத்தனை நாள் மனசையே காதலிப்பிங்க.. எல்லார்க்கும் தேவைகள் இருக்கு.. இப்படிப்பட்ட ஒரு நரக வாழ்கையை நான் உங்களுக்கு கொடுக்க விரும்பல... "

"அது என்ன மாதிரியான வாழ்கைனு முடிவு பண்ண வேண்டியது என் பிரச்னை ... நீ என்னோட இருக்கனும்... உன் வாழ்கையோட கசப்பான பக்கங்கள் எதையும் நான் புரடடிப்பார்க்க போறதில்ல... நீ அதை மறக்கனும். அதுக்கு என்னால கொடுக்க முடிஞ்ச அன்பை கொடுக்கனும்னு நான் எதிர்பார்க்கிறேன். இது தப்பா...?"

மெல்லினிக்கும் இந்ந சமயத்தில் ஒரு அன்பு தேவையாயிருந்தது. அதைகாட்டிலும் அந்த கசப்பான சம்பவத்திலிருந்து மீண்டு வர அவளை நேசிக்கும் ஒரு துணை தேவையாய் இருந்தது. முகிலன் கூட இருக்கும் போது அவன் அருகாமை பாதுகாப்பை தந்தது. அவனை அவள் நேசித்தது உண்மை. ஆனால் இத்தகைய இக்கட்டான நிலையில் அவன் வாழ்கையில் புகுந்து அவன் வாழ்கையையும் சிதைக்க அவள் விரும்பவில்லை.

"இல்லை.. முகில். இதெல்லாம் சரிப்பட்டு வராது..." முடிவாய் சொல்லிவிட்டாள்.

முகிலன் போரடி தோற்றான். அவளை அவளது வீட்டில் விட்டு விட்டு உணவு வாங்கி கொடுத்துவிட்டு சென்றான். ஆனால் ஏனோ மனசு கேட்காமல் காரை ரோட்டிலேயே போட்டுவிட்டு காத்திருந்தான்.

நீண்ட நாட்களின் பின்னர் வீட்டிற்கு வந்ததும் அவளுக்கு எல்லாம் புதுமையாக இருந்தது. கூடவே ஒரு பய உணர்வும் வந்தது.

ராத்திரி தனியாக உறங்க பெரும் சிரமப்பட்டாள். அந்த பாதகன் முகம் கண்முன் வந்து கொடுமை செய்தது. அவளைச்சுற்றி யார் யாரோ இருப்பது போன்ற பிரமையில் பித்துபிடித்தவள் போல கத்தலானாள். ஏதோ ஒரு உணர்வு தோன்ற முகிலனுக்கு அழைப்பெடுத்தாள். காரிலேயே காத்துகிடந்தவன் ஓடோடி வந்தான். அவனைக் கண்டதும் அவன் நெஞ்சில் தஞ்சம் புகுந்தவள் விடியும் வரை அவனை விட்டு அகலவேயில்லை. அப்போது தான் உணர்ந்தாள்.. முகிலன் அவளுக்கு எத்தனை தேவையாய் இருக்கிறான் என்று. அப்படித்தான் அவன் பேச்சைக் கேட்டு அவனோடு அவன் வீட்டுக்கு வந்தாள். திருமணம் செய்துக்கொள்ளாமலேயே.
 
Nirmala vandhachu ???
Nice epi
 
Top