Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இணையே என் உயிர்த்துணையே! -4-

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -4

அந்த கார் வீதியின் வளைவுகளிலில் லாவகமாய் திரும்பி அடுத்துவந்த வளைவில் திரும்பி,அடுத்த வளைவில் திரும்பி, இப்படியே நுவரெலியாவிற்கு சென்றுக்கொண்டிருந்தது. ரயில் நிலையத்திலிருந்து நுவரெலியாவிற்கு இருபது நிமிட பயணம் தான். அந்த நகரின் எழிலை இலகுவாய் பருகிவிடலாம். மெல்லினிக்கு அது ஒரு புது அனுபவமாக இருந்தது. சுற்றும்முற்றும் தன் தலையை திருப்பி ஆவலாய் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு வந்தாள். வீதிகளின் இரண்டு பக்கமும் அழகான மரக்கறித்தோட்டங்களில் காய்கறிகள் தம் இஷ்டத்துக்கு வளர்ந்திருந்தன. பெரும்பாலும் கரட், லீக்ஸ், முட்டைகோஸ் போன்றனவே பயிரிடப்பட்டிருந்தன. அதற்கு சற்றும் தலைக்காமல் சுற்றிலும் மலர் வகைகள் பூத்துக் குலுங்கிக்கொண்டிருந்தன. அவற்றின் அழகு பார்ப்பவர் கண்ணை கொள்ளையடித்துக்கொண்டு இருந்தன.

"என்னம்மா! அப்படி பார்க்கிறிங்க? இதுக்கு முதல்ல நீங்க இங்க வந்தது இல்லையா..."என்று டிரைவர் பேச்சுக்கொடுத்தார்.

"இல்லைங்க... இதுதான் முதல் தடவை..." என்றாள் மெல்லினி.

"அப்படியா? நீங்க கொழும்புல இருந்து வாரதா தானே நம்ம கயல் பாப்பா சொல்லிச்சு.. இங்க இருந்துக்கிட்டே நம்ம ஊருக்கு வந்தது இல்லையா..."

மெல்லினி மறுப்பாய் தலையசைத்தாள். அவளால் என்ன சொல்ல முடியும். பிறந்ததில் இருந்தே ஒரே இடத்தில் இருந்ததையா? அல்லது அதற்குப்பின் இப்போதுதான் வெளி உலகையே பார்க்க ஆரம்பித்து இருப்பதையா..? என்ன பேசுவதென்று தெரியாமல் மௌனமாய் வந்தாள்.

"என் பேரு கணேசன்ம்மா... நான் இங்கதான் .. ஐயாகிட்ட ஒரு பதினாலு பதினைந்து வருசமா வேலை பாக்குறேன். கயல் பாப்பாவை சின்னதுல இருந்தே தெரியும். உங்களை கூட்டிக்கிட்டு வாரதுக்கு அதுவே கிளம்புச்சு. ஆனா கல்யாண பொண்ணை வெளிய அனுப்புறது நல்லா இருக்காது பாருங்க. அதான் ஐயா என்னைய அனுப்பினாரு..." கணேசன் இன்னும் வாய் ஓயாமல் பேசிக்கொண்டு வந்தார். அது எதுவும் அவள் காதில் விழுகவேயில்லை. அவன் முகமே கண்களின் முன் வந்து நின்றது.

அவனை கடைசியாக அன்று ஷாப்பிங் மாலில் பார்த்தது. அதற்கு பிறகு அவனை எங்கேயாவது பார்த்துவிட மாட்டோமா என்று ஒரு நப்பாசையில் போகுமிடமெல்லாம் தன் கண்களை சுற்றிலும் ஓடவிட்டுவாள். ஆனால் அப்போதெல்லாம் கை கொடுக்காத அதிஷ்டம் இப்போது அதுவும் பலநூறு கிலோமீற்றர்களுக்கு அப்பால் கைகொடுத்திருப்பது அவளுக்கே ஆச்சர்யம் தான். அவள் மட்டும் தான் ரயில்வே ஸ்டேஷனில் அவனைக் கண்டாள். அவன் அவளை பார்க்கவில்லை. அதற்கு அதிஷ்டம் கை கொடுக்கவில்லை. இல்லை.. கணேசன் கைகொடுக்கவில்லை. அதற்குள் இந்த கணேசன் வந்து அவளை தேடி, கயல்விழி முன்கூட்டியே தந்திருந்த அவள் எண்ணுக்கு தொடர்புகொண்டு அவளை பிடித்து, பேசி, அவள் இருக்கும் இடத்தை தெரிந்துக்கொண்டு வந்து அவளை அழைத்துக்கொண்டு போக எடுத்துக்கொண்ட நிமிடங்களில் அவள் கண்பார்வையிலிருந்து அவன் தொலைந்துவிட்டிருந்தான்.

கார் நகருக்குள் நுழைந்ததும் மெல்லினியின் உற்சாகம் கூடிக்கொண்டது. பாதையோரங்களில் குதிரை சவாரிக்காக குதிரைகளுடன் நின்ற வியாபாரிகள் தம் கைகளை ஒன்றோடு ஒன்று சேர்த்து சூடு செய்துக்கொண்டிருந்தனர். சில குதிரைகள் ஜாலியாக புற்களை மென்றுக்கொண்டிருந்தன. தெருக்கள் படுசுத்தமாக இருந்தன. வீதியோரங்களில் ஸ்வெட்டர், குல்லாய் கடைகள் முளைத்திருந்தன.

"இப்பதான்ம்மா இங்க சீசன். அதான் 'வசந்தகால திருவிழா'னு சொல்வாங்களே.. அது இப்பதான் தொடங்கியிருக்கு. இல்லாட்டி இப்படி தெருவோரத்துல கடை இருக்காது. இந்த நேரம் மட்டும் தான் இப்படி தெருவோரத்துல கடை போட அனுமதி கொடுப்பாங்க. நாட்டில இருக்க எல்லா சனங்களும் இங்கதான் வந்து சேருவாங்க. எல்லா ஹோட்டல்களுக்கும் நல்ல வருமானம்மா.. "என்று கணேசன் தனக்கு தெரிந்ததை எல்லாம் ஒப்புவித்துக்கொண்டு வந்தார்.

"எத்தனை நாளைக்கு இதெல்லாம் இருக்கும்..?"என்றாள் மெல்லினி.

"அது முப்பது முப்பத்தைஞ்சு நாளைக்கு இருக்கும்மா... கார் ரேஸ்.. குதிரை ரேஸ்னு ஒரே அமர்க்களமா இருக்கும். நீங்க இங்க தானே இருக்க போறிங்க. பாப்பா கல்யாணம் முடியுறதுக்குள்ள எல்லா எடத்தையும் சுத்திப்பாத்துட்டு போங்க..." என்றார் கணேசன்.

கயல்விழியின் வீட்டில் அவளுக்கு அமோக வரவேற்பு. கயல்விழியின் தந்தை அங்கு ஒரு பிரபல துணிக்கடையை நடாத்தி வந்தார். நிலபுலன்களுடன் பிரபலபுள்ளியாக இருந்தார். அவரின் வீடும் பிரம்மாண்டமாகவே இருந்தது. மெல்லினிக்கு தான் தலை சுற்றுவது போல இருந்தது. இத்தனை சொத்துக்களுக்கு வாரிசாக இருந்து கொண்டு கயல்விழி அத்தனை எளிமையாக தன்னுடன் பழகியதை நினைத்து வியந்து போனாள்.

"என்ன மெல்லினி! சிலை மாதிரி நிற்கிற..?" என்று அவளை உலுக்கினாள் கயல்.

"இல்ல.. இல்ல.. ஒன்னுமில்ல.. நீ எப்படி இருக்க..?"

"எனக்கென்ன சந்தோஷமா இருக்கேன்.." என சிரித்த கயல்விழியின் முகம் கல்யாணகலையில் சிவந்தது.

"ஹேப்பி போர் யூ கயல். நீ ஆசை பட்டதை அடைஞ்சிட்ட.. என்க்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.. ஆனா உங்க அப்பா இத்தனை செல்வாக்கு உள்ளவர்னு தான் நீ சொல்லல.." என தோழியை அணைத்துக்கொண்டாள்.

" நமக்குனு ஒரு அடையாளம் வேணாமா? அதுக்காக தான் வேலையில் சேர்ந்தேன். ஆனா இப்ப பாரு கல்யாணம் பண்ணிக்க போறேன்...."

"அப்ப கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்கு போக மாட்டியா?" என்றாள் மெல்லினி.

"ரகு வீட்ல அதுக்கெல்லாம் ஒத்துக்குவாங்களானு தெரியலடி... கொஞ்சநாள் போகட்டும். அப்புறம் பார்க்கலாம். நீ குளிச்சிட்டு வா. சாப்பிடலாம். வந்தது டயர்டா இருக்கும். கொஞ்சம் தூங்கி எழும்பு..."

"இப்ப மணி என்ன ஆச்சுனு என்ன தூங்க சொல்ற.. நான் தூங்குறதுக்காடி வந்தேன். ஹையோ.. உங்க ஊர் எவ்வளவு சில்லா சூப்பரா இருக்கு தெரியுமா? அப்படியே ஃப்ரிட்ஜுகுள்ள இருக்க மாதிரி இருக்கு.. ஐ லவ் இட்.." என்று சந்தோஷமிகுதியில் பேசினாள்.

கயல் பெரிதாய் சிரித்தாள்.

"உனக்கு குளிரலயாடி...? எல்லாரும் இங்க வந்ததும் குளிர் குளிர்னு சொல்வாங்க. நீ என்னடானா ஐ லவ் இட் னு சொல்ற.."

"அடப்போடி... குளிர் தான். ஆனா பிடிச்சிருக்கு.. அதையும் ரசிக்கத்தெரியனும்டி..." என்றபடியே வெளியே தெரிந்த மலைகளைப் பார்த்து ரசிக்கத்தொடங்கினாள்.

அதே நேரம் முகிலனும் அதையேத் தான் சொல்லிக்கொண்டிருந்தான்.

"எத்தனை தடவை வந்தாலும் அலுக்காத ஊர் இதுதான்டா ரகு...." என்றான்.
 
Attachments

  • 106581103.jpg
    106581103.jpg
    161.9 KB · Views: 2
Last edited:

Nirmala vandhachu ???
 
Top