Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இணையே என் உயிர்த்துணையே!-12

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -12

முகிலன் பித்துபிடித்தவன் போல ஆகிவிட்டான். மெல்லினி அந்த வீட்டை விட்டுப் போய் இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. அவள் போய் விட்டாள் என்றதும் அவன் அதிர்ந்தது உண்மை. அதைக்காட்டிலும் அவள் அவனை விட்டுவிட்டு எப்படி போகலாம் என்ற கோபமே அவனுள் அதிகமாக இருந்தது.

மெல்லினி அவளது வீட்டையும் காலி செய்துவிட்டாள். அவளது பழைய பாங்கிலும் வேலையில் இல்லை. செல்போன் நம்பரையும் மாற்றிவிட்டாள். கயலுக்கு தொடர்பு கொண்டான்.

"ஹலோ! சொல்லுங்க முகில் அண்ணா..."

"கயல்! மெல்லினியோட நம்பர் இருக்கா...?"

"ஏன்.. என்ன ஆச்சு அண்ணா.. அதே நம்பர் தான் யூஸ் பன்றா... நான் அவகூட பேசி நாலுநாள் ஆச்சி... ஹலோ சொன்னதும் நான் நல்லா இருக்கனானு ஒரு வார்த்தை கூட கேட்கல.. மேடம் பெயர் தான் வாயில வருது..." அவள் அந்தப்பக்கம் நிலவரம் தெரியாமல் பேசினாள்.

கயல்விழிக்கு மெல்லினிக்கு நடந்த சம்பவம் எதுவும் தெரியாதபடியால் அவன் எதையும் காட்டிக்கொள்ளவில்லை. அவளோடு சாதாரணமாக பேசிவிட்டு வைத்துவிட்டான்.
கயல்விழி மூலமாகவும்
முகிலன் எதையும் தெரிந்துக்கொள்ள முடியாமல் பைத்தியமான மனநிலையில் இருந்தான். எல்லா வேலையையும் விட்டுவிட்டு எங்கு தேடுவது என்று தெரியாமலே எங்கெல்லாமோ தேடிக்கொண்டிருந்தான்.

பாரிஜாதத்திற்கு மகனை இப்படி பார்க்க வெகு கஷ்டமாய் இருந்தது. அவனது மனதும் புரிந்தது. அவன் மெல்லினிக்காக எடுத்த முடிவு அவரை மிகவும் ஆச்சர்யப்படுத்தியது. மெல்லினியை நினைக்கையில் ஒரு பெண்ணாக அவள்மீது பரிதாபம் தோன்றியது. அவளுக்காக பிரார்த்தனை செய்துக்கொண்டார். அதனால் தான் என்னவோ முகிலன் கண்ணில் படாமல் பாரிஜாதத்தின் கண்களில் பட்டுத் தொலைத்தாள் மெல்லினி.

பாரிஜாதம் கோவிலுக்கு போய்விட்டு திரும்பும் போது தான் கவனித்தார் மெல்லினி ஒரு சூப்பர் மார்கெட்டுக்குள் நுழைவதை. உடனே பாரிஜாதமும் உள்ளே நுழைந்தார்.

அவரைக் கண்டதும் கண்களில் தெரிந்த அதிர்ச்சியை மறைக்க முயன்று நகர முற்பட்ட மெல்லினியின் கையைப் பிடித்து நிறுத்தினார் பாரிஜாதம்.

"உன்னோட பேசனும். என் கூட வா.. " என அவளைக் கேட்காமலே அவள் கையைப்பிடித்து நடத்திக்கொண்டு செல்வதை அங்கிருந்த அனைவரும் வேடிக்கைப் பார்த்தனர்.

முகிலன் வீட்டுக்கு வந்தபோது இருட்டிவிட்டிருந்தது. இரண்டு வாரங்களாக மழிக்கப்படாத அவன் முகம் இருட்டடித்து இருந்தது. வந்தவன் நேராக அவனது அறைக்கு சென்று கதவைத் திறந்தான். திறந்தவன் திகைத்தான்.

மெல்லினி அவனது சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தாள். அவன் ஒருதடவை கண்ணை கசக்கிவிட்டு பார்த்தான். அவளே தான்.

"மெ..மெல்லினி ..."

அவள் எழுந்து வந்தாள். அவனுக்கு றெக்கை முளைத்த தேவதை நடந்து வருவது போல இருந்தது.

"முகில்..."

"எங்க போன மெல்லினி. என்னை விட்டுட்டு..."

"ஸாரி முகில்... இனி நான் எங்கயும் போக..." அவள் முடிப்பதற்குள் அவளை இழுத்து அணைத்துக்கொண்டான். அவனது அணைப்பில் இறுகிய அவளது மனதை உணர்ந்தவனாய் விடுவித்தான்.

"எங்க இருந்த இத்தனை நாளா.. உன்னை எங்கவெல்லாம் தேடியிருப்பேன் தெரியுமா..."

"தெரியும் முகில்... "

"எதுக்காக என்னை விட்டுட்டு போன.." அவன் கோபமானான்.

"முகில்.. என்னை விட உங்களுக்கு பொருத்தமான லைஃப் பாட்னர் கிடைக்கனும்னு தான் உங்களை விட்டுட்டு போக முடிவெடுத்தேன்..."

"அந்த அதிகாரம் உனக்கு இல்ல மெல்லினி. நான் பேசுறது உனக்கு கடினமா இருக்கலாம். ஆனா.. நான் உன்னை ரொம்ப நேசிக்கிறேன். அது ஏன் உனக்கு புரியவே மாட்டிக்கிது.."

"உங்க கூட வாழ எனக்கு என்ன அருகதை இருக்குனு என்னையே சுத்தி சுத்தி வாரிங்க... எனக்கு ஆனதெல்லாம் நினைவில்லையா... என்னோட வாழ போற ஏதோ ஒரு நிமிஷத்துல அது உங்களுக்கு நினைவுக்கு வந்தா.... "

"நான் அதெல்லாம் மறந்துட்டேன் மெல்லினி. நீ தான் அதையே இன்னும் சுமந்துக்கிட்டு இருக்க.. திரும்பவும் சொல்றேன் அதுல இருந்து வெளிய வா. ஆணுக்கும் கற்பு இருக்கு. இதே விஷயம் ஒரு பையனுக்கு நடந்தா அது ஒரு விஷயமே இல்ல.. அப்படித்தானே... அவன் அதை மறைச்சிட்டு போய்க்கிட்டே இருக்கலாம். அதே ஒரு பொண்ணுக்கு நடந்தா அவளை ஏன் குற்றவாளியா பார்க்கனும். ஹூம்.. இந்த உலகம் ஆணுக்கு வேறயாவும் பொண்ணுக்கு வேறயாவும் இல்ல இருக்கு. உனக்கு நடந்தது என்னனு உனக்கே ஞாபகத்தில் இல்லாதப்ப அதையே நினைச்சி உன்னையும் வருத்தி என்னையும் ஏன் வருத்துற..? என்னால ஒரு உத்தரவாதம் மட்டும் கொடுக்க முடியும்.. என்னோட நீ வாழப்போற வாழ்க்கையில உன்னோட கசப்பான பக்கங்களை நிச்சயமா நான் நினைவு படுத்த மாட்டேன்.. ஏன்னா நான் உன்னை நீயே நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு நேசிக்கிறேன். "

அவன் சொல்லி முடிக்கையில் அவள் அவன் மார்பில் கிடந்தாள். வண்ணத்துப்பூச்சியை தொட்டுப் பார்ப்பது போல அவளை தொட்டு அணைத்தான் முகிலன். நீண்டதொரு அணைப்பிற்கு பிறகு தான் சுயநினைவுக்கு வந்தான்.

"ஆமா.. எப்போ வந்த இங்க..?"

"உங்க அம்மா தான் கூட்டிக்கிட்டு வந்தாங்க. நான் போறப்ப அவங்ககிட்ட எல்லா உண்மையையும் சொல்லிட்டேன். இன்னைக்கு சூப்பர் மார்க்கெட்ல வச்சி என்னைப் பார்த்தாங்க. அவங்க தான் என்னை வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்தாங்க.."

"அம்மாவா...?" அவன் அதிசயித்து அம்மாவை நோக்கி குழந்தையாய் ஓடினான். ஓடிச்சென்று அவர் மடியில் விழுந்தான். அழுதான். அவன் அழுது ஓயும் வரை அவன் தலையை கோதிக்கொண்டு இருந்த பாரிஜாதம் கண்களிலும் கண்ணீர் துளிர்த்தது.

"அ..அம்மா.. மன்னிச்சிடுங்க. எதையும் சொல்ல முடியாத நிலையில தான் அவளை இங்கயே கூட்டிக்கிட்டு வந்தேன். அவ ஏதாச்சும் செஞ்சிக்குவாளோனு பயந்தேன். என் கண் முன்னாடியெ இருக்கனும்னு தான்.. ஐ ரியலி லவ் ஹர்.. உங்களை கஷ்டப்படுத்தினதுக்கு ஸாரிம்மா... "

"என்னால புரிஞ்சிக்க முடியுது முகிலா... மெல்லினியோட நிலைமை யாருக்கும் வரக்கூடாது. அவளுக்கு ஒரு நல்ல வாழ்கை உன்னால கொடுக்க முடியும்ங்கிறதை நினைச்சா எனக்கு சந்தோஷமா இருக்கு. ஆனா.. அவ பாதிக்கப்பட்டு இருக்கா.. நீ நினைக்கிற மாதிரி அதுல இருந்து அவளால அவ்வளவு சீக்கிரம் வெளிய வர முடியாது. நீ நிறைய அவகாசம் கொடுக்கனும். ஒரு பூ அழகா இருக்குனு அதிகமா ஆசைபட்டு அதை கசக்கிட கூடாது. அதை ரொம்ப கவனமா கையாளனும். நான் என்ன சொல்றேனு உனக்கு புரியும். அவளுக்கு தேவையான பாதுகாப்பையும் நீ கொடு. அவளுக்கு தேவையான அன்பை நான் கொடுக்கிறேன்.."

"அம்மா.... " தாயின் மடியில் முகம் புதைத்து தன் அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்தினான் முகிலன்.

அந்த இரு பறவைகளும் தனக்கான பொருத்தமான துணையை தேடிக்கொண்டன.

முகிலனும் மெல்லினியும் திருமணம் செய்து கொண்டு மூன்று ஆண்டுகள் ஆகியிருந்தன. குட்டி முகிலனுக்கு இப்போது தான் ஒரு வயது ஆகியிருந்தது.

"முகில்.. வர வர இவனோட அட்டகாசம் தாங்க முடியல.. நீங்களே பாருங்க... " குட்டிப்பயல் கலைத்துப்போட்டிருந்த புத்தகங்களை எல்லாம் எடுத்துக்கொண்டே சொன்னள் மெல்லினி.

சிரித்துக்கொண்டே சொன்னான் முகில்.

"என் பையன் என்னை மாதிரித் தானே இருப்பான்... வாடா.. செல்ல குட்டி..." மகனை தூக்கி நெஞ்சோடு சேர்த்துக்கொண்டான்.

"அதானே.. அப்பா போலவே குழப்படிக்கார பையன்.. " மகன் தலையை கோதினாள் மெல்லினி.

"அப்படியா. அப்ப என்னோட குழப்பத்தை காட்டட்டா... " என அவளுக்கு கிச்சுகிச்சு காட்டத்தொடங்கினான் முகிலன். அவர்கள் சந்தோஷத்தில் மிதந்துக்கொண்டிருந்தார்கள், ஒவ்வொரு நாளும் இப்படியே தொடர இறைவன் அவர்களை ஆசிர்வதித்துக்கொண்டு இருந்தான்.

~முற்றும் ~

Nirmala vandhachu ???
 
Top