Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இணையே என் உயிர்த்துணையே!-11

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -11

மெல்லினிக்கு இப்போது முகிலனது வீடு ஓரளவு பழகிவிட்டது. இப்போதைக்கு அவளுக்கு வேலைக்கு செல்லும் எண்ணம் இல்லாததால் லீவு போட்டிருந்தாள். முகிலன் அவளோடு இருக்கும் நேரம் தவிர அவனது புத்தகங்களே கதி என கிடப்பாள். அவளுக்கு நேரத்திற்கு உணவு அவளைத்தேடி வீட்டில் வேலை செய்யும் மயிலம்மா கொண்டு வந்து தந்துவிடுவாள். மெல்லினி ஏன் அங்கு இருக்கிறாள் என்ற ஆராய்ச்சிக்கெல்லாம் இடம் கொடுக்காமல் மெல்லினியோடு சகஜமாய் பேசினாள். ஏனோ அவளுக்கு மெல்லினியின் மீது ஒரு அன்பு தோன்றியது.

மெல்லினியும் மெதுமெதுவாய் கசப்பான நினைவுகளில் இருந்து வெளியில் வரத்துவங்கினாள். அவனது அறையை விட்டு வெளியே வந்து தோட்டத்தில் பெரும்பாலும் இருக்கத்தொடங்கினாள். அந்த மாற்றமே முகிலனுக்கு அவளை எப்படியாவது பழையபடி கொண்டு வந்துவிடலாம் என்ற நம்பிக்கையை கொடுத்தது.

மெல்லினிக்கு தன்னை நினைக்கையில் ஆச்சர்யமாக இருந்தது. முகிலன்.

மெல்லினி அங்கு வந்து மூன்று வாரங்களையும் கடந்திருந்தது. சின்ன சின்ன குட்மோர்னிங்கில் தொடங்கி பூமிநாதன் கூட மெல்லினியை பார்த்து புன்னகைக்கத் தொடங்கிவிட்டார். மெல்லினிக்கு ஒருபுறம் சந்தோஷமாக இருந்தாலும் இன்னொருபுறம் இப்படி முகிலனோடு இப்படி ஒன்றாக இருப்பதை மற்றவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்களோ என்ற குழப்பமும் பதட்டமும் இருந்தது. ஏனென்றால் அவளால் தான் பாரிஜாதம் அறையை விட்டு வெளியிலேயே வருவதில்லை. இது போல சுற்றியுள்ளவர்கள் என்ன பேசுவார்கள் என்ற யோசனை அவள் முன் பெரும் பூதமாய் வந்து நின்றது. திடீரென அவன் முன் வந்து நின்றாள்.

"முகில். நான் என்னோட வீட்டுக்கே போயிடுறேன்..."

"ஏன்.. என்னாச்சி...? "

"இல்ல.. முகில்.. இப்படி நாம ஒன்னா இருக்கது..."

" இப்ப யாரு என்ன சொன்னா...? "

"அதுக்கில்ல முகில்... உங்க பேச்சை கேட்டு கொஞ்சம் கூட யோசிக்காம ... உங்க ஃபேமலி பெரிய அந்தஸ்துள்ள குடும்பம். என்னால அந்தப் பெயர் கெடுது. நான் போயிடுறனே..."

"நீ எங்கயும் போக முடியாது மெல்லினி .. இது என்னோட கட்டளைனே வச்சிக்க..."

"முகில்! கல்யாணம் பண்ணிக்கிட்டு நாம ஒன்னா இருந்தா இந்த பிரச்சனையே இல்ல.. ஓரே வீட்ல தனித்தனியா இருந்தா கூட எதுவும் பேச மாட்டாங்க. இப்படி ஒரே ரூம்ல.. ஒன்னா இருக்கதை... இது நம்ம கலாச்சாரமே இல்லையே... இதை நாலு பேர் தப்பா பேசுவாங்க.. பேசுறாங்க." என்று திருத்தினாள்.

"அப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்ற...."

மெல்லினி அடுத்த வார்த்தை பேசமுடியாது நின்றுவிட்டாள்.

"கல்யாணமா??"

"ஆமா.. இன்னும் உனக்கு என்ன சந்தேகம்.? நான் உன்னை காதலிக்கிறேன். நீயும் என்னை காதலிக்கிற.. அதுனால தானே என்கூட இந்த வீட்ல இருக்க ஒத்துக்கிட்ட... உனக்கு கல்யாணம்னு எந்த பிரஷரையும் கொடுக்க விரும்பல. நீ என் கூட எப்பவும் இருக்கனும். அதனால தான் இப்படி ஒன்னா இருக்க முடிவு எடுத்தேன். இப்படி இருக்கதுல எனக்கு எந்த பிரச்னையும் இல்ல.. யார் என்ன பேசினாலும் அதை என்னால சமாளிச்சிக்க முடியும். என்ன செய்யனும்னு நீயே யோசிச்சி சொல்லு... "

மெல்லினிக்கு அவன் எங்கு சுற்றி எதை சொல்ல வருகிறான் என புரிந்தது. அவளாகவே திருமணம் செய்து கொள்ள விரும்பும் வரை காத்திருக்கலாம் என்று முடிவு செய்தே அவளிடம் எதுவும் சொல்லாமல் இருந்திருக்கிறான்.

'கல்யாணம் செய்துகிட்டு இந்த வீட்டுக்கு வந்திருந்தால் அது வேறு கதை. ஆனால் இப்போது... நான் எப்படி முகிலை கல்யாணம் செஞ்சிக்க முடியும்... அதுக்கு எனக்கு என்ன தகுதி இருக்கு.. என்னால எந்த சந்தோஷத்தையும் கொடுக்க முடியாது. முகிலனை தொட்டுப் பேசக்கூட முடியுமோ தெரியல.. இதெல்லாம் சரிப்பட்டு வராது... முகிலுக்கு என்னை விட நல்ல பொண்ணு அமையனும். இங்க வந்து இருந்தது நான் செஞ்ச பெரிய தப்பு. முகிலன் வேற வாழ்கை அமைச்சிக்கிட்டாலும் நாங்க ஒன்னா இருப்பது ஒரு கறுப்பு புள்ளியாகத்தான் இருக்கும். இப்ப கூட நான் இங்க இருந்து போயிட்டா...' மெல்லினியின் மனதுக்குள் இப்படியாக ஓட முகிலன் வேறுவிதமாய் எண்ணிக்கொண்டு இருந்தான்.

'மெல்லினி கல்யாணம் செஞ்சிக்க நிச்சயம் சம்மதிப்பா.. அவளுக்கு சின்ன வயசுல இருந்து கிடைக்காத அன்பை கொடுக்கனும். அப்பா, அம்மாகிட்ட இருந்து அந்த அன்பும் கிடைக்கனும்.. அவ மனசை குணப்படுத்தனும். என்னோட பழைய மெல்லினி எனக்கு வேணும்...' இப்படியாக நினைத்துக்கொண்டே அன்றைய பொழுதை ஓட்டினான்.

காலையில் எழுந்த மெல்லினி முகிலன் வேலைக்கு கிளம்பும் வரை பொறுமையாக இருந்தாள். பின்னர் பாரிஜாதத்தை தேடிக்கொண்டு அவரது அறைக்கு சென்றார்.

கணபதி கவசம் சொல்லிக்கொண்டிருந்த பாரிஜாதம் அறை வாசலில் யாரோ நிற்பது கண்டு திரும்பி பார்த்து திகைத்தார். பின்னர் முகத்தை திருப்பிக்கொண்டார்.

"அம்மா..."

அறைக்குள் அமைதி நிலவியது.

"உங்களுக்கு என்னைப் பார்க்கவே பிடிக்காதுனு எனக்குத் தெரியும். ஆனா இது தான் நீங்க என்னை கடைசியா பார்க்கிற நாளா இருக்கும். முகிலன் ரொம்ப நல்லவர். அது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்ல.. ஆனா.. நீங்க நினைச்சிப் பார்க்காத அளவுக்கு நல்லவர்.. எப்படினா... ஒரு அயோக்கியனால சிரழிக்கப்பட்ட என்னை மீட்டு எடுத்து, என்னை தேற்றி, என் மனசுக்கு தைரியம் கொடுத்து, என்னை கல்யாணமும் செஞ்சிக்க தயாரா இருக்க மனசு கொண்ட நல்லவர்.." என்று தொடங்கி ஒன்றுவிடாமல் சொல்லி முடித்துவிட்டு தாங்க முடியாத வேதனையில் தவித்தாள்.

அந்த கடைசி வார்த்தையில் கண்களில் அதிர்ச்சியோடு நிமிர்ந்தார் பாரிஜாதம்.

"நான் என் அம்மாவை பார்த்ததில்ல.. அம்மாவோட பாசம்னா என்னனு எனக்கு தெரியல... உங்களை அம்மாவா நினைச்சு இதெல்லாம் சொல்றேன். முகிலன் எனக்கு கொஞ்ச நாளாதான் பழக்கம். நாங்க ஒருத்தரை ஒருத்தர் விரும்பினது நிஜம். எனக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்த பிறகும் என்னை ஏத்துக்க தயாரா இருக்கார்னா.... அவரோட மனசை எதனோடயும் ஒப்பிட முடியாது. அவர் உங்க மகனா பிறக்க நீங்க புண்ணியம் செய்திருக்கனும். அவர் இந்த அனாதையை கல்யாணம் செய்துக்கிற எண்ணத்துல இருக்கார். அவரோட எண்ணத்தை மாற்றி ஒரு நல்ல பொண்ணை அவர் வாழ்கைல சேர்த்து வைங்க. அவர் நல்லா இருக்கனும். அவ்வளவு தான் எனக்கு வேணும்.. நான் போறேன்ம்மா..." அவள் சொல்லிவிட்டு அந்ந வீட்டை விட்டு வெளியே நடக்கத்தொடங்கினாள்.

பாரிஜாதம் யாரோ அடித்துப்போட்ட அதிர்ச்சியில் அப்படியே சிலையாய் அமர்ந்துவிட்டார். வாய் அவனது பெயரை உச்சரித்தன.

"முகிலா...!"
 
Nirmala vandhachu ???
 
Top