Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இணையே என் உயிர்த்துணையே!-8-

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம்- 8

"குட் மோர்னிங் மெல்லினி... " முகிலன் கைகளை ஒன்றோடு ஒன்று தேய்த்து சூடுபடுத்திக்கொண்டு ரிசப்ஷனில் நின்றுக் கொண்டிருந்தான்.

"குட் மோர்னிங் முகில்.. "

"எங்க போறோம் முகில்...?"

"சொல்றேன்.. கிளம்பலாமா..?"

வெள்ளைநிற சாரா வீ எய்ட் தன் கெத்தை காட்டிக்கொண்டு வாசலில் நின்றுக்கொண்டிருந்தது.

"இது உங்க வண்டியா முகில்...?"

"இல்ல... ரோட்ல யாரோ நிறுத்தியிருந்தாங்க.. நான் சுட்டு பாக்கெட்ல போட்டுட்டு வந்துட்டேன்.."

மெல்லினி அவனைப் பார்த்து முறைத்தாள்.

"ஹேய்.. கூல் கூல்.. சும்மா விளையாண்டேன். இவ்வளவு கோபம் வருது... ஆமா என்னோட வண்டி தான்..."

"இல்ல.. அன்னைக்கு உங்களை ரெயில்வே ஸ்டேஷனில் கண்டேன்.. அதான் நீங்களும் அதே ட்ரெயினில தான் வந்திங்களானு..."

"ஓ அதுவா.. நான் முன்னாடியே வந்துட்டேன். அன்னைக்கு ரகுவுக்கு ரொம்ப வேண்டிய ஒருத்தர் வந்தார். அவரை ரிசீவ் பண்ண வந்தேன்.. நீங்க என்னை கண்டிங்களா..?"

"ஆமா.. "

"எப்படி என்னை அடையாளம்...."

"அதுக்கு முதல்ல நாம பார்த்ததே இல்ல பாருங்க...." என்று மெல்லினி சிரித்தாள்.

"பாத்திங்களா.. விதி நம்மளை எப்படி சேர்த்து வைச்சிருக்குனு..." என்று சொன்னவன் 'வாழ்க்கை முழுக்க சேர்த்து வைச்சா நல்லா இருக்கும்..' என்று மனதுக்குள் நினைத்தான்.

"முகில் எங்க போய்கிட்டு இருக்கோம்...?"

"இதோ வந்தாச்சு... இது என்ன இடம்னு தெரியுமா..?"

"இது.. சீதையம்மன் கோவில் தானே..."

"ஆமா.. ராவணன் சீதையை சிறை வைச்சப்ப அவங்களை இங்கதான் வச்சிருந்தாராம். ரொம்ப சக்தி வாய்ந்த கோவில்ங்க..."

"கேள்வி பட்டிருக்கேன்... வாங்க உள்ள போகலாம்..."

இருவரும் கோவிலின் உள்ளே இறங்கி சென்றார்கள். சில்லென வீசிய காற்று முகத்தில் ஒருவித தெய்வீக அலையை அடித்துவிட்டு சென்றது. அந்த இடமே தெய்வ அணுக்கிரகத்தால் கட்டுண்டு இருந்தது. இருவரும் தரிசனம் முடித்து வந்தார்கள்.

"முகில்! கோவில் ரொம்ப நல்லா இருக்கு. இங்க வருவேனு நினைச்சு கூட பார்க்கல... ரொம்ப தேங்க்ஸ்..."

"இப்பவே தேங்க்ஸ் சொல்லிட்டா எப்படி? இன்னும் முக்கியமான இடத்துக்கு இனிதான் போகனும்..."

"இன்னொரு இடமா..? எங்க..? "

"சொல்ல மாட்டேன்.. வாங்க..."

இருவரும் கிளம்பினார்கள்.

வேகமாக செல்லும் போது முகத்தில் மோதிய காற்றை காதலோடு அனுபவித்தபடி வந்த மெல்லினியை அவள் அறியாமல் ரசித்துக்கொண்டே வந்தான் முகிலன்.

"முகில்.. உங்க வீட்ல யாரெல்லாம் இருக்காங்க..? கர்ள் ப்ரெண்ட் உண்டோ...?"

இத்தனை நாட்களில் இப்போது தான் அவள் அவனைப் பற்றி கேட்பதை நினைத்து அவனுக்கே சிரிப்பு வந்தது.

"என்ன சிரிக்கிறிங்க..?"

"இல்ல...இத்தனை நாள் ஆச்சி... என் பெயரை தவிர எதுவுமே தெரியாம என் கூட எப்படி இத்தனை தைரியமா வாறிங்க..?"

"உங்கள் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு முகில். அதான் தைரியமா இருக்கேன்.. நீங்க என்னை எதுவும் செஞ்சிட மாட்டிங்க...."

"அவ்வளவு நம்பிக்கையா..? எதனால..?"

"அதெல்லாம் உங்களுக்கு புரியாது.. ரோட்டைப் பார்த்து வண்டியை ஓட்டுங்க...."

" ஹா..ஹா...ஹா... ஆனா எனக்கு கர்ள் ப்ரெண்ட் இல்ல.."

"ஓ.. நம்பிட்டேன்.. " சொல்லிவிட்டு இதழ்களில் அரும்பிய புன்னகையை மறைத்துவிட்டு பார்வையை வெளியே ஓடவிட்டாள்.

அவள் எதையோ சொல்ல வந்து சொல்லாமல் மறைப்பதை உணர்ந்த அவனும் அதை ரசித்தவனாய் வண்டியை இன்னும் வேகமாய் செலுத்தினான்.

'அம்பேவல பாற்பண்ணை'க்குள் வண்டி நுழைந்தது. மெல்லினி ஒரு 'வாவ்'வை உதிர்த்தாள்.

"மெல்லினி! இது தான் அம்பேவல பார்ம்.. '

"டீவி ஆட்ல பார்த்திருக்கேன். அப்படியே நியூசிலாந்தை பார்க்கிற மாதிரி இருக்குனு சொல்வாங்க. நிஜம் தான். என்ன ஒரு அழகு. இந்த மாடு எல்லாம் எவ்வளவு அழகா இருக்கு இல்ல..." குழந்தையாட்டம் கேட்டாள்.

"இன்னும் பார்க்க நிறைய இருக்கு. போலாமா?"

அவள் உற்சாக நடை போட்டு அவனோடு நடந்தாள்.

வரிசையாக நின்று புற்களை ஞம்ஞம் செய்து கொண்டிருந்த மாடுகளின் அருகில் சென்று பலரும் தொட்டுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்தவரிசையில் மெல்லினியும் சேர்ந்து ஒரு மாட்டை தடவிக்கொடுத்தாள்.

"முகில் எவ்வளவு க்யூட்டா இருக்குது பாருங்களேன்..."

' ஏது.. மாடு க்யூட்டா..நாய், பனை தானே க்யூட்டா இருக்கும்.. ' அவன் உள்ளுக்குள் சிரித்தான்.

"ஆமா.. க்யூட் தான்.... அந்த பக்கம் ஆடு, முயல் எல்லாம் இருக்கு. அதையும் போய் பார்ப்போம்.."

"முயலா..?" அவள் முயலாய் துள்ளினாள்.

அவர்கள் வரிசையாய் ஒவ்வொன்றாய் பார்த்துவிட்டு கடைசியாக இயந்திரம் மூலம் பால்கறக்கும் பகுதிகளுக்கு சென்றனர்.

"நான் உள்ள வரல முகில்.."

"ஏன்...?"

"இந்த ஒரு விஷயம் மட்டும் எனக்கு கொஞ்சம் உறுத்தலான விஷயம்.. இயற்கையா பால் கொடுக்கிற மாட்டுக்கிட்ட நாம செயற்கையா பால் எடுக்கிறோம்.. வியாபாரத்தின் அடுத்த கட்டம்.."என்று உதட்டை சுழித்தாள்.

"என்ன செய்ய.. எல்லா இடத்துலொயும் இது தான் நடக்குது. அதை நம்ம மாற்ற முடியாது. சரி எனக்கு பசி வந்திடுச்சி. சாப்பிடலாமா..?"

அவர்கள் அங்கிருந்த கஃபேயில் உணவருந்திவிட்டு நின்று நிறுத்தி நிதானமாக பார்த்துவிட்டு, நிறைய புகைப்படங்களை எடுத்துக்கொண்டு திரும்பிக்கொண்டிருந்தார்கள். அப்போது தான் வழியில் அவன் அதை காட்டினான். அது ஒரு ஸ்டோபர்ரி பண்ணை.

"முகில் நீங்கபாட்டுக்கு உள்ள போறிங்க.. யாரோட ப்ராப்பர்டியோ தெரியல..."

"வாங்க வாங்க.. அதான் நான் இருக்கேனே..." வண்டியை உள்ளே செலுத்தி நிறுத்திவிட்டு இறங்கினான். அவனைக் கண்டதும் ஒருவன் வந்தான். வந்து இவனை கட்டிக்கொண்டான்.

" டேய் முகிலா! எப்படிடா இருக்க? எப்ப வந்த?"

"நல்லா இருக்கேன்... ஒரு வெட்டிங்க்காக வந்தேன்... நீ எப்படிடா இருக்க..? உடம்பெல்லாம் போட்டிருக்கு.. புது பொண்டாட்டியோட வேலையா?" முகிலன் அவன் தோள்களில் கைபோட்டு பேசிக்கொண்டே நடந்து போகத்தொடங்கி மெல்லினியின் நினைவு வந்தவனாய் திரும்பினான்.

மெல்லினி செய்வதறியாது சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருந்தாள்

" ஹேய்.. ஸாரி மெல்லினி. நண்பனைக் கண்டதும் உன்னை மறந்துட்டேன்."

" இட்ஸ் ஓகே முகில்!"

"டேய் குணா! இது மெல்லினி... என்னோட.... ப்ரெண்ட்.. மெல்லினி இது என்னோட ப்ரெண்ட் குணா. இந்த ஸ்டோபர்ரி பார்ம் அவனோடயது தான். அதான் தைரியமா உள்ள வந்தேன்.."

"வாங்க சிஸ்டர். உள்ள போய் பேசலாம்.."

அந்த பண்ணையின் நடுவே இருந்த வீட்டிற்கு அவளையும் கூட்டிச்சென்றான் குணா.

வீட்டை சுற்றிலும் ஸ்டோபர்ரி பண்ணை. சிவப்பு சிவப்பாய் காய்த்து தொங்கிய பழங்களைப் பார்த்துக்கொண்டே பொழுதை போக்கிவிடலாம் போல இருந்தது. மெல்லினி மெதுவாய் அதைப்பார்த்துக்கொண்டே நடந்துக்கொண்டிருந்தாள்.

" எங்கடா உன் வைப்?" முகிலன் அவனை பார்த்து கேட்டான்.

"அவ அவங்க அம்மா வீட்டுக்கு போயிருக்காடா.. நீ சொல்லு என்ன நடக்குது.. யார்டா அந்த பொண்ணு.. "

"அது என் ப்ரெண்ட் தான் குணா.."

"நம்புற மாதிரி இல்லையே... உன்னை எந்த பொண்ணோடயும் நான் பார்த்ததே இல்லையே..."

"அட போடா நீ வேற... இப்ப கிட்டத்துல தான் பழக்கம் ஆச்சு."

" ஏதோ சொல்லுற நானும் நம்புறேன்.. ஆனா உன் செலக்ஷன் சூப்பர்டா..." என்றான் குணா. முகிலன் வெட்கத்தோடு சிரித்தான்.

நண்பர்கள் இருவரும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருக்கும் வரை மெல்லினி சுற்றிலும் ஒரு ரவுண்டு வந்து அங்கு வேலை செய்பவர்களிடம் ஸ்டோபர்ரி பயிர்ச்செய்கை பற்றி கேட்டுவிட்டிருந்தாள்.

" அப்ப நாங்க கிளம்புறோம் குணா.."

"சரிடா இன்னொரு நாள் வா.. நீங்களும் கண்டிப்பா வாங்க சிஸ்டர்." அவனும் ஸ்டோபர்ரி கூடையோடு விடை கொடுத்தான்.

"அவரோட பார்ம் ரொம்ப அழகா இருந்திச்சி இல்ல முகில். இந்த மாதிரி ஒரு இடத்துல வீடு இருந்தா நாள் முழுக்க அதை பார்த்துக்கிட்டே இருக்கலாம். இந்த ஸ்டோபர்ரி எவ்வளவு ப்ரெஷ்ஷா இருக்குனு பாருங்களேன்.." என்று ஒன்றை எடுத்து வாயில் போட்டாள்.

"ம்ம்.." என்று ரசித்து சாப்பிட்டாள்.

'ஒரு ஸ்டோபர்ரியே ஸ்டோபர்ரிய சாப்பிடுது..' என்று அவன் பெருமூச்சு விட்டான்.

அவன் வண்டி ஓட்டும் அழகை கள்ளமாய் ரசித்துக்கொண்டே வந்தாள் மெல்லினி.

'முகில்... எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு.. உங்களுக்கு பிடிக்குமா என்னை...? என்னைக்காவது என் காதலை சொல்வேன்...' அவள் மனதுக்குள் நினைத்துக்கொண்டாள்.

"முகில் நான் கேட்டதுக்கு நீங்க கடைசிவரை பதில் சொல்லவே இல்லையே.."

"என்ன கேட்டிங்க? ஞாபகத்தில் இல்லையே.."

"உங்க வீட்ல யாரெல்லாம் இருக்காங்கனு கேட்டேன்..."

"ஓ.. அதுவா? நான்.. அப்பா பூமிநாதன். அவர் ஒரு பிசினஸ்மேன். அம்மா பாரிஜாதம்.. அவ்ளோ தான்.."

" ஹேய். வெய்ட். பூமிநாதன்- பாரிஜாதம். இந்த பெயரை கிட்டத்துல எங்கயோ வாசிச்சேனே.... ஹேய்.. 'பூமி டெக்ஸ்டைல்ஸ்' ஓட மேனஜிங் டைரக்கடரா???"

"அப்படியும் சொல்லலாம்..." என்றான்.

"ரியலி....."

"அது இருக்கட்டும். அப்பா பெயரை சொன்னதும் எப்படி டக்குணு சொன்னிங்க..."

"லாஸ்ட் வீக் 'புத்தகம்' மேகசின்ல உங்க அப்பாவோட இன்டர்வியூ இருந்திச்சி. அதை படிச்சேன். உங்க அம்மா நேம் மைன்ட்ல நல்லா பதிஞ்சிருந்திச்சி. அதான் பட்டுணு சொல்லிட்டேன்.. அப்போ நீங்க அப்பாவோட பிசினஸ் பண்றிங்களா?"

"ஆமா. அவர்கிட்ட வேலை செய்றேனு வச்சிக்குங்க.. என்னை விடுங்க. உங்களைப் பற்றி எதுவுமே சொல்லலயே..."

"என்னைப் பற்றி சொல்ல எதுவும் இல்லை..."

"எதுவுமில்லையா..?" அவன் புருவங்களை சுருக்கினான்.

"எனக்கு சொந்தம்னு யாரும் இல்லை. ஐ மீன் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, அக்கா, தங்கச்சி, தம்பினு யாரும் இல்ல. நான் வளர்ந்தது எல்லாம் 'நேசம் ஹோம்' ல தான். ஸ்டடிஸ் முடிஞ்சதும் பாங்க்ல வர்க் கிடைச்சிச்சி. சேர்ந்துட்டேன். படிக்கும் போது இருந்து கயல் கூட பழக்கம். அவதான் என் ஒரே சொந்தம். அப்போதான் கயலும் கொழும்பில வந்து ஸ்டே பண்ற ஐடியால இருந்தா. சோ.. வர்க்கிங் ஹாஸ்டலை காலி பண்ணிட்டு அவ கூட வந்து சேர்ந்துகிட்டேன். அவ்வளவு தான் என்னைப் பற்றி சொல்ல இருக்கு.. முகில்! யூ நோ வன் திங்.. இது தான் நான் முதன் முதலா பர்சனலா வந்த ஜர்னி. ஆபிஸ் ட்ரிப் தவிர எங்கயும் போனதில்லை. அதுக்கு அவசியமும் இருக்கல.. ஆனா கயலோட வெட்டிங்க்கு வந்த பிறகு எனக்கும் இதுபோல பெரிய குடும்பம் இருக்கனும். அவங்க கூட எல்லாம் சந்தோஷமா இருக்கனும்.. மனசுக்கு பிடிச்சவரை கல்யாணம் பண்ணிக்கனும், எனக்குனு ஒரு குடும்பம் இருக்கனும்னு எல்லாம் ஆசை வருது.. அதெல்லாம் எங்க நடக்கப்போகுது... " தன்னையறியாமல் அவள் பேசி முடித்ததும் முகிலன் என்ன பேசுவது என்று தெரியாமல் இருந்தான். அவனையும் அறியாமல் வண்டியின் வேகம் குறைந்தது.

" முகில்! என்னாச்சு. அடடா... மூட் அவுட்டா.. இதுக்கு தான் நான் யார்கிட்டயும் எதுவும் சொல்றது இல்ல.. "

"இல்ல... ஐ ஆம் ஸாரி. எனக்கு உங்களைப் பற்றி எதுவும் தெரியாது. அதான் கேட்டுட்டேன்.. ஐ ஆம் ரியலி ஸாரி...."

" ஹேய்.. இட்ஸ் ஓகே. லீவ் இட்.. எனக்கு முகிலன்னு ஒரு பெஸ்ட் ப்ரெண்ட் கிடைச்சிருக்கிங்களே.. சோ.. ஐ ஆம் ரியலி லக்கி..."

அவள் உண்மையான சந்தோஷத்துடன் சொன்னாள். ஆனால் அவனது குடும்பத்தைப் பற்றி கேட்டதும் தன் காதலை நெஞ்சுக்குள் மறைத்து வைத்து விட்டாள்.அதற்குள் அவளது ஹோட்டல் வந்துவிட்டது.

"முகில் நாளைக்கு எங்க போகலாம்..?" அவள் வெகு இயல்பாய் இருந்தாள்.

"நான் கோல் பண்றேன்..." அவன் மிகவும் குழப்பத்தில் இருந்தான். அவனால் மேற்கொண்டு சகஜமாக இருக்க முடியவில்லை.

அவன் அவளை விட்டு விட்டு கிளம்பிவிட்டான். மெல்லினி குளிக்கலாம் என்று டவலை எடுத்துக்கொண்டு நகரும் போது பெல் அடிக்கப்பட்டது. யாராக இருக்கும் என்று திறந்தவள் மஞ்சுநாத்தை கண்டு திகிலடைந்து பின்வாங்கியதும், அவன் அவளை முரட்டுத்தனமாய் நான்கு அறை அடித்ததும் மட்டும் தான் அவளுக்கு நினைவு இருந்தது.

அதற்கு பின் மஞ்சுநாத் அவள் வாயை பொத்தி மயக்கநிலைக்கு கொண்டு சென்றதோ, ஆத்திரம் தாங்காமல் அவள் கழுத்தை ஒருதரம் நெறித்ததோ, அதன் பிறகு அவளை துகிலுரித்ததோ எதுவும் அவளுக்கு தெரிந்திருக்கவில்லை.

அவளது அறை தனி காட்டேஜாக இருந்தது அவனுக்கு வசதியாக போனது. அவள் மீதான தன் வன்மத்தை தீர்த்துக்கொண்டான்.

இங்கு முகிலனோ அவளைப் பற்றி கேட்டதில் இருந்து அவள் நினைப்பாகவே உறக்கம் வராமல் தவித்து விடியல் வேளையில் தான் உறங்கினான். அடுத்து வரப்போகும் பிரச்சனைகள் தெரியாமல்.

N

Nirmala vandhachu ???
 
Top