Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இணையே என் உயிர்த்துணையே! -7-

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -7

திருமணம் 'பிருந்தாவனம் ஹால்' ல் சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஊசியால் உடம்பை துளைப்பது போல குளிர் வாட்டி எடுத்தாலும், அங்கேயே இருப்பவர்களுக்கு அது ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை. மெல்லினிக்கு மட்டும் குளிராய் இருந்தது.

கயல் தயாராகி சீக்கரமாகவே மண்டபம் செல்ல வேண்டியிருந்ததால் அதற்கு உதவிக்கொண்டிருந்த மெல்லினியால் குறித்த நேரத்திற்கு மண்டபத்துக்கு கிளம்ப முடியாமல் போய்விட்டது. அதோடு கயலின் வீட்டில் நிறைய கூட்டம் இருந்ததால் மெல்லினியால் அடித்துப்பிடித்துக் கொண்டு குளிக்கவும் கிளம்ப முடியாமல் இருந்தது. ஆகையால் கயலுக்கு கூட மாட உதவலாமே என்று இறங்கிவிட்டாள்.

"என்னம்மா.. நீ இன்னும் ரெடி ஆகலையா?" என்றார் கயலின் தாயார் சங்கரி.

"நான் இதோ ரெடி ஆகிடுறேன்ம்மா..."

"ம்.. நீ பொறுமையா ரெடி ஆகு.. வீட்ல வேலை செய்யுற பார்வதி இருக்கா... அவளையும் ரெடி ஆக சொன்னேன். அத்தையையும் ரெடி பண்ண சொன்னேன். உங்களை கூட்டிக்கிட்டு வர நான் யாரையாச்சும் அனுப்புறேன். அவளோட வரும்போது வீட்டை மட்டும் ஒழுங்கா பூட்டிக்கிட்டு வாங்க..."

சங்கரியின் மாமியார் பக்கவாதம் வந்தவர். உடல்நிலை சரியில்லாமல் படுக்கையோடு இருந்தார்.

"அப்படியா ஆன்ட்டி.. சரி" என்று சொல்லிவிட்டு மெல்லினி குளிக்கப் போய்விட்டாள். அவள் குளித்து முடித்து தயாராகி விட்டு பார்வதியை கூப்பிட்டுக்கொண்டு சமையலறையைத் தாண்டி இருந்த பார்வதியின் அறைக்குச் சென்றாள். அங்கு அவள் கண்ட காட்சியோ அவளை திடுக்கிடச்செய்து விட்டது.

மஞ்சுநாத் பார்வதியின் கைகளை முறுக்கி அவளை துவம்சம் செய்ய முழு ஆயத்தத்துடன் வெறித்தனமாய் இறங்கியிருந்தான். பதினெட்டு வயது பார்வதியால் அவன் உடல் பலத்தை தாங்க முடியவில்லை. அவள் வாயையும் துணியால் அடைத்திருந்தான் அந்த பாதகன். மெல்லினி ஒரு நொடி என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறி பின் பக்கத்திலிருந்த உலக்கையை எடுத்து அவன் முதுகில் ஒரு போடு போட்டாள். அந்த அடி தந்த அதிர்ச்சியில் பின்னால் திரும்பியவன் மெல்லினியைக் கண்டதும் பேய் அறைந்தவன் போல ஆனான்.

மெல்லினியைக் கண்ட தைரியத்தில் பார்வதி துள்ளிக்குதித்துகொண்டு அவள் பின்னே ஒடுங்கினாள். மெல்லினியின் கண்களில் ஆவேசம் கணலாய் எறிந்தது.

"மரியாதையா வெளிய போயிரு..." என்று அவனைப் பார்த்து உறுமினாள்.

"அ..அது.. வந்து..." என்று தடுமாறியவன் உடல் வியர்வையில் நனைந்தது.

"இனி ஒரு வார்த்தை பேசினனா நான் போலிஸ்க்கு போன் பண்ண வேண்டி இருக்கும். ஒழுங்கா வெளிய போயிரு...." என்ற மெல்லினி கோபத்தின் உச்சியில் இருந்தாள்.

"நா..நா.. சித்தி பாட்டியை கூட்டிக்கிட்டு.." மஞ்சுநாத்தின் வாய் குளறியது.

"எப்படி வாரதுனு எங்களுக்கு தெரியும்.. உன் வண்டவாளம் எல்லார்க்கும் தெரியுறதுக்குள்ள போயிடு. இல்லனா கத்தி ஊரை கூட்டிடுவேன்.."

மஞ்சுநாத் விறுவிறுவென வாசல் பக்கம் சென்றான். அவன் போனதும் ஓடிச்சென்று கதவை தாள் போட்டாள் மெல்லினி. மீண்டும் பார்வதி இருந்த இடம் நோக்கிச் சென்றாள். பார்வதி மண்டியிட்டு அமர்ந்து முழங்கால்களுக்குள் முகத்தை புதைத்து அழுது கொண்டிருந்தாள்.

"பார்வதி! என்ன ஆச்சு...?"

"அக்கா... அக்கா..." என்று அழுதாள்.

"சரி அழாத. ஏதோ கடவுள் புண்ணியத்துல எதுவும் நடக்கல... அந்த வகையில சந்தோஷம். சேலையை சரி பண்ணிக்க.. யாருக்கும் ஒன்னும் தெரிய வேண்டாம். நேரமாச்சு மண்டபத்துக்கு போவோம்.. யாரையோ அனுப்புறேனு சொன்னாங்க ஆன்ட்டி..."

"இந்த மனுசன தான் அனுப்பினாங்க..." என்றாள் பார்வதி.

"என்னது.." என்று அதிர்ந்தாள் மெல்லினி.

"ஆமாக்கா.. அம்மா சின்னையாவைத் தான் அனுப்பிருக்காங்க. நான் உடுத்திகிட்டு இருந்தேனா.. முன்னுக்கு கதவு தொறத்து இருந்திச்சி.. அது வழியா வந்திருக்கான்."

"சின்னையாவா? அவனுக்கென்ன மரியாதை வேண்டி கிடக்கு.."

"சின்னையாவோட அப்பா இங்க பெரிய எஸ்டேட் வச்சிருக்கார். சின்னயானா எல்லாத்துகூடவும் நல்லா பேசுவாரு பழகுவாரு.. என்கிட்டயும் அப்படித்தான் பேசுறாருனு நெனச்சேன்.. ஆனா இப்படி செய்வாருனு நெனைக்கல...." பார்வதி அழுதாள்.

"கடவுளே.. சரி முதல்ல அழாத. இங்க நடந்ததை யாருக்கும் சொல்லாத, என்ன செய்யனும்னு எனக்கு தெரியும்.. " மெல்லினி பற்களை கடித்துக்கொண்டாள்.

" அக்கா.. சின்னையா இல்லாட்டி நம்ம எப்படி கல்யாணத்துக்கு போறது... இப்பவே ஏன் லேட்டுனு அம்மா கோல் பண்ணிட்டாங்க." பார்வதி அங்கு நடந்ததையே மறந்துவிட்டு தன் கடமை உணர்ச்சியின் மிகுதியில் இருந்தாள்.

மெல்லினி காருக்காக காத்திருந்தாள்.

சற்று நேரத்தில் வந்து நின்ற காரிலிருந்து இறங்கினான் முகிலன்.

"மெல்லினி! என்னாச்சு.. பதட்டமா பேசுனிங்க.."

"எல்லாத்தையும் பிறகு சொல்றேன் முகில்.. வாங்க முதல்ல மண்டபத்துக்கு போகலாம்..." அவளது பதட்டத்தை புரிந்து கொண்டவனாக மேற்கொண்டு எதுவும் கேட்காமல் அவர்களை அழைத்துக்கொண்டு கல்யாண மண்டபம் நோக்கி காரை விரட்டினான். நடந்தது எதுவும் தெரியாமல் பத்மா பாட்டி குழந்தை போல வந்துக்கொண்டிருந்தார்.

திருமணம் வெகு சிறப்பாக இடம் பெற்றுக்கொண்டிருந்தது. மெல்லினியால் தான் மனதை முழுமையாக அதில் செலுத்த முடியவில்லை. மஞ்சுநாத்தின் மீது கோபாவேசமாக இருந்தாள்.

"மெல்லினி..." முகிலன் சோடா பாட்டிலொன்றை நீட்டிக்கொண்டு நின்றான்.

"முகில்... !"

"என்ன ஆச்சு .. ஏன் இப்படி இருக்கிங்க...? "

நடந்தது முழுவதையும் அவனிடம் சொன்னாள். முகிலன் உடனே அவனை அடிக்கக் கிளம்பினான்.

"இப்ப எதுவும் செய்ய வேண்டாம் முகில்.. கல்யாணம் முடியட்டும் பார்க்கலாம்.. நாம ஏதாவது பேச போய் விபரீதமாகிடப்போகுது.."

"என்ன மனுஷன் அவன்.. அவனை.. கல்யாணம் முடியட்டும் கவனிச்சிக்கிறேன்.." முகிலன் பற்களை கடித்தான்.

மெல்லினியின் முகத்தில் குழப்பம் இருப்பதைக் கவனித்த கயல் அவளை மேடைக்கு அழைத்தாள்.

"என்னடி ஒருமாதிரி இருக்க?"

"அதெல்லாம் ஒன்னும் இல்ல.. நீ கல்யாண பொண்ணா கொஞ்சம் வெட்கப்படு.. ஓகே..." என்று அவள் வாயை அடைத்துவிட்டு சகஜமாக இருப்பது போல காட்டிக்கொண்டாள். அவளுக்கு இருந்த அதே கோபமும் ஆத்திரமும் முகிலனுக்கு நூறு மடங்காக இருந்தது. மஞ்சுநாத் கண்ணில் பட மாட்டானா அவனை வைத்து செய்ய மாட்டோமா என்று வலைவீசி தேடிக்கொண்டிருந்தான். ஹுஹூம். அவன் கண்ணிலேயே படவில்லை. அவன் குடும்பத்தாரும் அவனை பெரிதாக தேடியதாகத் தெரியவில்லை.

திருமணம் உச்ச கட்டத்தை அடைந்தது. ரகுநாத் கயல்விழியின் கழுத்தில் மங்கலநாணை அணிவிக்கும் அந்த சுப நேரத்தில் முகிலனின் கண்களும் மெல்லினியின் கண்களும் ஒருவரை ஒருவர் ஆர்வத்துடன் தீண்டிக்கொண்டன. அவன் கண்களை சந்தித்ததும் மெல்லினியால் அவளுக்குள் பீறிட்ட வெட்கத்தை தாங்கிக்கொள்ள இயலாமல் மேடையை விட்டு நழுவினாள்.

திருமணம் முடிந்தவேளையில் தான் மஞ்சுநாத் முகிலனின் கண்களில் தென்பட்டான். அவனை இழுத்துச்சென்று முகத்தில் சரமாறியாக பல குத்துக்கள் விட்டான் முகிலன்.

"இனி எந்த பொண்ணு பின்னாடி சரி போனனா உன் எலும்பெல்லாம் உடைச்சிடுவேன் பார்த்துக்க.." என்று சொல்லிவிட்டு வந்தான்.

திருமணம் முடித்த கையோடு வீட்டுக்கு திரும்பி சடங்கு சம்பிரதாயங்களை நிறைவு செய்த புதுமண தம்பதிகள் தங்கள் திருமணத்தை கொண்டாட எல்ல பயணமானார்கள்.

முகிலன் அவர்களை சீண்டினான்.

"என்னடா இது.. கல்யாணம் முடிஞ்சதும் எங்களை கழற்றிவிட்டுட்டு போறிங்க.. "

"அப்படியெல்லாம் இல்லனு சொல்ல... முடியாது... டேய்! அங்க பார்க்க நிறைய விஷயம் இருக்குதாம்டா... "

"நீ ஊர் சுத்தி பார்க்கவா போற? நீ எதுக்கு போறனு ஊருக்கே தெரியும்டா.." என சிரித்தான் முகிலன்.

"ரகு! கயல் கவனம். குளிர் அதிகம்னு அவளை எதுவும் பண்ணிடாதிங்க.." என்று மெல்லினியும் காலை வாரினாள். இவள் இப்படியெல்லாம் பேசுவாளா என முகிலன் அவளை ஆச்சரியமாக பார்த்தான்.

"அடப்போங்க மெல்லினி.." ரகு அநியாயத்துக்கு வெட்கப்பட்டான்.

"உங்களுக்கு கல்யாணம் ஆகும் போது அதெல்லாம் தெரியும்.. "என்று சொல்லிக்கொண்டே வந்தாள் கயல்.

"வாங்க மேடம்... இரண்டு நாள்ல ரிசப்ஷன் இருக்கு... திரும்பி வருவிங்களா இல்ல மறந்திடுவிங்களா...." என்றாள் மெல்லினி.

"ஞாபகம் இருந்தா வாரோம்.." என்று அவளும் கண்ணடித்தாள்.

"முகிலன் அண்ணா.. மெல்லினி எவ்வளவு சொல்லியும் கேட்காம ஹோட்டல் ரூம்ல தங்கிக்கிறேனு சொல்றா.. நீங்க கொஞ்சம் அவளை பார்த்துக்குங்க... "

"கண்டிப்பா தங்கச்சி.. நான் உங்க ப்ரெண்டை பார்த்துக்குறேன். நீங்க என் ப்ரெண்ட்டை பத்திரமா பார்த்துக்குங்க.. சரியா.." என முகிலன் ஒப்பந்தம் போட்டான். அங்கு ஒரே சிரிப்பலைகள் நிலவியது.

புதுமண தம்பதிகள் கிளம்பியதும் வந்திருந்த சொந்தங்களும் கிளம்பினார்கள்.

"ஏன் மெல்லினி ஹோட்டல்ல ஸ்டே பண்றிங்க..? எதுவும் பிரச்சனையா..?'

"அப்படிலாம் இல்ல முகில்! கயலும் இருக்க மாட்டா.. நான் இங்க இருந்து என்ன செய்ய.. அதான்..." அவள் இழுக்க அவளின் தர்மசங்கடம் அவனுக்கு புரிந்தது.

"சரி நான் உங்களை ஹோட்டல்ல டிராப் பண்ணட்டா..?"

"ம்... ஓகே..." மெல்லினி அவனோடு கிளம்பினாள்.

ஹோட்டல் பாரடைஸில் அவளை விட்டுவிட்டு திரும்பும் போதுதான் அவளைப் பார்த்து கேட்டான்.

"மெல்லினி! நாளைக்கு ப்ரீயா? ஏதும் வேலை இருக்கா..?"

" கல்யாணத்துக்கு தானே வந்தேன். எனக்கு என்ன வேலை இருக்க போகுது.. ப்ரீ தான்.. ஏன்..?"

" அப்போ நாளைக்கு வெளியில போயிட்டு வரலாமா..?"

"நிஜமாவா..? உங்களுக்கு ப்ரீயா..?"

"கல்யாணதுத்துக்கு தானே நானும் வந்தேன். அப்போ எனக்கும் ப்ரீ தானே.." என அவனும் சிரித்தான்.

சிரிக்கும் போது அவன் கண்களும் சேர்ந்து சிரித்ததில் அவள் அவனை வெகுவாய் ரசித்தாள்.

"சரி நான் கிளம்புறேன்... நாளைக்கு மார்னிங் எட்டு மணிக்கு இங்க இருப்பேன்.." அவன் கிளம்பினான்.

"ஓகே... பாய் முகில்...."

சென்றவன் திரும்பினான்.

"மெல்லினி.. ஒரு விஷயம் சொல்லனும். சொல்லாட்டி தலை வெடிச்சிடும்.... இன்னைக்கு அந்த கிளிப்பச்சை சேலையில அம்சமா அழகா இருந்திங்க... கொன்னுட்டிங்க போங்க... நான் வாரேன்..."

அவள் கைகளால் பதில் எதுவும் சொல்லிவிட முன் வேகமாய் நடையைக்கட்டினான்.

முகிலன் அவளை அழகாக இருந்ததாக சொன்னது அவளுக்கு ஆயிரம் டண் மலர்களை தன்மீது தூவியது போல இருந்தது. சூடாக குளியல் ஒன்றைப் போட்டுவிட்டு அவனைப்பற்றிய சுகமாக நினைவுகளை நெஞ்சில் சுமந்துகொண்டு தூங்கிப்போனாள் மெல்லினி. ஆனால் அவளை நினைத்துக்கொண்டு இரண்டு ஜோடி கண்கள் தூங்காமல் இருந்தது. அவை அவளை காதல் செய்ய துவங்கியிருந்த முகிலனின் கண்களும், அவளை பழிவாங்க வேண்டும் என்று எண்ணியிருந்த மஞ்சுநாத்தின் கண்களும்.
 
Attachments

  • 39ac0eb822157fa6d10fa5b0c3e9c072.jpg
    39ac0eb822157fa6d10fa5b0c3e9c072.jpg
    165.4 KB · Views: 0

Nirmala vandhachu ???
 
Top