Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இணையே என் உயிர்த்துணையே! -5-

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -5-

மெல்லினி வந்து இரண்டு தினங்கள் ஆகியிருந்தது. அவள் கயல்விழியுடனேயே இருந்தாள். அவர்கள் வீட்டு உறவினர்கள் மெல்லினியுடன் பெரிதாக ஒட்டவில்லையாயினும் அவளை நன்றாகவே கவனித்துக்கொண்டார்கள். ஆனாலும் அவள் வீட்டிற்குள் எல்லா வேலைகளிலும் உதவி செய்துக்கொண்டிருந்தாள்.

கயல்விழியின் கைகளுக்கு மருதாணி இடும் போது மெல்லினியும் மருதாணி இட்டுக்கொண்டாள். வழக்கமாக தான் செய்யும் வேலைக்கு இதெல்லாம் பொருந்தாத ஒன்று என்று இவற்றையெல்லாம் தவிர்த்து விடுவாள். ஆனால் இந்த தடவை ஏனோ ஆசையாக மருதாணி இட்டுக்கொண்டாள்.

அடுத்தநாள் நிச்சயம் செய்ய ஏற்பாடாகி இருந்தது. இந்த திருமணம் அவசர அவசரமாக ஏற்பாடாகி இருந்தாலும், முறையாக நிச்சயம் செய்துவிட்டே அடுத்த வேலையை தொடங்க வேண்டும் என்று ரகுவின் அப்பா கண்டிப்பாக சொல்லிவிட்டார். கயலின் வீட்டிலேயே நிச்சயதார்த்ததிற்கு ஏற்பாடாகியிருந்தது.

"ஏய் மெல்லினி.. நீ இன்னுமா ரெடி ஆகல... " என்ற கயல் அவளை முறைத்தாள்.

"ரெடி ஆகுறேன்டி.. உங்க அக்கா பொண்ணு என்னைத் தான் ரெடி பண்ணி விடனும்னு நேத்தே ஆர்டர் போட்டுட்டா.. அதான் கொஞ்சம் லேட்.."

"ஆமா அவ பெரிய கிழவி. அவ சொன்னா நீ கண்ணை மூடிக்கிட்டு கேட்பியா? எட்டு வயசு தான் ஆகுது. அதுக்குள்ள இவ்ளோ மேக் அப் பண்றா.. அதுக்கு நீ வேற ஒத்து ஊதுற..."

"சரி விடுடி.. ஏதோ பங்ஷன்னா மட்டும் தானே இப்படி பிடிச்ச மாதிரி அலங்காரம் பண்ணிக்க முடியும். சின்ன பொண்ணுடி அவ.. உன்னை ரெடி பண்ண நீ பார்லர்ல இருந்து ஆளை வரவழைச்சுருக்க.. அதே மாதிரி அவளும் அழகா இருக்கனும்னு நினைச்சு என்னை பிடிச்சிக்கிட்டா... " என்று சொல்லி சிரித்தாள்.

"என்னமோ போ... போய் ரெடி ஆகு..."

"சரிங்க மேடம்... உங்க உத்தரவுக்கு கீழ் படிகிறேன்.." என்று சொல்லி கயலுக்கு ஒரு ப்ஃளையிங் கிஸ் கொடுத்து அவளை சமாதானம் செய்துவிட்டு சென்றாள்.

"சித்தி!" என்று சொல்லிக்கொண்டு வந்து நின்ற ஷாலினியை பொருத்தமான தலை அலங்காரத்தோடு மெல்லிய ஒப்பனைகளோடு தயார் செய்திருந்தாள் மெல்லினி. அழகாய்த் தான் இருந்தாள் அந்த குட்டி தேவதை.

"உங்க ப்ஃரெண்ட் என் வேலைக்கு வேட்டு வச்சிடுவாங்க போல.. அழகா மேக் அப் பண்ணியிருக்காங்க.. " என்றாள் அலங்காரம் செய்துவிட வந்த பெண்.

"ஆமாங்க. அவ எந்த வேலையையும் தெரியாம பண்ண மாட்டா.. அதுக்காகவே இந்த கோர்ஸ் படிச்சிருக்கா... எதையும் சரியா பண்ணனும்னு சொல்லுவா.. ஷீ இஸ் டிபரன்ட்...." என்ற கயல், தனக்கு அமைந்தது போல் ஒரு அழகான வாழ்க்கை அவளுக்கும் அமைய வேண்டும் என்று மனமார வேண்டிக்கொண்டாள்.

நிச்சயதார்த்தம் அழகாக நடந்துக்கொண்டிருந்தது. கயலும் ரகுவும் ஒருவரை ஒருவர் கண்களாலேயே பருகிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் இணைந்ததில் அனைவரும் சந்தோஷமாக இருக்கையில் ஒரே ஒரு கண்கள் மட்டும் வெறுப்பை கக்கிக்கொண்டிருந்தன. அவை மஞ்சுநாத்தின் கண்கள். ரகுவினுடைய பெரியப்பா மகன். எந்த வேலையும் செய்து உடம்பை வறுத்திக்கொள்ளாமல் வெறுமனே ஊரை சுற்றிக்கொண்டிருந்தவன். தனக்குமுன் ரகுவிற்கு திருமணம் ஆகிறதே என்ற கடுப்பில் இருந்தவன் கண்களில் மெல்லினி பட்டுத்தொலைத்தாள். அவள் அழகில் அவனுக்கு முழு பாட்டில் சரக்கை உள்ளே இறக்கியதைப் போலிருந்தது. அவளை எப்படியாவது அடைய வேண்டும் என்ற வக்கிர ஆசை அவனுள் எழுந்தது. அந்த நிமிடம் முதல் அவளை கண்கொத்திப் பாம்பாக கவனிக்கத்தொடங்கினான்.

மெல்லினி ஷாலினியை துரத்திக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தாள்.

"ஷாலுமா.. அதை தந்திடுமா...."

ஷாலினி மெல்லினியின் செல்போனை எடுத்து கேம்ஸ் விளையாட வேண்டும் என்று பிடிவாதம் செய்தாள். ஒரே ஒரு போன் செய்து விட்டு தந்துவிடுகிறேன் என்று மெல்லினி சொன்னதை காதில் போட்டுக்கொள்ளாமல் ஷாலினி குட்டி அட்டகாசம் செய்துக்கொண்டிருந்தாள். மெல்லினிக்கு ஒரே ஒரு கால் செய்ய வேண்டி இருந்தது. அவள் வேலை செய்யும் பாங்கின் மேனேஜர் அவசரமாக எதற்கோ அழைத்திருந்தார். இவள் எடுத்து பேசும் போது லைன் கட் ஆகிவிட்டது. அதற்குள் இந்த வாலு வந்து பிடுங்கிக்கொண்டுவிட்டாள். இப்போது செய்வதறியாது அவள் பின்னே ஓடி களைத்த மெல்லினி அப்படியே நின்று மூச்சு வாங்கினாள்.

ஓடிக்கொண்டிருந்த ஷாலினியை நிறுத்திப்பிடித்தான் முகிலன்.

"நீங்க நல்லபிள்ளை தானே.. இந்த போனை அந்த அக்காகிட்ட கொடுத்திடுங்க. உங்களுக்கு நான் வேற போன் தாரேன்..." என்றான்.

ஷாலினி மறுத்தாள். அதற்குள் மெல்லினி அவளை துரத்தி மீண்டும் வந்துவிட்டாள். அங்கு வந்து முகிலனைக் கண்டு அப்படியே நின்றுவிட்டாள். அவனை நிஜமாகவே தன் கண்களால் பார்த்துகொண்டு தான் இருக்கிறோமா என்று அவளுக்குள் சந்தேகம் வந்தது. அந்த நொடி அவனும் அவள் கண்களை ஊடுறுவினான். அவள் ஷாலினியை துரத்தும் போதே அவளை கண்டுவிட்டான். அப்போதிருந்தே அவளை கவனிக்கத் தொடங்கினான். இருவரும் ஒருவரை ஒருவர் கண்களால் விழுங்கிக்கொண்டிருந்தார்கள். அந்த மௌன நிமிடங்களை ஷாலினி கலைத்தாள்.

"எனக்கு உங்க போன தருவிங்களா.. ?" என்று முகிலனின் கைகளை பிடித்து ஆட்டினாள்.

"ஆ..தருவேன்ம்மா.. அந்த போனை அக்காகிட்ட கொடுங்க.... பார்ப்போம்.." என்ற அவன் பேச்சுக்கு மெல்லினியின் போனை அவள் கைகளில் தந்தாள் ஷாலினி. நடப்பது எல்லாம் கனவில் என்பது போல மெல்லினி செய்வதறியாமல் பதட்டத்துடன் நின்றுக்கொண்டிருந்தாள்.

அவனே பேச்சை தொடர்ந்தான்.

"ஹாய்.. ஐ ஆம் முகிலன். மாப்பிள்ளை ரகுவோட ப்ஃரெண்ட். நீங்க.. இவங்களுக்கு சொந்தமா..?"

"நான்.. நான்.. இல்ல.. நான்.. கயல்விழியோட ப்ஃரெண்ட்.."

"ஓ.. அப்படியா..." என்று மேற்கொண்டு பேசத்தெரியாமல் தவித்தான். ஆனால் அவளைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வமும் முண்டியடித்தது.

"நீங்க அந்த குட்டி பொண்ணு பின்னாடி போனுக்காக ஓடிக்கிட்டு இருந்ததை பார்த்தேன். ஏதாவது முக்கியமான போன் பண்ணனுமா.."

"அட.. ஆமா.. மறந்துட்டேன்... தேங்ஸ்.." என்று உளறிவிட்டு நகர்ந்தாள்.

'ஐயோ! இவளைப் பற்றி தெரிஞ்சிக்கலாம்னு எதையோ கேட்க போய் கான்வசேஷனையே கட் பண்ணி விட்டுட்டனே...' என்று தலையில் தட்டிக்கொண்டான்.

"ஹலோ! ஒரு நிமிஷம்... உங்க பெயர்..?" என்று இழுத்தான்.

அவள் இதழ்களில் குறும்பு புன்னகையொன்று எட்டிப்பார்த்தது.

"மெல்லினி.." என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

அதையே அவன் மனதுக்குள் அழகாக உச்சரித்தான். அவளைப் போலவே பெயரும் அழகாய்த் தான் இருந்தது. தான் தேடிக்கொண்டிருந்த தேவதை எதிர்பாராமல் தன் கண்முன்னே வந்துவிட்டதில் அவன் கொஞ்சம் தடுமாறித்தான் போனான். அந்த நொடியிலிருந்து அவளை இன்னும் கூடுதலாய் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினான்.

மெல்லினியின் அழகில் அவன் சொக்கிதான் போனான். அவளைப் பற்றி இன்னும் கொஞ்சம் அறிந்துக்கொள்ள வேண்டும் என்று அவன் மனம் விடாப்பிடியாய் பிடிவாதம் செய்தது. என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசித்துக்கொண்டே இருந்தான்.

ரகுவிற்கும் கயல்விழிக்கும் நிச்சயதார்த்தம் இனிதே நடந்து முடிந்தது. அனைவரும் உணவருந்தச் சென்றனர். மெல்லினி எப்போதடா உணவருந்த வருவாள் என்று முகிலன் எதிர்பார்த்துக்கொண்டே இருந்தான். வீட்டிலேயே நிச்சயதார்த்தம் இடம்பெற்றதால் உறவினர்களே ஆளுக்கொரு உணவு பாத்திரத்தை கையிலேந்தி சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தனர். அது உன்னதமான ஒரு பழங்கால பழக்கம் மிச்சமிருப்பதை பறை சாற்றுவதாக இருந்தது. முகிலனும் அவர்களுடன் இணைந்துக்கொண்டான். அதனாலேயே மெல்லினியை ஆவலோடு கண்கொத்திப் பாம்பாய் எதிர்பார்த்துக்கொண்டிருந்தான். அவளும் வந்தாள். கூடவே குட்டிப்பெண் ஷாலினி.

"இன்னும் கொஞ்சம் சாதம் வைக்கட்டுமா?"

"வேணாங்க.. போதும்..."

"ஏங்க இன்னும் கொஞ்சம் சேர்த்து சாப்பிட்டா உங்க வெய்ட் ஏறிடுமா?" என்ற போது தான் அந்த குரலை அடையாளம் கண்டு நிமிர்ந்தாள் மெல்லினி. முகிலன் புன்னகையோடு நின்று கொண்டிருந்தான். அவளுக்கு பேச்சே வரவில்லை. வெட்கம் தான் வந்தது.

"இல்லைங்க.. பசியே இல்ல.. அதான்..." என்று இழுத்தாள். அவனும் சிரித்துவிட்டு நகர்ந்தான். ஆனால் அவள் கண்கள் அவனை ஆவலுடன் தேடின. அவனோடு பேச வேண்டும் போல் தோன்றினாலும் எப்படி பேசுவது என்ன செய்வது என்று புரியாமல் உள்ளுக்குள்ளேயே அவனை ரசித்தாள். இருவரும் பேசிக்கொள்வதற்கு அடுத்தாற் போலவே சந்தர்ப்பம் அமைந்தது.
 
Attachments

  • c1de02668a8a8257dcfda8090a71f64e.jpg
    c1de02668a8a8257dcfda8090a71f64e.jpg
    104 KB · Views: 0
Last edited:

Nirmala vandhachu ???
 
Top