Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இணையே என் உயிர்த்துணையே! -6-

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -6

"கயல்! நான் கண்டிப்பா போய்ட்டு வரனுமா?" மெல்லினி.

"மெல்லி! ப்ளீஸ்டா.. எனக்காக பண்ணேன். நலுங்கு வச்சிட்டா வெளிய போக கூடாதாம். என்ன சிஸ்டமோ.. எப்படியும் என்னை வெளிய விட மாட்டாங்க..."

"பின்ன.. உனக்கு பல்லக்கு ஏற்பாடு செஞ்சு அனுப்புவாங்க.. பார்த்துக்கிட்டே இரு.. நாளைக்கு கல்யாணத்தை வச்சிக்கிட்டு இன்னைக்கு போய் மாப்பிள்ளைக்கு கிப்ட் கொடுக்கனும்னு சொன்னா யாரு தான் வெளிய விடுவாங்க.." என்று தோழியை முறைத்தாள்.

"ப்ளீஸ்டி.." என்று கயல் கெஞ்சினாள்.

"அப்படி என்னத்தடி கொடுக்க போற.. இத்தனை நாள் இல்லாம.."

"அது.. அது.. வந்து..." என்று வெட்கத்துடனும் சோகத்துடனும் இழுத்தாள் கயல்.

"சரி சரி முகத்தை அப்படி வச்சிக்காத... இதுல வெட்கம் வேற.. என்ன கிப்ட்டோ... நான் போறேன்..."

"என் செல்லம்..." என்று மெல்லினியைப் பிடித்து கொஞ்சினாள் கயல்.

"சரி சரி.. ரகு வீடு எங்க இருக்கு?அது இருக்கட்டும்.. நான் என்ன சொல்லிக்கிட்டு அவங்க வீட்டுக்கு போறது? ஏதாச்சும் ப்ராப்ளம் ஆகிட போகுது."

"ஆமால்ல.. உன்னை எப்படி அனுப்புறதுனு தான் எனக்கு புரியல..." என்று தலையை தட்டிக்கொண்டிருந்துவிட்டு "ஐடியா..." என்று கத்தினாள்.

"என்னடி?"

"முகிலன் அண்ணாக்கு போன் பண்ணி எங்கயாச்சும் வர சொல்றேன்.. அவர்கிட்ட கொடுத்திட்டு வா.."

முகிலன் என்ற பெயரைக் கேட்டதும் மெல்லினிக்கு மின்சாரம் பாய்ச்சியதைப் போல இருந்தது. அவனையா பார்க்கப் போகிறோம்.

"முகிலன்...?" என்று அவள் உதடுகள் உச்சரித்தன.

"ஆமாம் மெல்லி! ரகுவோட பாஸ் அவர் தான். அதோட முக்கியம் அவர் ரகுவோட பெஸ்ட் ப்ஃரெண்ட். ரகு அவரோட கம்பனியில் தான் அசிஸ்டன்ட் மேனேஜரா வேலை செய்றார்."

"ஓ.." என்றாள் மெல்லினி. அந்த ஓ வில் ஆயிரம் அர்த்தம் பொதிந்திருந்தது அவளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

"நான் அவர்கிட்ட பேசிட்டு சொல்றேன்.." என்றவாறு அவனுக்கு அழைப்பெடுத்தாள். ஏதோ பேசினாள். என்ன பேசினாள் என்று சத்தியமாய் மெல்லினிக்கு தெரிந்திருக்கவில்லை. அவள் வேறு ஏதோ கனவுலகத்தில் இருந்தாள். விதி அழகாக விளையாடுகிறதே என்று தோன்றியது. அது கூட்டிக்கொண்டு வரும் ஆபத்து மட்டும் தெரியாமல்.

'விக்டோரியா பார்க்' என்ற பலகையின் முன் மெல்லினி ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டாள். அதை ஆவலாய் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்த காந்தக்குரல் கேட்டது.

"ஹாய்! மெல்லினி..." என்றவாறு வந்து நின்றான் முகிலன்.

"ஹாய்..." என்ற மெல்லினியின் கன்னங்கள் சிவக்கத்தொடங்கின. அதை அவனும் கவனிக்கவே செய்தான்.

"வந்து ரொம்ப நேரம் ஆச்சா?" முகிலன்.

"இல்லை.. இப்பதான் வந்தேன்.. புது இடமா.. தனியா வேற நிற்கிறேன். அதான் கொஞ்சம் டென்சனா இருந்திச்சு. வேற எதுவும் இல்ல.."

"புது இடமா?? .. நீங்க இதுக்கு முதல் இங்க வந்தது இல்லையா..?"

இல்லையென்று மறுப்பாக தலையாட்டினாள்.

"அப்ப.. இந்த ஊரை ஒரு ரவுன்ட் வரலாமா?"

"என்ன..?" என்று அதிர்ந்தாள் மெல்லினி.

"பயப்படாதிங்க. இந்த ஊர்ல பார்க்க நிறைய விஷயம் இருக்கு. ஆனால் இப்போ அவ்வளவு நேரம் இல்ல. அதனால நாம இந்த பார்க்கை மட்டும் சுத்திப்பார்க்கலாம். அதுவும் நீங்க விருப்பப்பட்டா... ஒன்னும் யோசிக்காதிங்க.. என் சுண்டுவிரல் கூட உங்க மேல படாது. ஏன்னா உங்க அடி எப்படி இருக்கும்னு அன்னைக்கே பார்த்தேன்.." என்று அவள் அடித்ததை நினைவு படுத்தினான்.

மெல்லினி சிரித்தாள். அவனோடு பேசவேண்டும் என்ற ஆவலில் அவனோடு பார்க்கினுள் நுழைந்தாள். இது அவன் தெரிந்தே போட்ட திட்டம் தான். அவளை அங்கே வரச்சொன்னால் எப்படியும் அவளை பார்க்கிற்குள் கூட்டிக்கொண்டு செல்ல வேண்டும் என்று முன்னராகவே போட்ட திட்டம். அதை அழகாய் அவனுக்கு சாதகமாய் மாற்றிக்கொண்டான்.

அந்த பூங்கா மிகவும் அழகாக இருந்தது. பூத்துகுலுங்கிய விதவிதமான பூக்களின் அழகில் தன்னையே தொலைத்துவிடலாம் போல இருந்தது. கண்களை அவற்றின் மீதிருந்து எடுக்கமுடியாமல் தவித்தாள் மெல்லினி. அவள் முகத்தில் குழந்தையின் உற்சாகம் பிறந்தது. குளிர் ஒருபுறம் வாட்டி எடுத்தாலும் அதை பொருட்படுத்தாமல் அவனோடு உற்சாக நடை போட்டாள். எல்லாப் பூக்களையும் தன் செல்போன் காலரியில் பதுக்கியும் கொண்டாள்.

"ரொம்ப அழகா இருக்கு இல்ல.. மிஸ்டர்.." என்று அவன் பெயர் சொல்ல தயங்கினாள்.

" என்னங்க நீங்க.. பழைய நாவல்ல வார மாதிரி மிஸ்டர்னு எல்லாம் சொல்லிக்கிட்டு... சும்மா அப்படியே முகிலன்னு கூப்பிடுங்க.. அதுல என்ன தயக்கம்.."

தயக்கமாய் தலையாட்டினாள்.

' ஏதாவது பேசேன் மெல்லினி..' என்று அவன் இதயம் அவளிடம் கட்டளையிட்டது. அது அவளுக்கும் கேட்டிருக்க வேண்டும்.

"வந்த வேலையை மறந்துட்டு சுத்திக்கிட்டு இருக்கோம்..." என்றாள்.

'ஹூம். இதைத்தானா பேச வேண்டும்..' என்று அவளை செல்லமாக முறைத்தான். அவள் அதை கவனிக்கவில்லை.

"என்ன வேலை..?" என்றான்.

"கயல் ரகுவுக்கு கொடுக்க சொன்ன கிப்ட்..." என்று அவனிடம் தந்தாள்.

"ம்... போறப்போ வாங்கிக்கிறேனே.." என்றான். அவள் அதை மறுபடியும் தன் ஹேன்ட் பேர்கிற்குள்ளேயே போட்டுக்கொண்டாள்.

"மெல்லினி! ஆமா அப்படி என்ன அவசரமா கிப்ட் கொடுத்திருக்கா உங்க ப்ஃரெண்ட்...?"

இப்போது மெல்லினி அவனை முறைத்தாள்.

"தெரியல.. லவ்வர்ஸ்க்குள்ள ஆயிரம் இருக்கும்... ஏன் உங்களுக்கு அந்த அனுபவம் இல்லையோ.." என்று போட்டு வாங்கினாள்.

"ஹூம்.. அதை ஏன் கேட்கிறிங்க.. இதுவரைக்கும் யாருமே சிக்கலைங்க.." என்று முகத்தை சோகமாக வைத்துக்கொண்டான்.

"நம்புற மாதிரி இல்லையே.." என்றாள்.

"அட.. நம்புங்க. முகிலன் எப்பவும் பொய் மட்டும் சொல்ல மாட்டான்.." அந்த வார்த்தைகள் அவன் மனதிலிருந்து வந்த வார்த்தைகளாக பட்டன அவளுக்கு.

"ஓ... நீங்களும் ரகுவும் ப்ஃரெண்ட்ஸாமே.. "

"ம்.. ஆமா.. அவன் என் பெஸ்ட் ப்ஃரெண்ட்... நீங்களும் கயலும் அப்படியா..?"

" ஆமா..ரெண்டு வருஷமா ஒன்னா தான் இருக்கோம்... "

"அதுக்கு முதல்...?" என்றான்.

அவனிடம் சொல்லலாமா வேண்டாமா என்று தயங்கினாள். அவளின் தயக்கம் அவனுக்கு என்ன சொன்னதோ தெரியவில்லை, எதைச் சொல்வதாக இருந்தாலும் அதை அவளாகவே சொல்லட்டும் என்று விட்டுவிட்டான். மேற்கொண்டு அவள் பேசியதெல்லாம் பூக்களைப் பற்றியும் பட்டாம்பூச்சிகளையும் பற்றியதாய் இருந்தது. முகிலனுக்கு அவள் பேசுவதே காதில் தேனை ஊற்றிக்கொண்டிருப்பது போல இருந்தது.

முகிலன் அவளை கயலின் வீட்டின் முன் இறக்கிவிட்டுச் சென்றான்.
 
Last edited:

Nirmala vandhachu ???
 
Top